Friday, 25 February, 2011

டே தகப்பா..

உலகத்திலே கஷ்டமான வேலை எது தெரியுமா?? எவெரெஸ்டில் ஏறுவது, இல்லை..நிலவுக்கு ஆள் அனுப்புவது..இல்லீங்கோ....சீனமொழியை எழுத பழகுவது..இல்லீங்கோ இல்லை...உலகத்தில் கஷ்டமான வேலை எது தெரியுமா..உங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தவுடன் அவனை/அவளை வளர்க்கும் அந்த முதல் ஒரு மாதம்தான்.

நம்ம ஜீனியர் பொறந்து ஒரு மாதம் ஆகப்போகிறது. வழக்கம்போல் எல்லார் வாழ்த்துக்களையும் பெற்று, ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு வந்து அசதியா, ராத்திரி 12 மணிக்கு கண்ணசருறேன்..நாட்டாமை படத்துல வர்ற கவுண்டமனி ஸ்டைலில் “டே தகப்பா..” அப்படின்னு குரல் கேட்குதுண்ணே..எனக்கு ஆச்சர்யமா போச்சு..நம்ம புள்ளையா பேசுறான்..ஆஹா..இருக்காதே..பொறந்து 4 நாளுதான் ஆகுது..அதுக்குள்ளயா..அதுவும் நம்ம புள்ளை மரியாதை தெரிஞ்ச பய. அப்பனை இம்புட்டு தரக்குறைவா பேசமாட்டானேன்னு நினைச்சுக்கிட்டு திரும்பவும் கண்ணசருறேன்..இப்ப சத்தமா குரல் கேக்குதுண்ணே..

“டே..தகப்பா..இதெல்லாம் உனக்கு நியாயமாடா..நான் ஒன்னுக்கடிக்க போறேன்..டையபர் மாத்துறதை விட்டுட்டு அப்படி என்னடா முரட்டு தூக்கம்”

ஆஹா..அவசரம் அவசரமா எழுந்து வீட்டுக்காரியை எழுப்புனேன்..

“அடியே..பய பேசனுனான்..????”

“சும்மா விளையாடாதீங்க..பொறந்து நாலு நாளு தான் ஆகுது..அதுக்குள்ளயா..பய அழுதுக்கிட்டு இருக்கான்..கொஞ்சம் பாருங்க..”

ஹா..அழுதுக்கிட்டுதான் இருக்கானா..அதுதான் எனக்கு கவுண்டமனி குரலுல கேக்குதான்னு நினைச்சுகிட்டு போறேன்..பயபுள்ள ஒரே அழுகை சத்தம்..என்னை பார்த்ததுமே அழுகையை நிறுத்திக்கிட்டான்..திடிரீன்னு ஒரு பார்வை பார்த்தான் பாருங்க..நான் வேற கருப்பா பயங்கரமா இருக்கேனா..ஒரு பூச்சாண்டியை பார்த்த எபெக்ட் கொடுக்குறான்..

“ச்சூ..ச்சூ..ச்சோ..செல்லமுல்ல..அப்பா உனக்கு டையபர் மாத்துவனாம்..அப்படியே தூங்குவயாம்..ஏன்னா அப்பாவும் தூங்கணுமாம்..” ன்னு சொல்லிகிட்டே டையபரை கழட்டுனேன்..டையபர் க்ளீனா இருக்கு..ஆச்சர்யமா இருந்துச்சுண்ணே..அப்ப ஏன் அழுகுறான்..அப்படின்னு டையபரை தூக்கி பார்த்தேன்..பார்த்த அவசரத்துல ஏன் மூஞ்சி இருந்த பொசிசனை கவனிக்கலை..அடிச்சான் பாருங்கண்ணே..ஒன்னுக்கு..பம்புசெட்டுல வர்ற மாதிரி..நான் வேற அந்த சமயத்துல கொட்டாவியை விட்டுப்புட்டேன்..செடிக்கு தண்ணீ ஊத்துற மாதிரி ஸ்ட்ரெயிட்டா என் வாயிக்குள்ளேதான்..

வேற என்ன பண்ணுறது..நம்ம ரத்தமாயிட்டான்..பக்கத்துல இருந்த பழைய துணியை எடுத்து முகத்தை துடைக்கிறேன்..லைட்டா பேட் ஸ்மெல் வந்தது..பார்த்தா, அந்த துணி குழந்தை ஆய் துடைக்குற துணியாம்..வீட்டுக்காரம்மா குழந்தை ஆய் துடைச்சுட்டு பக்கத்துல போட்டுவைச்சிருக்கா..சரி என்ன பண்ணுறதுன்னு,பாத்ரூம் போயி முகத்தை கழுவிட்டு, திரும்பவும் வந்து பயனுக்கு டையபர் மாத்தி மணி பார்க்குறேன்..காலை 1 மணி…

சரி..பயபுள்ளைய தூங்கவைப்போம்ன்னு தட்டிக் கொடுத்தா, “உன்னையெல்லாம் பார்த்தா பாவமா இருக்கு” ங்குற ரேஞ்சுல பார்க்குறான்..”அப்படியெல்லாம் பார்க்காதடா..அப்பா தூங்கணும்டா….நீயும் தூங்குடா” ன்னு தட்டிக் கொடுத்தேன்..ஆரம்பிச்சான் பாருங்க அழுகைய..அப்புறம் அவனை வீட்டுக்காரம்மாகிட்ட கொடுத்து, அவனுக்கு உணவு கொடுத்து..திரும்பவும் அவனை துங்கவைக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட, மணியைப் பார்த்தேன்…மணி 3..அய்ய்யோ..கொஞ்ச நேரத்துல விடிஞ்சுடுமேன்னு..அவனை தூங்கவைக்க முயற்சி பண்ணினேன்..ம்..ஹீம்..அப்பதான் வீட்டுக்காரம்மா ஒரு ஐடியா சொன்னா..

“ஏங்க..நீங்க ஏன் ஒரு தாலாட்டு பாடக்கூடாது..”

ஆத்தாடி..பயபுள்ளை ஏற்கனவே பயந்து போயிருக்கும்..திரும்பவும் கொடுமைப்படுத்தக்கூடாதுன்னு யூடியூப்பில் “ஆரிரரோ” ன்னு தட்டுறேன்..ஏதோ ஒரு பாட்டு வந்துச்சு..அதை பிளை பண்ணி பயபுள்ளைய தட்டிக்கொடுத்தா, அது பாடுது..

“ஆராரோ..ஆரிரரோ..கண்ணைத் தொறக்கணும் சாமி..கைய புடிக்கணும் சாமி..”

அப்படியே பாய்ஞ்சு போய் ஆப் பண்ணிட்டேன்..சரி..பாட்டுதான் பாட தெரியலை..பயபுள்ளைக்கு ஒரு கதையாவது சொல்லுவோம்ன்னு கதைய ஆரம்பிச்சேன்..

“ஒரு ஊருல..ஒரு பதிவர் இருந்தாராம்..அவருக்கு நிறைய வாசகர் கடிதம் வந்துச்சாம்..ஆனாலும் தமிழிஸ்ல 2 ஓட்டுதாம் விழுந்துச்சாம்..என்ன பண்ணுறதுன்னு தெரியாம...”

அப்படின்னு பயபுள்ள முகத்தை பார்க்குறேன்..செம இன்ட்ரஸ்டிங்கா “நெக்ஸ்ட்” ங்கிற மாதிரி கவனிக்குறான்..அப்படியே திரும்பி கடிகாரத்தை பார்க்குறேன்..மணி 04:30..லைட்டா கண்ணை சொருகுச்சு..லைட்டா கண்ணா மூடுறேன்…சைரன் அடிச்ச மாதிரி ஒரு சவுண்டு..நம்ம பயதான்..காலங்காத்தால் அப்படி என்ன தூக்கம்கிற மாதிரி பார்க்குறான்...அப்புறம் என்ன…பதிவர் கதைய, ஒரு பேக்ரவுண்ட் ம்யூசிக்கோட சொல்லிட்டு தட்டி கொடுக்குறேன்..

“டே..தகப்பா..பசிக்குதுடா..ரோதனை பண்ணாதடா..”ங்குற மாதிரி சவுண்ட் கொடுக்க..திரும்பவும் பயலை வீட்டுக்காரம்மாவுடம் கொடுத்துட்டு..ஒரு காபி போட்டு குடிச்சுப்புட்டு மணி பார்க்குறேன்..மணி காலை 6..திரும்பவும் கதையெல்லாம் சொல்லாம பயலை தூங்க் வைச்சுட்டு லைட்டா கண்ணசருறேன்..காதுக்குள்ள், ரிங்கு, ரிங்கு ன்னு சத்தம்..பார்த்தா கோவாலு..

“ராசா..9 மணிக்கு என்னடா தூக்கம்..ஆபிசுக்கு ஏற்கனவே லேட்டு..உடனே கிளம்பு”

“கோவாலு..இன்னும் நான் தூங்கவே இல்லடா..நான் வேணா, ஒரு தூக்கம் போட்டுட்டு..””

“மவனே ராசா…அப்படி மட்டும் பண்ணினே..ஆபிசுல உனக்கு சங்குதாண்டி” ங்கிறான்..அப்புறம் எழுந்து குளிச்சுட்டு, பல்லுவிளக்கி, கிளம்பி ஆபிசுக்கு போயிட்டு, திரும்ப வீட்டுக்கு வந்தா “டே தகப்பா” ன்னு குரலு..

ஆனாலும், அப்படியே மெதுவாக பக்கத்துல போயி, சத்தம் போடாம குழந்தை முகத்த பார்த்தேன்.. மெதுவா, சின்னதா..க்யூட்டா..ஒரு ஸ்மைல் பண்ணினான் பாருங்க..

போங்கண்ணே..அந்த சின்ன, கள்ளம் கபடமில்லாத, அந்த சிரிப்புக்கு உலகத்தையே எழுதி தரலாம்ணே..ஏதோ ஆஸ்கார் அவார்டு வாங்குன மாதிரி..தூக்கம் என்னண்ணே தூக்கம்..

21 comments:

♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃ“ஏங்க..நீங்க ஏன் ஒரு தாலாட்டு பாடக்கூடாது..”ஃஃஃஃ

நல்ல கேள்வி....

பதில் 0000 ?

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)

karthikkumar said...

:))

ஆனந்தி.. said...

ஸோ ஸ்வீட் போஸ்ட் :)....குட்டி பையனை நாங்களும் ரசிச்சோம்...அதென்ன சந்தடி சாக்கில் தமிளிஷில் விழும் வோட்டையும் புலம்பியாச்சு...:))))

பாரத்... பாரதி... said...

உண்மைதான். ஒரு குழந்தையே வளர்க்க கிராமமே தேவைப்படுகிறது.

பாரத்... பாரதி... said...

//யூடியூப்பில் “ஆரிரரோ” ன்னு தட்டுறேன்..ஏதோ ஒரு பாட்டு வந்துச்சு..அதை பிளை பண்ணி பயபுள்ளைய தட்டிக்கொடுத்தா, அது பாடுது..//

jothi said...

//போங்கண்ணே..அந்த சின்ன, கள்ளம் கபடமில்லாத, அந்த சிரிப்புக்கு உலகத்தையே எழுதி தரலாம்ணே,..//

உண்மைதான்,.

மகனை பெற்ற தந்தைக்கு வாழ்த்துக்கள்,..

Arun said...

Vazhthugal Raasa..

அமுதா கிருஷ்ணா said...

இன்னும் இருக்கு..

taaru said...

அண்ணாச்சி.... அப்பா ஆயாச்சா??? என்னோட நீண்ட sorry..........and மிகப் பெரிய்ய வாழ்த்துக்கள்....
//எழுந்து குளிச்சுட்டு, பல்லுவிளக்கி, கிளம்பி ஆபிசுக்கு போயிட்டு,//
order சரியா இல்லியே? தூக்கம் பத்தல போல.. அதான் இப்டி கொழம்புது?

Philosophy Prabhakaran said...

உங்களைப் பற்றி இங்கே சில வரிகள் எழுதியிருக்கிறேன்...

http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_2005.html

ஆயிஷா said...

தந்தைக்கு வாழ்த்துக்கள்.இன்னும் இருக்கு.

Maduraimalli said...

why blood? same blood...

inthu said...

அருமை அருமை அண்ணா.... புது அப்பாவுக்கு வாழ்த்துக்கள் :)

sai said...

ungal pathivu mutrilum mattra pathivargalidam irunthu veeru pattu irukinrathu !
vaalkaiyin alaghana tharunangalai migha alaghagavum melliya nagaichuvaiyodum solvathu migavum pidithulathu. oru pleasant feeling kodukinrathu anna!
//டே தகப்பா..// agmark அவிய்ங்க ராசாண்ணா style !
புது அப்பாவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா :)

Anonymous said...

Excellent Sir-perfect Dad

Philosophy Prabhakaran said...

உங்க மகனாச்சே... இவ்வளவு அலப்பறை கூட பண்ணலைன்னா எப்படி...

Philosophy Prabhakaran said...

பை த பை அந்த பதிவர் கதையை பாதியிலேயே விட்டுட்டீங்களே...

அவிய்ங்க ராசா said...

நன்றி சுதா..புள்ளைய பயந்து போயிடும்..))
நன்றி கார்த்திக்
நன்றி ஆனந்தி..அதெல்லாம் சும்மா..))
நன்றி பாரதி
நன்ரி ஜோதி
நன்றி அருண்
நன்றி தாரு
நன்றி பிரபாகரன்
நன்றி ஆயிஷா
நன்றி மதுரை மல்லி
நன்றி இந்து
நன்றி சாய்
நன்றி மீனா
நன்றி பிரபா..அடுத்த பதிவில் சொல்லுறேன்..வலைச்சர அறிமுகத்திற்கு நன்றி..

மதுரை ராஜா said...

//போங்கண்ணே..அந்த சின்ன, கள்ளம் கபடமில்லாத, அந்த சிரிப்புக்கு உலகத்தையே எழுதி தரலாம்ணே//

அருமை. உண்மை ......

இராஜராஜேஸ்வரி said...

வாழ்த்துக்கள்..

Viji said...

Hello
Congrats!!Enna peru paiyanuku,Wife eppadi irukanga,Amma vanthu irukangala?Eppadi feel panranga florida pathi?

India vanthathula irunthu browsing panave illa,athukulara evlo nadanthuduchu .

Post a Comment