Monday, 31 January, 2011

எல்லாரும் பார்த்துக்கங்கப்பா..நாங்களும் என்.ஆர்.ஐ தான்

அலுவலக வேலை விசயமா, ஒரு வாரம் அமெரிக்காவிலுருந்து சென்னை வந்து மீண்டும் அமெரிக்கா திரும்ப வேண்டிய சூழ்நிலைண்ணே..என் பொண்டாட்டியும் சென்னை வருவேன் என அடம் பிடிக்க, அவளையும் கூட்டிக்கிட்டு சின்சினாட்டி ஏர்போர்ட் வந்தேண்ணே..1 வருசம் கழித்து என் மனைவி தாயகம் போறா, ஏதாவது சென்டிமென்டா பேசுவான்னு எதிர்பார்த்து காத்திருந்தேண்ணே

ஏங்கநம்மளும் என்.ஆர். தானங்க…”

ஆகாஇந்த வியாதி இவளுக்கும் தொத்திக்கிச்சா..எத்தனையோ பேர பார்த்து இருக்கோம்னே..ஏர்போட் புல்லாம் ஒரே அலப்பரை தான்..நம்ம ஊருல போயி ரெண்டு நாளைக்கு விறைப்பா அலைவாயிங்க..நல்லா மொட்ட வெயிலு மூஞ்சில அடிச்சா எல்லாம் சரியாப் போயிடும்…..

அடியே..நம்ம என்.ஆர். இல்லடி..என்.பி...”

அது என்னங்க புதுசா என்.பி.…”

ம்….."நாசாமா போன இண்டியன்ஸ்"..அடியே..நம்மளே பஞ்சம் பொழைக்க வந்துருக்கோம்டிபொழப்புல மண்ண அள்ளி போட்டுறாதடி..மகராசி..”

நீங்க சும்மா இருங்கயாராவது கேட்டா,என்.ஆர். தான்னு சொல்லப் போறேன்..கெடுத்து விட்டுறாதிங்க..”

சரி உனக்கு மொட்டை வெயிலு அடிச்சாதான் திருந்துவஏர்போர்ட் நடைமுறை எல்லாம் முடிஞ்சு விமானத்துல ஏறி உக்கார்ந்துட்டோம்னே..பக்கத்துல ஒரு வெள்ளைக்கார தாத்தா..நல்லா அண்டா சைசுல இருந்தாருண்ணே..கையில பர்கர் வேற..அவர் பக்கத்துல கோழிக்குஞ்சு மாதிரி உக்காந்திருந்தோம்ணே..

வணக்கம் பிரதர்..நீங்க இந்தியர் தானே..நான் இறக்குமதி பிசினஸ் பண்றேன்..பிசினஸ் விசயமா இண்டியா போறேன்…”

அவரா அறிமுகம் செஞ்சுக்கிட்டாருண்ணே..அடப்பாவி, ஒன்னரை சீட்டுல உக்கார்ந்துக்கிட்டு அரை சீட்டை குடுக்குறேயேய்யா

கர்சிப்பை எடுத்து முகத்தை பொத்திக்கிட்டேண்ணே.. என் பொண்டாட்டிக்கு ஆச்ச்ர்யம் தாங்க முடியலண்ணே..

என்னங்க, ஏங்க கர்ச்சிப்பை எடுத்து பொத்திக்கிறீங்க..பன்னி காயிச்சல் பயமா..”

அய்யோ இது அத விட கொடுரம்டிவிமானத்துல அவனவன் பாத்ரும் போறதுக்கு சோம்பேரித்தனப் பட்டுக்கிட்டு கேஸ் பேக்டரிய ஓப்பன் பண்ணி விட்டுருவாயங்க..பன்னி காயிச்சலாவது ஒரேயடியா ஆளைக் கொல்லும்டி..இது, கொஞ்சம் கொஞ்சம் ஆளைக் கொல்லும்டி..நீயும் ஏதாவது துணியை எடுத்து முஞ்சிய போத்திக்கடி..”

அடப் போங்க..வெள்ளைக்காரய்ங்க அப்படியெல்லாம் பண்ண மாட்டாயிங்க..”

அடிப்பாவி..கருப்பா இருக்குறவயிங்களையெல்லாம் நாய் கடிக்காது ரேஞ்சுல பேசிறேயடி..சரி உனக்கு பட்டாத்தாண்டி தெரியும்னு விட்டுட்டேண்ணே..

நேரம் ஆக, ஆக அவனவன் பலமுனைத் தாக்குதல் நடத்த ஆரம்பிச்சுட்டாயிங்கண்ணேஎன் பொண்டாட்டி கதறிட்டாயிங்கண்ணே

ஏங்க, எனக்கு குடலை பிரட்டுதுங்க..ஒரு துணி இருந்தா தாங்களேன்..முகத்தை பொத்திக்குறேன்கெஞ்சுறான்ணே

ஏங்க நீங்களுமா..”

ஐயோ..என்னை அப்படி சந்தேகப் பார்வை பார்க்காதடி..ஏர்போர்ட் வர்றதுக்கு முன்னாடியே நாலஞ்சு தடவை பாத்ரூம் போயிட்டண்டி..”

யாரா இருக்கும்னு திரும்பி பார்த்தா, நம்ம வெள்ளைக்கார தாத்தா..பர்கரை சாப்பிட்டுக்கிட்டே சிரிக்குறாருண்ணே..

அடப்பாவி..நீதானா அந்த படுபாவி..இதுதான் இறக்குமதி பிஸுனஸடா..நல்லா இருங்கடா..நீ சாப்பிடுறது பர்கராடா அல்லது பொணமாடா..

சார்..பொணத்தை சாப்பிடுங்க..ஆனா கொஞ்சம் உப்பு போட்டு சாப்பிடுங்க..”

என்ன பிரதர்..”

ஐயோ ஆளை விடுடா சாமி..சென்னை இறங்குற வரைக்கும் முகமூடிய கழட்டவே இல்லண்ணேஇப்ப என் பொண்டாட்டி ஆரம்பிச்சிட்டாங்கண்ணே..

..வாட் வெயில்.. வாட் வெயில்…” இங்கிலிஸ பாருங்கண்ணே

ஏங்க, ஒரு கேப் கூப்பிடுறீங்களா…” டாக்சின்னு சொல்ல மாட்டாளம்ணே..

டாக்சிக்காரன் வந்தாண்ணே..என் பொண்டாட்டியே பேசட்டும்னு அமைதியா இருந்துட்டேண்ணே..

இங்க இருந்து கீழ் கட்டளைக்கு எவ்வளவுங்க..”

“400 ரூபாங்கம்மா..”

..இட்ஸ் காஸ்ட்லிநாங்க அட்லாண்டாவுல இருந்து கலிபோர்னியா போறதுக்கே 100 டாலர்ஸ்தான் குடுப்போம் தெரியுமா..”

சார்..இன்னா சார் பேசுறாங்க..ஒன்னுமே பிரியல சார்..கொஞ்சம் வெளங்குற மாதிரி சொல்லு சார்..”

போதும்டா சாமி..அம்மா தாயே..முதல வண்டியில ஏறு..

பரவாயில்லங்க..மீனம்பாக்கம் ரோடு நல்லா இருக்குங்க..இண்டியா இஸ் சேஞ்சிங்க..”

டிரைவர் கொலை வெறி ஆகிட்டாண்ணே

சார், அம்மாவுக்கு எந்த ஊரு சார்…”

அது , மதுர பக்கத்துல இருக்குற கொட்டாம்பட்டி..”

இப்ப கொலைவெறி மனைவிக்கு ஷிஃப்ட் ஆகிடுச்சுண்ணேஒரு வழியா, வீடு வந்து சேர்ந்துட்டோம்ணே..

ஏங்க வீட்டில .சி. இல்லயா..இட்ஸ் டூ ஹாட்ன்னா..”

முடியலண்ணேஅம்மா வந்துட்டாங்கண்ணே

வாம்மா..பிரயாணம் எப்படிம்மா இருந்துச்சு..பிளைட்டுல ஒன்னும் சாப்பிடாம வந்து இருப்பீங்க..சாம்பார் சோறு சாப்பிடிறீங்களா..”

இல்ல ஆண்டி..கெல்லாக்ஸ் இருக்கா..கார்ன் பிளக்ஸ் இருக்கா..”

ஏம்பா, நான் இப்ப என்ன கேட்டுட்டேன்னு உன் பொண்டாட்டி கெட்ட வார்த்தையில திட்டுறா…”

அட நாராயணா..இந்த என்.ஆர். ய்ங்க கொசுத் தொல்லை தாங்க முடியலடா சாமி

என் ஓட்டு அம்மாவுக்குதாண்ணே…

(இது ஒரு மீள்பதிவு)

நம்ம எல்லாம் அமெரிக்காவுல இருந்தாலும் அம்பானி பரம்பரை எல்லாம் இல்லீங்கண்ணே..சோத்துக்கே சிங்கி அடிச்சவயிங்க தான்..வீட்டில வாயைக்கட்டி, வயித்தைக்கட்டி படிக்க வச்சாயிங்க….அந்த விசயத்துல அம்மாவ மறக்க முடியாதுண்ணேஎத்தனையோ நாளு நான் படிக்கிறதுக்கு தன்னோட வாழ்நாளை தியாகம் பண்ணியிருக்காங்கண்ணே..

எங்க அம்மாவுக்கு என் மேல அம்புட்டு பாசம்ணே..உயிரே விட்டிடுவாயிங்கநேத்து கால் பண்ணியிருந்தாங்க..சேக்காலிங்களோட(நண்பர்கள்) பேசிக்கிட்டு இருந்தேன்..எப்போதும் அம்மா பேசுனா ஸ்பீக்கர்ல தான் போடுவேன்..காதுல கேக்குறத விட மனசால கேக்கலாம்ல..

தம்பி ராசா, உடனே கிளம்பி வந்துருடா..”

ஏன்மா..ஏதாவது பிரச்சனையா..”

இல்லடா ராசா, ஏதோ பன்னி காயிச்சலாம்பாடி.வில காமிக்கிறாயிங்கப்பா..குலை நடுங்குதுப்பா..சம்பாதிச்சது போதும்பா..வந்துருடா ராசா..”

பக்கத்துல இருக்குற சேக்காளி சும்மா இருக்காம,

அம்மா, நீங்க கவலைப்படாதிங்கம்மா..ராசவ ஒன்னும் பண்ணாதுபன்னில இருந்து மனுசனுக்கு தான் பரவுதுதாம்..பன்னில இருந்து பன்னிக்கு பரவாதாம்..”

அடி செருப்பால..நீதான்டா எறுமை..” அம்மா செல்லமா திட்டுனாயிங்கண்ணே..

அம்மா இப்படித்தாண்ணேஎல்லாத்துக்கும் பயப்புடுவாயிங்கண்ணேஓரு நாள் எல்லாரும் இங்க இருக்குறப்ப அவசரமா அம்மாகிட்டயிருந்து கால்..

தம்பி, ஓடிடா..நிலநடுக்கம் வருதாம்..”

என் சேக்காளி அப்பிடியே டேபிளுக்கு அடியில போயிட்டாண்ணே..என்ன ஒரு முன்ஜாக்கிரதை பாருங்க. நானும் நடுங்கி போயிட்டேன்..

அம்மா, என்ன சொல்லுறீங்க..”

சன் டிவில பிளாஸ் நியுஸ் போடுறாயிங்கடா ராசா..ஜப்பானுல நிலநடுக்கமாண்டா..அமெரிக்கா ஜப்பான் பக்கத்துல தானே இருக்கு..ஓடிடுடா..”

ஒரு பக்கம் சிரிப்பா வந்தாலும், குழந்தைப் பாசம்..

இப்படித்தான் நான் சென்னையில வேலை பார்க்கும்போது மதுரையில இருந்து சென்னைக்கு ரயிலுல கிளம்புவேன்..என்னை உக்கார வச்சுட்டு தண்ணி பாட்டில் வாங்க போனாங்கண்ணே..பக்கத்துல உக்கார்ந்திருக்குரவர் அறிமுகம் செஞ்சுகிட்டாரு..ஏதோ பிஸ்கட் சாப்பிட்டு இருந்தார்..அம்மா வந்துட்டாங்கண்ணே..

தம்பி ராசா, பத்திரமா போயிச்சேருப்பா..நிறைய திருட்டுப்பசங்க ரயில்ல வராயிங்களாம்பா..எதாவது பிஸ்கட் குடுத்தா வாங்கி சாப்பிடாதப்பா..கெரகம் புடிச்சவயங்க, மருந்து வச்சிருப்பாயிங்க..ஒன்னுக்கு போறப்ப பேக்க எடுத்துட்டே போப்பா..”

பக்கத்தில இருப்பவன் நிலமைய யோசிச்சு பாருங்க..அப்படியே பிஸ்கட்ட மறச்சு வச்சிட்டு சிரிக்கிறாருண்ணேஅவருக்கும் அம்மா இருக்கும்தாண்ணேஅம்மா கண் நெறய தண்ணி..ரயில் கிளம்பும்போது சேலைய கையில புடுச்சிக்கிட்டு கூடவே ஓடி வாராங்கண்ணே…75 வயசுண்ணேஅப்பிடியே ரயில் சங்கிலிய புடிச்சி இழுத்துலராம் போல இருந்துச்சுபாசத்துல எல்லா அம்மாவும் குழந்த மாதிரிண்ணே

எனக்கு எங்க கம்பனியிலிருந்து அமெரிக்கா அனுப்புனாங்க..எங்க வூட்டுல இருந்து வழியனுப்ப சென்னை வந்துந்துராயிங்கண்ணே..நமக்குத்தான் அமெரிக்க சான்சுன்னா பிரண்ட்ஸ் பார்ட்டி தான்னே..பிரண்ட்ஸ் கூட ஒரே பார்டி..வீட்டுல இருந்து அம்மா வந்ததே மறந்துட்டேண்ணே..ஏர்போர்ட் வந்து எல்லாருக்கும் டாடா சொல்லுறப்ப தான் அம்மா நிக்குறதே ஞாபகம் வருது..சிலையா நிக்குறாங்கண்ணேஅப்படியே வந்து கட்டிப்பிடிச்சு அழுதாங்க பாருங்க..அவுங்க நெஞ்சுக்கூட்டுல இருக்குற பாசம் இன்னைக்கும் என் நெஞ்ச தொட்டுப்பார்த்தா தெரியும்னே….

ராசா..விட்டிட்டு போறியடா..உன்னப் பார்க்காம எப்பிடிடா இருக்க போறென்..”

“2 வருசம் தானம்மா..வந்துடுவேன்மா…”

எங்க அம்மா பணம் வைக்கிறதுக்கு ஒரு சுருக்குப்பை வைச்சிருப்பாங்க..அதுக்குள்ள கைய விட்டு எல்லாப் பணத்தையும் எடுத்து என் கையில திணிச்சாங்கண்ணே..எல்லா பணமும் அழுக்குண்ணேஆனா இப்பவும் மோந்து பார்த்தா எங்கம்மா வாசம்ணே

ராசா..செலவுக்கு வச்சிக்கடா..அப்பாகிட்ட சொல்லாதேடா..உடம்ப பத்திரமா பார்த்துக்கடா..”

அம்மா, எதுக்கும்மா..அங்க எல்லாம் டாலர் தான்மா..”

பரவாயில்லடா..எப்பவாவது உதவும்…”

பொஞ்சாதி தெய்வம்னு ஒரு பதிவுல எழுதினேன்னே..தெய்வம் கூட இருக்கா இல்லயான்னு தெரியாதுண்ணே..அம்மா தெய்வத்துக்கும் மேலண்ணே..பகுத்தறிவுக்கு எட்டாத ஒன்னுன்னா அது அம்மா பாசம்தாண்ணே

இந்த தேர்தல்ல கண்ட காவாளிங்களுக்கு நல்ல ஓட்டுப் போடுறத விட எங்கம்மாவுக்குத்தாண்ணே கள்ள ஓட்டு போடப்போறேன்..ஒரு சீட்லஎங்கம்மான்னு எழுதி வச்சிட்டு வந்துடப் போறேன்..


நாங்களும் ரவுடி ஆகிட்டோமுல்ல

தமிழ்மணத்தில் நட்சத்திர பதிவர் ஆனதை, கோவாலுக்கிட்ட சொல்லலாமுன்னு போறேன், பயபுள்ள குறட்டை விட்டு தூங்கிக்கிட்டு இருக்கான். எனக்கோ செம கடுப்பு, தலையுல ஒரு குட்டுவிட்டேன், பயபுள்ள அலறி அடிச்சுக்கிட்டு எழுந்திக்கிறான்..

“அய்யோ….என்னைக் கொல்லுறாங்க..என்னைக் காப்பாத்துங்க..”

நான் மிரண்டே போயிட்டேன்..

“கோவாலு..நான்தாண்டா..என்னடா ஆச்சு..விருதகிரி படம் பார்க்குற மாதிரி கனவு கண்டயா..”

“இல்லடா ராசா..நமீதாதான் கனவுல..”

“அதுக்கேண்டா இப்படி பயந்து கத்துன..”

“நமீதா சங்கத்தமிழ் பேசுற மாதிரி கனவுடா...”

“போடாங்க..உன்னையெல்லாம் திருத்தவே முடியாது..”

“அதை விடு ராசா..இப்படி பேய் மாதிரி தூக்கத்துல வந்து எழுப்புற..”

“இல்ல கோவாலு..அது வந்து..அது வந்து..”

“என்னடா ராசா..இப்படி தயங்குற….யாராவது உன்னைப் பாராட்டி வாசகர் கடிதம் எழுதி இருக்காய்ங்களா..”

“அய்யோ..இல்லடா..”

“விஜய் அரசியலுக்கு வந்துட்டாரா..”

“அய்யோ..வேணாண்டா..”

“பின்ன..”

“தமிழ்மணத்துல இந்த வாரம் நட்சத்திர பதிவர் ஆயிட்டேண்டா..”

அப்படியே என்னை முறைச்சு பார்த்துட்டு, திரும்பவும் தூங்குறான். எனக்குனா செம கடுப்பு..

“கோவாலு..எவ்வளவு பெரிய மேட்டர் சொல்லி இருக்கேன்..ஒன்னும் சொல்லாம தூங்குற..”

“டே..ராசா..புரூடா விடுறதுக்கும் ஒரு அளவு இருக்கு….நீ பதிவு எழுதுற நிறுத்திட்டேன்னு சொல்லு(எம்புட்டு ஆசை பாருங்க) நம்புறேன்..இதெல்லாம் ஓவரு” ன்னு சொல்லிட்டு திரும்ப தூங்குறான்..

எனக்குன்னா ரொம்ப கோவம்.. அப்படியே வீட்டுக்கு வந்து வீட்டுக்காரம்மா கிட்ட சொன்னேன்..

“அடியே..தமிழ்மணத்துல..”

“அய்யோ ரொம்ப புகழாதீங்க..நான் இன்னும் சமைக்கவே ஆரம்பிக்கல..”

“அடியே..உன்னோட சமையல் மணத்தை சொல்லல..தமிழ்மணம்..தமிழ்மணத்துல..”

“அது எங்கங்க விக்குது..இண்டியன் ஸ்டோருலயா..வர்றப்ப ரெண்டு டஜன் வாங்கிட்டு வர்றீங்களா..”

எனக்கு வந்த கொலைவெறியில, வழக்கம் போல அமைதி ஆகிட்டேன்..ஆனாலும் என்னால கோவத்தை கட்டுப்படுத்தமுடியலை. ஒரு பயபுள்ள நம்புதா பாரு..இன்னும் கடுப்பு ஜாஸ்தியாக, கத்தியே விட்டேன்..

“அய்யோ..நான் நட்சத்திர பதிவர் ஆயிட்டேன்..”

சத்தம் கேட்டு யாரோ கதவைத்தட்ட, தொறந்தா எதிர்த்த வீட்டு அமெரிக்கன்..

“வாட் மேன்..வாட் சௌண்ட்.. யூ ஆர் டிஸ்டர்பிங்க் மீ..”

“ஆக்சுவலி..ஐ ஆம் இன் தமிழ்மணம்..”

நான் கத்துனதை விட, நான் பேசுற இங்கிலீசு அவனை கோவமாக்கியிருச்சு..

“ஐ வில் கால் 911”

ஆத்தாடி..அப்படியே எனக்கு உதறல் எடுத்துருச்சு..

“ஓ..நோ..ஐ ஆம் நான் இட் தமிழ்மணம்..ஐ டோண்ட் நோ பதிவுலகம்..நோ வாசகர் கடிதம்..யூ சிலீப்பு,,”

கடுப்புல அவன் கிளம்பிட்டான்..பயத்துல நான் உள்ளவந்துட்டாலும், ஒரு பிரபல பதிவரை எவனும் மதிக்க மாட்டிங்குறாயிங்களேன்னு கோவம் இன்னும் போகலை..சரி அம்மாகிட்டயாவது சொல்லலாமுன்னு போன் பண்ணினேன்..

“யம்மா..”

“ராசா..நல்லா இருக்கியா.”

“இருக்கேன்மா..நான் தமிழ்மணத்துல..”

“அதை விடு..இப்படி உன் பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணலாமா..”

அப்படியே எனக்கு தூக்கிவாரிப் போட்டுருச்சு..

“அய்யோ..என்னம்மா சொல்லுறீங்க..”

“ஆமா..எப்ப உனக்கு கால் பண்ணாலும், ஒரு பொண்ணு ஏதோ பேசிட்டு கட் பண்ணுது..”

ஆத்தி..இது எப்போ நடந்துச்சு..

“அய்யோ..எனக்கு எதுவும் தெரியாதும்மா..யாரும்மா அது..”

“தெரியலப்பா..நான் என்ன பேசுனாலும் கேட்க மாட்டிங்குது..சொன்னதே திரும்ப திரும்ப சொல்லுது…அது பேசுறத கூட எழுதி வைச்சிருக்கேன்..”

“எங்க சொல்லுங்க..”

“தி..சப்ஸ்க்ரைபர் இஸ் கரண்ட்லி பிசி..”

“அய்யோ..அது ரெக்கார்டர்டு வாய்ஸ்மா..”

“என்ன வாய்சா இருந்த என்னப்பா..இப்படி கட்டுன பொண்டாட்டிய விட்டுட்டு..இது உன் வீட்டுக்காரம்மா தெரியுமா..”

ஆஹா..இன்னைக்கு சங்குதான் போலிருக்கே

“அம்மா..அதை விடுங்க..உங்க புள்ள தமிழ்மணத்துல..”

“அது யாரு இன்னொரு பொண்ணு..எவ அவ தமிழ்மணம்..”

ஆஹா..இதுக்கு மேல பேசுன குடும்பத்துல குத்துவெட்டு நடக்கும்னு சொல்லிட்டு கட்பண்ணினா, கரெக்டா கோவாலு கால் பண்ணுறான்..

“ராசா..சூப்பருடா..தமிழ்மணத்துல நட்சத்திர பதிவர் ஆயிட்டயாமில்ல..”

“அட கோவாலு..அததானடா இன்னைக்கு முழுக்க சொல்லிட்டு இருக்கேன்..”

“அதை விடு..உடனே லேப்டாப்பை எடுத்து “தமிழ்மணத்துல ஸ்டார் பதிவரா ஆக்குனதுக்கு நன்றி..என்னைப் படிக்கும் வாசகர்களுக்கு எப்படி நன்றி சொல்லுறதுன்னு தெரியல..உங்களால்தான் இப்படி நடந்துச்சு.” ன்னு செண்டிமெண்ட் கண்ணீர் பதிவு எழுதியிருப்பியே..

“ஆமா..அதுதான குலவழக்கம்..”

“மவனே..வெட்டுகுத்தா ஆயிடும்..என்ன எழுதப்போற..ஒழுங்கா சொல்லு..”

“தினமும் ஒரு பதிவு கஷ்டம்டா..இதுவரைக்கும் நான் எழுதுன பதிவையே தினமும் இரண்டு மீள்பதிவா போடலாமுன்னு இருக்கேன்.. முடிஞ்சா ரெண்டு நாளைக்கு ஒரு பதிவு எழுதலாமுன்னு..”

“சரி..ஏதோ பண்ணு.. இப்ப ஆளை விடு..” ன்னு கட் பண்ணிட்டான்..

அவனை விடுங்க..என்னை நட்சத்திர பதிவர் ஆக்கிய வாசகர்களுக்கு எப்படி நன்றி சொல்லுறதுண்ணே…..

ஏதோ செருப்பு பறந்து வர்றது மாதிரி இருக்கே…