Saturday 24 March, 2012

மீசை




எல்லா குழந்தைகளுக்கும் பிடித்தது, தாய், தந்தை அரவணைப்பாக தரும் அன்பு முத்தம். குழந்தையை இரு கைகளால் அணைத்து, முழு அன்போடு, அவர்கள் கன்னத்தில் தரும் முத்தத்திற்கு நிறைய அர்த்தங்கள் உண்டு. எந்த அளவிற்கு தன் குழந்தை மேல் அன்பு வைத்திருக்கிறான் என்று சிலநேரங்களில், இந்த முத்தங்கள் நினைக்க வைத்ததுண்டு.

ஆனால், இன்னமும் குழந்தைக்கு அன்பு முத்தமே கொடுக்க முடியாத ஒரு ஜீவன் இந்த உலகத்தில் இருக்கிறான் என்றால், நம்புங்கள்இதோ நான்தான். என் ஒரு வயது பையனுக்கு நான் முத்தம் தர முயற்சித்தாலே, அலறியடித்துக்கொண்டு ஓடுகிறான்(அதெல்லாம் பல்லு நன்றாகத்தான் விளக்குறோம்). வேறு ஒன்றுமில்லை. ஒரே காரணம். என் முகத்தில் மூக்குக்கும் வாய்க்கும் நடுவில் இருக்கும்(இதெல்லாம் நோட் பண்ணுங்கப்பா, பின்னால இலக்கியத்துல வர வாய்ப்ப்பிருக்கு) அமேசான் காடுபோல் இருக்கும் மீசை.

அதே போல, இந்த உலகத்தில் ஒருமுறை கூட மீசையை வழிக்காத ஒரு ஜீவன் பார்த்திருக்கிறீர்களா..அதுவும் நானே(ஒன்லி டிரிம் தான்). என்னவோ தெரியவில்லை..மீசை மேல் அவ்வளவு ஆசை(இது டி.ஆர் பின்நவீனத்துவம்). அதற்கு பெரிய வரலாறு, புவீயியல் உண்டு.

காலேஜ் படிக்கும் வயதில் எல்லோருக்கும் வரும் அரும்பு மீசை கூட எனக்கு வந்ததில்லை. மதுரைப்பக்கமெல்லாம், பொதுவாக மீசையை வழிக்க மாட்டார்கள். ஷேவ் பண்ண சோம்பேறித்தனமா, என்று நினைக்ககூடும், ஆனால், மீசையை ஒருமாதிரி இன்னமும் ஆண்மையின் அடையாளமாகவே பார்க்கிறார்கள். அதனாலேயேமீசைக்கார அண்ணாச்சிகள்ஊருப்பக்கம் ரொம்ப அதிகம்.

எனக்கு மீசை மேல் ஆசை வந்ததே, அப்பாவைப் பார்த்துதான். ஒரு வேளை பென்சிலால் மீசை போட்டிருக்கிறாரோ, என்று நெடுங்காலமாக ஒரு ஐயம். அவ்வளவு நேர்த்தியாக கோடு போட்டாற் போன்று, அழகாக வரைந்தாற்போன்று இருக்கும். ஒருமுறையாவது அதை இழுத்துப் பார்த்து, என் ஐயத்தை போக்கிக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில், ஒருமுறை அவர் தூங்கும்போது, அவருடைய மீசையை இழுத்தே விட்டேன். அவர் அலறிய அலறலில், கொஞ்ச காலம் மீசை மேலே உள்ள ஆசை அறவே போய்விட்டது.

மச்சி..அடிக்கடி ஷேவ் பண்ணு..”

தேங்காய் எணணை தடவு…”

என்று வளராத இடத்துக்கு பல அறிவுரைகள் தந்தனர். நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஷேவ் பண்ண ஆசைப்பட்டு, முகம் முழுவதும் ரத்தக் காயங்களோடு வந்தபோது, அம்மா அலறியே விட்டார்கள், ஏதோ அடிதடியில் கலந்துகொண்டு வந்திருக்கிறேன் என்று. எங்கள் வீட்டில் எல்லோருக்கும் தடிமனனான மீசை இருக்கிறபோது, “எனக்கு மட்டும் ஏன்மாஎன்று அஞ்சலி பாப்பாவைக்கண்ட அக்கா மாதிரி அம்மாவிடம் அழுதிருக்கிறேன்.



சிலநேரங்களில், மீசை இல்லாமல் காலேஜ் போகவே பிடிக்காது. “அறிவாளி கேசுடாஎன்று கிட்ட சேர்க்கவே மாட்டார்கள். இதற்காகவே, ஒரு பென்சிலாலவது, கோடு வரைந்துகொள்வது என்று தீர்மானித்து, மெல்லிதாக வரைந்தும் விட்டேன். நம்ம நேரத்துக்கு பாழாப்போன மழைவந்து, நரியின் சாயாம் வெளுத்ததுபோல் ஆகிவிட்டது

ச்..ச்சீ..இந்தப் பழம் புளிக்கும்என்பதுபோல், மீசை பற்றிய முயற்சிகளை கைவிட்டேன். கரெக்டாக , கல்லூரி இறுதிநாட்களில் எனக்கு மீசை முளைக்க ஆரம்பித்தது. எல்லாப் பயலுகளையும் பாதையில் நிறுத்திபாருங்கடா..என் மீசையைஎன்று சொல்லலாம் போல வெறி..ஒவ்வொரு நாளும், கண்ணாடியில் முகத்திற்கு பதிலாக மீசையையே பார்த்தேன். ..
மீசையை ஆசையாக தடவிக்கொண்டேன்..”ங்கொய்யாலே, நாளைக்கே உலகம் அழியும் சொன்னால் கூட மீசையை எடுக்கக்கூடாது”: என்று மங்கம்மா சபதம் போட்டேன்..

அடிக்கடி, இரண்டு கைகளாலும், மீசையைத் தடவுவதை நான் மேனரிசமாகவே மாற்றிக்கொண்டேன். இன்னமும், ஏதாவது, புதிதாக சாதித்துவிட்டால்சாதிச்சோடோமுல்லஎன்று பெருமையான மீசையைத் தடவுவது உண்டு. அந்த அடர்த்தியான மீசையில் மேல் அவ்வளவு ஒரு மோகம்.

நண்பர்கள் கூடச் சொல்லுவார்கள்..”மச்சி..மீசை வைச்சா, பொண்ணுங்களுக்கு பிடிக்காது..எடுத்துடு..” என்று. எனக்குத் தெரிந்து, தமிழ் நாட்டில், மீசையை ஒரு கலாச்சாரத்தின் அடையாளமாய் வைத்திருக்கும், ஒரே நாடு நம் நாடு தான்.
அதுவும் தமிழர்களாகியா நாம், இதை வீரத்தின் அடையாளமாய் பார்க்கிறோம், பகுத்தறிவையும் மீறி

அந்த மீசையை எடுத்து தொலைச்சா என்னவாம்..குழந்தை குத்துதுன்னு சொல்லுறான்லஎன்ற மனைவியின் குரல் அடுத்த அறையிலிருந்து கேட்டது. குளியலறையில் ஷேவ்விங்க் ரேசரோடு நான். மழிப்பதற்கு முன்பு, ஒருமுறை மீசையை பாசமாக தடவிக்கொண்டேன் ஒரு உறுப்பு போல என் கூடவே பிறந்தது. மீசையை எடுத்தால், என்னிடமிருக்கும் எதையோ உருவிக்கொண்டு போவது போல் இருக்கிறது.

சேவிங்க் ரேசரை முகத்தருகில் கொண்டு செல்ல கை நடுங்குகிறது. இதோ, 10 வருடங்களாக என் கூடவே இருந்த நண்பனை, பிய்த்து எறியப்போகிறேன்.மெல்ல, ஷேவிங்க் ரேசரை முகத்தருகில் கொண்டு சென்றவன்

அப்…..ப்…..பாஆ…..”

என்று மழலைக்குரல் கேட்டு ஷேவிங்க் ரேசரை கீழே வைத்துவிட்டு, மகனை துக்கி அன்புடன் அணைக்கிறேன்என் தோளில் சாய்ந்து கொண்டே, தன் பிஞ்சு கையை வைத்து, மெல்ல என் மீசையை இழுக்கிறான், அந்த நேரம் எனக்குள் நானே தீர்மான்ம் செய்து கொண்டேன்..

நான் மீசையை எடுக்கப்போவதில்லை..”

Friday 23 March, 2012

தயவுசெய்து இந்த படத்தைப் பாக்காதீங்க


தக்காளி..எல்லாரும் படத்தைப் பார்த்துட்டு நிம்மதியா தூங்குவாய்ங்க..இல்லாட்டி, பப்ஸ், பாப்கார்ன்னு சாப்பிட்டுக்கிட்டு இருப்பாய்ங்க..எவனாவது ஒருத்தன், உடனே லேப்டாப்பை தூக்கி, “தயவு செய்து இந்தப் படத்தைப் பார்க்கதீங்கன்னு ஒரு பதிவு போடுவானாயா..போடுறான்யா இந்த அவிய்ங்க ராசா..ஏன்னா..இந்தப் படத்தைப் பார்த்துட்டு தூக்கம் வரமாட்டீங்குதுயா..ஒரு திரில்லர் படத்தை எப்படி முடிப்பாய்ங்க..”அண்ணே..இன்னார்தான் கொலை செய்யப்பட்டார்..இன்னார்தான் கொலை செஞ்சாய்ங்க…” அப்படின்னு..ஆனா, இந்தப் படத்தை முடிக்கிறாய்ங்க பாருங்க..அதனால்தான் சொல்லுறேன்..தயவுசெய்து இந்தப் படத்தை பார்த்துறாதீங்கப்பு

எல்லாம் இந்தக்கிழவன்மோர்கன் ப்ரீமேன்அப்படிங்குறவருக்குத்தேன். என்னதான் சாம் ஆண்டர்சன் படத்தை பத்து தடவை பார்த்தாலும், ஆங்கில படத்துல, ரெண்டு பேரு பெயரைப் பார்த்தவுடனே கண்ணை மூடிட்டு பார்க்க ஆரம்பிச்சுருவேன். ஒருத்தரு, “சாமுவேல் ஜாக்சன்”, இன்னொருத்தர் இந்தமோர்கன் ப்ரீமேன்..” ரெண்டு பேருக்கும் தாத்தா வயசுதான்..ஆனால் நடிப்பாய்ங்க பாருங்கதக்காளி, இவிங்க தான்யாஉலகநாயகன்”. இதுதாம்லே நடிப்பு..



சரி..படத்துக்கு வருவோம். அந்த ஊரிலேயே பெரிய பணக்காரர்ஹென்றிஒரு திருவிழாவுக்கு வரும்போது, தன் நண்பன் போலீஸ்காரர்விக்டர்இடம் இருந்து போன் வருகிறது..”நேத்து ஜாக்கிங்க் போற வழியிலே, ஒரு சின்னப் பொண்ணு செத்து கிடந்ததுன்னு சொன்னியே, அதப் பத்தி விவரம் கேக்கணும். பத்து நிமிஷம் தான்..தயவு செஞ்சு ஆபிசுக்கு வர்றியா..” ன்னு கூப்பிடுறாருண்ணே..பணக்காரருக்கோ 60 வயது இருக்கும். 27 வயது பெண்ணைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். ஊரில் பெரிய புள்ளி..நிறைய டிரஸ்டுக்கு டொனேஷன் கொடுத்திருக்கிறார்..நண்பன் கேட்டுகொண்டதற்காக போலீஸ் ஸ்டேஷனக்கு போயிட்டுடே விக்டர்..திருவிழாவுக்கு நேரம் ஆயிடுச்சுடாசீக்கிரம் விடுடா..” அப்படின்னு செல்லமா கோபிக்க, “ஒரு 10 நிமிடம் தான் உக்காருன்னு விவரம் கேக்க ஆரம்பிக்கிறாரு.. கூட ஒரு இளம்வயது, போலீஸ்காரரும் சேர்ந்து கொள்ள, அந்த இளம் வயது போலீஸ்காரர், ஹென்றியிடம் மரியாதைக்குறைவாக நடந்துகொள்ள, ஹென்றிக்கு கடுப்பாகிறது..”யோவ் விக்டரு..ஊரு பெரிய மனுசங்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு இந்தப் பொடிப்பயலுக்கு சொல்லிக்கொடுஎன்று  கடிந்து கொள்கிறார்..விசாரணை ஆரம்பமாகிறது..

நேத்து எங்க அந்தப் பொண்ணு செத்து கிடந்தத பார்த்த..”

வாக்கிங்க் வர்றப்ப..”

தனியா வந்தயா..”

இல்ல நான் வளர்க்குற நாயோட..”

நாய் பேரு..”

டாங்கோ..”

விக்டர், ஒரு பைலை புரட்டுகிறார்..புரட்டிவிட்டு மெதுவாக சொல்கிறார்..

நேத்து வாக்கிங்க் போறவியிங்கட்டல்லாம் விசாரிச்சோம்..உன்னை யாரும் நாய்கூட பார்த்த மாதிரி சொல்லலியே..”

ஒருநிமிசம் திகைப்படகிறார் ஹென்றி..
அது..அது வந்து..ஆங்க்..மறந்துட்டேன்..அப்ப நாய் கூட இல்லை..”

தக்காளி, இங்க இருந்து ஆரம்பிக்குது படம்.



இதே போல, இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் கொல்லப்படிருக்கா..அவளும் சின்ன வயசுதான்..விசாரிச்சதுல உன்னை அந்த ஏரியாவுல பார்த்ததா சொல்லுறாய்ங்களா..நீ எங்க என்ன பண்ணின

நம்ம ஆளு, “விக்டர்ஹென்றி பத்திய இன்வெஸ்டிகேசனைப் புட்டு புட்டு வைக்கிறார். ஹென்றியின் இளவயது மனைவியுடன் தாம்பத்ய வாழ்க்கை திருப்தியாக இல்லை. அதுவுமில்லாம ஹென்றிக்கு சின்னவயது பெண்கள் மேல் ஒரு கண்ணு., என்று சொல்ல, ஹென்றியோவ் என்ன விளையாடுறீங்களா..10 நிமிசம்னு கூட்டிட்டு வந்துட்டு இப்ப என்ன இப்படி ட்ரீட் பண்ணறீங்க..” அப்படின்னு டென்சனாக, விகடர் கூலாக

உக்காரு வாத்தியாரே..கொலைய செஞ்சுப்புட்டு சவுண்டு வேற விடுறியா..உன்னை வரச்சொன்னதே, அரஸ்ட் பண்றதுக்குத்தாண்டி..”

அப்படின்னு சொல்ல, காட்சிகள் விறு,விறு. கூட இருக்கும், இளவயது போலீசுக்கு ஏற்கனவே, ஹென்றி மேல் காண்டு..போதாக்குறைக்கு பட்சி தானா வந்து சிக்கிச்சு..சொலலவா வேணும்..கேள்வி மேல் கேள்வியா கேட்குறாய்ங்க..

2 மணிநேரம் முழுக்க இன்வெஸ்டிகேசன்தாண்ணே..ஏன்னே..இப்படி ஒரு படம் எடுக்கமுடியுமா..அதுவும் இரண்டரை மணிநேரம் விறுவிறுப்பா..

“ஹென்றி தான் கொலை பண்ணிருப்பானோ..”

“இல்லாட்டி..ஹென்றி மனைவிதான், வேற யாரை வைச்சு கொலைய பண்ணிருப்பாளோ..”

“ஒருவேளை இந்த இளவயசு போலீசுக்காரனுக்கும், அந்தப் பொண்ணுக்கும் ஏதாவது…இந்த இளவயசு போலீசு பார்வையே சரி இல்லையே”

“சொல்லமுடியாது..இந்த விக்டர் கூட, ஏற்கனவே 2 தடவை டைவர்ஸ் ஆனவருதான்..ஏன் இவர்கூட கொலை பண்னியிருக்ககூடாது…”

தக்காளி, நான் 12 ம் வகுப்பு பரிட்சை எழுதுனப்ப கூட இப்படி யோசிச்சது இல்லேண்ணே…கடைசியில யார் கொலை பண்ணுனதுன்னு சொல்லுறாய்ங்க பாருங்க…

அதுக்குத்தாண்ணே..சொல்லுறேன்..தயவுசெஞ்சு, இந்தப்படத்தைப் பார்த்துறாதீங்க..பார்த்துட்டீங்கன்னா, கிளைமாக்சை பார்த்துட்டு மண்டை குழம்பி, நீங்களும் இந்த மாதிரி பதிவு போட ஆரம்பிச்சிருவீங்க..நாடு தாங்காது..சொல்லிப்புட்டேன்..

(பின் குறிப்பு..இந்தப் படம் பார்த்தவர்கள், தயவுசெய்து கிளைமாக்சைப் பற்றி எனக்கு மெயில் பண்ணுறீங்களா..தக்காளி, தலையே வெடிச்சுடும் போல இருக்கு…)