Thursday, 3 February, 2011

கிரிக்கெட் விளையாடத் தெரியாதது தப்புங்களாயா??

சிறு வயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் கிரிக்கெட் அதிகமாக விளையாடுவதில்லை. பள்ளிக்கூட வாழ்க்கையில் நண்பர்கள் கட்டாயப்படுத்தியதால் சிலநேரம் விளையாடுவேன். அப்படி விளையாண்டு பல டீமுகளை சின்னா பின்னமாக்கிருக்கிறேன்..அதாவது நான் விளையாண்ட டீமுகளை..நம்ம பௌலிங்க போட்டாவே எதிர் டீம் குஷி ஆகியிடுவாயிங்கண்ணே..சிக்சர், போர் தான்..அதுக்காகவே எந்த டீமுலயும் சேர்க்க மாட்டாயிங்க..லெக் தாதா ரேஞ்சுக்கு நம்மளை வச்சிருப்பாயிங்க..நம்ம என்னைக்கு வெட்கப்பட்டோம்..துடைச்சிக்கிட்டு போயிக்கிட்டே இருப்போம்ல அடுத்த டீமை கவுக்குறதுக்கு..

அப்படியே கல்லூரி நாள்கள் முடிஞ்சு வேலை கிடைச்சு, சின்சினாட்டிக்கு வந்தேண்ணே..இங்க ரெண்டு டீமு இருக்காயிங்க.தீபக் டீம், சஞ்சய் டீம்..கொலைவெறி பிடிச்சு ஆடுவாயிங்க..ஏதோ இந்தியா, பாகிஸ்தான் ரேஞ்சுக்கு அடிதடியெல்லாம் நடத்துவாயிங்கண்ணே..தோத்துட்டா, சோரு தண்ணி சாப்பிட மாட்டாயிங்கண்ணே..

அதுல ஒரு டீம் கேப்டன் தீபக் நமக்கு பழக்கம் ஆனான்னே..ரொம்பத் தன்மையான ஆளுன்னே..நம்மளை விட ஐந்து வயது கம்மி…”ராசா சார்ன்னு மரியாதையா கூப்பிடுவான்.ஒரு நாள் எங்கிட்ட பேசிக்கிட்டு இருந்தான்.

ரொம்ப கவலையாயிருக்கு ராசா சார். இந்த சஞ்சய் டீமை கிரிக்கெட்ல தோக்கடிக்க முடியல. நம்ம சைடு பௌலிங்க கொஞ்சம் வீக். யாராவது ஒரு நல்ல பௌலர் கிடச்சா, பின்னிடலாம்..”

ஆஹா..இந்த லெக் தாதாவை கோர்த்து விட்டுருவாயிங்க போல..

கவலைப்படாத தீபக்..கிடைக்கும்

ஆமா ராசா சார்..நீங்க கிரிக்கெட் விளையாடுவீங்களா..”

எனக்கு பயமா போச்சுண்ணே..விளையாடத் தெரியாதுன்னு சொன்ன எங்க தேசத்துரோகியா நினைச்சுருவாயிங்களோன்னு நடுக்கம் வேற..

அப்பப்ப விளையாடுவேன்பா..ஸ்கூல் டீமுல இருக்குறப்ப கொஞ்சம் பௌலிங்க போட்டுருக்கேன்..”

அவ்வளவுதான்..அவன் முகம் பிரைட் ஆச்சு பாருங்கண்ணே..என்னை கட்டிப் பிடிச்சிக்கிட்டான்..

ராசா..நீங்கதான் எங்க டீமுக்கு வேணும்..நாம நாளைக்கே மேட்ச் வைக்கிறோம்..சஞ்சய் டீமை தோக்கடிக்கிறோம்..”

புல்லரிக்கிறான்..என்ன சொன்னாலும் கேக்கவே மாட்டிங்கிறான்..ஆழம் தெரியாம கால விட்டியடா தீபக்..வேணான்டா..என்ன அப்படியே பெருமையா பார்க்குறான்..விட்டா என் தலைக்கு பின்னாடி ஒரு ஒளிவட்டம் வரைஞ்சு நம்மளை சாமியாக்கிருவாயிங்க போல இருக்குண்ணே..

ராசா..நாளைக்கு காலையில 7 மணிக்கெல்லாம் ரெடியா இருங்கன்னு, நான் வந்து கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு திரும்பிப் பார்க்காம கிளம்பி போயிட்டான்..எனக்கு நைட் தூக்கமே வரலைண்ணே..நான் பௌலிங்க போட்டு 4 விக்கெட் எடுக்குற மாதிரி கெட்ட கெட்ட கனவா வருது..காலையில தீபக் டான்னு 7 மணிக்கெல்லாம் வந்துட்டான்..இதுல என் பொண்டாட்டி வேறவெற்றியோட திரும்பி வாங்கன்னு குங்குமம் எல்லாம் வச்சு அனுப்புறா

தீபக் என்னை மைதானத்துக்கு கூட்டிட்டு போய் அவிங்க ஆளுங்கிட்ட அறிமுகம் பண்றான்..அடப்பாவி, வினைய விசா போட்டு கூட்டிட்டு போறாயிங்களேஇதுல தீபக், எதிர் டீம் கேப்டன் சஞ்சயைப் பார்த்து..”ஏண்டா, பௌலிங்க் எங்க சைடுல வீக்குன்றதுனால தான ஜெயிக்கிறீங்க..இப்ப ஜெயிங்க பார்ப்போம்..” டே..இதுல்லாம் ரொம்ப ஓவருடா..எனக்கு ரொம்ப கிலி ஆகிடுச்சு..எதுக்கும் இவிங்க ஆயுதம் எதுவும் வச்சிருக்காயிங்களான்னு ஒரு தடவை செக் பண்ணிக்கிட்டேண்ணே..

பர்ஸ்ட் நம்ம டீம் பேட் பண்ணினாயிங்க..15 ஓவருல 70 ரன் அடிச்சிருந்தாயிங்க..சந்தோசமா இருந்துச்சுண்ணே..அடுத்து நாங்கதான் ஓவர் போடணும்..தீபக் நேரா எங்கிட்ட வந்தான்..”ராசா சார்..நீங்கதான் பர்ஸ்ட் ஓவர்”..எனக்கு அடி வயிறு கலங்கிடுச்சுண்ணே..மெதுவா, தீபக்கிட்டதீபக்கு, இவிங்க எல்லாம் பார்த்தா சின்னப் பையங்களா இருக்காயிங்கப்பா..ஏதாவது வெயிட்டான ஆளு பேட் பண்ணா சொல்லு..நான் பௌலிங்க் போடுறேன்.” தீபக் யோசிச்ச சரின்னுட்டான்..இப்படியே சொல்லி எஸ்கேப் ஆகிட்டே இருந்தேன்..அன்னைக்கு என்னான்னு தெரியல, நம்ம டீமுல எல்லாரும் நல்லா பௌலிங்க் போட்டாயிங்க. ஒரு விக்கெட் தவிர எல்லா விக்கெட்டையும் கழட்டிட்டாயிங்க.

கடைசி விக்கெட் ஒரு சின்னப் பையண்ணே..நம்ம ஊரில பத்தாவது படிக்கிற ரேஞ்சுக்கு இருந்தான்..கடைசி ஓவரில 30 ரன் அடிக்கணும்னே..ஆஹா இதுதான்டா சான்சு, நம்ம திறமைய அப்படியே மெயின்டெயின் பண்ணனும்ட்டு கடைசி ஓவர் நான் போடுறேன்னு கேட்டு வாங்கிப்புட்டேன்.

சரி, சின்னப்பையந்தானேன்னு முதல் பால் போட்டேன்..வயசுக்கு ஒரு மரியாதை வேணாம்..சின்னப் பையன்னே..மட்டு மரியாதை இல்லாம ஒரே அடி..பந்து சிக்சர் பறந்துருச்சுண்ணே..அப்பவே லைட்டா கண்ண கட்டுச்சுண்ணே..சரி, சோத்தாங்கை பக்கம் போட்டாத்தான் அடிக்கிறான், பீச்சாங்கை பக்கம் போட்டேண்ணே..அதுக்கு அந்த பையன் பாருங்கண்ணே..ஒரு இரக்கம் வேணாம்..ரிவர்ஸ்ல திரும்பிக்கிட்டு இன்னொரு சிக்சர் அடிச்சுபுட்டாங்கண்ணே..4 பாலுல 18 ரன் அடிக்கனும்னே..தீபக் முகம் லைட்டா மாறிருச்சுண்ணே..அப்பக்கூட தன்மையா எங்கிட்ட வந்துராசா சார், புல்டாஸ் போடாதீங்க..யார்க்கர் போடுங்கன்னு சொன்னான்..நானாடா புல்டாஸ் போடுறேன்..நான் பால் போட்டா அதுதான்டா வருது..

சரி ஜானிவாக்கர்தான் அடிக்கிறதுல்ல..யார்க்கராவது போடுவோம்னு ஒரு யார்க்கர் போட்டேன்..எப்படித்தான் விளையாடுராயிங்கண்ணு தெரியலண்ணே..சிம்பிளா ஒரு தட்டி, ஒரு போர் அடிச்சிட்டான் அந்த குட்டிப் பிசாசு..எல்லாரும் கத்திட்டாயிங்கண்ணே..தீபக் முகம் லைட்டா மாறிருந்துச்சுண்ணே. இப்பசார் கட் பண்ணிட்டான்..”ராசா, என்ன இப்படிப் பண்ணிறீங்கசரி நீங்க பௌலிங்க போட்டதும் வாங்க..உங்களுக்கு பேபி ஓவரு..” அடப்பாவி, பேபியக் குடுக்குற மனுசனுக்கு பேபி ஓவராடா..எதிர் டீம் பசங்க கத்திட்டாயிங்க..”நோ..நோ..ராசா, எங்களுக்கு முழு ஓவர் போடனும்..இல்லன்னா எவனும் உசிரோட போக முடியாதுன்னு சொல்லுறாயிங்கண்ணே..என்ன சப்போர்ட் பாருங்கண்ணே..3 பாலுல 14 ரன்..எனக்கு லைட்டா வயித்த கலக்க ஆரம்பிச்சதுண்ணே..பல்லக் கடிச்சுக்கிட்டு ஒரு பால் போட்டேன் பாருங்க, அந்த பிசாசு மூஞ்சிக்கு நேரா ஒரு போர், அடுத்த பாலுல இன்னோரு போர்..தீபக் முகத்தைப் பார்க்கனுமே..மாரியாத்தா வந்துருச்சுண்ணே..எங்கிட்ட வந்துடே..வெளக்கெண்ணை ராசா..பந்தாடா போடுற..மவனே இந்த பால் மட்டும் ஒழுங்கா போடல, மவனே உனக்கு சங்குதான்டா..”ன்றான்.

ஒரு பந்துல ஆறு ரன் டார்கெட்..சரி, ஆனது ஆகட்டும்னு பல்லக் கடிச்சுக்கிட்டு கடைசி பந்து போட்டேண்ணே..பாரபட்சம் பார்க்காம அடிச்சான் பாருங்க சிக்சர்..எங்க டீமுல இருக்குற எல்லாரும் வெறி புடிச்ச மாதிரி கையில கிடைக்கிற ஸ்டம்ப், பேட் தூக்கிட்டு என்னை நோக்கி கொலைவெறியோட ஓடி வர்ராயிங்கண்ணே..அப்படியே உசிரைக் கையில புடிச்சுக்கிட்டு வீட்டுக்கு ஓடுனேன் பாருங்கண்ணே..வீட்டுல போய் கதவைச் சாத்திக்கிட்டேன்..

அடியே யாரு வந்தாலும் கதவை திறக்காதடி..”

என்னங்க என்ன ஆச்சு..ஆஸ்திரிலியா மாதிரி இங்கயும் இனவெறி தாக்குதல் நடத்துறாயிங்களா??”

போடிங்க..கிரிக்கெட் வெறித் தாக்குதல்டீ..”

அப்படி என்னதாங்க அந்த கிரிக்கெட்ல இருக்கு..”

அடிப்போடி..அவனவன் கொலைவெறி புடிச்சு அலையிறாயிங்கடீ

ஆமாங்க..நேத்து கூட நியூஸ் பார்த்தேன்..இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் கூட ஜெயிச்சுருச்சாம்ல..இந்தியா எத்தனை கோல் போட்டாயிங்க??”

ஐயோ கடவுளே..இதுக்கு நான் அங்கேய அடிவாங்கி கிடந்துருக்கலாம் போலடா சாமி..அப்படியே போர்வையப் போர்த்துக்கிட்டு படுத்துட்டேண்ணே..காலையில சன்னலத் தொறந்து பார்க்குறேன்..தீபக், சஞ்சய் ரெண்டு பேரும் வெளிய உக்கார்ந்து இருந்தாயிங்கண்ணே..அதுல தீபக் முகத்தைப் பார்த்தேன்..நைட் எல்லாம் தூங்கல போல..அவ்வளவு கொலைவெறி..கையில கத்தி, கித்தி ஆயுதம் ஏதாவது வச்சுருக்கானான்னு பார்த்தேன்..இல்லை..இவன் ஓகே..எதிர் டீம் சஞ்சய் எதுக்கு வந்துருக்கான்..காலில விழுந்து நன்றி சொல்லுவானோ?? யோசிக்குறதுக்குள்ள என் வீட்டுக்காரம்மா கதவை தொறந்துட்டா..அப்படியே உள்ள வந்துட்டாயிங்க..நான் மறையுறதுக்கு ஒரு இடத்தை தேடுறதுக்குள்ள ரெண்டு பேரும் வந்து கையப் பிடிச்சுக்கிட்டாயிங்கண்ணே..ரெண்டு பேரும் சொல்றாயிங்க

ராசா சார்..நேத்து நடந்ததுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்..சாரி சார்

எனக்கு கண்ணு கலங்கியிருச்சுண்ணே..எவ்வளவு தன்மையா இருக்காயிங்க பாருங்க..தீபக் சொல்றான்

சஞ்சய்..ராசா சார், இனிமே, உங்க டீமுதான்

இல்லடா தீபக், சார் முதல்ல ஆடுனது உங்களுக்காகத்தான்அதனால உங்க டீமுதான்

டே சஞ்சய்..அப்புறம் நாங்க எப்படித்தான்டா ஜெயிக்கிறது..சார் உங்க டீமுதான்..”

இல்ல உங்க டீமுதான்

இல்ல உங்க டீமுதான்

இல்ல உங்க டீமுதான்

அடங்கொய்யாலே..இதுவரைக்கும் பாசமா பேசுனது எதிர் டீமுல சேர்த்து கவுக்கவாடா..அடப்பாவிங்களா..கிரிக்கெட் விளையாடத் தெரியாதது தப்புங்களாயா???

7 comments:

இராமசாமி said...

ha ha :)

Samy said...

sirippu thanka mudialle. samy

தனி காட்டு ராஜா said...

//அப்படியே உசிரைக் கையில புடிச்சுக்கிட்டு வீட்டுக்கு ஓடுனேன் பாருங்கண்ணே..வீட்டுல போய் கதவைச் சாத்திக்கிட்டேன்..//

:))

Kalai said...

ayyoo...mudiyala ....ana neengaaa rombaaaaaaaaaaa nallavaru........

Arun said...

yov ethu elam pazhaiya pathivu...

அவிய்ங்க ராசா said...

நன்றி ராமசாமி
நன்றி சாமி,
நன்றி ராஜா
நன்றி காளை
நன்றி அருண்..இது மீள்பதிவுதேன்..

தெய்வசுகந்தி said...

ha ha ha !!!!!!!!!!!!!!!

Post a Comment