Sunday 28 July, 2013

அப்துல் கலாம் சொல்லை காப்பாற்றிய ஒரே தமிழன்


அடித்து சொல்கிறேன். அப்துல் கலாம் பேச்சை முழுவதுமாக கேட்டு கடைபிடித்த ஒரே தமிழன் நானாகத்தான் இருப்பேன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்.

இளைஞர்களே கனவு காணுங்கள்” – இதுதானே அப்துல் கலாமின் பொன்மொழி..

தினமும் ஒரு கனவு கண்டு அப்துல்கலாமை அவ்வளவு சீரியசாக பின்பற்ற யாரால் முடியும். சொல்லுங்கள்.
எல்லாருக்கும், வாரத்துக்கு ஒருமுறை, அல்லது இருமுறைதான் தூங்கும்போது கனவு வரும். ஆனால், எனக்கு தினமும் தூங்கும்போது மட்டுமல்ல, ஏதாவது மதியவேளைகளில், சற்று கண்ணசர்ந்தால் அவ்வளவுதான். .ஆர் ரகுமான் பிண்ணனி இசையில், கவுதம் மேனன் இயக்கத்தில் ஒரு படம் பார்த்தார்போல கனவு..

ஒவ்வொரு கனவும், ஒவ்வொரு அர்த்தத்தை குறிக்கும் என்று கேள்விபட்டிருக்கிறேன்..ஆனால் எனக்கு வரும் கனவுகள்...அய்யய்யோ..
சாம்பிளுக்கு ஒரு கனவு..மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் நானும் என்னுடைய நண்பனும் நின்று கொண்டிருக்கிறோம்.எங்கு செல்வதற்கு தெரியுமா..உலகத்தில் நம்பர் ஒன் தீம்பார்க்கான, “டிஸ்னிலேண்ட்செல்வதற்கு. மதுரைக்கு டிஸ்னிலேண்ட் வந்துவிட்டதா..இல்லை, நம்ம ஊரு பேருந்து அமெரிக்கா வரைக்கும் விடுவாய்ங்களா என்று மண்டை காய்ந்து, ரெண்டு நாளைக்கு தூக்கம் இல்லாமல் தவித்தேன்..

மற்றொரு கனவு..சொர்க்கத்தும், நரகத்துக்கும் பாலம் அமைப்பதற்கு காண்ட்ராக்ட் விட்டிருக்கிறார்கள்..நிறையா நாடுகள் காண்டிராக்ட் அமைப்பதற்கு போட்டி போட, ஜெயிப்பது, நம்ம ஊரு அரசியல்வாதி..அதுவும், கோடி, கோடியாக லஞ்சப்பணம் கொடுத்து. அந்த காண்டிராக்டர் வேலைக்கு, நானும், ஒரு நண்பரும் அலையிறோம்..அலையிறோம்..அப்படி அலையிறோம்..நண்பர் யாரு தெரியுமா..திருமதி செல்வம் சீரியலில் வரும், செல்வம்..அய்யகோ..சிலநாட்கள், திருமதி செல்வம் பார்த்ததற்கு தண்டனையா இது..அதுவும், ஒருமணிநேர தூக்கத்தில் வந்த கனவு இது
அடுத்த கொடுமையான கனவு, அய்யகோ..என்னால் மறக்கமுடியவில்லையே..உலகமே அழிந்து கொண்டிருக்கிறது..எல்லாரும், கிடைத்ததை கையில் எடுத்து கொண்டும், உயிருக்கு பயந்து கொண்டும் ஓடி கொண்டு இருக்கிறார்கள்..நானும் ஓடுகிறேன்..ஓடுகிறேன்..அப்படி ஒரு ஓட்டம்..ஓட ஓட என்னை ஏதோ துரத்துகிறது..இதோ,என்னைப் பிடிக்கபோகிறது..பிடித்துவிட்டது..உதறிவிட்டு ஓட்டம் எடுக்கிறேன்..எடுத்துவிட்டு குத்துயிருமாக குலையுயிருமாக ஒரு பங்களாவிற்குள் செல்ல..அங்கு நான் கண்ட காட்சி....மை..காட்..அதை எப்படி வார்த்தைகளில் விவரிப்பது..அங்கு..அங்கு..பாலிவுட் நடிகை, தீபிகா படுகோனும், நம்ம ஊரு ராமராஜனும், டூயட் பாடி கொண்டிருக்க, அவர்களை இயக்கி கொண்டிருப்பது, நம்ம பேரரசு...அடபாவிகளா..இதற்கு மேல் பார்த்தால் கொடுமை என்று சொல்லிஅய்யோ..அம்மாஎன்று கத்தி எழுந்துவிட்டேன்..வீட்டுக்காரி, “என்னங்க..ஏதாவது கெட்டகனவு கண்டீங்களாஎன்றாள்..”இதுக்கு உலகமே அழிவுலேயே நானும் போய் சேர்ந்திருக்கலாம்என்றேன்..புரியாமல்இதே உங்களுக்கு வேலையா போச்சுஎன்றாள் சலிப்பாக..

சிலநேரம் என்னுடைய மனைவி, “என்னங்க நான் உங்க கனவில வரவே மாட்டேனாஎன்பாள்..”வரமா இருக்குறதுக்குதான் நல்லதுன்னு நினைச்சுக்கஎன்பேன்..யார் என் கனவில் வந்தாலும், ஒரே கொலைவெறியாக இருப்பதால்.
சில கனவுகள் பலிக்கும் என்று கேள்விபட்டிருக்கிறேன்..என்னுடைய ஒரு கனவுகூட பலிக்காமல் இருப்பதுதான் இந்த உலகத்துக்கு நல்லது. அனைவரும், கையில் மெழுகுவர்த்தியோடு, பீச்சில் உண்ணாவிரதம் இருக்குமாறு கேட்டு கொள்கிறேன்..

ஆனால் ஒன்று, அப்துல் கலாம் கேட்டால் மிகவும் சந்தோசப்படுவார்.