Monday 16 January, 2012

நீயா நானாவில் கலந்து கொண்ட 20 ஆண் பொம்மைகள்..




விஜய் டி.வி நடத்தும் நீயா நானா பற்றி ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கருத்து பரிமாற்றத்துக்கான ஒரு களம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. விளம்பரத்துக்காக, அதில் நடைபெறும் கூத்துக்களை, அவ்வப்போது கிண்டல் அடிக்க தவறுவதில்லை.. அதே சமயத்தில், சமூகம் பற்றிய பலரது பார்வைகளை மறுபரிசீலனை செய்ய, இந்த நிகழ்ச்சி பெரும் பங்காற்றி இருக்கிறது என்பதே உண்மை

என்ன சொல்லவருகிறார்கள் என்று கேட்பதற்காவது கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியை பார்த்துவிடுவேன். இந்த பொங்கல் அன்று எடுத்த ஒரு கருத்துமோதல், பல சிந்தனைகளை கிளறிவிட்டது.
நகரத்தில் உள்ள பெண்களை, திருமணம் செய்ய ஆண்கள் ஏன் தயங்குகிறார்கள்….இதுவே அன்றைய தலைப்பு

முதல் விவாதமே, படு அதிர்ச்சியாக இருந்தது. ஆண்கள் எவ்வளவுவீக்காகஅல்லதுபிற்போக்குத்தனமாகஅல்லதுபொம்மைகளாகஇருக்கிறார்கள் என்பதை பட்டவர்த்தனமாக தோலுரித்து காட்டியது, இந்தக் கேள்வி…”உங்களுக்கு வரப்போகும்
பெண் எப்படி இருக்கவேண்டும்…”. அதற்கு ஆண்கள் சொல்லிய பதில் இருக்கிறதே….ஒருத்தர் கூட, என் இன்ப துன்பத்தை பங்கிட்டு கொள்ள ஒரு துணைவி வேண்டும் என்று சொல்லவில்லை. வந்த பதில் என்ன தெரியுமா

வீட்டு வேலையெல்லாம் பார்த்துக்கணும்…”
எங்க அம்மா, அப்பாவை நல்லா கவனிச்சுக்கணும்…”
மாடர்ன் டிரன்ஸ் போடக்கூடாது..”
தலை குனிஞ்சு தான் நடக்கணும்..”
சேலை தான் கட்டிக்கணும்..ஆனா நான் விருப்பப்பட்டா ஜீன்ஸ் போட்டுக்கலாம்..அதுவும் நாலு சுவத்துக்குள்ள…”

யோவ்..என்னங்கையா..இதுகஷ்ட நஷ்டத்தில் பங்குபெற ஒரு துணைவி தேடுறீங்களா..அல்லது, வீட்டு வேலை செய்ய, ஒரு ரோபோர்ட் தேடுறீங்களாஎவ்வளவு பிற்போக்குத்தனம்..தன் தங்கை, தன் அம்மா எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்..ஆனால் தனக்கு வரும் மனைவி தன்னை எதிர்த்து ஒரு வார்த்தை பேசக்கூடாது..எவ்வளவு ஆதிக்கத்தனம்

அவர்களை குறை சொல்லி ஒரு பிரஜோயனம் இல்லை..நாம் அவ்வாறுதானே வளர்க்கப்பட்டிருக்கிறோம்அப்பாவை பார்த்து தலைகுனிந்தே பேச பழக்கப்பட்ட அம்மாவை பார்த்துதானே வளர்ந்தோம். இந்த சமூகமே, அதைத்தானே சொல்லிக்கொடுத்திருக்கிறது

அடப்பாவமே..பெண் என்ன அடிமையா..நான் சொல்லும் வேலைகளை மட்டுமே செய்வதற்கு..அதற்குதானா, அவர்கள் வீட்டில் அரும்பாடுபட்டு, திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். கோபிநாத் ஒரு தவறு செய்துவிட்டார். அந்த பெண்களிடமும் ஒரு கேள்வி கேட்டிருக்கவேண்டும்..உங்களுக்கு வரும் கணவர் எப்படி இருக்கவேண்டும் என்று……அப்போது தெரியும், மேலே உள்ள பதில்கள் எந்த அளவுக்கு பாதிக்கும் என்று

இதைவிட ஒரு பெரிய கொடுமை என்னவென்றால், ஒரு அன்பர் பேசியது தான்முகத்தை ஒரு அலட்சியமாக வைத்துக்கொண்டு..

இவுங்க எல்லாம், பைக்குல போவாங்க..தியேட்டருக்கு போவாங்கஅதெல்லாம் தப்பா தெரியாது..”

அடங்கொன்னியா..நாம் என்ன கற்காலத்திலயா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..ஏன் பெண்கள், ஆண்களோடு, பைக்கில் செல்லக்கூடாதா..திரைப்படத்துக்கு செல்லக்கூடாதா..உடனே கலாச்சாரம் கெட்டுப்போய்விடுமா..அங்கு இருந்த பெண், நாக்கை பிடுங்கி கொள்வது போன்று, இரண்டு கேள்விகள் கேட்க, அவரால் ஒரு வார்த்தை கூட அதற்கு மேல் பேசமுடியவில்லை. இதில் இன்னொரு நபர், திரைப்பட உதவி கேமிராமேனாம்..”கரும்பை ருசிக்கலாம்..ஆனால் சுமப்பது கடினம்என்று  சொன்னபோது, ஆத்திரத்தின் உச்சிக்கே செல்ல நேர்ந்தது..என்ன ஒரு உவமை பாருங்கள்..அவர் எடுக்கும் படங்களும், இதுபோன்று பிற்போக்குத்தனமாகத்தானே இருக்கும்

ஆனால், அங்குள்ள ஆண்கள் மட்டுமில்லை, இங்குள்ள பல ஆண்களும் அதே மனப்பான்மையில்தான் இருக்கிறோம். நல்லா,..மாடர்ன் டிரஸ் போட்ட பெண் பிரண்ட்ஸ் நிறைய வேண்டும்..எந்த எல்லை வரை சென்று சோசியலாக பழகும் பெண் நண்பிகள் நிறைய வேண்டும்..,திரைப்படங்களில் தொப்புள் காட்டும் நடிகைகள் வேண்டும்..ஆனால் தனக்கு வரும் மனைவி., அடக்கமாக, சேலை கட்டி, பராம்பரியம் மிக்கதாக இருக்கவேண்டும்..குனிந்த தலை நிமிரக்கூடாது..எதிர்த்து பேசக்கூடாது..நாலு பேரு பார்க்குற மாதிரி நடக்ககூடாது..எந்த ஊரு நியாய்ம்யா இது..

தயவுசெய்து, பெண்களையும், சதையும், ஆன்மாகவும் உள்ள ஒரு உயிராக மதிப்போம். வெறும் சேலை கட்டிய அடிமைகளாகவும், பொம்மைகளாகவும், ரோபோக்களாகவும் அல்ல..ஏனென்றால், நம்மைப் பெற்றவளு, கூடப்பிறந்தவளும், ஒரு பெண்தான்….

அதைத்தான், அங்கு சிறப்பு அழைப்பார்களாக பேச அழைக்கப்பட்ட, ஓவியாவும், ஷாலினியும், சாருவும் சொன்னர்கள்..ஆனாலும், இந்த கலவரத்துக்கு நடுவிலும், ஔவை கள் குடித்ததை பற்றி "நித்தியானந்தாவிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று சொன்னவரும், அவருடைய தொண்டர்களால், "வாழும் பெரியார்" என்று அழைக்கப்படுவரும், போன முறை கலந்து கொண்டபோது, பீஸ் கிடைக்காததால் "நீயா நானாவை தடை செய்ய வேண்டும்" என்று சொன்னவருமான சாரு சொன்ன டயலாக்குதான் இந்த நூற்றாண்டின் செம காமெடி..

“குடிப்பழக்கத்தை நான் என்றுமே ஆதரித்ததில்லை….”

அவருடைய தொண்டர்கள், இனிமேல் இவ்வாறு சொல்லக்கூடும்…

“தானே உக்கார்ந்தா  தானைத்தலைவன் வாழ்க, வாழ்க…”

ஏனென்றால் எழுத்தாளர் என்ன சொன்னாலும், கொண்டாட வேண்டுமல்லவா..இல்லையென்றால், தமிழ் எலக்கியத்திற்கு செய்த துரோகமாகிவிடாதா..இந்நேரம் கேரளா, இல்லாட்டி பிரான்ஸ்சா இருந்தா….

“அடப்போங்கையா…”

தவறு செய்துவிட்டது என்று தெரிந்தவுடனே, “யானோ அரசன்..யானே கள்வன்” என்று உயிர்நீத்த தமிழ்பரம்பரையில் இருக்கிறோம் என்பதையே சிலநேரங்களில் நம்பமுடியவில்லை.

நண்பன்




ஆரம்பிக்கும் முன்பே சொல்லிவிடுகிறேன், நண்பன் பட விமர்சனத்தை எதிர்பார்த்து வந்திருந்தால் "சாரி பாஸ்..".அந்தப் படத்தைப் பற்றி விமர்சனம் செய்ய விரும்பவில்லை. அது ஏன் என்று, பதிவின் இறுதியில் சொல்கிறேன்.


சற்று நாட்களுக்கு முன்பு, நண்பர்களோடு, ஒரு விவாதம் செய்ய நேர்ந்தது.. விவாதத்தின் தலைப்பு இதுதான். "எது சிறந்தது...குடும்ப உறவா, நட்பா...". வழக்கம்போல விவாதத்தை ஆரம்பித்து வைத்தது, நான்தான்.


என்னுடைய சார்பு, குடும்ப உறவே சிறந்தது. விவாதம் செம சூடாக இருந்தது. விவாதத்தின் தொடர்ச்சியாக, அனைத்து நண்பர்களின் கருத்தை கேட்பது மற்றும் ஒரு வாக்கெடுப்பு நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.


அனைத்து நண்பர்களும் ஓட்டுப் போட்டனர். முடிவை எண்ணும்போது, எங்களுக்கே அதிர்ச்சி...குடும்பம் மற்றும் நட்புக்கு சமஅளவிலான ஓட்டு. அதை வைத்து என்ன முடிவுக்கு வருவதென்று எங்களுக்கே தெரியவில்லை.


விளையாட்டுத்தனமாக ஆரம்பித்த அந்த ஓட்டுப்பதிவு, கடைசியில் விளையாட்டுத்தனமாக இல்லை. எந்த அளவுக்கு என்றால்,
ஒரு அன்பர் "ச்சே...உன்னைப் போயி ஒரு பிரண்டா நினைச்சேனேடா" என்று சொல்லும் அளவுக்கு.எனக்கே ஒரு கட்டத்தில் பயமாகிவிட்டது. ஒரு பிரபலமான கருத்து ஒன்றைக் கேள்விப்பட்டிருக்கிறேன்...


"இந்த உலகத்தில் அம்மா இல்லாதவங்க கூட இருக்கலாம். அப்பா இல்லாதவங்க கூட இருக்கலாம், மனைவி இல்லாதவங்க கூட
இருக்கலாம்..ஆனால் நண்பன் இல்லாதவன் என்று யாருமே இல்லை..."


அப்படி இதோ ஒரு ஆள் கண்ணாடி முன் நிற்கிறானோ என்று சொல்லத் தோன்றியது. ஒருவன் "எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்"
என்று சொன்னால், அவன் பொய் சொல்கிறான் என்பது என் கருத்து..இங்கு ஒரு பையனையோ, பெண்ணையோ, புதிதாக பார்த்து, சில வார்த்தைகள்
பேசிவிட்டாலே, நண்பர்கள் வட்டத்தில் கொண்டு வந்துவிடுகிறோம். ஆனால் நண்பன் என்பவன் அதற்கும் மேல்.. 


எப்படி அப்பேற்பட்ட நண்பனைக் கண்டுபிடிப்பது என்றால், ரொம்ப ரொம்ப கடினம். நீங்கள் அழும்போது, உன்னை சுற்றி இருப்பவர்கள் எல்லோரும்
கஷ்டப்படுவார்கள்..நீ சந்தோசமாக இருக்கும்போது, எல்லோரும் பார்ட்டிக்கு வந்து உன்னோடு கொண்டாடுவார்கள். "நீதாண்டா என் பிரண்டு"
என்று புளகாங்கிதம் அடைவார்கள். கூடவே இருப்பார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் நண்பர்களா....??? இரண்டு சம்பவம் போதும்..


உண்மையான நண்பனை எவ்வாறு அடையாளம் கண்டுகொள்வது...கொஞ்சம் உடம்பு சரியில்லை என்று ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் இருந்து பாருங்கள்
எல்லோரும் வந்து, ஆரஞ்சு பழம் கொடுப்பார்கள். துக்கம் விசாரிப்பார்கள். முகத்தில் கவலையை வைத்துக்கொள்வார்கள்,. அவையெல்லாம் ஒரு மணிநேரம், 
இரண்டு மணிநேரம்தான். பின்னர் லேசாக, மணிக்கட்டை உயர்த்தி டைம் பார்ப்பார்கள்,... "அப்பறம்டா...உடம்பை பார்த்துக்கோ..அப்பப்ப வந்து பார்க்குறேன்"
என்று கிளம்பிக்கொண்டே இருப்பார்கள்...


ஆனால் உண்மையான நண்பன், முகத்தில் சலனத்தை காண்பிக்க மாட்டான்..ஏனென்றால், அவன் கலங்கினால், நீ பயப்படுவாய்..துவண்டு போவாய்...
ஆனால் கூடவே இருப்பான்..மணிக்கட்டை உயர்த்தி டைம் பார்க்கமாட்டான்...இரவானால் கண்முழித்து இருப்பான்...வேலைக்கு ஏற்கனவே லீவ் போட்டிருப்பான்.ஆனால் நீ சுகமாகும்போது கூட இருக்கமாட்டான். எதுவும் ஹெல்ப் செய்ததாய் காட்டிக்கொள்ளமாட்டான்..


இன்னுமொரு சம்பவம்....நீங்கள் உங்கள் வேலையில் ஒரு பெரிய பதவியை அடைந்ததாக சொல்லிப்பாருங்கள்.."மச்சான் டிரீட் எங்கடா...மச்சான் தண்ணி அடிக்கிறோம்டா"என்று கூடவே கொண்டாடுவதற்கு நிறைய ஆட்கள். ஆனால் நண்பன் முகத்தில் பெரிய சலனம் காட்டிக்கொள்ள மாட்டான். ஆனால் மனதில் சந்தோசம் வைத்திருப்பான்.உன்னை சந்தோசப்படுத்தும் பாசாங்கு வார்த்தைகள் சொல்லமாட்டான்...ஆனால் மற்றவர்கள் முகத்தில் சந்தோசத்தையும், மனதில் பொறாமையும் வைத்திருப்பார்கள்.ஆனால் நண்பன் நீ முன்னேறுவதைப் பார்த்து எட்ட நின்று சந்தோசப்படுவான்.


ஆண், பெண் நட்பு என்றால் வேலை மிகவும் ஈசி. நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், நிறைய நண்பர்கள் உங்களைத் தேடி வருவார்கள். உருகுவார்கள். தினமும் போன் செய்வார்கள். தலைவலி என்றால் கூட துடிதுடித்து போவார்கள்..ஆனால் கழுகு மாதிரி சந்தர்ப்பத்துக்காக காத்திருப்பார்கள்...ஒரு சிறு சந்தர்ப்பம் கிடைத்தால் போதும்....உங்களுக்கு புரிந்து விடும் அவன் நண்பனா என்று..


அதே போல, உங்களுக்கு நிறைய பெண்நண்பர்கள் இருக்கலாம்..ஒன்றாக பைக்கில் அமர்ந்துகொண்டுகூட வரலாம்..நான்கு மணிநேரம் கூட போனில் பேசலாம்..ஆனால் உன்னைவிட வலியவன் வந்தால், "நீதாண்டா என் பிரண்டு" என்று நிற்பாள், உண்மையான நண்பி...அதுதான் நட்பு..


ஆனால், நல்ல நண்பனைக் கண்டுபிடிப்பதற்கு, முதலில் நீ நல்ல நண்பனாக இருக்கவேண்டும்..நடக்கவேண்டும்...ஆனால் நான் யாருக்கும் நல்ல நண்பனாகவோ,
அல்லது எனக்கு யாரும் நல்ல நண்பர்களாகவோ இருக்கும் பாக்கியம் இதுவரை அமையவில்லை. அது என் வாழ்க்கையின் துரதிருஷ்டம்....
ஏனென்றால், உங்கள் சூப்பர்ஸ்டார் சொல்லிய மாதிரி...


"நற்பு என்பது கற்பு மாதிரி...."


(நண்பன் படம் பார்த்தேன்..நீண்ட நாட்கள் கழித்து, விஜய்க்கு வெற்றிப்படம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஏழ்மையுடன் இருப்பதாக காட்ட்டப்படும் ஜீவாவின் 
தங்கை, அடர்கருப்போடு, இருப்பதை கிண்டல் பண்ணி அடிக்கும் லூட்டிகளைப் பார்த்து, உங்களுக்கு வேண்டுமானால் சிரிப்பாக இருக்கலாம். ஆனால், 
என்னால் ரசிக்கமுடியவில்லை. ஏனென்றால் அங்கவையும் சங்கவையும், கதாபத்திரங்கள் அல்ல. எம் தெருக்களிலும், வீதிகளிலும், கள்ளம்கபடம் இல்லாமல்
துள்ளி திரிந்து கொண்டிருக்கும், எம் தமிழினத்தின் உடன்பிறவா சகோதரிகள்...)

Monday 2 January, 2012

தனுஷின் கொலைவெறி – சிம்புவின் ஆல்பம் : எது பெஸ்ட்




சின்னபுள்ளைங்க வெள்ளாமை வீடு வந்து சேராதுஎன்று ஊர்ப்பக்கம் ஒரு பழமொழி உள்ளது. அந்த பழமொழியில்லாம் இனிமேல் எடுபடாது போலிருக்கிறதுசின்னப்பிள்ளைகள் சேர்ந்து இசையமைத்துப் பாடிய கொலைவெறி பாடல் இந்த அளவுக்கு ஹிட் ஆகும் என்று அவர்களே எண்ணியிருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு ஹிட்டோ, ஹிட்.. இங்கு ஒரு அமெரிக்கரை சந்தித்த போது, அவர் ஒரு சிறிய தாளில் உள்ள ஒன்றை காண்பித்து, என்னவென்று விசாரித்தார். அதில் இருந்த வார்த்தைவொய் திஸ் கொலைவெறி”. 20 மில்லியன் ஹிட்ஸ் என்றால் சும்மா இல்லை. எல்லாவற்றையும் ஈர்த்த இந்த பாடலை இப்போது கேட்கவே கடுப்பாக இருக்கிறது..இனிப்பாக இருக்கிறது என்று அல்வாவை எவ்வளவுதான் சாப்பிடமுடியும். ஒரு கட்டத்தில் திகட்டுமல்லவா..அந்த அளவுக்கு கொலைவெறி ஆயிருக்கிறது..

ஆனாலும் ஒரு சந்தோசம். என்னதான், பாடல் வரிகளைப் பற்றி சர்ச்சைகள் எழுந்தாலும், ஒரு தமிழ்வார்த்தை, தமிழன் உலகளாவிய பெருமை அடைந்ததில் நமக்கும் ஒரு பெருமிதம். ஆனால் தனுஷ்க்கு இவ்வளவு பெருமையைப் பார்த்து, நகத்தை..சாரி..விரலைக் கடித்துக் கொண்டு ஒருவர் அமர்ந்திருப்பார் எனில், அவர்தான்எஸ்.டி.ஆர்என்று அவரே அழைத்துக்கொள்ளும் சிம்பு.

போட்டியாக அமைந்த அவருடைய ஆல்பத்தையும் பார்க்கநேர்ந்தது. இனிமேல், எது பெஸ்ட் என்ற விமர்சனம்

கொலைவெறி பாடலின் முக்கியத்துவமே அதனுடைய எளிமை..ஒரு ரெக்கார்டிங்க் தியேட்டருக்குள் ஒரு பாடலை இயக்குவதைப் பற்றி அவ்வளவு கேசுவலாக, ஜாலியாக, பெப்பாக எடுத்திருப்பார்கள். அங்கு நடக்கும், சிறு, சிறு கேலிகள், கிண்டல்கள், விளையாட்டுக்கள் எல்லாம் அவ்வளவு, இயல்பு..ஆனால் சிம்பு ஆல்பத்தில், அது மிஸ்ஸிங்க். ஆனால் சிம்புவையும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. கொஞ்சம் ஸ்டைலிசாகவும், அதே நேரத்தில் மேக்கிங்கிலும், ஒரு லெவல் மேலே தான் இந்த பாடலை அமைத்துள்ளார். ஆனால், காதலை பற்றி அமைத்துள்ள பாடல் என்று, அவரே ஆடிக்கொண்டியிருப்பது சற்று எரிச்சலை தருகிறது. ஆனால், இது ஒருப்ரிவியூஎன்பதால் இன்னும் கொஞ்ச காலம் வெயிட் பண்ணலாம்.



அடுத்து கொலைவெறி பாடல், ஏறக்குறைய 99% ஆங்கிலத்தில் அமைந்தது. இந்த பாடல், இவ்வளவு ஹிட் ஆவதற்கு, இதுவும் ஒரு காரணம். ஆனால் சிம்புவின் ஆல்பத்தில் காதல் பற்றி அனைத்து மொழிகளிலும் வருவதாய் அமைந்துள்ளது. இது எவ்வளவுக்கு மக்கள் மனதில் அமரும் என்பதில் சந்தேகம்.

ஆனால் மேக்கிங்கை பொறுத்தவரை, டெக்னிக்கலாக, சிம்புவின் ஆல்பம் மிரட்டுகிறது. லைட்டிங்க் மற்றும், கொரியோகிராபி, மற்றுமில்லாது, பாட்டின் ட்யூனும் சற்று கிறங்கத்தான் வைக்கிறது. ஆனால்,, கொலைவெறி பாடலின் பலமே, திரும்ப திரும்ப முணுமுணுவைத்தல். அதனாலேயே, ஒவ்வொருவரும், அவரவர் வெர்ஷன்களில், கொலைவெறியைப் பாடி, மெகா ஹிட் ஆக்கினார்கள். ஆனால் சிம்புவின் ஆல்பத்தில் அது மிஸ்ஸிங்க். எந்த அளவுக்கு, இதை வேறு வெர்ஷன்களில் ஹிட் ஆக்கமுடியும் என்று தெரியவில்லை. இப்பவே எனக்கு தெரிந்து, தமிழ் மற்றும் சிம்புவை பற்றி தெரிந்தவர்களுக்கு தான் இந்தப் பாடலைப் பற்றி தெரிந்திருக்கிறது. அதனால் கொலைவெறி அடைந்த இண்டெர்நேஷனல் புகழை சிம்புவின் ஆல்பத்தால் அடையமுடியுமா என்று தெரியவில்லை.



இன்னொரு கோணத்தில், சற்று நகைச்சுவையாக பார்த்தாம், தனுஷை பிடிக்கிற அளவுக்கு சிம்புவை அவ்வளவாக யாருக்கும் பிடிப்பதில்லை. பக்கத்து வீட்டுப் பையன் போல் இருக்கும் தனுஷ், இவ்வளவும் பிரபலமாக இருந்தும், அவர் காட்டும் எளிமை, எல்லாருக்கும் பிடிக்கும் காரணி.

ஆனால் இதுவே சிம்புவுக்கு நெகட்டிவ் ஆக அமைகிறது. பெயிலியர் படமான “ஒஸ்தி” கேசட் வெளியிட்டு விழாவில் அவருடைய அப்பா, “தன்னடக்க” புகழ் டி.ஆர் பேசிய பேச்சைக் கேட்டே, பலபேர் ஜன்னி வந்து கிடக்கிறார்கள். இந்த பாடலும் ஹிட் ஆகிவிட்டால், டி.ஆர் “சி.என்.என்” தொலைக்காட்சியில் பேசப்போகும் அந்த அற்புத காட்சியைப் பார்ப்பதற்கு, இன்னமும் தமிழ்மனங்கள் தயாராகவில்லை. குடும்பம் குடும்பமாக தற்கொலை முயற்சியும் நடக்க வாய்ப்புண்டு என்பதால், “அய்யய்யோ, வேணாண்டா..” என்று பயப்படுவதால் இந்த ஆல்பம் ஹிட்டாகாமல் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு…..

ஆக, எல்லா, காரணங்களையும், காரணிகளையும் வைத்துப் பார்த்தால், விரல்வித்தை நடிகர் காட்டும் லைட்டிங்க் மாயாஜாலங்களை காட்டிலும், ஒல்லிக்குச்சி நடிகர் காட்டும் எளிமையே ஜெயிக்கிறது, என்று தீர்ப்புச் சொல்லி, வாய்ப்பு தந்த நல்ல உள்ளங்களுக்கு…(அடச்சே..இதுக்குதான் சாலமன் பாப்பையா பட்டிமன்றம் பார்க்ககூடாதுங்கிறது….)