Thursday, 10 February, 2011

புரச்சி எலுத்தாளர் சாருநிவேதிதா வாளுக வாளுக

கொடியரசு தினத்தன்னைக்கு கொடியேத்தி முட்டாய் கொடுக்குறது மாதிரி, சாரு நிவேதிதாவை புகழ்ந்து ரெண்டு வார்த்தை பேசினா, அவரு சைட்டில நம்ம ப்ளாக்கு லிங்கை கொடுக்கறாயிங்களாமே..அப்படி கொடுத்தா நம்ம ஹிட்கவுண்டரு கன்னாபின்னான்னு ஏறுதாமே..

இது தெரியாம இம்புட்டு நாளு ஏமாந்துட்டேண்ணே..இந்த பாழ்ப்போன ஹிட்கவுண்டரு பார்க்கவே கடுப்பா இருக்குண்ணே..எப்ப பார்த்தாலும் 100, 200 ன்னுதான் ஏறுது. அட் எ டையத்துல 1000, 2000 ன்னு ஏறுனாத்தானே பார்க்க அம்சமா இருக்கும். நானும் ஹிட்கவுண்டரை எச்சி தொட்டு அழிச்சுடலாமுன்னு எவ்வளவோ டிரை பண்ணுனோமுன்னே..

ஆனா கழுத நைட்டு தூங்கிட்டு காலையில பார்த்தா திரும்பவும் பழசுலயே வந்து நிக்குது. நண்பன் மாரப்பகவுண்டரை புரிஞ்சுகிட்ட அளவுக்கு, இந்த ஹிட்கவுண்டை புரிஞ்சுக்கமுடியலையண்ணு வெறி ஏறுதுண்ணே.

அப்பதான், அந்த சேதிய நண்பன் கோவாலு சொன்னான்.

“ராசா..நீ ஏன் யாருக்காவது கண்டனம் தெரிவிக்ககூடாது..”

“யாருக்குடா..”

“யாருக்காவது தெரிவிக்கணும்டா..உதாரணமாக சாரு எழுதுகிட்டு இருக்குறப்ப ஏதாவது கொசு கடிச்சிருக்கும், அதுக்கு கண்டனம் தெரிவி..அல்லாட்டி காலையில பால்காரன், பேப்பர்காரன் லேட்டா வந்துருப்பான், அவனுக்கு கண்டனம் தெரிவி..அப்படியும் இல்லாட்டி அவரு ரோட்டுல வர்றப்ப சிக்னலு லேட்டா போட்டுருப்பாயிங்க. அதை எதிர்த்து, கவர்மெண்டுக்கு ஒரு கண்டனம் தெரிவி..இப்படி எதையாவது தெரிவிச்சாதான், உன் பிளாக் எல்லாரு கண்ணுல படும்”

“இங்கேர்ரா..பிச்சு உதறுரியேடா..ஆனா, இதை விட போர்சா வேணும்டா..” அப்படின்னு கோவாலை அர்த்தத்தோட பார்க்குறேன்..கோவாலு கையெடுத்து கும்புட்டு கதர்றான்

“ராசா..தயவு செஞ்சு எனக்கு கண்டனம் தெரிவிச்சுடாதேடா..”

இப்ப யாருக்காவது கண்டனம் தெரிவிக்கணும்னு மோட்டுவளைய பார்த்துகிட்டு உக்கார்றேன், ஒரு பயலும் அம்புட மாட்டிங்குறாயிங்க..எல்லாரும் கதறியடிச்சுகிட்டு ஓடுறாயிங்க..

பார்த்தா வீட்டுக்காரம்ம டெர்ராயிட்டா..

“இப்ப யாருக்கு கண்டனம் தெரிவிக்குறதுக்கு இப்படி மோட்டுவளைய பார்த்துட்டு உக்கார்ந்துட்டீங்க..”

“அடியே..சாரு..”

“கரும்புச்சாறா..புளிச்சாறா..ஏங்க..ஏங்க,,புளிச்சாறு பண்ணலாங்க..சோத்துக்கு நல்லா இருக்கும்..”

“அடியே..நான் எந்த நிலைமையில உக்கார்ந்திருக்கேன்..இப்ப நான் யாருக்காவது கண்டனம் தெரிவிச்சாகணுமே..அய்யோ..” ன்னு தலைய பிச்சுக்குறேன், விட்டுக்காரம்மா சொல்லுறா..

“இப்படியே உக்கார்ந்தா..உங்களுக்குதான் நான் கண்டனம் தெரிவிப்பேன்..”

அப்படியே என் மண்டையில பல்பு எரிஞ்சதுண்ணே..ஆஹா,,கண்டுபிடிச்சுட்டேன்.. போடுறேன்யா கண்டனம்..

“இதுவரை சாரு நாவல் ஒன்னு கூட படிக்காமல் இலக்கியத்திற்கு துரோகம் செய்த எனக்கு நானே கண்டனம் தெரிவிக்கிறேன்..”

ஏண்ணே..அவரு ஏதோ பேண்டசி டவுசரோ அல்லது பனியனோ எழுதியிருக்காராமே..சூப்பரா எழுதியிருக்காருண்ணே..அந்த நாவலு லிங்கு இருந்தா கொஞ்சம் குடுங்கண்ணே..புரச்சி எளுத்தாளர் சாரு வாளுக, வாளுக..யுத்தம் செய் படத்துல, ஆர்மோனியத்தை எடுத்துகிட்டு ஒரு ஆட்டம் போட்டுருப்பார் பாருங்க..அட..அட..அந்த நாட்டிய சரசுவதிய நேரா பார்ர்குறாப்புல இருந்துச்சுண்ணே..அவருதாண்ணே உண்மையாம எலுத்தாளரு..

ஏண்ணே..என் பிளாக்கும் அவரு சைட்டுல வருமாண்ணே..ஹிட்கவுண்டரு ஏறுமாண்ணே..

23 comments:

ஆனந்தி.. said...

செம லொள்ளு...:)) ஸோ இன்னைக்கே 10,548 ஹிட்ஸ் அடிக்க போறீங்க....வாழ்த்துக்கள் :)))

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//நண்பன் மாரப்பகவுண்டரை புரிஞ்சுகிட்ட அளவுக்கு, இந்த ஹிட்கவுண்டை புரிஞ்சுக்கமுடியலையண்ணு வெறி ஏறுதுண்ணே.
//

இது தான் டாப்பு..

எல்லாரும் ஏன் இந்தப் பிழி பிழியறீங்க?

http://tinyurl.com/5suvlg5

நேரங்கிடைச்சா இதப் பாருங்க..

karthikkumar said...

ராசா அண்ணனோட நக்கலுக்கு அளவே இல்ல :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

hehe

Arun Prasath said...

அடப்பாவமே

கக்கு - மாணிக்கம் said...

சிரிச்சி மாளலே ! ரொம்ப நக்கல்தான் உங்களுக்கு !!
ஹிட் கவுண்டரை எச்சில் தொட்டு அழிக்கிறப்ப தாங்கல சாமீ! நடத்துங்க !!

பட்டாபட்டி.... said...

ஏண்ணே..என் பிளாக்கும் அவரு சைட்டுல வருமாண்ணே..ஹிட்கவுண்டரு ஏறுமாண்ணே..
//
கண்டிப்பா ஏறுண்ணே.. எதுக்கும் பின்புலமா..சே..பின்புறமா நடந்து பழகிக்குங்க..
:-)

தனி காட்டு ராஜா said...

:))

tamilan said...

CLICK AND READ.

===>ஆபாச பிள்ளையார் ? இந்துமுன்னணி புகார். தி.க. சவால். அதிர்ச்சி. அவசியம் படிக்கவும். பெண்குறி தொடும் வல்லபை கணபதி சிலை.

.

அமுதா கிருஷ்ணா said...

ப்ளாக்கே காணபோயிட போகுது.

taaru said...

புரச்சி ன்னா என்னண்ணே? - எங்கூர்ல முட்டைய ஒடச்சு ஒரு தம்ளர்ல போட்டு,வெங்காயம்,பச்ச மொளகா,உப்பு எல்லாம் போட்டு நல்லா கலக்கி [இந்த அயிட்டத்துக்கு இப்டி ஒரு பேரும் இருக்கு?] பாதி வேக விட்டு எடுக்குறதா?
இதெல்லாம் பேசிட்டு, இங்க வரலாம்ன்னு நினச்சு புடாதீக.... அங்கிட்டே, துபாய், ரஷ்யானு பொழப்ப பாருண்ணே...!!!!

Anonymous said...

அட யாருப்பா அந்த சாரு. கொஞம் website குடுங்க பாப்போம்

டக்கால்டி said...

100, 200 ன்னுதான் ஏறுது.//
எனக்கெல்லாம் 5,10 தான் தல

டக்கால்டி said...

அட..அட..அந்த நாட்டிய சரசுவதிய நேரா பார்ர்குறாப்புல இருந்துச்சுண்ணே..அவருதாண்ணே உண்மையாம எலுத்தாளரு//

ஒரு சோப்பு டப்பா பார்சல்

டக்கால்டி said...

இதுவரை சாரு நாவல் ஒன்னு கூட படிக்காமல் இலக்கியத்திற்கு துரோகம் செய்த எனக்கு நானே கண்டனம் தெரிவிக்கிறேன்..//

கண்டனம்னா இன்னா அண்ணே...சும்மா மைக்ல அறிக்கை விட்டுட்டு திரைக்கு பின்னால் பேரம் பேசுவது தான...

டக்கால்டி said...

நண்பன் மாரப்பகவுண்டரை புரிஞ்சுகிட்ட அளவுக்கு, இந்த ஹிட்கவுண்டை புரிஞ்சுக்கமுடியலையண்ணு வெறி ஏறுதுண்ணே.//

என் நண்பன் கூட என் கிட்ட ப்ளாக்ல பெரிய ஆளா முதல்ல ஆனது யாரு என்பதை முதல் யாரு முதல் யாரு என்று சொல்ல, நான் கூட யாரோ முதலியார் தான் முதல்ல இருக்காரு என நினைச்சுட்டேன்

Anonymous said...

I came to your site because of the name Charu.

பிரியமுடன் பிரபு said...

லொள்ளு......

விஜய் said...

ச்சே! தமிழ்நாட்டுல மட்டும்தான்யா எழுத்தாளர்களுக்கு மரியாதையே இல்ல.

அவிய்ங்க ராசா said...

நன்றி ஆனந்தி
நன்றி கார்த்திக்
நன்றி அருண்
நன்றி ரமேஷ்
நன்றி மாணிக்கம்
நன்றி பட்டா..ஆஹா..அது வேற இருக்கா..))
நன்றி ராஜா
நன்றி தமிழன்
நன்றி தாரு..அதுக்கு பேரு ஆம்லெட்டு இல்லையாண்ணே..))
நன்றி அமுதா
ஆஹா.,.டகால்டி..அப்படியே அருண் குறும்பு வருதே..))
நன்றி அனானி,
நன்றி பிரபு

ம.தி.சுதா said...

அடடா நல்லாயிருக்கே..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

Anonymous said...

valaiulaga vadivelu endra pattam thralam ungalluku. sirithu siruthu vayiru valikkiradhu.niraya ezhudhunga.vazhthukkal.

surya

Anonymous said...

aaahaa

Post a Comment