Wednesday, 29 July, 2009

18+ வயது வந்தவர்களுக்கு மட்டும்

இந்த பதிவை எழுதணுமான்னு யோசிச்சேன்.ஏற்கனவே “பலான படம்” ன்னு ஒரு பதிவு போட்டிருப்பதால், என்னுடைய பிளாக்கிற்கு வேற சாயம் வந்துவிடுமான்னு ஒரு பயம்தான். ஆனா இதைக் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தால் இதை பதிவு செய்கிறேன்..இது ஆபாச பதிவல்ல..ஆனாலும் சில வார்த்தைகளை அப்படியே எழுத வேண்டியிருப்பதால் இந்த தலைப்பு..

நம்ம ஊருல கேபரே கிளப் இருக்கும்லனே..அது போல அமெரிக்காவுல “பப்” ன்னு சொல்றாயிங்க. சாப்பிடுற பப்ஸ் இல்லண்ணே..புரியுற மாதிரி சொல்லனும்னா பெங்களூரில எம்.ஜி ரோடுல அப்பன் காசைக் கரைக்கிறதுக்கு குடிச்சுட்டு கும்மாளம் போடுவாயிங்களண்ணே..அதுமாதிரி இங்க நிறைய இடத்துல இருக்குண்ணே..இந்த ஊருக்கு வந்தவயிங்க எல்லாம் ஒரு தடவையாவது இங்க வந்துட்டு போயிருவாயிங்க..

அதெல்லாம் பேச்சிலர் பசங்களுக்குதான்..நம்மளுக்குதான் கால் கட்டு போட்டுருக்காயிங்களே….அது பத்தி நம்மளெல்லாம் யோசிக்குறதேயில்லைண்ணே..பக்கத்து வீட்டுல “கணேஷ்” ன்னு ஒருத்தர் நம்மளை மாதிரி கல்யாணம் ஆனவருண்ணே..மனைவி ஊருக்குப் போயிருக்காங்க..நம்ம பசங்களுக்குத்தான் மனைவி ஊருக்குப் போனா சுதந்திர தினம் கொண்டாடுவாயிங்களே..நம்ம ஆளுக்கு பொறுக்க முடியலே..இதை எப்படியாவது கொண்டாடியே ஆகனும்னு முடிவு பண்ணிட்டார்….

“ராசா..என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா(ஜனகராஜ் ஸ்டைலில் வாசிக்கவும்)….எனக்கு 1 மாசம்தான் டைம்..அதுக்குள்ள எல்லாத்தையும் அனுபவிச்சருனும்டா..டே..பப்புக்கு போகலாமா?..”

“டே கணேசு..என் பொண்டாட்டி ஊருக்கு போகலடா..செருப்பைக் கழட்டி அடிப்பா..”

“ராசா..இதை விட்டா சான்ஸ் கிடைக்காதுடா..நாம் ஒன்னும் தப்பு பண்ண போகலையே..சும்மா வேடிக்கைப் பார்த்துட்டு வந்துடுவோம்..”

எல்லாத்துக்கிட்டயும் ஒரு மிருகம் இருக்கும்..அது சமயம் பார்த்துதான் எட்டிப் பார்க்கும்னு சொல்லுவாயிங்களண்ணே..அன்னைக்கு எனக்கு அந்த மிருகம் கும்மி போட்டு விளையாட்டுண்டு இருந்துச்சு போல..

“டே..எனக்கு சரியாத் தோணல..எதுக்கும் நம்ம கோவாலுக்குகிட்ட ஒரு வார்த்தை கேட்டுடுவோம்..”

கோவாலு பத்தி ஏற்கனவெ உங்களுக்கு சொல்லியுருக்கேண்ணே..தெரியாதவங்க என்னோட “உயிர் பயமும் சூப்பர் பிகர்களும்” பதிவைப் பாருங்க….நம்ம ஊருக்கார பயபுள்ள..ரெண்டு பேரும் நேரா அவங்கிட்ட போனோம்..நல்ல பையன்னே..

“வாங்கடா..என்ன இந்த பக்கம்..”

“கோவாலு, நம்ம கணேசு பொண்டாட்டி ஊருக்கு போயிருக்காங்கல..அதனால..”

“டே..ராசா..சூப்பர்டா..எல்லாரும் சேர்ந்து பப்புக்கு போகலாமாடா..”

அடப்பாவி..கொடுமை, கொடுமைன்னு கோவிலுக்குப் போனா..உன்னைப் போயி நல்ல பையன்னு ஒரு பாராவுக்கு முன்னாடிதானடா அறிமுகம் கொடுத்தேன்..

எல்லார் மனசுலயும் மிருகங்கள் அட் எ டையத்துல எட்டிப்பார்க்க சனிக்கிழமை போவதாக முடிவானது..என் வீட்டுக்காரம்மாகிட்ட சனிக்கிழமை ஆபிஸ்ஸில் வேலை இருப்பதாய் சொல்வதாக முடிவானது..கோவாலு படு எதிர்பார்ப்பில் இருப்பான் போல , ரெண்டு நாளா அவுத்துவிட்ட கோழி மாதிரியே திரிஞ்சான்..இதுல

“மச்சான்..பேர்னஸ் கிரீம்மை நல்லா அப்பிக்குவோம்டா.., அப்பத்தான் நம்மளை மதிப்பாயிங்க” ன்றான்..ஒரு நயா பைசா கூட செலவழிக்கமாட்டான் பயபுள்ள, அன்னைக்கு என்னான்னு பார்த்தா புது டிரஸ், புது கேப், புது கூலிங்கிளாஸ்..அப்படியே நம்ம தமிழ்நாடு பாலகிருஷ்ணா மாதிரியே இருந்தான்னே..

நான் இதுவரைக்கும் என்னோட பொண்டாட்டிக்கிட்ட பொய் சொன்னதே இல்லண்ணே..முதல் முறையா சொல்லப் போனேன்..வார்த்தை குழறவே கைகாலெல்லாம் நடுங்குச்சுண்ணே..

“இந்த..இன்னைக்கு ஆபிஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு..கொஞ்சம் லேட் ஆகும் எனக்காக வெயிட் பண்ணாதே..நீ, தூங்கு..”

“என்னாச்சுங்க..ஏதாவது அவசர வேலையா..பரவாயில்லைங்க..நீங்க போயிட்டு வாங்க..நான் வேணா பிளாஸ்க்ல டீ போட்டுத் தரவா..”

எனக்கு அப்பவே பாதி உசிரை எடுத்த மாதிரி இருந்துச்சுண்ணே..

“ஐயோ..வேண்டாம் பரவாயில்லை..நீ தூங்கு..” அப்படின்னு சொல்லிட்டு திரும்பி பார்க்காம கிளம்பிட்டேன்னே..வெளியே வர்றேன்..நம்ம கோவாலும் கணேசும் ரெடியா இருந்தாயிங்க..

எல்லோரும் கிளம்பி போனோம்…

அமெரிக்காவுல ரெண்டு உலகம்னே..முதல் உலகம் காலை முதல் சாயங்காலம் வரை, ஆபிஸில்..உசிரைக் குடுத்து வேலை பார்ப்பாயிங்கண்ணே..அடுத்த உலகம் இரவு உலகம்..உசிரை எடுக்குற உலகம்..கிளப்பு, பப்னு உசிரை எடுக்குற வரைக்கும் ஆடுவாயிங்க, ஏதோ நாளைக்கு உலகமே அழியப் போறது மாதிரி..நாங்க போன ஒரு இடமும் அப்படித்தான் இருந்தது..இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் 20-20 மேட்ச் போல ஒளிவிளக்குகள்..கையில் ட்ரிங்க்ஸை தட்டில் எடுத்துக் கொண்டு பரிமாறும், அரைகுறை ஆடை அணிந்த பெண்கள், காது கிழிஞ்சு போகும் அளவுக்கு இரைச்சலான இசை..எங்கு பார்த்தாலும் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் செக்யூரிட்டிகள்..பாதி போதையுடன் செருகிய கண்களுடன் இளவட்டங்கள்..சோமாலியாவில் பஞ்சத்துக்கு உடுத்தும் ஆடைகளை ஸ்டைலாக அணிந்து உலா வரும் யுவதிகள்..

அந்த பப் மூன்று பகுதி பகுதிகளாக இருந்தது..ஒரு புறம் பெரிய மேடையில் அரைகுறை ஆடையுடன் “இப்ப என்னாங்குற” தோரனையில் கேட்வாக் வரும் பெண்கள்..இன்னொரு பகுதி..நீ யாரோட புருசனாயிருந்தா எனக்கென்ன என்று யார் வந்தாலும் குத்தாட்டம் போடும் பெண்கள்..இன்னொரு பகுதி, ஏதாவது காரணம் சொல்லி நம்ம ஊருக்காரங்க போகும் “பார்”..நீங்க அங்கு உக்கார்ந்திருந்தால் சில யுவதிகள் வந்து உங்களை விசாரிக்கும்..நீங்கள் அவர்களுக்கு ஒரு ட்ரிங்க்ஸ் வாங்கி கொடுத்தால் உங்களுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்கும்..

இதெல்லாம் அந்த பொண்ணுக்கு உங்களை பிடித்திருந்தால்தான்..இல்லையெனில் “போடா வெளக்கெண்ணை” சொல்லிட்டு கிளம்பிக்கிட்டே இருக்கும்..நான் கவனித்த வரையில் எங்கும் தவறு நடக்கவில்லை..கோவாலு மாதிரி ஆர்வக்கோளாறுல ஏதாவது பண்ணிணா, அவனை சுண்டுவிரலுல தூக்கி வெளியே போடுறதுக்கு இம்மாந்தண்டி செக்யூரிட்டி அண்ணயிங்க(ஒரு சேப்டிக்காகத்தான் மரியாதை..தப்பித் தவறி இந்த பதிவை அவிங்க படிச்சிட்டா..ஹி.ஹி)

கோவாலு அலறிட்டான்..இதெல்லாம் இங்கிலிபீசு படத்துலதான் பார்த்திருக்கோமா..கோவாலு காலை தரையில் ஊன்ற முடியலை..சொர்க்கத்துல மிதக்குற மாதிரி கத்த ஆரம்பிச்சான்..

“ராசா..இதுதாண்டா உலகம்..வாடா, நம்மளும் போய் டான்ஸ் போடுவோம்..”

“டே..கோவாலு..ஆளை விடுடா..நம்ம எல்லாம் ஆடுனா கரகாட்டம் ஆடுற மாதிரி இருக்கும்..”

“போடாங்க..நீயெல்லாம் ஏண்டா பொறந்த..” எங்கப்பாவுக்கு அப்புறம் இப்பத்தாண்ணே இப்படித் திட்டு வாங்குறேன்..

கோவாலு அங்க போய் கைய காலை டான்ஸ்ங்கிற பேர்ல ஆட்டிக்கிட்டு இருந்தான்., எனக்கு கண்ணைக் கட்டிக்கிட்டு வரவே அங்கு உள்ள சோபாவில் அமர்ந்தேன்..ஒரு தேவதை என்னை நோக்கி வரவே எனக்கு பயமா போச்சுண்ணே..

“ஹாய்…நான் கிளாரா..நீங்க இண்டியாவா..?

“நான் ராசா..”

“நான் இந்த கிளப்லதான் வேலை பார்க்குறேன்..ஏன் இங்க வந்து உக்கார்ந்து இருக்கீங்க..டான்ஸ் ஆடலையா..”

“இல்லீங்க..பரவாயில்லை..ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே..இவ்வளவு தைரியமா வெக்கமில்லமா கேட் வாக் வர்றீங்களே..உங்களுக்கு தப்பா தோணலையா..”

இதுக்கு பேர்தாண்ணே ஆணாதிக்கம்..நம்ம ஊருல தான் இதெல்லாம்..இங்கெல்லாம் பளார்ன்னு ஒரு அறைதான்..திருப்பிக் கேட்டா பாருங்க..

“இதுல என்ன வெட்கம்..சரி நான் பண்றது தப்புனே எடுத்துகிட்டாலும், அதையும் வெக்கமில்லாம நீங்க பார்க்க வர்றீங்களே..உங்களுக்கு தப்பா தோணலை..”

இப்படி நாலு பேர் பளார்ன்னு அறைஞ்சாத்தான்னே நம்மளுக்கெல்லாம் புத்தி வரும்..அப்படியே வளர்ந்துட்டோம் பாருங்க..ஆடி முடிச்ச கணேசும், கோவாலும் திரும்பி வந்தார்கள்..களைப்பு முகத்தில் தெரிந்தாலும், நான் கிளாராவிடம் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தவுடன் கருகும் வாசனையும் வந்தது..வந்தவுடனே ஆரம்பிச்சாயிங்க..

“ஹாய்..நான் கணேஷ்..”

கிளாராவுக்கு கணேசை பிடிக்கவில்லை போலும்..எழுந்து போக எத்தனித்தாள்..கணேசுக்கு வந்ததே கடுப்பு..

“போடி பிராஸ்டியூட்..”

கணேஷ் அப்படி பேசியிருக்ககூடாதுண்ணே..கிளாராவுக்கு சரியான கோவம்..நேரா அவனிடம் வந்தாள்..

“நான் அவுத்துப் போடுறதைப் பார்த்து என்னை பிராஸ்டியூட் என்று சொல்கிறாயே..வீட்டில் உன் பொண்டாட்டி இருக்க என்னைப் பார்க்கிறதுக்கு கிளம்பி வந்துருக்கிறாயே..நீ பிராஸ்டியூட் இல்லையா..”

செருப்பைக் கழட்டி அடிச்ச மாதிரு இருந்துச்சுண்ணே..அவனுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை..நியாயம் பேசும்போது, அநியாயம் மௌனமாகத்தானே இருக்க வேண்டும்..சக்கையாய் காரில் ஏறில் உக்கார்ந்தோம்..யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை..ஏதோ உடம்புதான் காரில் பயணிப்பது போலவும், மனசு நசுக்கப்பட்டு சாகடிக்கப்பட்ட போலவும் ஒரு பிரமை..நேரா வீட்டிற்கு வந்தேன்..

என் மனைவி படுத்திருந்தாள்..பாவம்னே..எனக்கு சமையல் செய்து போடுறதை தவிர அவளுக்கென்று ஒரு உலகமும் இல்லைண்ணே..அவளுடைய கண்களை கவனித்தேன்..நாளெல்லாம் வீட்டு வேலை செய்து களைத்து தூங்கியிருந்தன..”என் புருசன் இருக்கான் எனக்காக..என் வாழ்நாள் முழுக்க கூட இருப்பான்”..என்ற நம்பிக்கையில் நிம்மதியான தூக்கம்..இன்னும் நல்லா ஞாபகம் இருக்குண்ணே..மதுரையில கல்யாணம் பண்ணி அடுத்த நாள் அமெரிக்கா கிளம்புறோம்..பல வருடங்களாய் பார்த்து பார்த்து செய்த அப்பா அம்மாவை விட்டுட்டு ஒரு நிமிசத்துல என்னோட கிளம்பி என்னை நம்பி வந்தாண்ணே..என்னை கல்யாணத்துக்கு முன்னாடி யாருண்ணே அவளுக்கு தெரியாதுண்ணே..எனக்காகத்தானே ஒவ்வொரு நிமிசமும் வாழுறா..நான் அழுதா அவ அழுவாண்ணே..நான் சிரிச்சா அவ சிரிப்பாண்ணே..அவளுக்குன்னு ஒரு ஆசை கூட இல்லைண்ணே..இப்படிப் பட்ட தங்கத்தை விட்டு பொய் சொல்லிட்டு போனேனே..என்ன மனுசன்னே நான்..

“சாரிங்க..நீங்க வர்ற வரைக்கும் முழுச்சுருக்கனும்தான் நினைச்சேன்..அலுப்புல தூக்கம் வந்திருச்சு..டயர்டா இருக்கா..காபி போட்டு தரட்டா..”

சே..இதுக்கு மேல என்னால அங்க இருக்க முடியலண்ணே..எழுந்து குளியலறைக்கு வந்து கண்ணாடி முன்னால் என் முகத்தைப் பார்த்தேன்..முதல் முறையா என்மேல எனக்கே வெறுப்பு வந்துச்சுண்ணே..மனுசனா நீ..”…..தூ……”

கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்து துப்பினேன்..நான் துப்பிய எச்சில் கூட கண்ணாடியில் என் முகத்தில் நிற்க கோவப்பட்டு கீழே வழிந்தது.. பொண்டாட்டிக்கு துரோகம் நினைக்க கூடாதுண்ணே..போஜனம் மட்டுமில்ல, நரகத்தில் கூட இடம் கிடைக்காதுண்ணே..

Monday, 27 July, 2009

பூச்சரம் கேள்வி பதில்களில் நான்

பூச்சரம்னு ஒரு திரட்டி இருக்குதுண்ணே..அங்க புதுசா ஒரு பகுதி ஆரம்பிச்சிருக்காயிங்கண்ணே..பிரபல பதிவர்களிடம் விரும்பும் கேள்வியைக் கேக்கலாம்….என்னைத் தான் முதல் பதிவராக கூப்பிட்டிருக்காயிங்கண்ணே….பிரபல பதிவர்களிடம் கேளுங்க சொல்லிட்டு என்னை எதுக்கு கூப்பிட்டுருக்காயிங்கன்னு தெரியலண்ணே(ஹீ..ஹீ..இப்படித்தான் தன்னடக்கமா சொல்லணும்னு ஒரு பிரபல பதிவர் சொல்லிக் கொடுத்து இருக்காரு..) சும்மாண்ணே..நானெல்லாம் சின்னப் பையன்னு உங்களுக்கே தெரியும்..ஆனாலும் வடிவேல் சொல்லுறமாதிரி “என்னையும் மனுசன்னு மதிச்சு அழைச்சதுக்கு சந்தோசம்யா..”

அதுக்கு ஏதாவது தயாரிக்கனும்னு ரெண்டு மூணு இலக்கியப் புத்தகம் எடுத்துப் படிச்சுக்கிட்டு இருந்தேண்ணே..முத முறையா படிக்கிறேன்ல..செம தூக்கம்னே..என் பொண்டாட்டிக்கு ரொம்ப கோவம் வந்துருச்சு..அதனால படிக்கிற மாதிரி நடிச்சுக்கிட்டு இருந்தேன்..என்ன மாதிரி கேள்வி வரும்..ஒரு வேளை இப்படிக் கேள்வி கேட்டால் எப்படி பதில் சொல்லனும்னு நானே யோசிச்சுக்கிட்டு இருந்தேன். என் பொண்டாட்டி பண்ற டிஸ்டர்ப பாருங்க..

கேள்வி : நீங்கள் முட்டாள் என்பது உங்கப்பாவுக்கு தெரியுமா, தெரியாதா?

“அது ஊருக்கே தெரியுமே..”

“என்னடி சொல்லுற..”

“இல்லீங்க..நீங்க சோம்பேறீ..உருப்படியா படிக்கமாட்டீங்கனு ஊருக்குத் தெரியும்..அது இப்படி தூங்கிக்கிட்டே படிச்சுக்கிட்டு நீருபிருக்கிறீங்க பார்த்தீங்களா..”

அடிப்பாவி..என் மனசுக்குள்ள எதுவும் ஸ்பை கேமிரா வச்சுருக்காளோ?

ஊருக்குள்ள குசும்பு புடிச்சவிங்க நிறைய பேரு இருக்காயிங்க..என்ன கேள்வி கேப்பாயிங்க..ஒருவேளை இப்படி கேப்பாயிங்களோ?

கேள்வி : நயன் தாராவுக்கும் உங்களுக்க்கும் ஒரு இதுவாமே..

“அடியே..அந்த போன் அடிக்குது பாரு..எடு..”

“யாருங்க அது லஷ்மின்னு பெயர் வருது..யாருங்க அது லஷ்மி..”

“அது வந்து..என் ஆபிஸ்ல ஒருத்தர் இருக்காரு..பேரு லஷ்மி நாராயண்ன்..ஷார்ட்டா நாங்க லஷ்மின்னு கூப்பிடுவோம்..”

“கொண்டாங்க..நானே பேசுறேன்..மவனே, ஏதாவது பொண்ணு குரல் கேட்டுச்சு, உன் லைப்பே ஷார்ட் ஆகிடும்..”

ஆஹா..நயன்தாரா..மன்னிச்சுடு..உன காதலை என்னாலே ஏத்துக்க முடியல..

ஒருவேளை இப்படி கேள்வி கேட்டா..

கேள்வி : நீங்கள் சமீபத்தில் படித்த தமிழ் இலக்கியம் எது..?

“என்னங்க..அப்படியென்ன புத்தகம் வேண்டிக் கிடக்குது..நான் ஒருத்தி எல்லா வேலையும் செய்யுறேனே..கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம்ல”

“என்னை நிம்மதியா படிக்க விடு..சாரு, உத்தம எழுத்தாளன்..சாரி, ஜெமோ, நாஞ்சில் நாடன், சு.ரா..”

“யாரு..ரெமோவா..இந்த அந்நியன் படத்துல..”

“ஐயோ இது ஜெமோ..ஜெயமோகன்..”

“யாருங்க அவரு…நம்ம ஊரில வீட்டு பக்கத்துல பொட்டிக்கடை வச்சிருந்தாரே..அவரா..புத்தகம் விலைக்குப் போட்டா எடுத்துக்குறுவாரு பொட்டலம் மடிக்கிறதுக்கு..புத்தகமெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டாரா..”

“ஐயோ..நான் ஆணியே புடுங்கலடீ..போதுமா..”

ஒருவேளை நடிகர்களை கேள்விக் கேக்குற மாதிரி கேட்டா..

கேள்வி : நீங்க எழுத வரலைன்னா என்ன பண்ணியுருப்பீங்க..

“என்னங்க..அமெரிக்காவுல பிச்சைக்காரயிங்களாம் இருக்காங்களா??”

“என்னடி..சரியா காதுல விழல..”

“பிச்சைக்காரர்ங்க”…

அடங் கொய்யாலே..நீங்களும் கேக்கலாம்னே..இந்த லிங்கை கிளிக் செய்து கேளுங்க. அல்லது கீழே உள்ள லிங்கை உங்கள் பிரௌசரில் காபி செய்யுங்க..நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்..)))

http://poosaram.blogspot.com/

Saturday, 25 July, 2009

ஏர்டெல் அழுவாச்சி சிங்கர் ஜூனியர்

ஏர்டெல் சூப்பர் சிங்கருக்கு அப்புறம் விஜய் டி.வி காரய்ங்க ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்ன்னு போடுறாயிங்களாம். எனக்கு தெரியவே தெரியாதுண்ணே..என் பொண்டாட்டிதான் சொன்னா.. என்னைக்கு ராகினிஸ்ரீய செலக்ட் பண்றதுக்கு வைல்ட்கார்டு ரவுண்டு 1, 2..மற்றும் பல ன்னு கொண்டு வந்தாயிங்களோ, அப்ப இருந்தே நான் இந்த நிகழ்ச்சிய பார்க்குறத விட்டுட்டேன்.இதுல யுகேந்திரன் வாசுதேவ நாயர்(டீ ஆத்துறவர் இல்லங்கண்ணே) மாலினி பண்ற கொடுமையில கொஞ்ச நாள் விஜய் டீ.வி பார்க்குறதே இல்லை.

இங்க அமெரிக்காவுல(ஆஹா..ஆரம்பிச்சுட்டான்யா..)என் பக்கத்து வீட்டுல சுப்ரமணின்னு ஒருத்தர் இருக்காரு. ஒண்டியாத்தான்னே இருக்காரு. பொண்டாட்டியும் குழந்தையும் சென்னையில இருக்காங்க..சார் ஊரில இருந்து வந்து 2 வருசம் ஆச்சு..நல்ல தன்மையான மனுசண்ணே..வீட்டு மேல ரொம்ப பாசம் வைச்சுருப்பாருண்ணே.எப்ப பார்த்தாலும் அவரோட 6 வயது மகள் பத்திதான் பேசுவாரு. அப்படிப் பேசும்போது அவர் கண்ணோரம் கண்ணீர் முட்டிக்கிட்டு நிக்கும்ணே..எனக்கே சங்கடமாக இருக்கும். போன வாரம் வீட்டுக்கு வந்திருந்தார்..

“ராசா..நல்லா இருக்கீங்களா..”

“நல்லா இருக்கேன் சார்..என்ன இந்த பக்கம்..”

“ஒன்னுமில்ல ராசா..வீட்டுல லேப்டாப் கொஞ்சம் ரிப்பேர் ஆகிடுச்சு..உங்க வீட்டுலதான் டீ.வீ இருக்குல..என் பொண்ணு ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்ல கலந்துக்கிட்டாளாம்…இன்னைக்கு ஒளிபரப்புறாயிங்களாம்….எனக்காக போட முடியுமா..”

“ஐயோ , இதை கேக்குறதுக்கு ஏன் சார் தயக்கம்..வாங்க உக்காருங்க..இப்ப ஆன் பண்றேன்..”

டீ.வி போட்டேண்ணே..பார்த்தா ஒரு பெரிய பாப்பா சின்ன கவுன் போட்டுக்கிட்டு

“இது ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்.சின்ன குழந்தைகளின்..”

பார்த்தா நம்ம திவ்யதர்சினி..ஏற்கனவே விஜய் டீ.வி அவார்ட்ஸ் பார்த்த கடுப்புல கொலை வெறி ஆகிட்டேன்..கடவுளே குழந்தைகளின் ஷோவுலயுமா….என் பொண்டாட்டி என் கையப் புடிச்சுக்கிட்டா..எங்க டீ.விய ஒடைச்சுப் புடுவனோன்னுதான்.,அவ கவலை அவளுக்கு ..சீரியல் பார்க்கணுமில்ல,..

பார்த்தா, சின்ன சின்ன குழந்தைகள் அண்ணே..குழந்தைகள்னு சொல்லக்கூடாது..தெய்வங்க..ஏதாவது கோவமா இருக்குறப்பயோ, கவலையா இருக்குறப்பயோ, குழந்தைகள் சிரிப்பைப் பாருங்க..வேற உலகத்துக்கு போகிருவோம்னே..அந்த உலகம் கவலைகள் இல்லாத உலகம்னே..ஒரு பிரச்சனை கிடையாது..நாளைக்கு சோறு தண்ணி பத்தி கவலைப்பட வேண்டியதில்லை..வேலை பத்திக் கவலையில்லை..மனசுல வஞ்சகம் கிடையாது, பொறாமை கிடையாது..இதுக்குத்தானே குழந்தைகளை தெய்வமுன்னு சொல்லுறாயிங்க..

நிகழ்ச்சியில ஒவ்வொரு குழந்தையும் பாடுறதைக் கேக்குறதுக்கு ரெண்டு கண்ணு பத்தாதுண்ணே..அந்த மழலை சிரிப்பு கலந்த பாட்டு..அதுங்க குடுக்குற எக்ஸ்பிரஸன். சூது கலக்காத அக்மார்க் மனசுண்ணே..ஆனா, அந்த குட்டி, குட்டிப் பொண்ணுங்க எல்லாம் ரிஜெக்ட் ஆகி போகும்போது, ஏதோ நம்மளே வாழ்க்கையத் தொலைச்ச மாதிரி இருக்கும்னே..நம்ம எழுந்து போய் அவிங்க கண்ணைத் துடைக்கலாம் போல ஆசையா இருக்கும்னே..இங்க தான் விஜய் டி.வி மார்க்கெட்டிங்க் புத்தி இருக்குது..

குழந்தைகள் மனசு வெள்ளை மனசு..போட்டியில தோத்துட்டா கேமராவைத் தூக்கிக்கிட்டு ஓடிறுராயிங்க..அவிங்க அழுகுறதை அப்படியே படம் புடிச்சு காட்டும்போது மனசே ஆடிப் போகுதுண்ணே..எல்லாம் காசு..ரேட்டிங்க்..எனக்கு அதுக்கு மேல் பார்க்குறதை விருப்பம் இல்லாம எழுந்து போக முயற்சி பண்ணினேன்..

“இருங்க ராசா..என் பொண்ணு வந்துருச்சு..அதோ என் பொண்ணு..என் பொண்ணு..ராசா..பேரு ஸ்வேதா..இது என் பொண்ணுப்பா..அய்யோ எவ்வளவு கியூட் பாருங்களேன்..”

அவர் கண்ணுல தண்ணி நிக்குதுண்ணே..அப்பா பாசம்னே..இந்த உலகத்துல அம்மா பாசம் தெரியுற அளவுக்கு, அப்பா பாசம் வெளியில தெரியுறது இல்லண்ணே..அம்மா பாசத்துக்கு கொஞ்சம் கூட குறைஞ்சது இல்லண்ணே..தினமும் வேலை பார்த்துட்டு மேனஜர்கிட்ட திட்டு வாங்கிட்டு வந்தாலும், வீட்டுக்கு வந்தப் பிறகு “அப்பா” ன்னு சொல்லிக்கிட்டு மகள் வந்து கட்டிப் பிடிக்கும் பாருங்க..அப்படியே ஆபிஸ் பிரச்சனை எல்லாம் பஞ்சாய் பறந்து போயிரும்னே..அந்த உலகத்தில் அப்பாவும் மகளும் இருப்பதாய்தான் தெரியும்..நான் சின்னப்பிள்ளையா இருக்குறப்ப எவ்வளவோ நாள் என் அப்பா நான் சாப்பிடுறதுக்காக அன்னைக்கு சம்பாதிச்ச அவ்வளவுக்கும் பொம்மை வாங்கிட்டு வந்துருக்கார் தெரியுமாண்ணே..சோறு கூட சாப்பிட மாட்டாருண்ணே..நான் விளையாடுறதப் பார்த்து சிரிச்சுக்கிட்டே இருப்பாருண்ணே..

ஸ்வேதா மழலைக் குரலில் பாட ஆரம்பித்தாள்….

“உன்னைக் கண்டனே முதல் முறை..நான் என்னைத் தொலைத்தேனே..”

அவருக்குப் பெருமைண்ணே..

“பாருங்க ராசா..என்னமா பாடுது….அவளை நல்லா வளர்த்து கண்டிப்பா பெரிய ஆளா கொண்டு வருவேன் பாருங்க ராசா..”

நடுவர் சொன்னார்..

“ஸ்வேதா,..நல்லா கியுட்டா பாடுறீயே..இன்னும் நல்லா பிராக்டீஸ் பண்ணனும்பா..ஓகேயா..இந்தா சாக்லேட்”

ரெட் லைட் அழுத்தவே, நம்ம சுப்ரமணியன் சார் முகம் வாடிப் போய்டுச்சுண்ணே..

“சரி ராசா..கிளம்புறேன்..”

என் பதிலைக் கூட எதிர்பாராமல் கிளம்பினார்..கதவு வரைக்கும் போய் விட்டார்..

“சுப்ரமணியன் சார்..என்ன ஆச்சு..குழந்தை தோத்துட்டாண்ணேன்னு கவலையா விடுங்க சார்..குழந்தைப் போட்டிதான்னே..இன்னும் கொஞ்சம் வயசாகட்டும்..”

அவர் கண்கள் கலங்கி இருந்துச்சுண்ணே..

“இல்ல ராசா..குழந்தைய ரெண்டு வருசம் முன்னாடிப் பார்த்தது..எவ்வளவு பெரிய மனுசி ஆகிட்டா..அவ பாடும் போது எனக்கு சிலிர்க்குது ராசா..என்னால அதுக்கு மேல அங்க உக்கார முடியல ராசா..என் பொண்ணு ராசா..ரொம்ப பெரிய ஆளா வருவா பாருங்க..”

சொல்லுறப்ப அவர் முகத்தைப் பார்த்தேண்ணே..ஒரு பெருமிதம் தெரிந்தாலும், குழந்தை பக்கத்துல இல்லையேன்னு ஒரு ஏக்கம்..

அதுக்கு மேல அவரால பொறுக்க முடியல..கண்ணீரைத் துடைச்சுக்கிட்டு அவரு ரூமுக்கு நடந்து போனாருண்ணே..

உலகத்துலயே காசு குடுத்து வாங்க முடியாததுல அப்பா பாசமும் ஒன்னுன்னே..உங்க குழந்தை சிரிக்குறத ஒரு நிமிசம் பாருங்க உங்களுக்கே புரியும்..

Wednesday, 22 July, 2009

சுவாராசிய வலைப்பதிவர் விருது

எல்லாரும் விருது வாங்கியிருக்குறதப் பார்த்தா சந்தோசமா இருக்குதுண்ணே..எனக்கும் விருது கொடுத்த மணிகண்டனுக்கு என்னோட நன்றிகள். இந்த விருதை 6 பேருக்கு கொடுக்கவேண்டுமென்று விதிமுறை. எனக்கு பிடித்த பதிவர்கள் நிறைய பேர் இருந்தாலும், எல்லாருக்கும் கொடுக்க விதிமுறை ஒத்துக் கொள்ளாததால், கீழே குறிப்பிட்ட 6 பேருக்கு கொடுக்கிறேன்..நீங்கள் கொடுத்து வரும் ஆதரவுக்கு நன்றிண்ணே..

1. சக்கரை சுரேஷ் : பதிவுலகத்தில் ஒரு இன்ப வரவு. இப்போது கொஞ்சம் ஓய்வு எடுத்தாலும், திரும்ப வந்து கலக்குவார் என்று எதிர்பார்க்கலாம்

2. பித்தன்(சிங்கை) : அதிகம் கவனிக்கப்படவேண்டியவர். அவருடைய எழுத்துக்களை ஒரு முறை படித்துப் பாருங்கள் தெரியும்

3. மணிகண்டன் : இவருடைய கிச்சடி பதிவு ஒன்று போதும் இந்த அவார்டுக்கு

4. அப்பாவி முருகன் : பேர்தான் அப்பாவி..பிச்சு எடுப்பாருண்ணே..தாமரைக்கு இவர் எழுதிய கண்டனம் ஒரு சாம்பிள்

5. சித்து மற்றும் ஜெட்லி : இவர்களுடன் விமர்சனம் படித்து ஆபிசில் சிரித்து மாட்டிக்கிட்டேன்..நீங்களும் ஆபிஸ் டையத்துல படிக்காதிங்கண்ணே..

இன்னும் நிறைய பேருக்கு கொடுக்க ஆசைண்ணே..என்னுடைய 50 வது பதிவில் நிறைய எழுதுகிறேன்னே..


Tuesday, 21 July, 2009

அன்புள்ள செந்தழல் ரவி…

(இந்த பதிவை படிக்கும்முன் இந்த லிங்கை கிளிக் செய்து படிக்கவும்..அப்போதான் இந்த பதிவு புரியும்..)

அன்புள்ள இரந்தழல் செவி..சாரி..செந்தழல் செவி..கடவுளே..இரந்தழல் இவி..

பாருங்கண்ணே, முதல்முறையா உங்களைப் பாராட்டி எழுதப் போறேன்..வாய் குழறுது..ஒரு நிமிசம்..

அன்புள்ள செந்தழல் ரவி..அய்..வந்துடுச்சு.. கொஞ்ச நாளைக்கு முன்னாலயே உங்களுக்கு இந்த லெட்டர் எழுதனும்னு நெனைச்சேன்...ஆனா இப்ப தான் நேரம் கிடைச்சது...

இந்த உலகத்தில் நான் ரசிச்ச இம்சைன்னு எடுத்துக்கிட்டா…இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி, அமெரிக்காவுல கூட என்னைத் தேடி வந்து கடிக்குற கொசு..அடுத்தபடியா நீங்கதான்..

கண்ணீர் விடுறமாதிரி எழுதுனா தான் அது இம்சை, மீதி எல்லாம் ஊறுன உளுந்துன்னு நினைக்கிற இந்த காலத்தில, என்னை மாதிரி தற்குறியும் சிரிக்கிற மாதிரி நீங்க எழுதுறதுதான் உங்களை எனக்கு பிடிச்சதுக்கு காரணம்..

ஆமாம் ஏதோ கேள்விப்பட்டேன்..நீங்க சுவராசிய பதிவர்க்குரிய அவார்டு ஒன்னு ஆரம்பிச்சு எல்லோரும் அவார்டு கொடுத்து சந்தோசப்படுறாங்களாம்..

ஏம்பா…

நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு..எப்படி இந்த திடீர் முடிவு..

பார் எக்ஸாம்பிள்..

நீங்க 200 பேர் இருக்குற பதிவுலகத்துல பிரபல பதிவரா இருக்கீங்க..திடிர்ன்னு அடிக்கடி பதிவர்களுக்குள்ளார சண்டை போட்டுக்குறாங்க..புதிய பதிவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கலைன்னு ஒரு பேச்சு வருது..

இப்ப நீங்க என்ன செய்வீங்க..

  1. நல்லா சண்டை போடுங்கப்பான்னு சொல்லி இம்சையக் கொடுப்பீங்க
  2. அய்யோ அப்படி பேசுறானுங்களே..அப்படின்னு கவலைப்பட்டு கண்டுக்காம விட்டுறுவீங்க..
  3. சுவாராஸ்ய பதிவர்ன்னு ஒரு அவார்டு ஆரம்பிச்சு..எல்லாரையும் சந்தோசப்படுத்துவீங்க..

இம்சை ராஜாவான நீங்கள் முதல் ஆப்சனைத்தான் எடுப்பீங்கன்னு நினைச்ச நேரத்தில மூன்றாவது ஆப்சனை எடுத்து எல்லாரையும் சந்தோசப்படுத்திட்டீங்க..

அதே நேரம் உங்களைப் பற்றித் தெரிந்த அதே பதிவுலகத்தில் இருக்கும் மற்றவர்கள் சண்டையெல்லாம் மறந்து எல்லாரும் புதிய பதிவர்களுக்கு அவார்டு கொடுக்குறதைப் பார்த்து சந்தோசமா இருக்குண்ணே..இந்த அவார்டு தொடர்னால கடந்த இரண்டு வாரங்களா இருந்த சண்டை மறந்து ஓரளவு சந்தோசமா இருக்காங்கண்ணே..

உங்களுக்கு தெரியுமா என்று தெரியாது, என் போன்று புது பதிவர்களுக்கு இது உற்சாக டானிக்ணே..ஒவ்வொரு பதிவரும் இந்த அவார்டு வாங்கிட்டு அடுத்தவங்களுக்கு கொடுக்கும் போது எவ்வளவு சந்தோசப்படுறாங்க தெரியுமாண்ணே..நீங்க திரும்ப ஒரு புதிய பதிவரா மாறிப் பாருங்கண்ணே..தன்னோட எழுத்தையும் ஒவ்வொருத்தரும் மதிக்கிறாங்கன்னு நினைச்சாலே ஒரு தனி இன்பம் கிடைக்கும்ணே..அது அனுபவிச்சால்தான் தெரியும்னே..நானும் அனுபவிக்கிறேன்னே..நானும் புது பதிவர்தானே..

எப்போதும் உங்களைக் கிண்டல் பண்ணி பதிவு போடும் நான், நீங்க நல்லது பண்ணும் போது பாராட்டனும்லனே..அதுதானன்னே நியாயம்….நீங்க ஆரம்பிச்சு வைச்ச அவார்டுக்காகத்தான்னே உங்களுக்கு இந்தப் பாராட்டு..

எனக்கும் அவார்டு கொடுத்துக்கிறாயிங்கண்ணே..நானும் 6 பதிவர்களுக்கு அவார்டு கொடுக்கப் போறேன்ணே.. இதுபோல நீங்கள் பல முயற்சிகளை எடுத்து வலையலகம் எப்போதும் சந்தோசமா இருக்க ஆவலாயிருக்கும் நண்பனின் மடல்..

Monday, 20 July, 2009

தமிழ்மணத்தில் அதிக ஓட்டு வாங்குவது எப்படி?


என்னதான் ஹிட்ஸ், ஓட்டு, பின்னூட்டம் இதெல்லாம் பார்க்காதே, பதிவில் மட்டும் கவனம் செலுத்து என்று பல பேர் அறிவுரை சொல்லினாலும் இந்த பாழாய்ப் போன மனசு கேக்க மாட்டீங்குதுண்ணே..மாறி, மாறி மேடைப் பேச்சைக் கேட்டு கழகங்களுக்கு ஓட்டு போட்டவயிங்க தானே நம்மெல்லாம். பலான படம்னு ஒரு பதிவு போட்டு 1000 ஹிட்ஸ் வாங்குனதைப் பார்த்து என் கண் கலங்கிருச்சுண்ணே..இம்புட்டு பேர் படம் பார்த்துக்குறாயிங்களா..அம்மா, அப்பா பத்தி ரொம்ப உருக்கமான பதிவு போட்டெல்லப்பாம் 200, 250 ஹிட்ஸ் தான்னே வந்திருந்திச்சு..விடுப்பா, விடுப்பா..யூத்துன்னா பலான படம் பார்க்குறதும், பல் போனப்பறம் ஷகீலா படம் பார்க்குறதும் வாழ்க்கையோட அங்கம் தானே..

முதன் முறையா என்னோட பதிவு 1000 ஹிட்ஸ் வாங்குனவுடனே, ஒரு ஆர்வக் கோளாறுல தமிழ்மணத்துல எவ்வளவு வோட் வாங்கியிருக்குன்னு பார்த்தா எனக்கு அதிர்ச்சிண்ணே..நான் 2ம் வகுப்பு படிக்கும்போது கணக்கு பாடத்துல வாங்குன மார்க்குண்ணே..”0”..இதே பதிவு தமிலிஸ்சில் 37 ஓட்டு..1000 ஹிட்ஸ்ல ஒரு 250 பேர் படிச்சிருந்தாலும் ஒருத்தர் கூடயா ஓட்டு போடல..ஒருவேளை எம்மேலதான் ஏதோ தப்பு இருந்திருக்கும்னே..

அண்ணே..தமிழ்மணத்தை கலாயிக்கிறதுக்கு இந்தப் பதிவு எழுதலண்ணே..உண்மையிலயே தெரிஞ்சுக்கிறதுக்காக இதைக் கேக்குறேன்..கீழே ஒரு பத்து ஆப்சன் போட்டிருக்கேன்..உங்க மனசுக்கு பட்ட ஆப்சனை பின்னூட்டம் போடுங்கண்ணே..(1, 2, 3..என்று குறிப்பிடவும்). முடிந்தால் அந்த ஆப்சனைப் பற்றி உங்கள் கமெண்ட் போடவும்..நான் ஒரு ஆப்சனை நினைச்சுருக்கேன்..நான் நினைச்சது தப்பா என்று தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்..ஏதாவது சிரமத்திற்கு மன்னிச்சுருங்கண்ணே..

1) ஓட்டுப் போடுவது அவரவர் மனநிலையைப் பொறுத்தது..நீங்கள் நன்றாக எழுதி, அதை அந்த வாசகர் ரசித்தால் கண்டிப்பாக ஓட்டு விழும். இதில் அரசியல் எதுவும் இல்லை.

2) ஓட்டு பற்றி அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டாம்..

3) அரசியல் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்..செய்யத் தெரியாவிட்டால் கூட பரவாயில்லை. யாரையும் தாக்கி எழுதியிருக்க கூடாது

4) ஜால்ரா போடத் தெரிந்துருக்க வேண்டும்..முடிந்தால் பதிவைப் படிக்கும் முன்னே, ரீப்பிட்டு, மீ த பர்ஸ்ட் என்று பின்னூட்டம் போடுதல் நலம்.

5) குரூப் சேர்த்துக் கொண்டு கும்மியடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மாறி மாறி ஓட்டு குத்தினால் அதிக ஓட்டு வாங்குறதுக்கு சான்ஸ் இருக்கு.

6) டம்மியாக 4,5 பிளாக் வைத்துக் கொள்ள வேண்டும்..நமக்கே, நமக்கு ஓட்டு போட்டு கொள்ளலாம்

7) நிறைய பதிவுலக நண்பர்கள் வைத்துக் கொள்ள வேண்டும்..பதிவு போட்டவுடன், தூக்கத்திலிருந்தாலும் எழுப்பி ஓட்டுப் போட சொல்லணும்..தொல்லை தாங்க முடியாமல் ஒரு ஓட்டு விழும்

8) தமிழ்மணத்தில் யாராவது தெரிந்தவர் இருக்க வேண்டும்

9) இப்படி தமிழ்மணத்தைப் பற்றித் தாக்கி நாலு பதிவு போட வேண்டும்..தாக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்..ஒரேயடியாகத் தாக்கினால் உங்கள் பதிவு தூக்கப்படும் வாய்ப்பு உள்ளது

10) மொத்தமாக பிளாக்கை டெலிட் செய்து விட்டு போர்வையை நல்லா கால் வரைக்கும் போர்த்திக்கிட்டு உறங்க வேண்டும்..குறட்டை விட்டு பக்கத்தில் இருப்பவரை சாகடிக்காமல் இருப்பது நலம்

உங்கள் மனசுக்கு பட்ட ஆப்சனை இதுக்கு பின்னூட்டம் போடுங்கண்ணே..உங்களுக்கு ஏதாவது ஆப்சன் தோன்றினா அதையும் எழுதுங்கண்ணே..அண்ணே திரும்பவும் சொல்றேன்.இது தமிழ்மணத்தை தாக்கும் பதிவல்ல(ஆப்சன் 9 ரெபர் செய்யவும்). என்னோட ஜென்ரல் நாலேஜ்க்குக்காத்தான் இது..சரி நம்மதான் இப்படி நினைக்குறோமா..அல்லது எல்லாரும் அப்படியா என்று தெரிந்துக் கொள்ளத்தான்.


Sunday, 19 July, 2009

நாய்…நாய்..நாய்…நாய்க்காதல்


போன வாரம் பக்கத்துல உள்ள ஒரு இந்தியன் ரெஸ்டாரண்ட்க்கு போயிருந்தேன்.ஒரு ஓரமா உக்கார்ந்து சோத்து மலைய வெட்டிக்கிட்டு இருந்த போதுதான் அவன் என் கண்ணில பட்டான்..பேரு கமலக் கண்ணன்..என்னோட பழைய கம்பெனியில என்னோட வேலை செஞ்சிக்கிட்டு இருந்தவன்..நம்ம மதுரைக்காரண்ணே..எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சுண்ணே..பக்கத்துல யாருன்னு பார்த்தா, சேட்டு வீட்டுப் பொண்ணு கணக்கா ஒரு பொண்ணு. பக்கத்துல வேற என் பொண்டாட்டி வேற இருந்தாளா..அப்படியே போகஸை கமலக் கண்ணனுக்கு மாத்தினேன்..நாலு வருசத்துக்கு முன்னாடி என்னோட ப்ராஜெக்டுக்கு அவன் முதல் முதலாக வந்து சேர்ந்த போது பேசியது எனக்கு நினைவுக்கு வந்துச்சுண்ணே…

“ராசா அண்ணே..நான் கமலக்கண்ணன்..நானும் மதுரைக்காரண்ணே..இன்னிக்குத்தான் சேர்ந்துருக்கேன்..பிராஜெக்ட் எப்படிண்ணே”

“வாப்பா கண்ணா..சந்தோசம்யா..நல்ல பிராஜெக்ட்யா..நல்லா முன்னேறலாம்..”

“அண்ணே..அது வந்து..அது வந்து..”

என்னடா இப்படி வெக்கப்படுறான்னு அவன் காலைப் பார்த்தா, நேத்து சமைஞ்ச பொண்ணு மாதிரி பெரு விரலால கோலம் போடுறாண்ணே..

“ஏதாவது பிகர் இருக்காணே..நம்ம பிராஜெக்ட்ல..”

அடங்கொய்யாலே..அவனா நீயி….அப்பவே தெரிஞ்சு போச்சுண்ணே..அவன் எந்த பிராஜெக்ட் பண்ண வந்துருக்கானுன்னு..அவன என்ன குறை சொல்ல..அவன் வயசு அப்பிடி..இப்பத்தான் காலேஜ் முடிச்சான்..கேம்பஸ் இண்டர்வியூல வேலை..அப்பா பள்ளிக்கூடத்துல ஆசிரியரா வேலை பார்க்குறார்..

வந்த நாளில இருந்தே பரபரப்பா திரிஞ்சான்..எப்படி டிபக்டை கரெக்ட் பண்ணறதுக்குன்னு இல்ல..எப்படி பிகரை கரெக்ட் பண்றதுக்குன்னு..அப்பத்தான் ஒரு பொண்ணு பம்பாயில இருந்து கேம்பஸ் இன்டெர்வியூல செலெக்ட் ஆகி எங்க கிளைக்கு வந்தா..பேரு “ஸ்வேதா..” சுண்டி விட்டா ரத்தம் வருமுன்னே..கண்ணாடி மாதிரி கலருண்ணே..சிம்பிளா சொல்லணும்னா இந்த பதிவுல சைடுல இருக்குற என் போட்டாவை பாருங்க..அதுக்கு அப்படியே எதிர்கலரு..நம்ம கமலக்கண்ணனும் என் கலரு…நம்ம ஊருக்காரயிங்க தானே..அமிர்கான் கலரா வரும்….காக்காவையும் நம்மளையும் போட்டி வைச்சா, ஒரு பாயிண்ட் வித்தியாசத்துல நம்ம ஜெயிப்போமுல..அதுக்கெண்ணனே..வெள்ளை மனசுண்ணே…

ஸ்வேதாவைப் பார்த்தவுடனே நம்ம ஆளு அலறிட்டாண்ணே..

“டே..ராசா..என்ன பிகருடா….என் கனவு தேவதைடா..”

“கமலக்கண்ணா..வேணான்டா..அதுக எல்லாம் பார்த்தா பெரிய ரேஞ்சாத் தெரியுது..நம்மளையெல்லாம் மதிக்க கூட மாட்டாயிங்க..கலரே ஒத்துப் போக மாட்டீங்கேதேடா..நம்மளும் அவளும் நின்னா பாலும் டிக்காசனும் கலந்த மாதிரு இருக்கும்டா..”

“போங்கண்ணே..அப்பத்தான காபி கிடைக்கும்..”

எப்படிதான் கண்டு பிடிப்பாயிங்கன்னு தெரியல..அப்பயே தெரிஞ்சு போச்சுண்ணே..இவன் செத்தால் தான் திருந்துவாண்ணு..

நம்ம கமலக்கண்ணனுக்கு அந்த பொண்ணு மனசுல இடம் பிடிக்கிறத விட, பக்கத்துல இடம் பிடிக்கிறதுதான் முதல் நோக்கமா இருந்துச்சு..அந்த பொண்ணு சென்னைக்கு புதுசா வந்திருக்குறதனால ஒரு இழவும் தெரியல..பொதுவா பார்த்தீங்கண்ணா வட இந்தியால இருந்து வந்து சென்னையில தங்கி இருக்கிறவயிங்க ஏதோ நரகத்துல இருக்குற மாதிரி நினைப்பாய்ங்க..ஏதோ அவிங்க சொர்க்கத்துல இருந்து வந்த மாதிரி..ஒரு நாள் பாம்பே போயிருந்த போதுதான் நினைச்சேன்..அடப்பாவிங்களா..ஊராயா அது..எங்க பார்த்தாலும் பான்பராக்கை போட்டு புளிச், புளிச்சுன்னு துப்பி வைச்சிருக்காயிங்கண்ணே..தமிழ்நாடு சொர்க்கம்ணே..

ஸ்வேதா நம்ம கமலக் கண்ணன் பக்கம் வந்தாள்..அப்பயே நம்ம கமலக் கண்ணணுக்கு வாயோரம் ஜொள்ளு ஆரம்பித்தது..

“எக்ஸ்கியூஸ் மீ..நான் ஸ்வேதா..பம்பாய்ல இருந்து வந்துருக்கேன்..எனக்கு இந்த ஊரு ஒன்னும் புரியல..நீங்க இந்தி பேசுவீங்களா..”

நம்ம ஆளுக்கு தமிழே கோளாறு..இந்தி எங்கிட்டு..

“ஹி..ஹி..தோடா..தோடா மாலும்..”

இதோடா..பிகருன்னா ஆப்பிரிக்க பாஷையே கத்துக்கிருவாயிங்க போல இருக்குண்ணே….ஸ்வேதா கொஞ்ச ஆரம்பித்தாள்

“இந்த சென்னை எனக்கு பிடிக்கவேயில்லை..யாருமே இந்தி பேச மாட்றாங்க….எங்க ஊரு சப்பாத்தி கிடைக்கா மாட்டீங்குது..ஒரு பப் இல்லை, டிஸ்கோதே இல்லை..ஒரு என்டெர்டெயிண்ட் இல்லை..”

எனக்கு அங்கயே அவளை செருப்ப கழட்டி அடிக்கணும் போல இருந்துச்சு..ஒருவேளை ஆஸ்திரேலியாவுல நடக்குற தாக்குதலுக்கு இதுவும் ஒரு காரணமோ..கோபத்தை கட்டுப் படுத்திக்கிட்டு நான் சொன்னேன்..

“ஸ்வேதா..அப்புறம் ஏன் சென்னைக்கு வந்தீங்க..இப்படி பிடிக்காத இடத்துல குடி இருக்கணுமா என்ன..வேலையத் தூக்கிப் போட்டுட்டு உங்க சொர்க்கத்துக்கு போக வேண்டியதுதானே..”

ஸ்வேதா முகம் லைட்டா மாறவே, நம்ம ஆளு டென்சானாகிட்டான்..

“ஸ்வேதா..ஊராங்க இது..நீங்க கவலைப்படாதிங்க..உங்களுக்கு நல்ல ஹாஸ்டல் பார்க்க வேண்டியது என்னோட பொறுப்பு..நல்ல நார்த் இண்டியன் ரெஸ்டாரண்ட் நான் பார்க்குறேன்..”

அதுமுதல் அவளுக்கு பிஸ்கட் கொடுக்காத நாய்க்குட்டி மாதிரியே திரிஞ்சாண்ணே..என்னையெல்லாம் கண்டுக்கவேயில்லை..காலையில வண்டிய எடுத்து ஸ்வேதாவை ஹாஸ்டலில் இருந்து கூப்பிட்டு வருவான்..சாயிந்தரம் ஆனா, செக்யூரிட்டி மாதிரி வீட்டுல விடுறது..ரெஸ்டாரண்ட் போயி பார்சல் வாங்கிட்டு வர்றது..உண்மையிலேயே இதுக்கு அடிமாடா வேலைப் பார்த்திருக்கலாம்ணே….அவளும் நம்ம ஆளு வீக்னஸ் பார்த்து நல்லா வேலை வாங்கினா..அவளுக்கு ஒரு பைசா செலவு இல்லண்ணே..நம்ம ஆளுதான் சம்பாதிக்கிற பணத்தை எல்லாமே செலவழிக்கிறானே.. ஒருநாள் செம பிசியா போயிக்கிட்டு இருந்தவனை புடிச்சேன்..

“டே..கமலக் கண்ணா..நான் ராசாடா..ஞாபகம் இருக்கா..ஏண்டா இப்படி மாறிட்ட..பேண்ட் போட்டா மதிப்பே இல்லையாடா??”

“டே ராசா..காதல்டா..நான் அவளை உண்மையா காதலிக்கிறேன்டா..அவளும் என்னைக் காதலிக்கிறான்னு தான் நினைக்கிறேன்டா..வித் லவ்வுன்னு கீரீட்டிங் கார்டு தர்றாடா..நீதான் எனக்கு எல்லாம் சொல்றாடா..”

“டே கமலக் கண்ணா..இதெல்லாம் வேணான்டா..அவிங்க அப்படித்தான்டா பேசுவாயிங்க..நம்மளுக்கெல்லாம் ஒத்து வராதுடா..”

“போடா..காதல் பத்தி உனக்கு என்னடா தெரியும்.வேலையப் பாருடா..”

எனக்கு யாரோ செருப்பை கழட்டி அடித்த மாதிரி இருந்துச்சு..போடா நீயும் உன் காதலும்..நான் அவனைக் கண்டுக்கவே இல்லைண்ணே..எப்படியும் சாகப் போறான்னு தெரிஞ்சிருச்சு..அப்பப் போய் பால் ஊத்திக்கலாமுன்னு விட்டுட்டேன்..அப்புறம் நான் வேற கம்பெனிக்கு மாறி நாலு வருசம் ஆகி அமெரிக்கா வந்து இப்பத்தாண்ணே அவனைப் பார்க்குறேன்…என்னைப் பார்த்தவுடனே அவன் முகம் பிரகாசமாகியது..என்னை நோக்கி வந்தான்..

“டே..ராசா..எப்படிடா இருக்க..நாலு வருசத்துக்கு முன்னாடி பார்த்தது..கல்யாணம் ஆகிடுச்சா..எங்கடா உன் பொண்டாட்டி..”

“நல்லா இருக்கேன்டா..கல்யாணம் ஆகிடுச்சு..மனைவி சாப்பிட்டு கை கழுவ போயிருக்காடா…ஆமா நீ எங்கடா அமெரிக்காவுல..”

“சின்ன பிராஜெக்டக்கு வந்திருக்கேன்டா..”

“சந்தோசம்டா கமலக்கண்ணா..என்னடா உனக்கு எப்ப கல்யாணம்..ஸ்வேதா வீட்டுல சம்மதம் வாங்கிட்டயா..?”

“ஸ்வேதாவா..அவ கிடக்குறா நாயி..மனுசியாடா அவ..அவளுக்கு எவ்வளவு பண்ணினேன்..மனசாரக் காதலிச்சேன்டா..ஏமாத்திட்டாடா..என்னை லவ் பண்ற மாதிரியே பேசுனாடா..அத நம்பி நான் சம்பாதிச்சதெல்லாம் அவளுக்குத்தான்டா செலவழிச்சேன்..ஷாருக்கான் மாதிரி ஒரு பையன் பாம்பேல இருந்து வந்துருந்தாண்டா..அவிங்க ஆளுடா..அவன் கூட சேர்ந்து சுத்த ஆரம்பிச்சுட்டாடா..என்னை ஈசியா கை கழுவிட்டாடா..”

“அடப்பாவமே..அப்பவே படிச்சு, படிச்சு சொன்னனேடா..நீ கேக்கலை…”

“ஆமாண்டா….எவ்வளவு காசு செலவழிச்சேன்..அட்லீஸ்ட் கையாவது வச்சிருக்கணும்டா..தப்பு பண்ணிட்டே..எவ்வளவு சான்ஸ் கிடைச்சுச்சு தெரியுமா..இப்படி பண்ணுவான்னு தெரிஞ்சா அப்பவே அவ மேல கை வச்சுருப்பேன்டா..”

நான் அதிர்ச்சியில அப்படியே உறைஞ்சு போயிட்டேண்ணே..இதுதானா காதல்..உடம்பைத் தொட்டா எல்லாம் முடிஞ்சுடுமா..இதுக்குத்தான் பிறந்தோமா..மண் திங்குற உடம்புதானா எல்லாம்..

“டே..இந்த தடவை ஏமாற மாட்டேன்டா..அங்க என் டேபிளுல உக்கார்ந்து இருக்கா பாரு..இங்க வந்து புடிச்சேன்…எப்படியாவது மேட்டரை முடிச்சுட்டுத்தான் காதலிக்கவே செய்வேன்..”

நாய்…நாய்..நாய்…நாய்க்காதல்…..