Wednesday, 2 February, 2011

18+ வயது வந்தவர்களுக்கு மட்டும்

(மீள்பதிவு)

இந்த பதிவை எழுதணுமான்னு யோசிச்சேன்.ஏற்கனவேபலான படம்ன்னு ஒரு பதிவு போட்டிருப்பதால், என்னுடைய பிளாக்கிற்கு வேற சாயம் வந்துவிடுமான்னு ஒரு பயம்தான். ஆனா இதைக் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தால் இதை பதிவு செய்கிறேன்..இது ஆபாச பதிவல்ல..ஆனாலும் சில வார்த்தைகளை அப்படியே எழுத வேண்டியிருப்பதால் இந்த தலைப்பு..

நம்ம ஊருல கேபரே கிளப் இருக்கும்லனே..அது போல அமெரிக்காவுலபப்ன்னு சொல்றாயிங்க. சாப்பிடுற பப்ஸ் இல்லண்ணே..புரியுற மாதிரி சொல்லனும்னா பெங்களூரில எம்.ஜி ரோடுல அப்பன் காசைக் கரைக்கிறதுக்கு குடிச்சுட்டு கும்மாளம் போடுவாயிங்களண்ணே..அதுமாதிரி இங்க நிறைய இடத்துல இருக்குண்ணே..இந்த ஊருக்கு வந்தவயிங்க எல்லாம் ஒரு தடவையாவது இங்க வந்துட்டு போயிருவாயிங்க..

அதெல்லாம் பேச்சிலர் பசங்களுக்குதான்..நம்மளுக்குதான் கால் கட்டு போட்டுருக்காயிங்களே….அது பத்தி நம்மளெல்லாம் யோசிக்குறதேயில்லைண்ணே..பக்கத்து வீட்டுலரமேஷ்ன்னு ஒருத்தர் நம்மளை மாதிரி கல்யாணம் ஆனவருண்ணே..மனைவி ஊருக்குப் போயிருக்காங்க..நம்ம பசங்களுக்குத்தான் மனைவி ஊருக்குப் போனா சுதந்திர தினம் கொண்டாடுவாயிங்களே..நம்ம ஆளுக்கு பொறுக்க முடியலே..இதை எப்படியாவது கொண்டாடியே ஆகனும்னு முடிவு பண்ணிட்டார்….

ராசா..என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா(ஜனகராஜ் ஸ்டைலில் வாசிக்கவும்)….எனக்கு 1 மாசம்தான் டைம்..அதுக்குள்ள எல்லாத்தையும் அனுபவிச்சருனும்டா..டே..பப்புக்கு போகலாமா?..”

டே ரமேசு..என் பொண்டாட்டி ஊருக்கு போகலடா..செருப்பைக் கழட்டி அடிப்பா..”

ராசா..இதை விட்டா சான்ஸ் கிடைக்காதுடா..நாம் ஒன்னும் தப்பு பண்ண போகலையே..சும்மா வேடிக்கைப் பார்த்துட்டு வந்துடுவோம்..”

எல்லாத்துக்கிட்டயும் ஒரு மிருகம் இருக்கும்..அது சமயம் பார்த்துதான் எட்டிப் பார்க்கும்னு சொல்லுவாயிங்களண்ணே..அன்னைக்கு எனக்கு அந்த மிருகம் கும்மி போட்டு விளையாட்டுண்டு இருந்துச்சு போல..

டே..எனக்கு சரியாத் தோணல..எதுக்கும் நம்ம கோவாலுக்குகிட்ட ஒரு வார்த்தை கேட்டுடுவோம்..”

கோவாலு பத்தி ஏற்கனவெ உங்களுக்கு சொல்லியுருக்கேண்ணே..தெரியாதவங்க என்னோடஉயிர் பயமும் சூப்பர் பிகர்களும்பதிவைப் பாருங்க….நம்ம ஊருக்கார பயபுள்ள..ரெண்டு பேரும் நேரா அவங்கிட்ட போனோம்..நல்ல பையன்னே..

வாங்கடா..என்ன இந்த பக்கம்..”

கோவாலு, நம்ம ரமேசு பொண்டாட்டி ஊருக்கு போயிருக்காங்கல..அதனால..”

டே..ராசா..சூப்பர்டா..எல்லாரும் சேர்ந்து பப்புக்கு போகலாமாடா..”

அடப்பாவி..கொடுமை, கொடுமைன்னு கோவிலுக்குப் போனா..உன்னைப் போயி நல்ல பையன்னு ஒரு பாராவுக்கு முன்னாடிதானடா அறிமுகம் கொடுத்தேன்..

எல்லார் மனசுலயும் மிருகங்கள் அட் டையத்துல எட்டிப்பார்க்க சனிக்கிழமை போவதாக முடிவானது..என் வீட்டுக்காரம்மாகிட்ட சனிக்கிழமை ஆபிஸ்ஸில் வேலை இருப்பதாய் சொல்வதாக முடிவானது..கோவாலு படு எதிர்பார்ப்பில் இருப்பான் போல , ரெண்டு நாளா அவுத்துவிட்ட கோழி மாதிரியே திரிஞ்சான்..இதுல

மச்சான்..பேர்னஸ் கிரீம்மை நல்லா அப்பிக்குவோம்டா.., அப்பத்தான் நம்மளை மதிப்பாயிங்கன்றான்..ஒரு நயா பைசா கூட செலவழிக்கமாட்டான் பயபுள்ள, அன்னைக்கு என்னான்னு பார்த்தா புது டிரஸ், புது கேப், புது கூலிங்கிளாஸ்..அப்படியே நம்ம தமிழ்நாடு பாலகிருஷ்ணா மாதிரியே இருந்தான்னே..

நான் இதுவரைக்கும் என்னோட பொண்டாட்டிக்கிட்ட பொய் சொன்னதே இல்லண்ணே..முதல் முறையா சொல்லப் போனேன்..வார்த்தை குழறவே கைகாலெல்லாம் நடுங்குச்சுண்ணே..

இந்த..இன்னைக்கு ஆபிஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு..கொஞ்சம் லேட் ஆகும் எனக்காக வெயிட் பண்ணாதே..நீ, தூங்கு..”

என்னாச்சுங்க..ஏதாவது அவசர வேலையா..பரவாயில்லைங்க..நீங்க போயிட்டு வாங்க..நான் வேணா பிளாஸ்க்ல டீ போட்டுத் தரவா..”

எனக்கு அப்பவே பாதி உசிரை எடுத்த மாதிரி இருந்துச்சுண்ணே..

ஐயோ..வேண்டாம் பரவாயில்லை..நீ தூங்கு..” அப்படின்னு சொல்லிட்டு திரும்பி பார்க்காம கிளம்பிட்டேன்னே..வெளியே வர்றேன்..நம்ம கோவாலும் ரமேசும் ரெடியா இருந்தாயிங்க..

எல்லோரும் கிளம்பி போனோம்

அமெரிக்காவுல ரெண்டு உலகம்னே..முதல் உலகம் காலை முதல் சாயங்காலம் வரை, ஆபிஸில்..உசிரைக் குடுத்து வேலை பார்ப்பாயிங்கண்ணே..அடுத்த உலகம் இரவு உலகம்..உசிரை எடுக்குற உலகம்..கிளப்பு, பப்னு உசிரை எடுக்குற வரைக்கும் ஆடுவாயிங்க, ஏதோ நாளைக்கு உலகமே அழியப் போறது மாதிரி..நாங்க போன ஒரு இடமும் அப்படித்தான் இருந்தது..இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் 20-20 மேட்ச் போல ஒளிவிளக்குகள்..கையில் ட்ரிங்க்ஸை தட்டில் எடுத்துக் கொண்டு பரிமாறும், அரைகுறை ஆடை அணிந்த பெண்கள், காது கிழிஞ்சு போகும் அளவுக்கு இரைச்சலான இசை..எங்கு பார்த்தாலும் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் செக்யூரிட்டிகள்..பாதி போதையுடன் செருகிய கண்களுடன் இளவட்டங்கள்..சோமாலியாவில் பஞ்சத்துக்கு உடுத்தும் ஆடைகளை ஸ்டைலாக அணிந்து உலா வரும் யுவதிகள்..

அந்த பப் மூன்று பகுதி பகுதிகளாக இருந்தது..ஒரு புறம் பெரிய மேடையில் அரைகுறை ஆடையுடன்இப்ப என்னாங்குறதோரனையில் கேட்வாக் வரும் பெண்கள்..இன்னொரு பகுதி..நீ யாரோட புருசனாயிருந்தா எனக்கென்ன என்று யார் வந்தாலும் குத்தாட்டம் போடும் பெண்கள்..இன்னொரு பகுதி, ஏதாவது காரணம் சொல்லி நம்ம ஊருக்காரங்க போகும்பார்”..நீங்க அங்கு உக்கார்ந்திருந்தால் சில யுவதிகள் வந்து உங்களை விசாரிக்கும்..நீங்கள் அவர்களுக்கு ஒரு ட்ரிங்க்ஸ் வாங்கி கொடுத்தால் உங்களுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்கும்..

இதெல்லாம் அந்த பொண்ணுக்கு உங்களை பிடித்திருந்தால்தான்..இல்லையெனில்போடா வெளக்கெண்ணைசொல்லிட்டு கிளம்பிக்கிட்டே இருக்கும்..நான் கவனித்த வரையில் எங்கும் தவறு நடக்கவில்லை..கோவாலு மாதிரி ஆர்வக்கோளாறுல ஏதாவது பண்ணிணா, அவனை சுண்டுவிரலுல தூக்கி வெளியே போடுறதுக்கு இம்மாந்தண்டி செக்யூரிட்டி அண்ணயிங்க(ஒரு சேப்டிக்காகத்தான் மரியாதை..தப்பித் தவறி இந்த பதிவை அவிங்க படிச்சிட்டா..ஹி.ஹி)

கோவாலு அலறிட்டான்..இதெல்லாம் இங்கிலிபீசு படத்துலதான் பார்த்திருக்கோமா..கோவாலு காலை தரையில் ஊன்ற முடியலை..சொர்க்கத்துல மிதக்குற மாதிரி கத்த ஆரம்பிச்சான்..

ராசா..இதுதாண்டா உலகம்..வாடா, நம்மளும் போய் டான்ஸ் போடுவோம்..”

டே..கோவாலு..ஆளை விடுடா..நம்ம எல்லாம் ஆடுனா கரகாட்டம் ஆடுற மாதிரி இருக்கும்..”

போடாங்க..நீயெல்லாம் ஏண்டா பொறந்த..” எங்கப்பாவுக்கு அப்புறம் இப்பத்தாண்ணே இப்படித் திட்டு வாங்குறேன்..

கோவாலு அங்க போய் கைய காலை டான்ஸ்ங்கிற பேர்ல ஆட்டிக்கிட்டு இருந்தான்., எனக்கு கண்ணைக் கட்டிக்கிட்டு வரவே அங்கு உள்ள சோபாவில் அமர்ந்தேன்..ஒரு தேவதை என்னை நோக்கி வரவே எனக்கு பயமா போச்சுண்ணே..

ஹாய்நான் கிளாரா..நீங்க இண்டியாவா..?

நான் ராசா..”

நான் இந்த கிளப்லதான் வேலை பார்க்குறேன்..ஏன் இங்க வந்து உக்கார்ந்து இருக்கீங்க..டான்ஸ் ஆடலையா..”

இல்லீங்க..பரவாயில்லை..ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே..இவ்வளவு தைரியமா வெக்கமில்லமா கேட் வாக் வர்றீங்களே..உங்களுக்கு தப்பா தோணலையா..”

இதுக்கு பேர்தாண்ணே ஆணாதிக்கம்..நம்ம ஊருல தான் இதெல்லாம்..இங்கெல்லாம் பளார்ன்னு ஒரு அறைதான்..திருப்பிக் கேட்டா பாருங்க..

இதுல என்ன வெட்கம்..சரி நான் பண்றது தப்புனே எடுத்துகிட்டாலும், அதையும் வெக்கமில்லாம நீங்க பார்க்க வர்றீங்களே..உங்களுக்கு தப்பா தோணலை..”

இப்படி நாலு பேர் பளார்ன்னு அறைஞ்சாத்தான்னே நம்மளுக்கெல்லாம் புத்தி வரும்..அப்படியே வளர்ந்துட்டோம் பாருங்க..ஆடி முடிச்ச ரமேசும், கோவாலும் திரும்பி வந்தார்கள்..களைப்பு முகத்தில் தெரிந்தாலும், நான் கிளாராவிடம் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தவுடன் கருகும் வாசனையும் வந்தது..வந்தவுடனே ஆரம்பிச்சாயிங்க..

ஹாய்..நான் ரமேஷ்..”

கிளாராவுக்கு ரமேசை பிடிக்கவில்லை போலும்..எழுந்து போக எத்தனித்தாள்..ரமேசுக்கு வந்ததே கடுப்பு..

போடி பிராஸ்டியூட்..”

ரமேஷ் அப்படி பேசியிருக்ககூடாதுண்ணே..கிளாராவுக்கு சரியான கோவம்..நேரா அவனிடம் வந்தாள்..

நான் அவுத்துப் போடுறதைப் பார்த்து என்னை பிராஸ்டியூட் என்று சொல்கிறாயே..வீட்டில் உன் பொண்டாட்டி இருக்க என்னைப் பார்க்கிறதுக்கு கிளம்பி வந்துருக்கிறாயே..நீ பிராஸ்டியூட் இல்லையா..”

செருப்பைக் கழட்டி அடிச்ச மாதிரு இருந்துச்சுண்ணே..அவனுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை..நியாயம் பேசும்போது, அநியாயம் மௌனமாகத்தானே இருக்க வேண்டும்..சக்கையாய் காரில் ஏறில் உக்கார்ந்தோம்..யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை..ஏதோ உடம்புதான் காரில் பயணிப்பது போலவும், மனசு நசுக்கப்பட்டு சாகடிக்கப்பட்ட போலவும் ஒரு பிரமை..நேரா வீட்டிற்கு வந்தேன்..

என் மனைவி படுத்திருந்தாள்..பாவம்னே..எனக்கு சமையல் செய்து போடுறதை தவிர அவளுக்கென்று ஒரு உலகமும் இல்லைண்ணே..அவளுடைய கண்களை கவனித்தேன்..நாளெல்லாம் வீட்டு வேலை செய்து களைத்து தூங்கியிருந்தன..”என் புருசன் இருக்கான் எனக்காக..என் வாழ்நாள் முழுக்க கூட இருப்பான்”..என்ற நம்பிக்கையில் நிம்மதியான தூக்கம்..இன்னும் நல்லா ஞாபகம் இருக்குண்ணே..மதுரையில கல்யாணம் பண்ணி அடுத்த நாள் அமெரிக்கா கிளம்புறோம்..பல வருடங்களாய் பார்த்து பார்த்து செய்த அப்பா அம்மாவை விட்டுட்டு ஒரு நிமிசத்துல என்னோட கிளம்பி என்னை நம்பி வந்தாண்ணே..என்னை கல்யாணத்துக்கு முன்னாடி யாருண்ணே அவளுக்கு தெரியாதுண்ணே..எனக்காகத்தானே ஒவ்வொரு நிமிசமும் வாழுறா..நான் அழுதா அவ அழுவாண்ணே..நான் சிரிச்சா அவ சிரிப்பாண்ணே..அவளுக்குன்னு ஒரு ஆசை கூட இல்லைண்ணே..இப்படிப் பட்ட தங்கத்தை விட்டு பொய் சொல்லிட்டு போனேனே..என்ன மனுசன்னே நான்..

சாரிங்க..நீங்க வர்ற வரைக்கும் முழுச்சுருக்கனும்தான் நினைச்சேன்..அலுப்புல தூக்கம் வந்திருச்சு..டயர்டா இருக்கா..காபி போட்டு தரட்டா..”

சே..இதுக்கு மேல என்னால அங்க இருக்க முடியலண்ணே..எழுந்து குளியலறைக்கு வந்து கண்ணாடி முன்னால் என் முகத்தைப் பார்த்தேன்..முதல் முறையா என்மேல எனக்கே வெறுப்பு வந்துச்சுண்ணே..மனுசனா நீ..”…..தூ……”

கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்து துப்பினேன்..நான் துப்பிய எச்சில் கூட கண்ணாடியில் என் முகத்தில் நிற்க கோவப்பட்டு கீழே வழிந்தது.. பொண்டாட்டிக்கு துரோகம் நினைக்க கூடாதுண்ணே..போஜனம் மட்டுமில்ல, நரகத்தில் கூட இடம் கிடைக்காதுண்ணே..

14 comments:

Mohan said...

அருமை. ஏற்கெனவே ஒருமுறை படித்திருந்தாலும்,திரும்பவும் படிப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது.

Ramesh said...

excellent post...

Anonymous said...

neenga neraya poi sollureenga pola...
"pub" - kkum "adult entertainment club or lounge or showgirls" -kkum vithyaasam irukku.

arakora dress-la ponna paatha athukku peru 'throgam' panrathaa?

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நாம் ஒன்னும் தப்பு பண்ண போகலையே..சும்மா வேடிக்கைப் பார்த்துட்டு வந்துடுவோம்..”//ஹிஹி இப்படித்தான் எல்லாம் ஆரம்பிக்கும்

அரபுத்தமிழன் said...

பதினெட்டுப் பட்டி ராசா,
இது ஒண்ணும் பதினெட்டு பிளஸ் சமாச்சாரமில்லையே.
ராமராஜன் படம் மாதிரி பெண் மனம் கொள்ளை கொள்ளும்
நல்ல பதிவாச்சே :)

அமுதா கிருஷ்ணா said...

எல்லோரும் இப்படி நினைச்சா பிரச்சனை யாருக்கும் இல்லை.

ஜோதிஜி said...

உறுத்தும் அளவிற்கு எழுதிய விதம் பாராட்டக்கூடியது

Anonymous said...

good post.

//arakora dress-la ponna paatha athukku peru 'throgam' panrathaa? // i think the question here is, going to pub without the wife knowing that.

ராம்ஜி_யாஹூ said...

அண்ணே பப்பிற்கு போகும் போது மட்டும் அல்ல,
இந்த ஏக பத்தினி விரதத்தை, ரோட்டில் (மைலாப்பூரிலோ , மதுரையிலோ, மும்பையிலோ) பெண்களை சைட் அடிக்கும் பொழுதும் நாம் கடைப் பிடிக்க வேண்டும்.

Anonymous said...

eppidiya ippadi ellaam yosikkireenga enga pakkathu veetu akka ippadi yosikilaye

அவிய்ங்க ராசா said...

நன்றி மோகன்,

நன்றி ரமேஷ்

நன்றி அனானி, கான்செப்ட் அது இல்லை. மனைவியிடம் உண்மையை மறைத்தது தவறு..

நன்றி சதீஷ்..கரெக்க்டு..ஆனால் மனைவிகிட்ட அட்லீஸ்ட் உண்மைய கண்டிப்பா சொல்லணும்.

நன்றி அரபுத்தமிழன்..பதினெட்டுபட்டி ராசாவா..முடியல..)))

நன்றி அனானி..நான் நினைத்ததை சொல்லிவிட்டீர்கள்

நன்றி ராம்ஜி..நான் ஏற்கனவே சொல்லியபடி, மனைவியிடம் உண்மையை சொல்லதது தவறு..

ILA(@)இளா said...

ஒரு உண்மையை சொல்லவா? நீங்க நெறைய பொய் சொல்லி இருக்கீங்க. பப் வேற, Strip club வேற.
//கான்செப்ட் அது இல்லை. மனைவியிடம் உண்மையை மறைத்தது தவறு//
பொய்யை இங்கே போறதுக்கு மட்டும்தான் சொல்றோமா என்னா?

//“போடி பிராஸ்டியூட்..”//
இப்படி சொல்லியிருந்தா மூணு பேரு சிறையில இருந்திருப்பீங்க. கற்பனை கலக்கலாம், ஆனா வக்ர புத்தியை கலக்க கூடாது. மன்னிக்கவும். எனக்கு உடன்பாடில்லாத பதிவு..

ILA(@)இளா said...

Strip club போறது தப்பு, துரோகம்ன்னு சொன்னா மேட்டர் படம் பார்க்கிறதை எல்லாம் எந்தக் கணக்குல சேர்த்துக்கிறது?

tamilan said...

ONE MORE MAN PROSTITUTE

click and read

ஆபாசத்தின் உச்சம்.

...

Post a Comment