Wednesday, 2 February, 2011

பிளடி இண்டியன்ஸ்.....

(இது ஒரு மீள்பதிவு)

பிளடி இண்டியன்ஸ்ன்னு ஒரு வெள்ளைக்காரன் உங்க கிட்ட சொன்னா உங்களுக்கு எப்படிண்ணே இருக்கும்..அவன சாகடிக்கலாம் போல இருக்கும்லண்ணே..எனக்கு ஏக்கமா இருக்கும்ணே

இங்க அமெரிக்காவுல, எங்க அபார்ட்மெண்டுக்கு அடுத்த வீட்டுல ஒரு வெள்ளக்கார தாத்தா இருக்காருண்ணே..பேருஜக் பென்ட்லே”…80 வயசு இருக்கும்ணே..எழுந்து நடக்க முடியாது..எப்போதும் வீல் சேர் தான்..அவர் மட்டும் தனியா இருக்காருண்ணே..பொண்டாட்டி கிடையாது..அவரோட மகன் தனிக்குடித்தனம் இருக்கான் போல..அப்ப, அப்ப வந்து பார்ப்பான்..

ஒரு நாள் என்னோட வாசல்ல நின்னுக்கிட்டு நம்ம சேக்காளிங்களோட பேசிக்கிட்டு சத்தம் போட்டு பேசுக்கிட்டு இருந்தேண்ணா..அவருக்கு இடஞ்சலா இருந்துருக்கும் போல, வீல் சேருல இருந்தபடியே வெளியே வந்துட்டாரு

ஹலோஎன்ன இங்க சத்தம்,பக்கத்து வீட்டில குடியிருக்க வேணாமாபிளடி இண்டியன்ஸ்…”

சத்தம் போட்டு பேசுனது தப்புதாண்ணே..அதுக்காக இப்படியான்னே பேசுறது..எனக்கு நாக்கு மேல கோவம் வந்து கன்னாபின்னான்னு பேசிட்டேண்ணா..எனக்கே கஷ்டமா இருந்துச்சுண்ணே..தாத்தா வயசுண்ணே

ஒருநாள் ஆபிஸ் விட்டு வந்தேண்ணேபக்கத்து வீட்டு இருந்து சத்தம்..பயந்து போயி, கதவை தொறந்து பார்த்தா, பாவம்ணே..தாத்தா பாத்ரூம் போனப்ப கிழே விழுந்துட்டாருண்ணேஅவருனால எந்திருக்க முடியாம அப்படியே தவழ்ந்து, தவழ்ந்து வந்தார் பாருங்கண்ணேவாழ்க்கையே சீ..ன்னு ஆகிடுச்சுண்ணே..எதிரிக்கு கூட இந்த நிலமை வரக்கூடாதுண்ணேஉடம்பெல்லாம் மலம்ணே..என்னால தாங்க முடியலைண்ணே..நம்மல்லாம் மனுசயங்கண்ணே..அப்படியே அவர அள்ளி தூக்கிக்கிட்டேண்ணே

ராஜா..ராஜா..வேண்டாம்பா..உடம்பெல்லாம் அசிங்கம்பா..உனக்கும் ஒட்டிக்கும்பா..” அழுகுராருண்ணே

மனசுல இருக்குற அசிங்கத்தை விடவாண்ணே. இதெல்லாம்..

பரவாயில்ல சார்…” அப்படின்னுட்டு அப்படியே ஒரு துணிய எடுத்து துடைச்சி விட்டேண்ணேஎன் கைய அப்படியே பிடிச்சுக்கிட்டு குழந்தை மாதிரி அழுகுறாருண்ணே..

ஏண்டா ராஜா..நீ எனக்கு பொறக்கலை…”

சார், என்ன ஆச்சு..ஏன் தனியா இருக்கிறீங்க..நீங்க உங்க பையனோட இருக்கலாமே…”

அவர் முகம் விரக்தியாருச்சுண்ணே

இல்லப்பா..என்னோட பையன் ஒத்துக்கல..அவனுக்கு அவன் ஆபிஸ் வேலை பார்க்கவே நேரம் இல்லையாம்..வெளியே அனுப்பிட்டான்..மாசத்துக்கு ஒரு தடவை வந்து பார்ப்பான்..”

என்ன சார் உலகம் இது..பெத்த அப்பா விடவா காசு..”

சரிப்பா, அப்ப நீ ஏன் உங்க வீட்டை விட்டு இங்க வந்த..”

எனக்கு யாரோ செருப்ப கழட்டி அடிக்குற மாதிரி இருந்துச்சுண்ணே..அம்மா, அப்பாவை இந்த வயசான காலத்துல விட்டுட்டு இங்க வந்து சந்தோசமா இருக்கோம்னு நினைக்கிறீங்களா..இல்லண்ணேசுயநலம்ணேஒவ்வொரு மாசமும் சம்பளக்காசு வரும்போதும் அம்மா, அப்பா ஞாபகம் தாண்ணே வரும்..பாவக் காசுண்ணேநமக்காக தன் வாழ்க்கையே குடுத்தவங்கள அங்க தனியா விட்டுட்டு எங்க சுய வாழ்க்கைக்காக இங்க வந்து கிடக்கோம்ணேபாவம்ணே..இப்பயும் எங்க அம்மாகிட்ட கேளுங்க, “என் பையன் பாரின்லே இருக்கான்..”அப்படியே பூரிச்சு போயிடுவாங்கண்ணேஒருநாள் அம்மானால தாங்க முடியல..”தம்பி ராசா..இங்க வந்துருப்பா, உன்னை பார்க்காம இருக்க முடியலப்பா..” அழுதாங்கண்ணே..வீட்டுல திட்டிருப்பாய்ங்க போல..அடுத்த நாள் அவசரமா போன் பண்ணி..

தம்பி அவசரம் இல்லப்பா..இப்பல்லாம் அமெரிக்கா ஈசியா போக முடியாதாமே..எங்களை பத்தி கவலைப்படாதப்பா..நாங்கல்லாம் இன்னைக்கோ நாளைக்கோ..நீதான் வாழப் போறவன்..”

நம்மோட எதிர்காலத்துக்காக, தன்னோட நிகழ்காலத்தையே தியாகம் பண்றவங்கண்ணே

அப்புறம்ஜக்நமக்கு நல்ல பிரண்ட் ஆகிட்டாருண்ணே..ஆனாலும் என்னைபிளடி இன்டியன்னுதான் கூப்பிடுவாருண்ணே..ஆனா, செல்லமாநானும் குசும்புக்காரன் தாண்ணே..”சக்ன்னு கூப்பிடுவேன்..

ராசா, “சக்குன்னு கூப்பிடாதப்பா..அது கெட்டா வார்த்தப்பா..”

நீங்க பிளடி இண்டியன்னு கூப்பிடிறதை நிறுத்துங்க..அப்பத்தான்..”

குழந்த மாதிரி சிரிப்பாருண்ணேஅவருக்கு உறைப்பு பண்டம்ன்னா சுத்தமா ஆகாது..நாங்க வேணும்னே அவருக்கு உறைப்பு முருக்கு குடுத்து கலாய்ப்போம்..பாத்ரூம்ல போயி, அவசரம் அவசரமா வாயைக் கழுவிட்டுபிளடி இண்டியன்ஸ்ன்னு சொல்லி சிரிப்பாரு..

அன்னைக்கி அவருக்கு பொறந்த நாளுண்ணேநானும் என்னோட மனைவியும் அவருக்காக உறைப்பு கம்மியா செஞ்சு அசத்தலாம்னு ஆசைப்பட்டு, காலையில எழுந்து எல்லா வேலையும் முடிச்சிட்டு அவரக் கூப்பிடலாம்ன்னு நினச்சுக்கிட்டு இருந்தேன்..யாரோ கதவைத் தட்டுறாங்கண்ணே..திறந்து பார்த்தா, பெரியவரோட பையன்..

தம்பி..கொஞ்சம் வீடு வரைக்கும் வந்து போறீங்களா..”

சரி கேக் வெட்டத்தான் கூப்பிடுறாங்கன்னு அவசரம் அவசரமாகுளோப் ஜாமுன் ஒரு ட்ப்பால எடுத்துக்கிட்டு போயி அவரு வீட்டுக்கு போறேன்….அப்படியே வீல் சேருல செத்து கிடக்குறாருண்ணேகண் அப்படியே என்னையே பார்க்குதுண்ணே..உதடு ஏதோ சொல்ல வந்தது போல தொறந்து அப்படியே இருக்குண்ணே..என் உசிரை யாரே என்கிட்ட இருந்து பிச்சி எடுத்துக்கிட்டு போன மாதிரு இருந்துச்சுண்ணே..அப்படியே வாய தொறந்துபிளடி இண்டியன்னு கூப்பிடுவாருன்னு அவர் வாயவே பார்த்துக்கிட்டு நின்னேண்ணே..உலகத்துலே கொடுமையான விசயம் சாவுதாண்ணே

10 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பீல் பண்ண வச்சிடீங்களே

Anonymous said...

ஏன் போடோவுல உர்ருன்னு இருக்கார்? :(

nila said...

:(

இராமசாமி said...

(:

எல் கே said...

பீல் பண்ண வச்சுடீங்க ராசா

Arun Prasath said...

adada....

அரபுத்தமிழன் said...

முன்பே படித்திருந்தாலும் ஃபீலிங்குக்காக மீண்டும் படித்து நெகிழ்ந்தேன்.

Amudhavan said...

தங்கள் பதிவுகளை ஏற்கெனவே படித்திருக்கிறேன். என்னதான் இது ஒரு ஸ்டைல் என்றாலும் வார்த்தைக்கு வார்த்தை அண்ணே போட்டு எழுதுவது கொஞ்சம் நெருடலாக இல்லையா? தங்கள் எண்ணங்கள் மிகவும் சிறப்பாக உள்ளன. வாழ்த்துக்கள்.

அவிய்ங்க ராசா said...

நன்றி ரமேஷ்,
நன்றி அனானி, அது அவர் போட்டோ இல்லீங்க..))
நன்றி நிலா
நன்றி ராமசாமி
நன்றி எல்.கே
நன்றி அருண்
நன்றி அரபுத்தமிழன்
நன்றி அமுதவன்.இந்த ஸ்டைலை எப்போதோ மாற்றிவிட்டேன். இது பழைய மீள்பதிவு ஆதலால், நிறைய அண்ணே இருக்கும்..))

நண்பன் said...

நாமெல்லாம் பாசக்கார பயலுக-ன்னு நிருபிட்சிடீங்க ராசா அண்ணே ....

Post a Comment