Saturday 25 August, 2012

நான் – விஜய் ஆண்டனியின் எக்சலண்ட் திரில்லர்..



விருந்தின் போது, சிலநேரங்களில், உணவு பற்றாக்குறையானால், அதை சமாளிப்பதற்காக, அவசரமாக, “உப்புமாசெய்து சமாளிப்பதுண்டு..ஆனால், அந்த உப்புமாவே, சிலநேரங்களில், அசத்தி, “அடடா..இதை முன்னாடி பரிமாறியிருக்கலாமோஎன்று வியக்கவைத்ததுண்டு..அதுபோல, சமீபகாலமாக, ஒரே மாதிரி, ஸ்டீரியோடைப் படங்களாக வந்துகொண்டியிருந்த வேளையில், “விஜய் ஆண்டனியெல்லாம் நடிக்கிறாரா..கண்டிப்பாக உப்புமா படமாத்தான் இருக்கும்என்று எண்ணிப் பார்க்க அமர்ந்தால், அப்படி ஒரு வித்தியாசமான அனுபவம்..

வழக்கம்போல, நான் எழுதும் விமர்சன பதிவுகளில், கதை சொல்லும் பழக்கம் இல்லை. அண்ணன் உண்மைத்தமிழன் பதிவுகளைப் படித்தால், கதை என்ன, படத்துக்கே போகவேண்டியதில்லை. நீயூஸ் ரீலிருந்து, கடைசியாக, தியேட்டரில் படம் முடிந்து சிதறி கிடக்கும் பாப்கார்ன் வரை, ஒரு வரிவிடாமல் தெளிவாக எழுதியிருப்பார். சிலநேரங்களில், “நாலாவது சீட்டில் இருந்தவர், 10 ஆவது சீன் நடந்துகொண்டிருக்கும்போது, ஒன்னுக்கடிக்க பாத்ரூம் எழுந்து சென்றார்என்ற ரேஞ்சுக்கு எழுதியிருக்கும் துல்லியத்தைப் பார்க்கும்போது, அண்ணனின் அயராத உழைப்புக்கு ஒரு சல்யூட்..ஆனால், தியேட்டர்காராய்ங்க, அண்ணனை கொலைவெறியோடு தேடிக்கொண்டிருப்பதாக தகவல்..பின்ன, ஒரு 500 டிக்கெட்டுக்காவது வேட்டு வைத்திருப்பதானால், அண்ணன் மேல், தியேட்டர்காரர்களுக்கு அப்படி ஒரு கோபமாம்..பொதுவாக, நேர்மையாக எழுதும் அண்ணன், சிலநேரம் தடுமாறி, “ராட்டினம்போன்ற மொக்கைப் படங்களை எல்லாம், “உலகப்பட ரேஞ்சுக்குஎழுதி, கோபத்தை வரவைப்பதுண்டு..(ஆஹா..விட்டா, நான் பட விமர்சனத்தை விட , அண்ணன் பிளாக்கு விமர்சனமாகி விடும் போல இருக்கே..)

சரிநான்படத்துக்கு செல்வோம்..எப்படி, சொல்லாமல், கொள்ளாமால், “மௌன குருஎன்ற படம் வந்து, “யாருய்யா, இதுஎன்று திரும்பி பார்க்க வைத்ததோ, அது போல ஒரு எக்சலண்ட் திரில்லரை பார்த்த அனுபவம் கிடைக்கிறது. சிறுவயதிலேயே, அம்மாவின் கள்ளக்காதல் தாங்கமுடியாமல், அம்மாவையும், “திருமதி செல்வத்தில்கொடுமைக்கார அண்ணனாக வருபவரையும் குடிசையோடு சேர்த்து எரித்து, சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு செல்லும், கதையோடு ஆரம்பிக்கிறது படம். (அப்படியே திருமதி செல்வம் டைரக்டரையும் அந்த குடிசையில விட்டிருந்தா, நாலு கண்வன்மாருங்க நிம்மதியா கஞ்சிதண்ணி குடிப்பாயங்கண்ணே..) வளர்ந்து இலக்கில்லாமல் செல்லும், விஜய் ஆண்டனி பயணிக்கும் பேருந்து எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாக,, அருகில் அமர்ந்து செல்லும்சலீம்என்பவரின் சூட்கேசை எடுத்துக்கொண்டு, சலீமாகவே மாறிப்போகும், விஜய் ஆண்டனியின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களே, படத்தின் ஒன்லைன்..சாரி..இது, மல்டிப்பிள் லைன்..சரி விடுங்க..ஏதோ ஒரு லைன்..

விஜய் ஆண்டனியா..இதுவெல்லாம் இவருக்குத் தேவையா என்று படம் தொடங்கும்போது இருந்த எண்ணம், படம் முடியும்போது, மொத்தமாக தகர்ந்துபோகிறது..அதற்கு காரணம், அவருடைய கேரக்டரைஷேசன்..முழுவதுமாக, “கொலைகாரன்என்று வெறுப்பு வரும் பாத்திரமாக காண்பிக்காமல், “புத்திசாலித்தனமான”, அதே நேரத்தில், சந்தர்ப்ப சூழ்நிலைக் கைதியாக காண்பித்து, விஜய் ஆண்டனிக்கு அருமையான விசிட்டிங்க் கார்டு கொடுத்திருக்கிறார், இயக்குநர்ஜீவா சங்கர்”. விஜய் ஆண்டனியும்டேய்..” என்று முதல் படத்திலேயே அருவாள் தூக்காமல், அண்டர்பிளே பண்ணி, அடக்கி வாசித்து, அருமையாக இயல்பாக நடித்திருப்பது, அற்புதம்..குறிப்பாக, நண்பனை எதிர்பாராதவிதமாக கொலை செய்துவிட்டு, கதறும் அந்தக் காட்சியும், ஹீரோயினை நம்ப வைப்பதற்காக, மிமிக்ரி செய்து சண்டை போடும் இடங்களில் எல்லாம், “முதல்படமாஎன்று வியக்கவைக்கிறார். ”வெல்கம், விஜய் ஆண்டனி..”..ஆனால் அடுத்த படத்தில்நானெல்லாம் நடந்தா ரவுண்டு..விட்டா சவுண்டுடாஎன்று ஏதாவது பஞ்சு டயலாக்கு ஆரம்பிச்சீங்க..அவ்வளவுதான்..



படத்தில் நடித்திருக்கும், அத்தனை பேரின் நடிப்பும் இயல்பு.குறிப்பாக, விஜய்ய்யின் நண்பராக நடித்திருக்கும், பணக்கார இளைஞனும், எப்போதும், சந்தேக கண்ணோடு பார்க்கும், அந்த இன்ஸ்பெக்டரும், கவர்கிறார்கள். ஹீரோயின்கள் கூட , அழகாகவும், அதே நேரத்தில் நடிக்கவும் செய்திருப்பது, தமிழ்சினிமாவில் நடக்காத அதிசயம்.

ஹீரோயினையும், மற்றவர்களையும் சமாளிக்க, விஜய் ஆண்டனியும் செய்ய்யும் புத்திசாலித்தனமான, காரியங்கள், படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்வதற்கு உதவுகின்றன. படத்தின் முடிவில்தொடரும்என்று போடும்போது, இப்போதுதான், இடைவேளை வருகிறதோ என்று நினைக்கும் அளவுக்கு, படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார், இயக்குநர் ஜீவா சங்கர்



பொதுவாகவே, நன்றாக இசையமைக்கும்ம், விஜய் ஆண்டனி, சொந்தப்படம் என்றால் கேட்கவா வேண்டும்..பிண்ணனி, இசையிலும், பாடல்களிலும்ம் பின்னி பெடலெடுத்திருக்கிறார். குறிப்பாகமக்கயலா, மக்கயலாஎன்ற பாடல், இன்னும் கொஞ்ச காலத்திற்கு இளைஞர்களின் தேசியகீதமாக இருந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. நடிப்பிலும், இசையிலும் ஜொலித்திருக்கும் விஜய் ஆண்டனிக்கும், சுக்ரதிசை, வீட்டு வாசலில், “பர்கர்சாப்பிட்டுக்கொண்டு காத்திருப்பது, தெரிகிறது..

வழக்கம்போல, எதையாவது குறை சொல்லாவிட்டால், விமர்சனம் என்று ஏற்று கொள்ளமாட்டீர்கள் என்பதால், படத்தில் அவ்வப்போது காண்பிக்கப்படும், நம்பமுடியாத காட்சிகள், படத்தின் திரையோட்டத்தை கெடுக்காமல் இருப்பதால், நீங்கள் விமர்சனம் என்று ஏற்றுகொள்ளாவிட்டாலும், என்னால் சொல்லாமல் இருக்கமுடியவில்லை(எவனுக்காவதும் புரிஞ்சுச்சுஇல்லைல..அப்ப நான்தான் பெரிய விமர்சன பதிவர்..இனிமேலு, என் கையத்தான் லைனுல வந்து எல்லாரும் முத்தம் கொடுக்கணும்..சொல்லிப்புட்டேன்..)

படத்தில் பங்குபெற்றோர் விபரம்

நடிப்பு - பல நடிகர்கள்
ம்யூசிக் - இசையமைப்பாளர்
இயக்கம் - இயக்குநர்
கேமிரா - ஒளிப்பதிவாளர்
நடனம் - நடன இயக்குநர்
சண்டை - ஸ்டண்ட் மாஸ்டர்
எடிட்டிங்க் - படத்தொகுப்பாளர்
தயாரிப்பு - தயாரிப்பாளர்

தியேட்டர் நொறுக்ஸ்

தியேட்டரில், கொடுத்த பாப்கார்னில் மஞ்சள் கலர் கம்மியாக இருந்தது..சூடு இல்லை..என் சீட்டுலிருந்து நாலாவதாக உக்கார்ந்த ஆசாமி, செமயாக தண்ணியடித்து விட்டு, நாலுமுறை எழுந்து ஒன்னுக்கடிக்க போனார். நானும் ஒருமுறை ஒன்னுக்கடிக்க போனேன்..இரண்டு பேர் சிவப்புக் கலர் சட்டை போட்டிருந்தார்கள்

இறுதியாக, விமர்சன பஞ்ச் லைனுக்காக காத்திருக்கும் நண்பர்களுக்கு..

நான்டீயில் ஊறவைத்த, சுவையான பன்(இல்லாட்டி)
நான்தெவிட்டாத தேன்(இல்லாட்டி)
நான்பக்கத்து விட்டு ஜான்(இல்லாட்டி)
நான்ஓடுறதுல மான்(இல்லாட்டி)
நான்நேத்து சாப்ப்பிட்ட, ஐஸ் கோன்(இல்லாட்டி)
நான்வீடு கட்ட கிடைக்கும் லோன்(இல்லாட்டி…)

அடப்போங்கையா….


Friday 17 August, 2012

இன்னும் எத்தனை குழந்தைகளை காவு கொடுக்க போகிறோம்



என் புள்ள காண்வெண்ட் ஸ்கூலுல படிக்கிறானாக்கும்..”

என் புள்ள என்னமா இங்கிலீஸ்ல பேசுறான் தெரியுமா..எல்லாம் ஸ்கூல நடக்குற ஸ்பெசல் கோச்சிங்க் தான்..”

என் புள்ள இந்த வயசுலயே நீச்சல் அடிக்குறான்..காண்வெண்டு ஸ்கூலுன்னா, கான்வெண்டு ஸ்கூலுதான்..”

இப்பவே என் புள்ள என்னமா டான்ஸ் ஆடுறான் தெரியுமா.ஸ்கூல் முடிஞ்சுவுடனே டைரக்டா கோச்சிங்க் தான்..”

இப்படியே பேசிப் பழகிவிட்ட காண்வெண்ட் பெற்றோர்களுக்கு, கீழே உள்ள செய்தி, அதிர்ச்சி அலைகளை கண்டிப்பாக கொடுத்திருக்கும்.

சென்னையில் பிரபலபள்ளியின் நீச்சல் குளத்தில் விழுந்து சிறுவன் பலி..”

எல்.கே.ஜி அட்மிஷன் வாங்க, காலையிலேயே க்யூ..பையன் படிக்கிறானே இல்லையோ, தாங்கள் பரிட்சைக்கு படிப்பதற்கு போல, புத்தகமும் கையுமாய்..நேர்முகத்தேர்வாம், பெற்றோர்களுக்கு..எல்.கே.ஜி படிக்கிற பையன் சொல்லுகிறான்..

யப்பா..நல்லா படிச்சு, இண்டெர்வ்யூல ஒழுங்கா பதில் சொல்லிடுப்பா..என் எதிர்காலம் உன் கையில்தான் இருக்கு.”

எல்லாம் எதற்காக..பையன் எதிர்காலம் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காகவா..எனக்கென்னமோ அப்படி தோன்றவில்லை..எல்லாம் சுயகௌரவம்..பக்கத்து வீட்டுப்பையன் என்னமா இங்க்லீஸ் பேசுறான்யா..நம்ம பையன் பேசுனாத்தான நமக்கு மதிப்பு..அவன் கான்வெண்டு ஸ்கூல படிச்சுட்டு, நம்ம புள்ள சாதாரண ஸ்கூலுல படிச்சா, பின்ன மரியாதை என்ன ஆகுறது..அவன் பையன் இப்பவே ஸ்விம்மிங்க் போறானாம், டான்ஸ் போறானாம்..அட..நம்மபையன் அவனுக்கு மேல ஒருபடி இருந்தாதான மதிப்பு..

இதோ நேற்று வாசித்தீர்களே..செய்தி..கான்வெண்டு பள்ளிகளின் லட்சணத்தை..”நீச்சல் குளத்தில் சிறுவன் பலி..”. ஒரு நொடியில் முடிந்து போனது, அந்தப் பெற்றோரின் அனைத்துக் கனவுகளும்..என்ன கனவெல்லாம் கண்டிருப்பார்களோ..காலை செய்தித்தாளைப் படித்துவிட்டு ஒரு கணம்..”ச்ச்..பாவம்லஎன்று ஒரு வரி அனுதாபத்தோடு அடுத்த வேலைக்கு சென்று விடுகிறோம்..ஆனால், இதே கொடுமை நம் பிள்ளைக்கு நடந்தால்..நடக்காது என்று என்ன நிச்சயம்..நம் பிள்ளையும் தானே, ஸ்கூல் பஸ்ஸில் போகும்..நம் பிள்ளையும் தானே, நீச்சல் பயிற்சிக்கு போகும்

எல்.கே.ஜிக்கு ஒரு லட்சம் கொடுக்க தயாராக இருக்கும்போது, ஏன் கொள்ளை அடிக்க மாட்டார்கள்..அவ்ர்களுக்கு, உங்கள் குழந்தை, ஒரு ப்ராடெக்ட்..பணம் தரும் ப்ராடெக்ட்..அவ்வளவுதான்..அவர்களுக்கு உங்கள் குழந்தைகள் மேலெல்லாம் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை..இருந்திருந்தால், ஓட்டை பஸ்ஸுக்கு அனுமதியும், நீச்சல் குளத்திற்கு பயிற்சியாளர் போடாத அலட்சியமும் நடந்திருக்குமா

பொறுப்பு நம்பக்கமும் இருக்கிறதுநாம்தான் என்றைக்கு குழந்தைகளை, குழந்தைகளாய் இருக்கவிடுகிறோம்..காலையில் 5 மணிக்கு யோகா, 7 மணிக்கு, ஸ்விம்மிங்க், 8 மணிக்கு ஸ்கூல், 4 மணிக்கு ரிட்டர்ன்..5 மணிக்கு கராத்தே..7 மணிக்கு டான்ஸ், 8 மணிக்கு வீடு..குழந்தைகளா, அல்லது, இயந்திரங்களாய்யா..??


சரி, ஒரு லட்சம் கொடுத்திருக்கிறோமே..என்றைக்காவது, பள்ளியில் எல்லாம் ஒழுங்காக பரமாரிக்கிறார்களா, என்று பார்வையிட்டிருக்கிறோமா..”அதெல்லாம் காண்வெண்டு ஸ்கூல்..எல்லாம் பக்காவா இருக்கும்..ஒரு லட்சம் வாங்குறாய்ங்கல்ல..”

எனக்குத் தெரிந்து அரசாங்கப் பள்ளிகளிலோ, நடுத்தரப் பள்ளிகளிலோ, படிக்கின்ற மாணவர்கள், காண்வெண்டு ஸ்கூலில் படிக்கும் பிள்ளைகளை காட்டிலும், பாதுகாப்பாக இருப்பதாகவே கருதுகிறேன்….உங்களிடம் பணம் பிடுங்கும் வரை..நீங்களும், கேட்கும் ஒரு லட்சம் கொடுக்கும் வ்ரை, கொள்ளை நடந்துகொண்டு தான் இருக்கும்..அலட்சியம் இருந்துகொண்டுதான் இருக்கும்.. இன்றைக்கு சீயோன், பத்ம ஷேஷாத்ரி..நாளைக்குபணம்தான் குறிக்கோள் என்று ஆகிவிட்ட பிறகு..உங்கள் குழந்தைகள் மேல் அவர்களுக்கு என்ன அக்கறை இருக்கப் போகிறது.. என்ன பதில் வரும் தெரியுமா..

பஸ்ஸெல்லாம் காண்ட்ராக் விட்டிருக்கோம்..அதுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தம் இல்லை..”

நீச்சல் குளம் காண்ட்ராக்ட் விட்டிருந்தோம்..அதில் விபத்து நடந்தால் நிர்வாகம் எப்படி பொறுப்பாக முடியும்..”

எனக்கு இருக்கும் ஒரே கேள்வி..

பள்ளி சேரும்போது, ஒரு லட்சம் கொடுக்கிறோமே..ஒரு ரூபாய் குறையாமல் வாங்குகிறார்களே..அதை ஏன் அவர்களிடம் கொடுக்கவேண்டும்..நேரடியாக நாமே காண்ட்ராக்டர்களிடம் கொடுக்கச் சொல்லலாமே..”

மேலே படத்தில் உள்ள ஒரு பெற்றோர் அழுவதைப் பாருங்கள்..எவ்வளவு கனவு கண்டிருப்பார்கள், அந்தக் குழந்தையைப் பற்றி..எவ்வளவு சீராட்டியிருப்பார்கள்..எவ்வளவு பாசம் காட்டியிருப்பார்கள்..அனைத்தும் ஒரு நொடியில், ஒரு சிறு அலட்சியத்தால் தகர்ந்து போனதே..

ஆனால் நீங்கள் என்ன தான் கேள்வி கேட்டாலும், ஒன்றும் நடக்கப்போவதில்லை..இன்னும் ஒரு வாரம், இந்தச்செய்தி, பரபரப்பாக இருக்கும்..அப்புறம், அதே ஒரு லட்சம்..அதே க்யூ..அதே, பள்ளிக்கூட பேருந்து, நீச்சல்குள சாவுகள்..

இதையெல்லாம் படிக்கும்போதும், அனுபவிக்கும்போதும், ஆத்திரம் தாங்கமுடியாமல் அந்தக்கால பி.எஸ் வீரப்பா சொல்லிய டயலாக் தான் ஞாபகத்திற்கு வருகிறது...

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்…”