Friday, 28 September, 2012

தாண்டவம் – சுடச்சுட விமர்சனம்அதென்னசுடச்சுடஅப்படின்னெல்லாம் அசட்டுத்தனமா கேட்கப்படாது..விமர்சனம்னு வந்துட்டா, நாலு வார்த்தை அப்படி, இப்படின்னுதான் விழும்யா..அதெல்லாம் கேள்வி கேட்டா, ரத்த பூமியான பதிவுலகத்துல குப்பை கொட்ட முடியுமா..

சரி விஷயத்துக்கு வருவோம். வியாழக்கிழமை இரவிலேயே, அமெரிக்காவில் தாண்டவம் ரீலீஸ்..என்னதான்சுட்டுகொடுத்தாலும், தித்திப்பு ஜாங்கிரியான, “தெய்வத்திருமகள்விஜய் கொடுத்த எதிர்பார்ப்பினால், 9 மணி படத்திற்கு 08:30 மணிக்கெல்லாம் சென்றுவிட்டேன்.

போய் பார்த்தால், தியேட்டர் வாசலிலே, நம்ம ஊரு ஆளுங்க நிக்கிறாய்ங்க..கவுண்டரில் கேட்டால், “யோவ்..உங்க ஊரு ஆளுங்களுக்கு பொறுப்பே இல்லையா..படத்தை வாங்கிட்டு, ஆளைக்காணோம்யா..” அப்படின்னு நம்மளை விட பதறினார்கள்..ஆஹா..பதிவு போடமுடியாதோ, அப்படின்னு பதறிப்போய்விட்டேன். கடைசியாக, கருணை கொண்டு, தியேட்டருக்குள்ள விட்டாய்ங்க..நீங்கெல்லாம் நல்லா வருவீங்கய்யா..

விமர்சனத்துக்கு வருவோம்..லண்டனில், ஒரு இடத்தில் ஜனவரி 1 ஆம் தேதி நடக்கும் குண்டுவெடிப்போடு படம் துவங்குகிறது..லண்டனில் டாக்சி ஓட்டுநராக அறிமுகமாகும் சந்தானம் வழக்கம்போல  நகைச்சுவையில் கலக்க அறிமுகமாகிறார் விக்ரம். பார்வை தெரியாதவரான விக்ரத்திற்கு காதுகள் தான் கண்கள்..அக்கம் பக்கத்தில் எழுப்பப்படும், ஒலியை வைத்து, எல்லாவற்றையும் கிரகித்து, செயல்படும் புத்திசாலி..இரவுவேளையில் அவர் டாக்சியில் ஏறி, இறங்கி, “கொஞ்சம் வெயிட் பண்ணுங்கஎன்று சொல்லிவிட்டு மாடிக்கு சென்ற, ஐந்தாவது நிமிடத்தில், ஒரு கொலை..எஸ்..யூஆர்..ரைட்..விக்ரமுடைய முதல் கொலையிலிருந்து படம் சூடுபிடிக்கிறது.

இப்படியாக தொடர்ச்சியாக நான்கு கொலைகள். இதை கண்டுபிடிக்குறதுக்குன்னே, ஒரு நாசர் இருக்கணுமே..இருக்காரே..வர்றார்….பயபுள்ள ஏதாவது கண்டுபிடிப்பாருன்னு பார்த்தா, கீழே விழுந்த பாப்கார்னை கூட நான் கண்டுபிடிச்சுட்டேன்யா..ம்..ஹூம்..கடைசி வரைக்கும்..அட..ஒரு சீனுலயாவது..ம்..ஹீம்..இதுல லண்டன் போலீஸ் வேற..

நடுவில், இட்லி சாப்பிடும்போது..எதையோ தொட்டு சாப்பிடுவோமே..ம்..ரத்தக் கலருல..ஆங்க்..இட்லி பொடி மாதிரி..லண்டனில் அழகிப் போட்டிக்காக தயாராகி கொண்டிருப்பவரும், சில க்ளோசப் சீன்களில் கிழவி போல் காட்சியளிப்பவருமான, எமி ஜாக்சன், இயக்குநர் விஜய்யின் விருப்பத்திற்கிணங்க..சர்ச்சில் விக்ரமை சந்தித்து, ஒரு தலையாக காதல் செய்கிறார்(நம்மளைத்தான் ஒரு புள்ளையும் காதலிக்க மாட்டீங்குதுகிர்ர்ர்ர்…)

சரி..நாலு கொலையை பண்ணிவிட்டு கூலாக, சர்ச்சில் பியானோ வாசிக்கும் விக்ரமை, அடையாளம் காணக்கூடிய ஒரே நபர் சந்தானம் தான். ஒரு வழியாக, அடையாளம் காட்ட, அதுவரை, சமோசா சாப்பிட்டுக்கொண்டிருந்த நாசர், அப்பத்தான் முழிக்கிறார்..விக்ரமை விரட்ட..கூடவே எதேச்சையாக, எமி ஜாக்சனும் சேர்ந்து கொள்கிறார்..அப்ப போடுறார்யா டைரக்டரு இடைவேளை.

.

எமி ஜாக்சன் அதிர்ச்சியடைந்து…”நீங்க யாரு….நீங்க யாரு..பாம்பேயில இதுக்கு முன்னாடி என்ன பண்ணிக்கிட்டு இருங்தீங்க..இருந்தீங்க..” அப்படின்னு எக்கோ பாட்ஷா டயலாக்கில் கேட்க, “நான் சொல்லுறேன்னுஎண்டிரியாகிறார், லட்சுமிராய்..என்னது லட்சுமிராய் யாரா..இருங்கப்பூ..அதுக்குதான் பிளாஷ்பேக்..

பிளாஷபேக்கில், விக்ரமும், தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபும், இந்திய உளவுத்துறையில் பணிபுரியும், நண்பர்கள்..வழக்கம்போல சிறுசிறு கலாட்டவிற்குப்பிறகு, பல்டாக்டரான அனுஷ்காவை(ங்கொய்ய்யாலே..தியேட்டருல என்னா கைதட்டலு..) பல் பிடிக்கிறார்..இது..சாரி..கைபிடிக்கிறார்..அவரை கூட்டிக்கொண்டு டெல்லிவந்து வேலையை ஆரம்பிக்கும்(..மீன்..ஆபிஸ் வேலை) விக்ரமிற்கு ஒரு அசைன்மெண்ட்..இந்திய விஞ்ஞானி ஒருவர், கண்டிபிடித்த, மிகப்பலம் வாய்ந்த வெடிகுண்டை கண்டுபிடிப்பதற்கான ப்ளோசார்ட்(யார் அந்த அசிஸ்டெண்ட் டைரக்டரோ..) லண்டனுக்கு கடத்தப்படுவது பற்றி தகவல் தெரிய, ஜகபதிபாபு, நண்பனான விக்ரமை லண்டனுக்கு அனுஷ்காவோடு அனுப்ப..அங்கு சென்று விக்ரம் போலவே தோற்றமளிக்கும் நண்பரின்(நண்பரின் மனைவி நம்ம லட்சுமிராய்) உதவியோடு துப்பறிய..நடக்கும் சிலபல துரோகங்குளுக்கு, விக்ரமின் மனைவியும், லண்டன் நண்பரும் பலியாக..விக்ரமும் கண்களை இழக்கிறார்..அந்த குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களை பலி வாங்குவதுதான் கதை..(யப்பே..எப்படித்தான் உண்மைத்தமிழன் ஒரு வரி விடாம சொல்லுறாரோ..இப்படி மூச்சு வாங்குது)

விக்ரமுக்கு தோதான பாத்திரம்..அல்வா மாதிரி நடிக்கிறார்யா..என்று சொல்லுவது, தமிழ்நாட்டுல 14 மணிநேரம் கரண்டு இல்லைய்யா என்று சொல்லுவது போல..ஆச்சர்யம் ஒன்றும் இல்லை..”டிக்..டிக்..” என்று வவ்வால் போல ஒலி எழுப்பிக்கொண்டே, சண்டையெல்லாம் போடும் விக்ரம் கதாபாத்திரம் நம்பமுடியாவிட்டாலும், “இதெல்லாம் நடக்கும்என்று உண்மையிலேயே வாழும்டேனியல் கிஷ்மூலம் நிரூபிக்கிறார்கள்கொடுத்த கதாபாத்திரக்கு ஏற்றமாதிரி மாறிக்கொள்ளும் விக்ரத்திற்கு, இந்தப்படம் ஒரு சவால்..அநாசயமாக செய்திருக்கிறார்..இன்னொரு ஆச்சர்யம் அனுஷ்கா..முதல்ல பார்க்கணும், பழகணும்..நட்பாகணும்..காதல்..கல்யாணம் என்று கண்டிஷன் போடும் அனுஷ்கா,..படிப்படியாக ஒவ்வொரு கட்டத்தையும் கடப்பது..அழகியல்..விக்ரம், அனுஷ்கா சம்பந்தப்பட்ட. கல்யாணத்து கிராமத்து காட்சிகள்..ஒவ்வொன்றும் சுவாராஸ்யம்..அதுவும் எப்போதும்தப்பாச்சே..” என்று சொல்லி அறிமுகமாகும் தம்பி ராமையா..சில சீன்கள் வந்தாலும் கலக்கல்..
சரண்யா..பாஸ்கர் வழக்கம்போல கவருகிறார்கள்..


குறிப்பாக சொல்லும்படியானால் தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு..நான் ஈ சுதீப்புக்கு அடுத்தபடியாக கவருகிறார்..வந்தாரை வரவேற்கும் தமிழகம், இவருக்கும், சிவப்பு கம்பளம் போர்த்தி வரவேற்கும்..ஆனால், அவருடைய திறமையான நடிப்பில் ஒன்றும் குறை சொல்லுவதற்கில்லை...

படத்தின் நகைச்சுவைக்கு, மினிமம் கேரண்டி சந்தானம்..விக்ரம் செய்த கொலைகளுக்கு மாட்டிக்கொண்டு, அடிக்கடி அடிக்கும் கமெண்டுகளால் சிரிக்கவைக்கிறார்..ஆனால் நாசர்தான் இந்தப்படத்திற்கு கொடுமை..….இண்டெலிஜன்ஸ் வேடத்துக்கு அவரைப் பார்த்து, பார்த்து, போரடித்துவிட்டது..போதும் சார்..தயவுசெய்து அந்த கோர்ட்டை கழட்டுங்கள்..

இடைவேளை வரை மெதுவாக செல்லும் படத்தை, சுவாராசியமான காட்சிகளால், பிற்பாதியில் விறுவிறுப்பாக கொண்டு சென்று, இயக்குநர் விஜய், தமிழ்சினிமாவில் தவிர்க்கமுடியாத வெற்றி இயக்குநர் என்று பெயர் பெறுகிறார்..(அடுத்த படமாவது..சர்ச்சை இல்லாமல் இருக்குமா..)

இடைவேளைக்கு அப்புறம் வரும் காட்சிகள் அனைத்தும், நல்ல திரில்லர் வகையாறக்களுக்கு தீனி..குறிப்பாக லண்டனில் விக்ரமுக்கு நடக்கும், நிகழ்வுகள், ஒவ்வொன்று, திரில்லர் முடிச்சுக்கள்..ஆனால், சிலநேரம்..”காதுல ஏதாவது பூ இருக்குமோஎன்று தொட்டுப்பார்க்க வைக்கிறது..குறிப்பாக வெடிகுண்டு பற்றிய புளோசார்ட்டுக்களை, பென்டிரைவ் மூலமாக லண்டனுக்கு அனுப்புவதாக சொல்லப்படுவது, அவ்வளவு பெரிய அதிகாரியான விக்ரமும் அதை நம்புவதும், “ஒருவேளை இண்டெர்நெட்டு வர்றதுக்கு முன்னாடி இந்தப்படம் எடுத்துருப்பாய்ங்களோஎன்று எண்ண வைக்கிறது..இன்னும் நல்லா காம்ப்ளான் குடிக்கணும் டைரக்டர் சார்..

முடிவாக கொடுத்த காசுக்கு, பங்கம் வராதபடிக்கும், எந்த ஒரு காட்சியை போரடிக்காமல் கொடுத்தபடியால், இந்ததாண்டவம்கவருகிறது….பெரிய தோல்வியான ராஜபாட்டையின் அதிர்ச்சியிலிருந்து காப்பாற்றிய இந்தப்படம்விக்ரமிற்கு ஹிட்டாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..

ஆனந்த (தாண்டவம்)