Thursday 17 February, 2011

என் ஓட்டு கலைஞருக்குதான்..

இந்த பதிவுக்கு அப்புறம், என் தளத்திற்கு வரும் வருகையாளர்கள் குறைந்து போகலாம், அல்லது என்னை நிறைய பேருக்கு பிடிக்காமல் போகலாம் அல்லது “ச்சீ..நீயெல்லாம் ஒரு ஆளாடா..” என்று திட்டலாம். ஆனால், என்னமோ தெரியவில்லை, உண்மையை சொல்லி எவ்வளவு திட்டு வாங்கினாலும் பரவாயில்லை, ஏதோ மனம் நிறைந்ததாய் இருக்குமே.. பொய்யை சொல்லி எவ்வளவோ பாராட்டு வாங்கிப் பாருங்கள், ஏதோ மனது அரித்துக்கொண்டே இருக்கும், ஆனால் ஒரு உண்மையை சொல்லி ஒரு திட்டு வாங்கினாலும், மனசுக்கு ஏதோ இதமாக இருப்பதாக ஒரு நினைப்பு.

ஆமாம், இந்த தேர்தலில் எனக்கு ஓட்டுப்போட வாய்ப்பு கிடைக்குமானால், கலைஞருக்குதான் ஓட்டுப்போடப்போகிறேன். இந்த ஒரு ஓட்டுக்கு பின்னால், ஒரு தாயின் சபதம் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா.

எப்போதும் போலத்தான் அன்றைக்கும் பொழுது போயிற்று. எனது கல்லூரி காலமாய் ஞாபகம். எவ்வளவுதான் சாப்பிட்டாலும், சிறிது நேரம் அம்மா மடியில் தலைவைத்து விட்டுதான் தூங்கப்போவேன். அம்மா, ஏதாவது பேசிக்கொண்டே, தலையை தடவி கொடுக்கும்போது, ஏனோ இன்னுமொரு பிறவி எடுக்கவேண்டும் போல இருக்கும், இதே மடியில் தூங்குவதற்கு.

அன்றும் அப்படித்தான் தூங்கிக் கொண்டிருந்தேன். திடிரென்று கதவை யாரோ, நாலைந்து பேர் சேர்ந்து தட்டுவதாய் ஒரு சத்தம். திடிக்கிட்டு எழுந்தேன். என் தூக்கம் கலையகூடாது என்பதற்காக அம்மாதான் சென்று கதவை திறந்தார்கள். வெளியே நான்கு காக்கிச்சட்டை அணிந்த காவலர்கள். முகத்தில் கோபத்தோடு.

“சார் இருக்காங்களா..”

அம்மா முகத்தில் குழப்பரகை..

“இருக்காரு..எதுக்கு..”

“ம்..அரசு ஊழியர்கள் எல்லாம் ஸ்டிரைக் பண்ணுறாங்கள்ள..எல்லாத்தையும் ஜெயில்ல அடைக்க சொல்லி மேலிடத்திலிருந்து உத்தரவு..கொஞ்சம் வரச்சொல்லுங்க..”

அம்மா முகம் பயத்தில் மாறியது..

“என்ன சார்..நைட்டு 10 மணி ஆயிடுச்சு..இப்ப போயி..நாங்க எல்லாம் அரசாங்க ஊழியர்கள் சார்..எங்கயும் போயிர மாட்டோம்..காலையில வரலாமே சார்..”

“ப்ச்..அதெல்லாம் எங்களுக்கு தெரியும்..இப்ப விலகிக்கிரீங்களா..இல்லையா..”

அம்மாவிற்கு அவர்களை உள்ளே விட மனசில்லை. அப்பா கொல்லைப்புறத்தில் இருப்பதால். அப்படியே நின்று கொண்டிருந்தார்கள். அவர்களை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தனர் அவர்கள் மூர்க்கத்தோடு..

அடுத்தவர் வீடு என்று பார்க்காமால், ஒவ்வொரு அறை முழுக்க தேடினார்கள். கொஞ்சம் கூட கூச்சமில்லாமல், கட்டிலின் அடியில் பார்த்தபோது அம்மா கூனிப் போனார்கள்

“எங்க ஒளிஞ்சிக்கிட்டு இருக்காரு..அவரு..இப்ப வரச் சொல்லுறீங்களா இல்லையா..”

ஏதோ கிரிமினலைத் தேடுவது போல தேடினார்கள். கண்களில் அவ்வளவு வெறி. கடைசியாக கொல்லைப்புறம் சென்றபோது அம்மா பதறிப்போனார்கள். அதிர்ஷ்டவசமாக அப்பா அங்கு இல்லை. அவர்கள் வெளியே நிற்பதைப் பார்த்ததுமே, அப்பா வேறு வழியாக வெளியே சென்றிருந்தார்.

அப்பா கிடைக்காத கோபம் அவர்கள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது..

“எங்க ஒளிச்சு வைச்சிருக்கீங்க..நாங்க இவ்வளவு அரசு ஊழியர்களை கைது செய்திருக்கோமுன்னு கணக்கு காட்டணும்..”

கோபத்தில் வார்த்தை வெளிவரவே அம்மா பயந்து போனார்கள். அம்மாவிற்கு இவ்வளவு அதட்டெல்லாம் கேட்டு பழக்கமில்லை. கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

“இல்லீங்க..அவர் எங்க இருக்காருண்ணு தெரியாது.."

“ம்..ஊரை விட்டு எங்க போயிரப்போறாரு…எப்படியும் எங்ககிட்டதான் வந்தாகணும்….ஒழுங்கா ஸ்டேசனுக்கு வரச்சொல்லுங்க..”

கிடைக்காத கடுப்பில் கதவை படிரென்று அறைந்துவிட்டு வெளியே போனார்கள். அந்த நிகழ்வுக்கு சாட்சியாக இருந்ததை தவிர நான் ஒன்றும் பேசமுடியவில்லை. அம்மாவை கவனித்தேன். முகம் வெளிறி போயிருந்தது. முகத்தில் அவமானம்.

இந்த சூழ்நிலையில் அம்மாவை பார்த்ததில்லை. இதுவரை முட்டிக்கொண்டிருந்த கண்ணீர் சாரை சாரையாக வழிந்தது. அப்படியே குலுங்கி குலுங்கி அழுதார்கள்..என்னால் தாங்க முடியவில்லை..

“யம்மா..விடுங்கம்மா..அதான் அப்பா கொல்லைப்புறத்தில இல்லையே..”

“ப்ச்..இல்லைடா..நம்ம என்ன தப்பு செஞ்சோம். .நடுராத்திரில இப்படி வந்து ஏதோ திருடன புடிக்கிற மாதிரி…”

சேலைத்தலைப்பை பொத்திக்கொண்டு குலுங்கி குலுங்கி அழுதார்கள்..என்னால் தாங்கமுடியவில்லை. அப்படியே சென்று அவர்கள் தலையை பிடித்துக்கொண்டேன்..சிறிது நேரம் அழுதவர்கள், என்ன நடந்ததென்று தெரியவில்லை, ஏதோ தீர்மானம் வந்தவர்களாய் கண்ணீரை துடைத்துக்கொண்டார்கள். என்னை அப்படியே இழுத்துக்கொண்டு சாமிபடம் முன்னால் சென்றார்கள்.

“சத்தியம் பண்ணு..என் கையில அடிச்சு சத்தியம் பண்ணு..இதுவரைக்கும் எப்படியோ, இனிமேல் அந்தம்மாவுக்கு ஓட்டு போட போறதில்லைன்னு..”

அம்மாவை பார்த்தேன்.

“சத்தியம் பண்ணுடா..கலைஞருக்குதான் ஓட்டுபோடுவேன்னு..”

“ஏம்மா..”

“அப்பதான் அந்தம்மா வரமுடியாது..சத்தியம் பண்ணு..”

ஒன்றும் பேசாமல் என் கையை எடுத்து அம்மா கைமேல் வைத்தேன். ஒருநிமிடத்தில் அம்மா அன்பிற்கு முன்னால் பகுத்தறிவெல்லாம் தூள்தூளாகிப்போனது.

49 comments:

Anonymous said...

Country is bigger than house. Dont give approval to 2G corruption. Dont give your vote to DMK, atleast this time

யாசவி said...

படிக்க நல்லா இருக்கு பாஸ்

தனி காட்டு ராஜா said...

Do n't vote for Amma ..For Ur Amma..

Do n't Vote for Kalignar...For our Amma(thaai) Naadu..

Choose Some other Option ..Like Vijayakanth or Not willing to Vote ....

Anonymous said...

Karunanidhikku jeya sariyana maatru alla.
jeya oru sarvathikaari.karunavai thorkatithu jeyavitam aatchiyai koduppathu.
Mootaipoochikku payanthu veetai koluthuvathu pondrathu...

Jeyavin kodunkol aatchiyai marakka mudiyuma.

Anonymous said...

Eppothum aatchiyalarkal meethu veruppu erpaduvathu sakajamthan...

Anonymous said...

Change date and time settings

Vignesh said...

what about 49o?

Vijay said...

DMDK with Amma combine will win this election and Vijayakanth will become CM. My dream. :-)

Unknown said...

தாராளமாய் போடுங்க. உங்க ஒரு ஓட்டால் அவர் ஆட்சி அமைத்தால் ஆச்சரியம்தான்.

Prathap Kumar S. said...

அம்மாவுக்கு ஓட்டுப்போட வேண்டாம். ஆதற்காக கலைஞருக்கு ஓட்டுப்போடுவேனு சொல்லுவது நியாயமா? அரசுஊழியர்களுக்கு வாரி வழங்குவதால் மட்டும் கலைஞர் நல்லவர் கிடையாது.
தினக்கூலி மீனவர்களும் இந்த தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள். எதிரிக்கு ஓட்டுப்போடலாம் துரோகிக்கு-???

Anandkrish said...

Actually u r sentimental idiot(i am sorry to say this).Do not think about ur home and dont be selfish. Think about nation. Think about freedom to act.

அவிய்ங்க ராசா said...

///////////////////////////
Anonymous said...
Country is bigger than house. Dont give approval to 2G corruption. Dont give your vote to DMK, atleast this time
17 February 2011 12:58 AM
///////////////////////////
அம்மா வந்தால் 3ஜீ ஊழல் வராது என்று நிச்சயம் தரமுடியுமா..)

அவிய்ங்க ராசா said...

//////////////////////////////
யாசவி said...
படிக்க நல்லா இருக்கு பாஸ்
17 February 2011 1:10 AM
/////////////////////////////
நன்றி வாசவி..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////
தனி காட்டு ராஜா said...
Do n't vote for Amma ..For Ur Amma..

Do n't Vote for Kalignar...For our Amma(thaai) Naadu..

Choose Some other Option ..Like Vijayakanth or Not willing to Vote ....
17 February 2011 4:10 AM
/////////////////////////////////
விஜய்காந்துக்கு ஓட்டுப் போடுறதுக்கு குப்பையில போயி ஓட்டைப் போட்டுருவேன்..)

அவிய்ங்க ராசா said...

////////////////////////////////
Anonymous said...
Karunanidhikku jeya sariyana maatru alla.
jeya oru sarvathikaari.karunavai thorkatithu jeyavitam aatchiyai koduppathu.
Mootaipoochikku payanthu veetai koluthuvathu pondrathu...

Jeyavin kodunkol aatchiyai marakka mudiyuma.
17 February 2011 4:18 AM
/////////////////////////////
எனக்கென்னம்மோ, அம்மாவுக்கு கலைஞர் எவ்வளவோ தேவலாம்..

அவிய்ங்க ராசா said...

///////////////////////////
Anonymous said...
Eppothum aatchiyalarkal meethu veruppu erpaduvathu sakajamthan...
17 February 2011 4:23 AM
///////////////////////////////
ஆமாம்..

அவிய்ங்க ராசா said...

///////////////////////////
Anonymous said...
Change date and time settings
17 February 2011 4:24 AM
///////////////////////////
புரியலையே..ஈஸ்டர்ன் டைம் தான் இருக்கு..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////
sai said...
what about 49o?
17 February 2011 6:26 AM
///////////////////////////////
சாய்..அது பற்றி எனக்கு மாற்று கருத்து உண்டு..

அவிய்ங்க ராசா said...

///////////////////////////////
Vijay said...
DMDK with Amma combine will win this election and Vijayakanth will become CM. My dream. :-)
17 February 2011 6:47 AM
///////////////////////////////
கனவிலாயாவது வரட்டும்..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////
கே. ஆர்.விஜயன் said...
தாராளமாய் போடுங்க. உங்க ஒரு ஓட்டால் அவர் ஆட்சி அமைத்தால் ஆச்சரியம்தான்.
17 February 2011 11:05 AM
/////////////////////////////
என்னை மாதிரியே ஒவ்வொருவரும் நினைத்தால், கலைஞர்தான் ஆட்சி..))

அவிய்ங்க ராசா said...

///////////////////////////////////
நாஞ்சில் பிரதாப்™ said...
அம்மாவுக்கு ஓட்டுப்போட வேண்டாம். ஆதற்காக கலைஞருக்கு ஓட்டுப்போடுவேனு சொல்லுவது நியாயமா? அரசுஊழியர்களுக்கு வாரி வழங்குவதால் மட்டும் கலைஞர் நல்லவர் கிடையாது.
தினக்கூலி மீனவர்களும் இந்த தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள். எதிரிக்கு ஓட்டுப்போடலாம் துரோகிக்கு-???
17 February 2011 11:36 AM
///////////////////////////////
பிரதாப்..யாருக்கு ஓட்டுப்போட்டால், இந்த பிரச்சனைகள் தீரும்..என்னைப் பொறுத்தவரை, எல்லாமே பேய்..அதில் கொஞ்சம் நல்ல பேயை தேர்ந்தெடுப்போமே..))

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////////
ary 2011 11:36 AM
Anandkrish said...
Actually u r sentimental idiot(i am sorry to say this).Do not think about ur home and dont be selfish. Think about nation. Think about freedom to act.
17 February 2011 12:11 PM
//////////////////////////////
அண்ணே..அப்படியே யாருக்கு ஓட்டுப்போட்டா இந்த நாடு நல்லாருக்கும் சொல்லிருங்களேன்..))

ஆனந்தி.. said...

அட அம்மாக்கு தானே வோட்டு போட கூடாது...no worries...சுயேட்சையா எத்தனை கை புள்ளைங்க நிப்பாங்க...பானை சின்னம்.தீப்பட்டி சின்னம்..னு..அவங்க வாங்கும் மொத்த வோடே 80 ,90 தான் இருக்கும்:)))...அதுல குத்திட்டு வந்திருங்க...ஹீ..ஹீ...நாம எப்பவும் சுயேட்சைக்கு தான் குத்துவோம்...:)))

Anonymous said...

/////////////////////////////
கே. ஆர்.விஜயன் said...
தாராளமாய் போடுங்க. உங்க ஒரு ஓட்டால் அவர் ஆட்சி அமைத்தால் ஆச்சரியம்தான்.
17 February 2011 11:05 AM
/////////////////////////////
என்னை மாதிரியே ஒவ்வொருவரும் நினைத்தால், கலைஞர்தான் ஆட்சி..))
/////////////////////////////
DAY DREAM. After Election Karunanithi family will be in JAIL.

Arun said...

I feel Stalin may a better candidate for CM. Bad time he is with Kalaignar and DMK & Alagiri.
After he became Deputy CM I could see some sorts of developments happening in sub-urban areas.
He visited lot of small towns in TN which KK or JJ never did in their lifetime except during election campaign

JJ or KK no difference both same.. VK sound party.. no use

Tamilnadu future????

Arun said...

How will be the political scenario in TN after KK??

Arun said...

After MGR, highest number of films(blogs) based on Amma acted/blogged is by namma "RAASA" .. Next Chinna MGR.. "M..G..RAASA"

RK_KK said...

Who is Amma Our mother is Amma Don't call Jaya as Amma.Unga mudivu miga sarianathu Nanum DMK kuthan vote poda poren.

ம.தி.சுதா said...

////பொய்யை சொல்லி எவ்வளவோ பாராட்டு வாங்கிப் பாருங்கள், ஏதோ மனது அரித்துக்கொண்டே இருக்கும், ஆனால் ஒரு உண்மையை சொல்லி ஒரு திட்டு வாங்கினாலும், மனசுக்கு ஏதோ இதமாக இருப்பதாக ஒரு நினைப்பு////

இது எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு...

எல் கே said...

சிலரை மாற்ற இயலாது

17 February 2011 11:04 PM
///////////////////////////
எங்க ஊரு சுயேச்சங்க கொள்ளை இதைவிட மேலு..))

அவிய்ங்க ராசா said...

//////////////////////////////////
Anonymous said...
/////////////////////////////
கே. ஆர்.விஜயன் said...
தாராளமாய் போடுங்க. உங்க ஒரு ஓட்டால் அவர் ஆட்சி அமைத்தால் ஆச்சரியம்தான்.
17 February 2011 11:05 AM
/////////////////////////////
என்னை மாதிரியே ஒவ்வொருவரும் நினைத்தால், கலைஞர்தான் ஆட்சி..))
/////////////////////////////
DAY DREAM. After Election Karunanithi family will be in JAIL.
18 February 2011 12:49 AM
///////////////////////////
பகல் கனவு பலிக்குமோ..))

அவிய்ங்க ராசா said...

///////////////////////////////
Arun said...
I feel Stalin may a better candidate for CM. Bad time he is with Kalaignar and DMK & Alagiri.
After he became Deputy CM I could see some sorts of developments happening in sub-urban areas.
He visited lot of small towns in TN which KK or JJ never did in their lifetime except during election campaign

JJ or KK no difference both same.. VK sound party.. no use

Tamilnadu future????
18 February 2011 1:44 AM
////////////////////////////////
ஸ்டாலின் வந்தால் இன்னமும் நல்லது..

அவிய்ங்க ராசா said...

//////////////////////////////////
Arun said...
How will be the political scenario in TN after KK??
18 February 2011 1:47 AM
/////////////////////////////////////
ஸ்டாலின் vs ஜெ??

அவிய்ங்க ராசா said...

///////////////////////////////
Arun said...
After MGR, highest number of films(blogs) based on Amma acted/blogged is by namma "RAASA" .. Next Chinna MGR.. "M..G..RAASA"
18 February 2011 2:09 AM
//////////////////////////////
அம்மாவை பத்தி எழுதறுக்கு எதுக்குண்ணே தயக்கம்..உண்மையான அன்பு அங்க இருந்துதானே கிடைக்குது..

Anonymous said...

sentimental idiot

Ngotha... Eppadi thann varthaita pudikaranugalo...

Nenja nakkaramadiriye elutharanugaya....

அவிய்ங்க ராசா said...

///////////////////////////////
RK_KK said...
Who is Amma Our mother is Amma Don't call Jaya as Amma.Unga mudivu miga sarianathu Nanum DMK kuthan vote poda poren.
18 February 2011 1:55 PM
////////////////////////////////
நன்றி ..ஓட்டு + 1

அவிய்ங்க ராசா said...

///////////////////////////////
ம.தி.சுதா said...
////பொய்யை சொல்லி எவ்வளவோ பாராட்டு வாங்கிப் பாருங்கள், ஏதோ மனது அரித்துக்கொண்டே இருக்கும், ஆனால் ஒரு உண்மையை சொல்லி ஒரு திட்டு வாங்கினாலும், மனசுக்கு ஏதோ இதமாக இருப்பதாக ஒரு நினைப்பு////

இது எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு...
18 February 2011 8:40 PM
////////////////////////////////
நன்றி சுதா..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////
எல் கே said...
சிலரை மாற்ற இயலாது
18 February 2011 9:12 PM
//////////////////////////////
நல்லா சொல்லுங்கண்ணே..அப்பதான் தேடி, தேடி அம்மாவுக்கு ஓட்டுபோட்டு புதைகுழியில சிக்குறவங்க எல்லாம் திருந்துவாங்க..))

அவிய்ங்க ராசா said...

////////////////////////////////////
Anonymous said...
sentimental idiot

Ngotha... Eppadi thann varthaita pudikaranugalo...

Nenja nakkaramadiriye elutharanugaya....
18 February 2011 9:56 PM
////////////////////////////////////
பார்த்தீங்களா..திட்டுறப்ப கூட "Ngotha(amma)" ன்னு திட்டுறீங்க..அதாங்க..அம்மா..

ஆனந்தி.. said...

//அட அம்மாக்கு தானே வோட்டு போட கூடாது...no worries...சுயேட்சையா எத்தனை கை புள்ளைங்க நிப்பாங்க...பானை சின்னம்.தீப்பட்டி சின்னம்..னு..அவங்க வாங்கும் மொத்த வோடே 80 ,90 தான் இருக்கும்:)))...அதுல குத்திட்டு வந்திருங்க...ஹீ..ஹீ...நாம எப்பவும் சுயேட்சைக்கு தான் குத்துவோம்...:)))
17 February 2011 11:04 PM
///////////////////////////
எங்க ஊரு சுயேச்சங்க கொள்ளை இதைவிட மேலு..))//

அப்பு...உங்க ஊரு தான் எங்க ஊரு...நானுங்களும் மதுரை தான்...நம்ம ஊரில் சுயேச்சை காமடி பீஸ் ங்க..

Jabar said...

அய்யா... ராசா... ரொம்ப சந்தோஷப்பட்ட பதிவு... உண்மையை எழுதியதற்கு பாராட்டுக்கள்... கலைஞரை திட்டாத ஒரு பதிவை படிப்பதற்கும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு... இதுதான் உண்மை... இந்த உண்மை ஜெயாவை பாராட்டுபவர்கள் புரிந்து கொள்வார்கள்...

Karpagam said...

even if vijayakanth joins with AIADMK, jaya wont allow him to become CM.so eventually jaya will become CM.

No infrastructure development,her adopted son's lavish wedding,vengence on govt employees

மனிதன் said...

True,Jaya is a non Democratic leader,she never respect democracy,Karunanithi some what respect democracy far better than jaya.

Anonymous said...

that was the most retarded story of the decade you dumbass

Anonymous said...

Sir, I dont know about your father. But each and every public knows how govt employees works.. and how difficult to get any work done by govt employees. Though they are back bone, J took action against them. ofcourse I am sure that a good govt employee also got impacted. But I dont see this as a reason to vote against J. But I am sure if KK comes to power this time, we all can forget about TamilNadu and get settled somewhere else. Thats for sure.

Prakash said...

2G Scam is really a Story. People who criticize DMK shall never go into real facts, whether that much amount worth of scam is really possible or not.

Just by seeing some huge numbers they'll quickly jump into conclusion and start mud sledging.

If some one says, A buffalo drove a Aircraft, these type of people shall immediately say that, “Why DMK has not used Buffalos to fly Aircrafts, because of that 2 Lack Crores was loss!!!!" Other like minded persons will say, "That's Correct"

Krishna said...

This is utter stupidity, it can be your personnel choice on voting. BUT this thinking about your family is very selfish, If your dad was arrested etc.. you can take it up with court, its not just your dad for any personnel reason but all the GOVT employed, so be it.

When it comes to Society, be rational OK? You better vote 49 O, that proves that we do not want any of the candidates.

தமிழன் said...

தாயே உடைக்கச்சொன்ன சத்தியங்கள் சரித்திரத்தில் நிறைய உண்டு! ஜெ செய்த தவறுகளுக்கு எந்த நியாயமும் சொல்லமுடியாது, ஆனால் 2004 பாராளுமன்ற தேர்தல், 2006 சட்டசபை தேர்தல், மறுபடியும் 2009 பாராளுமன்ற தேர்தல் இப்படி மூன்று தோல்வி அவருக்க் உ பரிசளித்தாகி விட்டது. லஞ்சம் ஊழல் என்று சொன்னால் அதற்கும் ஜெ ஒரு முறை சிறைசென்றாகி விட்டது. திமுக ரௌடிக்கும்பல் இன்னும் சுதந்திரமாகச் சுற்ருகிறது. இனி, திமுக தன்டனையை பெற வேண்டிய காலம். குடும்ப அராஜகம் ஒழியவேண்டிய நேரம். பிறகு உங்கள் இஷ்டம்.

Post a Comment