Thursday, 3 February, 2011

நீயா நானாவில் விளக்காமாத்தடி

தேங்க்யூ..தேங்க்யூ..வெல்கம் டூ, லயன் டேட்ஸ் சிரப் நீயா, நானா..இந்த சமூகத்தில் விளக்குமாறுக்கு முக்கியப் பங்கு உண்டு. பொதுவாக சுத்தம் செய்வதற்கு பயன்படும் இந்தப் பொருள் சமீபகாலமாக தண்டிக்கும் பொருளாக பயன்படுகிறது..உதாரணமாக சொல்வதனால் மனைவியிடம் வெளக்கமாத்தடி வாங்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்..அப்படிப்பட்ட சூழ்நிலையில், இன்று நாம் விவாதிக்கப் போகும் தலைப்பு, கணவர்கள் அதிகம் விளக்கமாத்தடி வாங்குவது திருமணத்திற்கு முன்பா, திருமணாத்திற்கு பின்பா..”

(கணவர்கள் தரப்பிலிருந்து ஒருவர்)

சார்..வெலக்கமாறு என்று சொல்லவேண்டுமா..வெளக்கமாறு என்று சொல்ல வேண்டுமா..”

ரொம்ப முக்கியம்..அடிவாங்குறப்பஐயோ அம்மா..காப்பத்துங்கஎன்று சொன்னால் உயிருக்கு உத்திரவாதம் உண்டு..நான் மனைவிகள் சைடுல இருந்து வர்றேன்..நீங்க சொல்லுங்க..கணவர்களை அடிக்க ஆயிரத்தெட்டு ஆயுதங்கள் இருக்க ஏன் விளக்குமாறு..”

(மனைவி அழுக ஆரம்பிக்கிறார்) தொகுப்பாளர் மெதுவாக அருகில் சென்று

ஏம்மா..இப்பவே அழுகாதீங்கம்மா..நாங்க சொன்னா மட்டும் அழுதால் போதும்..அப்படியே நீங்க அழுகலைன்னாகூட நாங்க கேள்வி கேட்டே அழுக வைச்சிடுவோம்..”

சரிங்க சார்..அது வந்து..இந்த வெளக்கமாறு பாருங்க..இதுதான் சரியான ஆயுதம் சார்..சல்லி விலையில கிடைக்குது..பிஞ்சு போனாக்கூட 10 ரூபாயில வாங்கிக்குருவோம்..இன்னொரு முக்கியமான விசயம் என்னன்னா..நாங்க அடிக்கிறப்ப கணவர் உயிருக்கு பாதிப்பு இல்லை பாருங்க..”

தொகுப்பாளர் கண்கலங்குகிறார்..

என்ன ஒரு அன்பு..என்ன ஒரு அன்பு..இப்படி ஒரு அன்பு நான் இதுவரை பார்த்ததில்லை..இவர்கள்தான் இந்த சமூகத்திற்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்கள்..உங்களை பார்த்து நாங்கள் பெருமை கொள்கிறோம்..இந்த பெண்ணுக்கு ஒரு ஸ்டாண்டிங்க் ஓவேசன் கொடுக்கலாமே..”

தொகுப்பாளர் எல்லோரையும் எழுந்திருக்க சொல்ல அனைவரும் எழுகின்றனர்..பிண்ணணி இசையில் கிளாப் சௌண்ட்..

நன்றி..,நன்றி..இப்ப கணவர்கள் பக்கம் வருவோம்.அடி அடிவாங்கியே, ஆடிப்போய் உக்கார்ந்து இருக்கிற நீங்க சொல்லுங்க..உங்க பொண்டாட்டி, விளக்கமாத்தால அடிக்கிறப்ப உங்களுக்கு எப்படி இருக்கும்..”

(கேமிராமேன் அழகாக அமர்ந்திருக்கும் பெண்களையே போகஸ் பண்ணா, தொகுப்பாளர் டென்சனாகிறார்)

கேமிராமேன்..கொஞ்சம் இந்த பாவப்பட்ட ஜென்மங்கள் மேலயும்

கொஞ்சம் போகஸ் பண்ணுங்கப்பா..நீங்க சொல்லுங்க சார்..”

சார்..அந்தப் பக்கம் வெளக்கமாத்தால அடிவாங்குறத எவ்வளவு சாதரணமா சொல்லிட்டாங்க..எவ்வளவு கஷ்டமா இருக்கும் தெரியுமா சார்..உச்சிமுதல் உள்ளங்கால் வரைக்கும் ஊமைக்காயம் சார்..5 நிமிசம் காதுக்குள்ளாகொய்ங்க்ன்னு ஒரு சத்தம் கேட்கும்..வெளியில கூட சொல்ல முடியாது சார்..”

குமுறி, குமுறி அழ ஆரம்பிக்கிறார்..கேமிரா நன்றாக போகஸ் பண்ண ஆரம்பிக்கிறது..

நன்றி..நன்றி..நீங்க நல்லா அழுதுக்கிட்டே இருங்க..வெளக்கமாத்தடி பற்றி பல சூடான விவாதங்கள் ஓரு சிறிய விளம்பர இடைவெளிக்குப் பிறகு..”

(சிறிய விளம்பர இடைவெளிக்குப் பிறகு)

வெல்கம் பேக் டூ லயண்டேட்ஸ் சிரப் நீயாநானா….இப்ப டாபிக்குக்கு வருவோம்..மனைவிகள் பக்கத்துல சொல்லுங்க..நீங்கள் வெளக்கமாத்தால அதிகம் அடித்தது, திருமணத்திற்கு முன்னா, திருமணத்திற்கு பின்னா..”

திருமணத்திற்கு பின்பு சார்..”

கொஞ்சம் எக்ஸ்பிளையின் பண்ண முடியுமா..”

அது வந்து சார்..நாங்க நல்ல பிள்ளைகளா, சீரியல் பார்த்துக்கிட்டு இருப்போம்..அப்ப வந்துகடுப்பேத்துற மாதிரி, சோறைப் போடு, குழம்பை ஊத்துன்னு, டிஸ்டர்ப் பண்ணின எந்த பொண்ணுக்கு சார் கோபம் வராமல் இருக்கும்

நியாயமான கோபம்..ஏங்க..கணவன்மார்களே..இது நியாயமான கோபம்தானுங்களே..”

இல்லை சார்..மனுசன் ஆபிஸுக்கு போய்ட்டு டயர்டா வந்தா..இந்த சீரியல் இருக்கே சார்..ஏண்டா கல்யாணம் பண்ணினோம்னு இருக்கு சார்..திருமணத்திற்கு முன்பு நிறைய தடவை விளக்கமாத்தடி வாங்கிருக்கோம்..ஆனா, அதுதான் சார் சுகம்..உண்மைய சொல்லப்போனா திருமணத்திற்கு முன்புதான் சார் அதிகம் அடிவாங்கிருக்கோம்..ஆனால் அதில் எல்லாம் ஒரு காதல் தெரியும்..ஆனா திருமண்த்திற்கு முன்பு வாங்குகிற அடி இருக்கே..அதுல ஒரு வெறி தெரியுது சார்..வாங்குற அடியில 2 நாளைக்கு எந்திருக்கவே முடியலை சார்..”

திரும்பவும் கண்கலங்கிறார்..மனைவியை பார்த்து கத்துகிறார்..

அடியே..நீயும் அழுதுறுடி..அப்பதான் டீ.வியில காண்பிப்பாயிங்க..”

இப்போது மனைவியும் அழுகிறார்..

ஆஹா..இதுவல்லவோ தம்பதி..உண்மையான அன்பு..வாங்க ரெண்டு பேரும் எந்திரிச்சு இங்க வாங்க..”

ரெண்டு பேரும் எழுந்து வருகின்றனர்..

சொல்லுங்க மேடம்..இப்படி பாசமா இருக்கிற கணவரை அடிப்பது தப்பில்லையா..”

தப்புதான் சார்..தப்புதான்..ஆனாலும் நான் என்னதான் அடி, அடின்னு அடிச்சாலும், அவரு ரொம்ப நல்லவரு சார்..எதிர்த்து ஒரு வார்த்தை பேச மாட்டாரு சார்..”

ஆஹா..நீயா நானா இது போன்ற தம்பதிகளை சேர்த்து வைப்பதில் பெருமை கொள்கிறது..”

ஆமா சார்..என் சிட்பெண்ட்..சீ..ஹஸ்பெண்ட்..நான் கடுப்பா இருக்குறப்ப எவ்வளவு பாடுவார் தெரியுமா..அவர் பாட்டைக் கேட்கும்போது எனக்கு அழுகை அழுகையா வரும் சார்..(அழுகிறார்)..அவ்வளவு உருக்கமா பாடுவார் தெரியுமா..”

ஆஹா..அப்படியா..எங்க, மைக்க அவருகிட்ட கொடுங்க..சார் நீங்க பாடுங்க….மேடம் , நீங்க அழுக ஆரம்பிங்க..”

(கணவர் உருக்கமாக பாட ஆரம்பிக்கிறார்)

டாய்..டாய்டிங்கிரிடோய்..டாய்..டாய்..டிங்கிரிடோய்..

கத்திருக்கோலு..”

மனைவி விசும்பி விசும்பி அழுகிறார்..

அடப்பாவி..நீ பாடுற பாட்டைக் கேட்டா, மனைவி மட்டுமல்ல, பாக்குறவியிங்க எல்லாருமே அழுவாயிங்களே..”

(தொகுப்பாளரும் கண்கலங்குகிறார்..)

மனைவி கணவரைப் பார்த்து

..லவ் யூ புருசா..”

..லவ் யூ..பொண்டாட்டி..”

எல்லாரும் உணர்ச்சிப் பெருக்கால் கைதட்டுகின்றனர்..

நீயா நானா வரலாற்றில் இதுவரை நடக்காத ஒன்று இது..இதுபோன்ற உணர்ச்சிமிக்க வரலாற்றை, நீயா நானா பதிவு செய்வதில் பெருமை கொள்கிறது..மேடம்..இதுல இருந்து..நீங்க உங்க கணவர் மேலே அன்பு வைச்சிருக்கிறது இவ்வளவு தெளிவா தெரியுது..நீங்க எப்படி அவரை விளக்காமாத்தால அடிச்சீங்க..கொஞ்சம் டெமான்ஸ்ட்ரேசன் பண்ணிக் காட்ட முடியுமா..”

அதுக்கு விளக்கமாறு வேண்டுமே சார்..”

நீயா..நானா..உங்களுக்கு அதைக் கொடுக்கும்..”

எங்கிருந்து ஒரு விளக்காமாறு பறந்து வர, மனைவி அதை மனைவி லாவகமாக கேட்ச் செய்கிறார்..

தொகுப்பாளர் கண்வனைப் பார்த்து..

கிட்ட வாங்க சார்..கல்யாணத்துக்கு முன்னாடி மட்டும் அடிவாங்குறதுக்கு ஓடி வர்றீங்கள்ள..இப்ப வந்து வாங்கிங்க

மனைவி வெறியுடன் கணவரை சாத்து சாத்து என சாத்த கணவர் கதறுகிறார்..

அடப்பாவிங்களா..டாபிக்கை விட்டுட்டு இப்படி அடிவாங்க வைக்கிறீங்களேயா..வீட்டிலதான் அடிவாங்குறோமுன்னா இங்கேயுமா….”

கதறுகிறார்..கேமிரா அவர்களையே போகஸ் பண்ண..அங்கு இருக்கும் பெண்களெல்லாம் அவர்களை போகஸ் பண்ண வேண்டும் என்ற எண்ணத்தில், ஆளுக்கு ஒரு விளக்காத்தை எடுத்துக் கொண்டு கணவன்மார்களை நோக்கி ஓடிவர கணவன்மார்கள் எல்லாம் உயிரைக்கையில் பிடித்துக் கொண்டு ஓட ஆரம்பிக்கிறார்கள்..

13 comments:

டக்கால்டி said...

Sema Kalaai...
:-)

ஜோதிஜி said...

நட்சத்திர வாரம் என்றதும் சற்று அவசரமாக எழுதியுள்ளீர்கள். பாதி இடங்களில் நன்றாக் சிரிப்பு வந்தது. நன்றி ராசப்பா.

பயணமும் எண்ணங்களும் said...

:))) சிரிச்சு முடியல...முதல் ரசிகர் னு புரியுது..

Anonymous said...

இதை படிக்கும் போது .... அந்த நிகழ்ச்சியை அப்படியே நேரில் பார்த்த மாதிரி இருக்கிறது. சூப்பர். நல்ல வாரி இருக்கிறீர்கள்

Josephine Baba said...

குசும்பு! கோபி நாத் போன்ற தொகுப்பாளர்கள் தங்கள் திறைமையை இப்படியாக வீண் அடிக்கின்றார்கள். என்ன செய்ய?

Ponchandar said...

சூப்பர்......வி..வி..சி....நீயா ? நானா ?நடையிலேயே எழுதி அசத்திவிட்டீர்கள்....

சாமக்கோடங்கி said...

கலக்கல் நண்பரே.. பின்னி இருக்கிறீர்கள்.. அந்த நீயா நானா நிகழ்ச்சியை(நாடகத்தை) நேரில் பார்த்தது போல இருக்கிறது..

தனி காட்டு ராஜா said...

//“டாய்..டாய்…டிங்கிரிடோய்..டாய்..டாய்..டிங்கிரிடோய்..

கத்திருக்கோலு..”//
:))

Senthil said...

great!


senthil, doha

ஆனந்தி.. said...

கண்ணில் தண்ணி வர அளவுக்கு அப்படி சிரிச்சேன்...சூப்பர் சார்..சூப்பர்..நல்ல நகைச்சுவை...:))))

அவிய்ங்க ராசா said...

நன்றி டகால்டி,
நன்றி ஜோதிஜி..இது ஒரு மீள்பதிவு
நன்றி பயணம்
நன்றி பாபா
நன்றி அனானி
நன்றி பொன்சந்தர்
நன்றி சாமகோடாங்கி
நன்றி தனிக்காட்டு ராஜா
நன்றி செந்தில்
நன்றி ஆனந்த்

Anonymous said...

விஜய் டிவியின் “நீயா? நானா?” – ஒரு கசப்பான அனுபவம்!
http://lawyersundar.blogspot.com/2010/04/blog-post_15.html

நண்பன் said...

nice demonstration ... Ur slang rock rasa !!!

Post a Comment