Friday, 4 February 2011

ஹிட்லர்

பியூரர்..சோவியத் படைகள் பெர்லினை நெருங்கி விட்டனபடைத்தளபதி, ஹிட்லரை நோக்கி தயங்கி தயங்கி சொன்னார்..சொன்னபோது ஹிட்லரை உற்று நோக்கினார்..ஹிட்லரின் முகத்தில் தோல்விபயம் தெரிந்தது. அவருடைய உதடுகள் துடிதுடித்தன. தளபதியால் நம்ப முடியவில்லை. தோல்வியே கண்டிராத ஹிட்லரா இது. நடந்தால் சிங்கம் போல இருக்குமே. தன் பேச்சால் லட்சக்கணக்கான மக்களை கட்டிப்போட்ட ஹிட்லரா நடுங்குவது. பிரான்ஸை வென்று விட்டு, பாரிஸில் வெற்றி நடை போட்ட ஹிட்லரா நடுங்குவது..

ஹிட்லரால் இன்னும் தோல்வியை நம்ப முடியவில்லை..”ஜெர்மனியா தோற்கப் போவது. ஐரோப்பா முழுவதும் அகண்ட ஜெர்மனியாக்க நினைத்த நாடா தோற்கப் போவது..எங்கே தவறு நடந்தது..” இன்னும் ஹிட்லருக்கு நம்பிக்கை இருந்தது. கடைசியாக ஏதாவது ஒரு மேஜிக் நடந்து ஜெர்மனி ஜெயித்து விடும்..ஆனால் உண்மை நிலை அப்படி இல்லை. ஒருபுறம் சோவியத் படைகள் பெர்லினை முற்றுகையிட, இன்னொரு பக்கம் பிரிட்டன், அமெரிக்கப் படைகள் பெர்லினை நெருங்கியிருந்தன. ஹிட்லருக்கு தெரிந்து விட்டது…”தோற்கப் போகிறோம்..”

மெதுவாக நடந்து தன் அறை நோக்கி சென்றார்..தன் செல்ல நாய் கூட தன் கேவலமாய் பார்ப்பது போல் தோன்றியது..அதை தன் அருகில் அழைத்து அதனுடன் விளையாட முயற்சித்து தோற்றுப் போனார்..தன் நெருங்கிய தளபதியான கெப்பல்ஸை(கோயபல்ஸ் என்று தமிழில் கூப்பிடிகிறோம்..அவர் கோயபல்ஸ் அல்ல, கெப்பல்ஸ்) அழைத்தார்..

கெப்பல்ஸ்..உடனே ஏற்பாடு செய்யுங்கள்..நான் ஈவா பிரவுனை மணக்க வேண்டும்..”

ஈவா பிரவுன்..ஹிட்லரின் காதலி..ஹிட்லர் தான் செய்யும் எல்லா வேலைகளிலும் வெற்றி எதிர்பார்ப்பவர். சாவதற்கு முன்னால் கூட தன் காதல் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தார். கெப்பல்ஸ்க்கு ஆச்சர்யமாக இல்லை. ஒரு சிறிய அறையில் ஹிட்லர், ஈவா பிரவுன், கெப்பல்ஸ், ஒரு பாதிரியார்..திருமணம் நடந்தது..எப்படி நடந்து இருக்க வேண்டிய திருமணம்..உலகத்தையே ஆட்டிப் படைத்த ஒரு மனிதரின் திருமணமா இது. ஐரோப்பா முழுவதுமே கொண்டாட்டமாக இருந்து இருக்க வேண்டுமே..ஒரு சின்ன அறையில், ஒருத்தர் முகத்திலும் சந்தோசம் இல்லாமல்..கெப்பல்ஸால் இதை தாங்க முடியவில்லை..

ஹிட்லர் நடந்து தன் அறைக்கு சென்றார்.. தன் தளபதிகள் அனைவரையும் அழைத்தார்..”உடனே எல்லா ஆவணங்களையும் அழித்து விடுங்கள். எதிரிகளிடம் எதுவும் மிஞ்சக்கூடாது..” தளபதிகள் ஹிட்லரிடம் மன்றாடினர்..”பியூரர்..இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை..தப்பித்து சென்று விடுங்கள்..நீங்கள் ஜெர்மனிக்கு தேவை.இப்போது இல்லா விட்டாலும், எப்போதாவது வென்று விடலாம்..”. ஹிட்லர் மெலிவாக சிரித்தார்..”என்ன சொல்கிறீர்கள்..ஜெர்மனி என் தேசம்..இந்த தேசத்தை விட்டு நான் எங்கு செல்வேன். நான் போய்விட்டால், இந்த தேசத்துக்காக போராடும் என் வீரர்கள் என்ன நினைப்பார்கள்..” ஹிட்லர் உறுதியாக சொன்னாலும் குரலில் நடுக்கம் தெரிந்தது..சொல்லி விட்டு மெதுவாக எழுந்து தன் படுக்கை நோக்கி சென்றார்..

அப்படியே திரும்பி தன் மனைவியைப் பார்த்தார்.. மனைவி தூங்கிக் கொண்டிருந்தார்..இல்லை..இல்லை..செத்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே தன் மனைவிக்கு விஷம் கலந்து கொடுத்திருந்தார்..தன் மேசையில் உள்ள உலகப்படத்தை ஆசையுடன் தடவிப் பார்த்தார்..மெதுவாக தன் மேசையில் இருந்த டிராயரை இழுத்தார். ஹிட்லரை சாகடிக்கப் போகிறோம் என்ற பெருமையில் அந்த துப்பாக்கி தூங்கிக் கொண்டிருந்தது.. அதை மெதுவாக எடுத்து தன் தலையில் வைத்தார்..

திருப்பி வைத்து விடலாமா..” சிறிது நேரம் யோசித்தார்..திடிரென்று அந்த நினைப்பை தூக்கிப்போட்டார்..

நான் யார்..ஹிட்லர்..எனக்கு தோல்வியா..ஹா..”. தன் சுண்டுவிரல் ட்ரிக்கரை அழுத்த..

ட்ரக்..”

அந்த மனிதரோடு சேர்ந்து ஒரு அகண்ட சாம்ராஜ்ய கனவும் மரித்துப் போனது..

1 comment:

காப்பிகாரன் said...

எப்புடி வாழ்ந்த மனுஷன்

Post a Comment