Saturday 11 October, 2014

என்னுடைய முதல் குறும்படம்


சனிக்கிழமை இரவு சொர்க்கத்துக்கு அருகே படைக்கப்பட்டதோ என நினைக்கிறேன். வழக்கம்போல் அந்த சனிக்கிழமை, ஹோட்டலுக்கு சென்று உணவருந்த குடும்பத்தோடு அமர்ந்தேன்...

அந்த அரைமணிநேரம் ஹோட்டலில் நடந்த நிகழ்வுதான் ஒரு குறும்படத்தையே எழுதி, இயக்கி தயாரித்து உங்கள் பார்வை வரைக்கும் கொண்டு வந்திருக்கிறது என்பதை என்னால் இன்னமும் நம்பமுடியவில்லை..

படத்தைப் பற்றி சொல்லுவதைவிட உங்கள் பார்வைக்கு கீழே வைத்திருக்கிறேன்..என்னுடைய முதல் பையன் பிறந்ததைவிட மிகவும் ஆனந்தமாக உணர்கிறேன்..

“பையன் அவ்வளவு அழகா இல்லையே..”

“கை விரல் பாருங்க கொஞ்சம் சிறுசோ..”

“என்னா இருந்தாலும் கலர் கம்மிதான..”

“அழுதானா...”

என்று என்னதான் கமெண்டுகளை எதிர்நோக்கி இருந்தாலும், இந்த குறும்படத்தை பார்வைக்கு வைக்கும்போது, 2 வருடங்கள் தவம் இருந்து, மருத்துவமனை வாசத்தில், “இந்தாங்க சார்..உங்க பையனை வாங்கிக்கங்க” என்று தொப்புள் கொடியோடு தூக்கி என் முதல்பையனை கொடுத்தபோது, என்னை அறியாமல் இரண்டு கண்கள் முழுக்கவும் கண்ணீர்..அதே மனநிலைதான், இப்போதும்...

இந்த குழந்தையை, இனிமேல் நீங்கள் பார்த்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்..குறைகள் நிறைய இருந்தாலும், முதல் படத்திற்காக மன்னித்து, உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து, இந்த படத்தின் கருவை நிறைய பேருக்கு சென்றடைய செய்வீர்க்ள் என்ற நம்பிக்கையுடன்..

என்றும் நட்புடன்


அவிய்ங்க ராசா....

படத்திற்கான யூடியூப் லிங்க் கீழே...

https://www.youtube.com/watch?v=6WNPf5I6I_w&feature=youtu.be