Sunday 18 November, 2012

அழவைத்த விஜய் டிவியின் நீயா நானா



பொதுவாக இந்தியர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுவார்கள் என்ற கருத்துண்டு. அதுவும் தென்னிந்தியர்கள், குறிப்பாக நம்மவர்களை கேட்கவே வேண்டாம்..”என்னது..பாட்டி சுட்ட வடையை காக்கா தூக்கிட்டு போயிடுச்சாஎன்று ரெண்டு நாளா தூங்காமல் இருக்கும் ரேஞ்சுக்கு உணர்ச்சிவசப்படுவோம். அதை வைத்தே கல்லா கட்டும், ரியாலிட்டி ஷோக்களுக்கும், டி.ஆர்களுக்கும், விசுக்களுக்கும், விக்ரமன்களும் இங்கு அதிகம்.

பொதுவாக நான் சீக்கிரம் உணர்ச்சிவசப்படமாட்டேன். மண்டை உடைந்து ரத்தம் ஒழுகிகொண்டு நின்றாலும், “அடி ஒன்னும் அவ்வளவு பலம் இல்லையே..ஒரு அனாஜினோ, நோவாஜின்னோ போட்டா சரியாக போகுது என்று விவேக் ரேஞ்சுக்கு பேசக்கூடிய ஆள்.

என் வூட்டுக்காரி எனக்கு அப்படியே எதிர்..”என்னங்க..திருமதி செல்வத்துல செல்வம் என்னம்மா அர்ச்சனாவை கொடுமைப்படுத்துறாங்க..”ன்னு கண்ணிர்விட்டால், அன்னைக்கு மதியானத்துக்கு பழைய சோறும் வெங்காயம்தான்..இல்லாட்டி எக்ஸ்பையர் ஆன, பிரட் ஆம்லெட்..

நாங்கள் இருவரும் சேர்ந்து பார்க்கும், ஒரே சீரியல்..இது..ஷோ, நீயா நானா தான்சீரியலுக்கு அடுத்து மிகவும் அழவைப்பதால் என் மனைவிக்கு பிடித்தும், அதே காரணத்தாலேயே, எனக்கு பிடிக்காமலும் போன ஒரு விவாத நிகழ்ச்சி..என்னுடைய பதிவுகளில், நிறைய நான் அந்த நிகழ்ச்சியைப் பற்றி கிண்டல் பண்ணினாலும், விவாத நிகழ்ச்சிகளில் தவிர்க்கமுடியாத ஒரு நிகழ்ச்சிநீயா நானாஎன்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. கருத்துக்களை வெளிப்படுத்தவும், பகிர்ந்து கொள்ளவும் தமிழ்த்தொலைக்காட்சி சானல்களில் போட்டியாக ஒரு தளமும் இல்லாதது இந்தநிகழ்ச்சியின் வெற்றிக்கு ஒரு காரணம்.

அந்த சிவப்பு சட்டைக்காரனை அப்படியே போகஸ் பண்ணுப்பா..நல்லா அழுவுறான் மாதிரி இருந்தாலும், கோபிநாத்(அல்லது இயக்குநர் ஆண்டனி) நிகழ்ச்சியை நடத்தி செல்லும் பாங்கு அனைவரையும் கட்டிபோட்டு விடுகிறது. விவாதத்தில் தோற்கடிக்கவே முடியாதவர் என்று ஞானியை மட்டுமே நினைத்திருந்த எனக்கு கோபிநாத்தையும் சேர்த்து கொள்ள ஆசை.


நேற்று சாதரணாமாக ஆரம்பித்த நீயா நானாவின் தலைப்புஉறவினர்களோடு கூடி மகிழ்வது, தேவையா, தேவை இல்லாததா..”. இதில் என்ன சுவராஸ்யம் இருக்கபோகிறது என்று நினைத்த எனக்கும், என் மனைவிக்கும், நிகழ்ச்சி முடியும் தருவாயில் விழிநிறைய கண்ணீர். ஒரு நண்பி, “எனக்கு அப்பா இல்ல சார்..அவரை பார்க்குறதுக்கு என் அப்பா மாதிரியே இருக்கு சார்என்றதும், என் மனைவி அழுதே விட்டாள்..கல்லாகத்தான் இருப்பேன் என்று இருந்த என்னை, மற்ற எல்லாரும் சேர்ந்து அழவைத்துவிட்டனர்..

பொதுவாக நானும் என் மனைவியும், தலைப்புகளில், இருவேறு பக்கங்களில் இருப்போம்.. “உறவினர்களோடு கூடிமகிழவேண்டும்என்பதில் நானும், “இருக்குற வேலையில அதுக்கெல்லாம் எங்க நேரம் இருக்குதுஎன்று வி.டி.வி கணேஷ் மாதிரி என் மனைவியும் நீயா நானாவோடு சேர்ந்து விவாதம் செய்தோம்..

இந்த தலைப்புக்கு சரியான சீப் கெஸ்டை கூப்பிடவில்லை என்பது என் கருத்து. இயக்குநர் கருபழனியப்பனையும், மனுஷ்யபுத்திரனையும் கூப்பிட்டுருந்தால் பின்னியெடுத்திருப்பார்கள். யதார்த்தமாக பேசுகிறேன் என்று வி.டி.வி கணேஷ் சொன்ன கருத்துகளில் ஒன்றும் பலமில்லை. அதே நேரத்தில் ஓரளவுக்கு நன்றாக பேசிய, சுந்தரபாண்டியன் இயக்குநரும், முக்கியமான கருத்துக்களை முன்வைக்கவில்லை.

ஆனால் அதையெல்லாம் போக்கும் வகையில் உறவுகள் பக்கத்தில் இருந்த ராஜன் என்ற நண்பர் பேசிய விதம் அருமை..உறவினர்கள் சேர்ந்த கூட்டம், ஒரு இயக்கம்போல..அதில்தான் சாதிமுறையை அழிக்காமல் பின்பற்றுகிறார்கள்..பெண்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற ஒழுங்குமுறையை சரியாக பின்பற்றுகிறார்கள் என்றபோது, அதிர்ந்து போய்ஆஹா..இன்னைக்கு நல்லா வாங்கி கட்டிக்கபோறார்யாஎன்று நினைத்தபோது, அடுத்த அடுத்த அவர் சொல்லிய கருத்துக்கள் க்ளீன் சிக்சர்கள்..

உறவினர்களிடம் பேசி புரியவைக்கமுடியாம நீயெல்லாம் எதுக்கு காதல் பண்ணுறஎன்ற கருத்து நியாயமாக இருந்தாலும், அதுவரைக்கும் உசுரோட இருப்போமா என்ற பயமும் வந்தது. ஆனாலும், தெளிவாகவும், நிதானமாகவும் அவர் எடுத்து வைத்த கருத்துக்கள், அவர்தான் சீப்கெஸ்டாக் இருந்திருக்கவேண்டும் என்று, மனம் சொல்லியது..

இறுதியாக, உறவினர்கள் வேண்டும் என்ற ஏரியாவில் இருந்து, தாங்கள் கொண்டுவந்திருந்த, பரிசுப்பொருட்களை, நெகிழ்வாக, மாற்றுத் தரப்பினரிடம் கொடுத்தபோது, கலங்காத நானும் கலங்க ஆரம்பித்தேன்..”பாத்தியா..இதுக்குதான் சொந்தக்காரய்ங்க வேணும்கிறது..ஒன்னுன்னா, பத்து பேரு வந்து நிப்பாய்ங்க தெரிஞ்சுக்கன்னு மனைவிக்கு பெருமையுடன் சொல்ல, அவளும் அதே கலக்கத்தில்ஆமாங்க..கண்டிப்பாக சொந்தக்காரய்ங்க வேணும்க..அடுத்த தடவை ஊருக்கு போகும்போது, ரெண்டு மாச சம்பளத்தை இப்பவே எடுத்து வைச்சிருங்கன்னுஅழுதுகொண்டே சொன்னபோதுதசவாதர கமல் போல..”சொந்தக்காரய்ங்க அம்புட்டு பேரும் வேணும்னு சொல்லலே..நெருங்குன சொந்தக்காரங்க இருந்தா நல்லா இருக்குமுன்னு சொன்னேன்என்றேன், பர்சை தொட்டுப்பார்த்துக்கொண்டே

Tuesday 13 November, 2012

துப்பாக்கி – விமர்சனம்



இந்த தீபாவளி, விஜய்யின் துப்பாக்கி படத்தோடு துவங்கியது. .ஆர்.முருகதாஸ், விஜய் காம்பினேஷன் என்றபோது, சற்றுபயம் இருந்தது நிஜம். ஏனென்றால், “ஏழாம் அறிவுபடத்தில் சூர்யாவின் ஸ்டில் ஒன்றை பார்த்தபோது, முனியாண்டி விலாஸில், உரித்த சிக்கன் ஒன்று தொங்கி கொண்டிருந்ததும், சுருதிஹாசனின்தமிழன்னா, அவ்ளோ இலக்கார்ராமா..” என்று கொலைவெறி தமிழும் சேர்ந்து அடிவயிறை கலக்கியிருந்தது. இதில்வேறு, விஜய் டிரெய்லரில்.ஆம் வெயிட்டிங்க்என்று சொன்னபோது, ஒருவேளை தியேட்டருல கதவை பூட்டி வைச்சுருவாய்ங்களோ என்று திக் வேறு.

சற்று மிரட்சியுடன் படம் பார்க்க ஆரம்பித்தேன். விஜய்யின் வழக்கமான இண்டொரடக்சன் சாங்க்(இத விடமாட்டீங்களாய்யா..) ஒன்றுடன் ஆரம்பித்தபோதுசரித்தான்இனிமேல் உசுருக்கு உத்தரவாதம் இல்லை…” என்று நினைத்து எழமுயற்சித்தபோது, “யோவ் கஸ்மாலம், உக்காருய்யாஎன்று சத்தம் வராத குறையாக, பின்சீட்டுக்காரர் முறைக்க, சரி..நமக்கு விதிச்சது என்றுதான் பார்க்க ஆரம்பித்தேன்

ஆனால், இன்ப அதிர்ச்சியாக படம் அமைந்தது எனக்கு பெரும் வியப்பு. கதை இதுதான்(படம் பார்க்க முடியாதவர்கள் அண்ணன் உண்மைத்தமிழன் விமர்சனம் படிக்கவும்). மிலிட்டரி கேம்பில் இருந்து மும்பை வரும் விஜய் கையில் எதேச்சையாக ஒரு தீவிரவாதி மாட்ட, அவனை வைத்து, மும்பையில் பல இடங்களில் குண்டுவைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பது தெரியவருகிறது. இண்டெலிஜன்ஸ் பிரிவில் வேலை பார்க்கும் விஜய், எப்படி அதை கண்டுபிடித்து, எதிரிகளையும், அதன் தலைவனையும் அழிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை..

படத்தின் கதை விஜய்காந்த் படம் போல் இருந்தாலும், எடுத்த விதத்தில் முருகதாஸ் வித்தியாசப்படுத்தியுள்ளார். படத்தில் நூல்பிடித்தாற்போல் செல்லும், திரில்லிங்கை, கடைசி வரைக்கும் மெயிண்டெயின் பண்ணியிருப்பது சிறப்பு

குறிப்பாக, தீவிரவாதிகள் 12 பேரை, ஒரே நேரத்தில் விஜய் போட்டுத்தள்ளும் காட்சியும், கடத்தப்பட்ட தங்கையின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் காட்சியிலும், இயக்குநர் அண்ட் டீமின் உழைப்பு பளிச்.. கிளைமாக்ஸ் காட்சி வழக்கம்போல் கிளிஷேவாக இருந்தாலும், விஜய் படத்தில் இதைத்தானே எதிர்பார்க்க முடியும் என்பதால், மனம் சமாதானம் அடைகிறது.

வழக்கம்போல் பஞ்ச் டயலாக் பேசாமல், அண்டர்பிளே பண்ணி நடித்திருக்கும் விஜய், இந்தப் ப்டத்திற்கு பலம். சில ஸ்டைலிஷான ஷாட்டுக்கள், மூவ்மெண்டுகள், விஜய்க்கு, இன்னொரு பரிமாணத்தை கொடுக்கிறது. இண்டெர்வெல்லில் தலையை சற்று சாய்த்துக்கொண்டு ஆம் வெயிட்டிங்க்என்று சொல்லும்போது, “மாஸ்என்றே சொல்லத் தோன்றுகிறது. இப்படியான படங்களில் விஜய் நடித்தாலே போதும்..

வழக்கம்போல கவர்ச்சிக்கு காஜல், சிரிப்புக்கு ஜெயராம், சத்யன் என்று ஒன்றும் பெரிதாய் சொல்லுவதற்கில்லை. அவர், அவர்கள் கொடுத்த வேலையை செய்கிறார்கள். கேமிராமேன் சந்தோஷ்சிவனின், கேமிரா ஆக்சன் பேசியிருக்கிறது. ஆனால், இது சந்தோஷ்சிவனின் ஷாட் என்று சொல்லுவதற்கு என்று எதுவும் வித்தியாசப்படுத்தி சொல்ல முடியவில்லைஏனென்றால், தமிழ் திரையுலகம் முழுவதும் சந்தோஷ் சிவன்களால் நிரம்பிவிட்டதால்..

ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்திருக்கும் வேளையில், காட்சியமைத்தலை நன்றாக செய்திருக்கிறார்கள். ஆனால் என்னை கேட்டால், படத்தில் லெட்டவுன் பாடல்கள் என்று சொல்லுவேன்..அதாவது பாடல்கள் குறை என்றல்ல..ஆனால் இப்படி ஒரு ரேசியான படத்தில், ஏன் இவ்வளவு பாடல்கள்.. பாடல்களையும், காதல் காட்சிகளையும், கிளிஷக்களையும் குறைத்து, விஜய்யின் ஆக்சன் காட்சிகளையும், மெயின் ப்ளாட்டையும், இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தியிருந்தால், விஜய்க்கு இந்த படம்காக்க காக்கபோன்று அமைந்திருக்கும்..

ஆனாலும், படம் துவக்கத்திலிருந்து, இறுதிவரைக்கும், செமஸ்பீடாக கொண்டு சென்று, ஸ்டைலிஷான விஜய்யை காட்டியிருப்பதால், படம்

விஜய்ய்யின்தீபாவளி மாஸ்கண்டிப்பாக ஹிட் அடிக்க வாய்ப்புகள் அதிகம்