Friday 29 May, 2009

பிரபல பதிவர்களோடு ஒரு படகு பயணம்

அண்ணே..ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே சொல்லிடுறேன்..இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எழுதப்பட்ட பதிவு..யாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல…

பிரபல பதிவர்கள் எல்லாரும் ஒரு படகுப் பயணம் போறாங்கண்ணே. எல்லாரும் துடுப்பு போடுற படகுண்ணே..அது யார் யாருண்ணா…லக்கி லுக், கேபிள் சங்கர், சக்கரை சுரேஷ், உண்மைத்தமிழன், டோண்டு சார், இட்லிவடையார், செந்தழல் ரவி. நான் பிரபல பதிவர் இல்லாததால், பயணத்தின் கோ-ஆர்டினேட்டர்…

அவீங்க ராசா : எல்லாரும் நல்லா கவனிங்கப்பா..எல்லா பதிவர்களும் ஒன்னா கூடியிருக்கீங்க..இங்கேயிருந்து அக்கரைக்கு போகணும்னா 8 மைல் துடுப்பு போடணும்..எல்லாரும் ஒற்றுமையா துடுப்பு போட்டாத்தான் அக்கரைக்கு போக முடியும்..சண்டை போடக்கூடாது…சரியா???

லக்கிலுக் : யோவ்..நாங்க எல்லாம் பிரபல பதிவர்கள்..நீ யாருய்யா..

அவீங்க ராசா : அண்ணண்..நான் மதுரைக்காரண்ணே..இப்பதான் புதுசா எழுத ஆரம்பிச்சிருக்கேன்..உங்களை தாக்கி கூட ரெண்டு பதிவு போட்டுருக்கேண்ணே..

லக்கிலுக் : ஆ..அப்பிடியா..நான் ரொம்ப பிசிப்பா..எல்லாரும் என்னையே தாக்கி போடுறதுனாலே, எல்லாத்தையும் படிக்க முடியலே..என்ன தாக்கி ஏதாவது பதிவு போட்டா ஒரு மெயில் அனுப்புங்கப்பா..தர்மசங்கடமா இருக்குல்ல..சேய்..ஒரே குஷ்டமப்பா..

செந்தழல் ரவி : அய்யோ..உங்களை தாக்கி பதிவு போட்டுட்டானா..யோவ் என்ன தைரியம்யா..இன்டெர்நெட் அழியப்போகுது..எல்லாரும் உள்ள போகப் போறீங்க..நாங்க சுவத்துல ஏறிட்டோம்..யாரு எங்களோட வர்றா…

லக்கிலுக் : யே..விடுப்பா..அனானில பார்த்துக்குவோம்..நீ மட்டும் எப்படிப்பா கோ-ஆர்டினேட் பண்ணுவ....கூட யாராவது இருக்காங்களா..

அவிங்க ராசா : ஆமாண்ணே..என் பிரண்டு சரத்பாபு இருக்காண்ணே..

சக்கரை சுரேஷ் : சரத்பாபுவா..மச்சான்ஸ் எல்லாரும் ஓட்டு போடுங்கப்பா..

லக்கிலுக் : யோவ்..சரத்பாபு என்னத்தையா பண்ண போறாரு..உடன்பிறப்புகளே..யாரும் ஓட்டு போடாதிங்க..எங்க கழகம் தோத்துரும்ல…

செந்தழல் ரவி : சக்கரை சுரேஷ்..எப்படி நீ பேசலாம்..ரத்தம் கொதிக்குண்ணே..லக்கிலுக் ஏன் சொல்லுரானுன்னா, சரத்பாபு எங்க கழக ஓட்டைப் பிரிக்குறாருய்யா..அய்யோ, இன்டெர்நெட் அழியப் போகுது..எல்லாரும் உள்ள..

அவிங்க ராசா : ஆகா ஆரம்பிச்சுட்டாருய்யா..அய்யோ அண்ணே அவரு அந்த சரத்பாபு இல்லண்ணே..இவரு வேற..சரி அதை விடுங்க..எல்லாரும் சேர்ந்த மாதிரி துடுப்பு போடுங்க..துடுப்பு போடுறப்ப, “ஏலேலோ ஐலசா” ன்னு சொல்லணும்..எங்க சொல்லுங்க..

எல்லோரும் : ஏலேலோ ஐலசா…

உண்மைத்தமிழன் : எம்பெருமான் முருகப் பெருமானே…ஐலசா..

அவீங்க ராசா : அண்ணாச்சி அப்பிடியெல்லாம் சொல்லக்கூடாது..ஆமா, செந்தழல் ரவி நீங்க ஏன் ஐலசா சொல்லாம இருக்கீங்க..சொல்லுங்க..

செந்தழல் ரவி : லக்கிலுக் சொன்னாத்தான் நானும் சொல்லுவேன்..

அவீங்க ராசா : ஓ..மறந்துட்டேன்..லக்கிலுக் அண்ணே..நீங்களும் சொல்லுங்கண்ணே..அப்பத்தான் ரவி சொல்லுவாரு..

லக்கிலுக் : நான் சொல்ல மாட்டேன்..சாருநிவேதிதா வந்தாதான் நான் சொல்லுவேன்..

அவீங்க ராசா : அய்யோ..அவர்ல்லாம் இங்க வர மாட்டாருங்க..கூப்பிடனும்னா இன்விடேசன்னெல்லாம் அடிக்கனும்..ஒரு தடவை இப்படித்தான், ஒரு பதிவர் சந்திப்புக்கு பிரபல பதிவர் ஒருத்தர் சாருவை கூப்பிட போயிருக்காரு..சூப்பர் ஸ்டாரை இப்பிடித்தான் கூப்பிடுவீங்களான்னு செம டோஸ்..

செந்தழல் ரவி : (முனுமுனுப்புடன்)..ஆகா..விவரம் தெரியாத பயலா இருக்கானே..

லக்கிலுக் : யோவ்..அவரை ஏன்யா எல்லாரும் திட்டுறீங்க..அவர் ஒரு பிழைக்கத் தெரியாத ஏமாளி எழுத்தாளர்யா..நல்ல மனுசன்யா..இப்பக்கூட வன்முறையின் தோல்வின்னு ஒரு பதிவு போட்டு இருக்காரு..அந்த கருத்துல ஒன்னுகூட எனக்கு உடன்பாடு இல்ல..ஆனாலும் பிடிக்கிது..அந்த கர்வம்..அவர் தான்யா எழுத்தாளர்..சாரு கொடி பறக்குதையா..

கேபிள் சங்கர் : கண்ணுக்கு எட்டுன வரைக்கும் ஒரு கொடியும் காணோமே..அது எப்படிங்க..யாரோட கருத்துலேயும் உங்களுக்கு உடன்பாடு இல்ல..ஆனா உங்களுக்கு பிடிக்குது..இளையராஜாவை திட்டுறீங்க..ஆனாலும் பிடிக்கிதுன்னு சொல்லுறீங்க..ஒன்னுமே புரியலேயே..நீங்க என் தோரணம் விமர்சனம் படிச்சீங்களா..அதுல ஷ்ரெயா கிளிவேஜ்..

டோண்டு சார் : சிவ, சிவா..என்ன இப்பிடியெல்லாம் பேசுறீங்க..

அவீங்க ராசா: ஆகா..எல்லாரும் கொஞ்சம் பேசாம துடுப்பு போடுறீங்களா..படகு நகரவே மாட்டிங்குது…டோண்டு சார் ஏதோ சொல்ல வரீங்க போல தெரியுது..

டோண்டு சார் : எங்கே பிராமணன்…

லக்கிலுக் : ம்…”ஆத்துக்குள்ளே” இருக்காரு..

சக்கரை சுரேஷ் : மச்சான்..நான் வேணா ஆத்துக்குள்ள குதிச்சு எடுத்து தரவா..நட்புன்னா உயிரையும் கொடுப்பான் இந்த சுரேஷ்..

செந்தழல் ரவி : கடவுளே..யாருய்யா இந்த சுரேஷ்ஷு..ஒரு எத்திக்ஸ் இல்ல..உனக்கு எப்படியா இவ்வளவு பாலோயரு…ஒன்னுமே புரியலையா..ஐயோ..இன்டெர்நெட் அழியப்போகுது..எல்லாரும் உள்ள போகப்போறீங்க..

இட்லிவடையார் : ரொம்ப சந்தோசம்..எல்லொரும் உள்ள இட்லி வடை தேர்தல் குழு அமைச்சுருவோம்..யாரு, யாரு எந்த ஏரியா..வழக்கம் போல, துக்ளக் பத்திரிக்கையில இருந்து கட் அண்டு பேஸ்ட் நான் பார்த்துக்குறேன்..

உண்மைத்தமிழன் : சார்..இது வேற ஏரியா..இப்பிடித்தான் திரையுலகப் பேரணில அண்ணன் பாரதிராஜா..(நீண்ட உரையை ஆரம்பிக்க..)

எல்லோரும் : ஆகா, இதுக்கு இந்த கடலே மேலுடா சாமி…

கடலில் எல்லோரும் குதிக்க..படகு மூழ்குகிறது….

(அண்ணே..யாரு மனசு நோகாம எழுதி இருக்கேன்னு நினைக்கிறேன்..யாரோட மனச நோகடிச்சிருந்தா மன்னிச்சுங்கண்ணே..இந்த பதிவை படிக்கும்போது எத்தனை தடவை சிரிச்சீங்களோ அத்தனை ஓட்டு போட்டுங்க..))))

Tuesday 26 May, 2009

இப்படி பேசிட்டிங்களே இளையராஜா…

“எனக்கு யாரும் தேவையில்லை..எனக்கு யாரும் உறவினர் இல்லை..சப்த ஸ்வரங்கள் போதும்”

அதிர்ந்து போயி யாரு பேசுராங்கன்னு பார்த்தா நீங்க தான் ராசா வால்மீகி வெளியீட்டு விழாவுல..நீங்களா ராசா இப்படி பேசுறது…

அதிர்ந்தே போயிட்டேன் ராசா..கொஞ்சம் கஷ்டமாத்தான் போச்சு ராசா…எங்களுக்கு சோறு கிடைக்கலன்னா உங்க பாட்டை கேட்டு தான்னே ராசா வளர்ந்தோம்..நீங்க இசையமச்சிங்கற ஒரே காரணத்துக்காக எத்தனை சொத்த படத்தை முதல் வரிசையில உக்கார்ந்து பார்த்து இருப்போம்…ஒரு வயசுக்கு மேல அம்மா தாலாட்டு பாட்டு மாதிரு உங்க பாட்டைதான ராசா கேட்டு தூங்கப் போனோம்..அதுக்காக நீங்க எது பேசினாலும் கரெக்டுன்னு ஒத்துக்க மாட்டோம் ராசா..

"உனக்கு என்னடா ஞானம் இருக்கு, என்ன பத்தி பேச” ன்னு கேக்கலாம்..உங்க இசையப் பத்தி விமர்சனம் செய்ய இசை ஞானம் இல்லாமல் இருக்கலாம்..ஆனா உங்க செயலை பத்தி யாரு வேணாலும் விமர்சனம் பண்ணலாம் ராசா..

மிஷ்கின் என்ன தப்பு வேணுன்னாலும் செஞ்சு இருக்கலாம் ராசா..அதுக்காக இப்படியா ராசா மேடை போட்டு திட்டுறது..தனியா கூப்பிட்டு திட்டிருக்கலாமே ராசா..அதே மேடையில உங்களை பத்தி யாராவது அப்படி பேசுன்னா நீங்க சும்மா இருப்பிங்களா ராசா…

‘மிஷ்கின்” படம் முடிஞ்ச பிறகு ஒரு போன் கூட பண்ணலன்னு குறை சொல்லுரிங்களே ராசா..அவர் பண்ணலைன்னா நீங்க ஏன் ராசா ஒரு போன் போட்டு பேசக்கூடாது..ஏன் ராசா?? “இவன் என்ன ஒரு புது டைரக்டர்”..நான் எவ்வளவு பெரிய இசைஞானி..” இதுக்கு பேருதான் ஆணவம்தானே ராசா..

“எல்லா பேரும் என்ன சும்மா சும்மா புகழ்றாங்க..எனக்கு யார் புகழ்ந்தாலும் புடிக்காது” ன்னு சொல்லுறீங்களே ராசா, ‘இசைஞானி” ன்னு படத்துல ஏன் ராசா போட அனுமதிக்கிறீங்க..பட்டமும் ஒருவித புகழ்ச்சி தான ராசா..ராஜ்கிரண், ராமராஜன் படத்துல எல்லாம் உங்களை புகழ்ந்து ஒரு பாட்டு வச்சாங்களே..அப்ப ஏன் ராசா அத நீங்க தடுக்கலை..

“எனக்கு யார் தயவும் தேவையில்ல” ன்னு சொல்லிப்புட்டு அப்புறம் விகடன் படம்ங்கறதனால தான் வந்தேன்னு சொல்லுறீங்களே ராசா..அப்ப விகடன் தயவு உங்களுக்கு தேவைப்படுதா ராசா..

எப்போதும் வெள்ளையா இருக்குற உங்க ஆடை மாதிரியே உங்க மனசும் வெள்ளையா இருக்கனும்னு ஆசையா இருக்கு ராசா..இசை குடியிருக்குற மனசு ஒரு கோயில்ன்னு நீங்களே சொல்லி இருக்கிங்க ராசா, அதுல இந்த மாதிரி கொஞ்ச நஞ்ச இருக்குற குப்பைய தூக்கி எறிஞ்சிட்டீங்கண்ணா, உங்களை கையெடுத்து கும்பிடுவோம் ராசா..செய்வீங்களா ராசா…

ஏக்கத்துடன் பண்ணைபுரத்து ராசாவை வேண்டும் சோழவந்தான் ராசா…


Wednesday 20 May, 2009

தலைப்பு என்ன வைக்கிறதுன்னு தெரியலண்ணே..

ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, எல்லாத்துக்கிட்டேயும் மன்னிப்பு கேட்டுக்குறேண்ணே..என்னோட கடந்த ரெண்டு பதிவுகளோட பின்னூட்டத்துக்கு பதில் சொல்ல முடியலை..3 நாளா மனசு ரொம்ப கஷ்டமா இருக்குண்ணே…காரணம் உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்ணே…..சோறு வச்சா உள்ள இறங்க மாட்டிங்குது…போக்குவரத்து சிக்னலை பார்க்காம அப்பிடியே போயிடுறேன்…ஒரே ஒரு காரணம்தான்னே..பிரபாகரன் சுட்டுக்கொலை..

ரெண்டு நாளைக்கு எல்லாருக்கும் போலதான் எனக்கும் விடிஞ்சிச்சு…காலை சாப்பாடு சாப்பிட்டுகிட்டு நியுஸ் படிச்சப்ப அப்பிடியே கை மரத்து போயிடுச்சுண்ணே..அப்பிடியே சிலை ஆகிட்டேண்ணே…

“என்னங்க..என்ன ஆச்சு…ஏன் திடிருன்னு இப்படி ஆகிட்டீங்க..”

“இல்ல..பிரபாகரனை சுட்டு…”அதுக்கு மேல என்னால பேச முடியலண்ணே…

“ஐயோ..பாவங்க…அதுக்கு ஏங்க நீங்க சாப்பிட மாட்டுறீங்க..நீங்க சாப்பிடுங்க..”

“இல்லடி எனக்கு ஒரு மாதிரியா இருக்கு…”

“என்னங்க..நம்ம என்ன பண்ண முடியும் அதுக்கு..நீங்க சாப்பிடுங்க..”

“இல்லடி..முடியல..” கை கழுவிட்டேண்ணே..

“ஏங்க..வர்ரப்ப ஒரு கேலன் பால் வாங்கிட்டு வாங்க…அப்பிடியே என் பிரண்டு ரேணுகாவுக்கு பிறந்த நாள்..ஒரு கேக் வாங்கிட்டு வாங்க..”

 

எனக்கு எதுவும் கேக்கலண்ணே…உலகத்துலே எல்லாரும் வாழ்றது எதுக்குண்ணே..உயிர் வாழத்தானே..அந்த உயிரை துச்சமா மதிச்சு, உலக ராணுவத்தையே எதிர்த்து ஒருத்தன் போட்டியிட்டான்னா, அவன் தான்னே ஆம்பிளை….நம்ம எல்லாம் மனுசங்களே இல்லண்ணே..காலையில வயித்துக்கு சோத்த சாப்பிட்டு , வேலையும், சொந்தத்தையும் காப்பாத்திக்கிற ஓடுற ரெண்டு கால் பிராணிண்ணே..யோசிச்சு பாருங்க..பிரபாகரனுக்கு என்னன்னே குறைச்சல்..ராஜா மாதிரி இருந்துருக்கலாம்ணே..தெருவுல இறங்கி போராடியிருக்காருண்ணே..காடு, மழை, மலை, காத்து, தீ..எதுவும் பார்க்கலைண்ணே..மக்களுக்காக போராடி இருக்காருண்ணே..அவர் முன்னாடி நம்ம எல்லாம் தூசிண்ணே..

இலங்கை ராணுவம் பொய் சொல்லுறாயிங்கன்னு எல்லாரும் சொல்லுறாங்க..எனக்கு எந்த பொய்யும் பிடிக்காதுன்ணே..வாழ்க்கையிலே முதல் தடவையா ஒரு பொய், பொய்யாவே இருக்கனும்னு ஆசையா இருக்குண்ணே…

அப்படியே ஆபிஸ் போயி யாருகிட்டயாவது சொல்லனும்னு போல இருந்துச்சுண்ணே…

“சுரேஸ்..நியுஸ் பார்த்தியா..பிரபாகரன சுட்டு கொன்னுட்டாங்களாம்டா..”

“அப்பிடியா ராசா..பாவம்டா…சரி அதை விடுடா..நேத்து என்ன நடந்துச்சுன்னா..தெருவுல ஒரு செம பிகர்டா மச்சான்..”

“டே..நான் என்ன பேசுறேன்..நீ என்ன பேசுற..”

“டே..பிரபாகரன் செத்துட்டாரு..அதுக்கு நம்ம என்ன செய்ய முடியும்..”

அதுக்கு மேல என்ன பேசுறதுன்னே..என்னால அன்னிக்கு வேலை கூட சரியா பார்க்க முடியலண்ணே..ஒரு மனுசன் மரணம் பாதிக்காத அளவுக்காண்ணே, தமிழன் மனம் மறத்துப் போச்சு.. அப்படியே வீட்டுக்கு வந்துட்டேண்ணே..

“என்னங்க..சீக்கிரம் வந்துட்டிங்க..கேக் வாங்கி வந்தீங்களா..உங்களுக்கு தெரியுமா, பக்கத்து வீட்டு ஆண்டி செல்லமா வளர்க்குற குட்டி நாய் செத்து போயிடுச்சாங்க..கேவி, கேவி அழுகுறாங்க..எனக்கே மனசு கஷ்டமா போச்சுங்க..என்னால சாப்பிடக்கூட முடியலங்க…”

தமிழ் நாட்டுல காங்கிரஸ் ஜெயிச்சது எனக்கு ஆச்சர்யமா இல்லண்ணே…

Sunday 17 May, 2009

மவனே சரத்பாபு, இனிமே ஓட்டு கேப்ப..

ஏய்…ஏய்…வச்சோமா ஆப்பு…என்னமா ஆட்டம் போட்டிங்க..சரத்பாபுவாம், படிச்சவனாம்…என்னங்கடா கலர், கலரா பிலிம் காட்டுறீங்க..மக்களுக்கு நல்லது பண்ணுவாராம்..இப்ப டவுசர் கிழிஞ்சு போச்சா..இப்ப வீட்டுல போயி தூங்குங்கயா…சரத்பாபு, சரத்பாபுன்னு கூவுனீங்களே..என்னயா தகுதி இருக்கு அவருக்கு..கீழ உள்ள ஒரு தகுதி இருக்கா, நாங்க  அவருக்கு வோட் போடுறதுக்கு…

 1)      ஐ.ஐ.எம்ல படிச்சிருக்காராம், முதல் தகுதியிலேயே அடிபட்டு போச்சே. பத்தாவதுக்கு மேல என்னய்யா தகுதி வேண்டி கிடக்கு அரசியலுக்கு..

2)      உங்க ஆளு கட்டப் பஞ்சாயத்து பண்ணியிருக்காராயா…அட்லீஸ்ட் யாரயாவது உயிரோட எரிச்சுருக்காராயா?? எந்த மூஞ்சிய வச்சிட்டு ஓட்டு கேட்டு வரீங்க…

3)      ஒரு ஓட்டு போடுறதுக்கு எவ்வளவு துட்டு குடுத்தீங்க..அட்லீஸ்ட் ஒரு பாட்டில் சாராயம்..சும்மா கைய ஆட்டிக்கிட்டு வந்தா ஓட்டு போடுவமா???..

4)      ஏதாவது அரசியல் கட்சித் தலைவரோட மகனா..? சொந்தக்காரனா..? என்ன தகுதி இருக்கு அவருக்கு….

5)       வருண்காந்தி மாதிரி ஏதாவது குமால்டியா பேசிருக்காராயா?? மேடையில ஏதாவது கெட்ட வார்த்தை பேசிருக்காராயா??

6)      ஏதாவது கொலை, கொள்ளை, கற்பழிப்பு வழக்கு இருக்காயா?? எதை நம்பியா நாங்க ஓட்டு போட முடியும்??

7)      காவிரி தண்ணி, ஈழம் ன்னு ஏதாவது மேடை ஏறி பேசிருக்காராயா??

8)      எந்த ஜாதிக்காரர்யா?? எங்க ஜாதி ரத்தமா…???

9)      ஏதாவது சினிமாக்காரங்களை பிரச்சாரத்துக்கு கூட்டி வந்தாராயா??? கண்ணுக்கு குளிர்ச்சி இருந்தா மட்டும்தான் ஓட்டு…

இப்படி ஒரு தகுதி இல்லாதவர நாங்க ஜெயிக்க வைக்க விரும்பலை..அதுதான் வச்சோம் ஆப்பு..இனிமே எந்த எலக்சனுக்காவது, “ஓட்டு போடுங்க” ன்னு யாரவது சப்போர்ட் பண்ணி வந்தீங்க…எங்க வலையுலக படைத் தளபதி “லக்கிலுக்” அண்ணணை வச்சே கிண்டல் பண்ணி ஓட வச்சிருவோம் ஜாக்கிரத….

Thursday 14 May, 2009

காங்கிரஸ் ஜெயிச்சுரும் போல இருக்குண்ணே…

என்னண்ணே..எலக்சன் எப்படிப் போச்சு..மூஞ்சில கரியை பூசினாயிங்களா..சாரி, கையில மைய வச்சாயிங்களா…ரொம்ப வருத்தமா இருக்குண்ணே…ஒவ்வொரு எலக்சனப்பயும் எங்க ஊரு களை கட்டும்…நான் இல்லாம போயிட்டேன்..இங்க அமெரிக்காவிலயும் தாண்ணே 2 மாசத்துக்கு முன்னாடி எலக்சன் நடந்துச்சு..எலக்சனான்ணே அது..சுடுகாடுண்ணே..ஒரு மைக் செட் இல்ல, ஒரு போஸ்டர் இல்ல, கட் அவுட் இல்ல..எல்லாரும் ஆபிஸ் வந்துட்டாயிங்க..என்னடா ஓட்டு போடலயான்னு கேட்டா, இன்டெர்நெட்ல போட்டுட்டாயிங்களாம்..ரசிக்கத் தெரியாத ஜென்மங்கண்ணே…

“எதிர்க்கட்சியினரை பார்த்து ஒன்று கேட்டுக்கொள்கிறேன்..”

“ஆளுங்கட்சியின் அராஜகத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பிர்..”

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தனி ஈழம்..”

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால், காவிரி தண்ணி..”

“டே..சோமாறி..உன்னப்பத்தி எனக்கு தெரியாதா..உன் சின்ன வீடு…தூ…”

“ஒண்டிக்கு ஒண்டி வரயா மாமூ…”

"என் தலைவனப் பார்த்தா கேக்குற மொள்ளமாரி..." 

இதெல்லாம் இல்லாம என்ன அண்ணே எலக்சன்…அரசியல் நான் ஒண்ணாப்பு படிக்கிறப்ப இருந்தே என் ரத்தத்துல ஊறி கெடக்குண்ணே..எங்க ஸ்கூலுல எல்லாரும் எம்.ஜி.ஆர் கட்சி..நான் மட்டும் டி.எம்.கே..அடி அடின்னு அடிப்பாயிங்கண்ணே..விளையாட்டுக் கூட சேக்க மாட்டாயிங்கண்ணே..நான் எதிர்க்கட்சியாம்..வேற வழியில்லாம நானும் எம்.ஜி.ஆர் கட்சியல சேர்ந்துட்டேன்..ஒரு கன்டிசன் போட்டு சேர்த்துக்கிட்டாயிங்க..”தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் வாழ்க” அப்படின்னு ஆயிரம் தடவை எழுதனுமாம்..நானும் எழுதினேன்ணே..வாங்கி படிச்சுட்டு செம அடி..”தமிழக “முதலை”மைச்சர் எம்.ஜி.ஆர்..” ன்னு எழுதி வச்சிருந்தேண்ணே..அப்பய குசும்ப பாருங்கண்ணே..ஓட்டுப் போடுற வயசு வந்தவுடனே நம்மளுக்கு ஆயுத எழுத்து சூரியா ன்னு நினைப்பு..ஒரு சேக்காளிய ஏத்தி விட்டு கவுன்சிலர் எலக்சனுல நிக்க விட்டோம்..பையன் நம்ம சரத்பாபு மாதிரியே நல்ல பையன்னே..அதனாலயே, மொத்தம் 10 ஓட்டு தான் வாங்கினான்..மொத்தம் 11 பேரு எங்க டீமுல..

இதனாலேயே எலக்சன்னாலே வெறுத்து போச்சுண்ணே..ஒவ்வொரு எலக்சன்லேயும் நல்ல சுயேச்சைக்கு தாண்ணே ஓட்டுப் போடுவேன்..இந்த முறையாவது காங்கிரஸ் வரக்கூடாதுன்னு ஓட்டு போடனும்னு ஆசைண்ணே..முடியலண்ணே..எங்க ஊரு அத்தைக்கு இன்னைக்கு போன் பண்ணியிருந்தேன்..

“என்ன அத்தை..நல்லா இருக்கிங்களா, எலக்சன் எப்படிப் போகுது..”

“அது போகுதுப்பா தம்பி..ராமன் ஆண்டா என்ன ராவணன் ஆண்டா என்ன”

“ஐயோ அத்தை..ராவணணே ஆளட்டும்..என்ன அங்க ஒவ்வொரு ஓட்டுக்கு 500 ரூபா தராயிங்களாமே..கவலையா இருக்கு அத்தை..”

“ஆமா தம்பி..எனக்கும் கவலையாதான் இருக்கு..நம்ம குடும்பத்துக்கு வர வேண்டிய பணத்தை நம்ம வார்டு கவுன்சிலர் அமுக்கிட்டாம்பா..கேக்கவும் சங்கடமா இருக்குப்பா..”

டீச்சர் வேலை பார்க்குராங்கண்ணே..

“சரி அத்தை..யாருக்கு ஓட்டு போட்டிங்க..”

“காங்கிரஸிக்கு தான்..”

“ஐயோ அத்தை..காங்கிரஸ் வந்தா இலங்கை தமிழர்களுக்கு..”

“சும்மா இருப்பா தம்பி..கலைஞர் தான் வாத்தியாருங்களுக்கு நல்லா செய்வாரு..அந்தம்மா வந்தா ஸ்டிரைக் பண்ணக் கூட விடாது..”

இதுக்கு மேல என்னத்தை பேசுறது..தென்சென்னையில எனக்கு தெரிஞ்ச ஒரு அண்ணாச்சி ஒருத்தர் இருக்காருண்ணே..எலக்சனுக்கு முன்னாடி போன் பண்ணி..

“அண்ணாச்சி..சரத்பாபு உங்க தொகுதில தான் நிக்கிறாரு..படிச்சவரு அண்ணாச்சி..ஓட்டு போடுங்க..”

“என்ன தம்பி..ஜெயிக்குறவங்களுக்கு தாம்பா ஓட்டு போடனும்..டி.எம்.கே தான் போடப்போறேன்..”

செய்யிறவங்களுக்கு ஓட்டு போட மாட்டாராம்..ஜெயிப்பவங்களுக்குத்தான் ஓட்டு போடுவாராம்..

பாண்டிச்சேரியில இருக்குற நம்ம தோஸ்துக்கு போன் பண்ணிணேன்ணே..

“என்னடா யாருக்கு ஓட்டு..”

“காங்கிரஸிக்கு தான்டா..”

“அடப்பாவி..டே..எல்லாம் தெரிஞ்ச நீயே…”

“இல்லடா, சென்டர்ல பி.ஜே.பி வரக்கூடாது..பா.ம.கவ புடிக்காது..சுயேச்சைக்கு ஓட்டுப் போட்டு ஓட்ட வேஸ்ட் பண்ண விரும்பலை…அதனால தான்..”  

இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமா போகட்டும்….

Tuesday 12 May, 2009

எல்லாரும் பார்த்துக்கங்கப்பா..நாங்களும் என்.ஆர்.ஐ தான்

அலுவலக வேலை விசயமா, ஒரு வாரம் அமெரிக்காவிலுருந்து சென்னை வந்து மீண்டும் அமெரிக்கா திரும்ப வேண்டிய சூழ்நிலைண்ணே..என் பொண்டாட்டியும் சென்னை வருவேன் என அடம் பிடிக்க, அவளையும் கூட்டிக்கிட்டு சின்சினாட்டி ஏர்போர்ட் வந்தேண்ணே..1 வருசம் கழித்து என் மனைவி தாயகம் போறா, ஏதாவது சென்டிமென்டா பேசுவான்னு எதிர்பார்த்து காத்திருந்தேண்ணே…

“ஏங்க…நம்மளும் என்.ஆர்.ஐ தானங்க…”

ஆகா…இந்த வியாதி இவளுக்கும் தொத்திக்கிச்சா..எத்தனையோ பேர பார்த்து இருக்கோம்னே..ஏர்போட் புல்லாம் ஒரே அலப்பரை தான்..நம்ம ஊருல போயி ரெண்டு நாளைக்கு விறைப்பா அலைவாயிங்க..நல்லா மொட்ட வெயிலு மூஞ்சில அடிச்சா எல்லாம் சரியாப் போயிடும்…..

“அடியே..நம்ம என்.ஆர்.ஐ இல்லடி..என்.பி.ஐ..”

“அது என்னங்க புதுசா என்.பி.ஐ…”

“ம்….."நாசாமா போன இண்டியன்ஸ்"..அடியே..நம்மளே பஞ்சம் பொழைக்க வந்துருக்கோம்டி…பொழப்புல மண்ண அள்ளி போட்டுறாதடி..மகராசி..”

“நீங்க சும்மா இருங்க…யாராவது கேட்டா,என்.ஆர்.ஐ தான்னு சொல்லப் போறேன்..கெடுத்து விட்டுறாதிங்க..”

சரி உனக்கு மொட்டை வெயிலு அடிச்சாதான் திருந்துவ…ஏர்போர்ட் நடைமுறை எல்லாம் முடிஞ்சு விமானத்துல ஏறி உக்கார்ந்துட்டோம்னே..பக்கத்துல ஒரு வெள்ளைக்கார தாத்தா..நல்லா அண்டா சைசுல இருந்தாருண்ணே..கையில பர்கர் வேற..அவர் பக்கத்துல கோழிக்குஞ்சு மாதிரி உக்காந்திருந்தோம்ணே..

“வணக்கம் பிரதர்..நீங்க இந்தியர் தானே..நான் இறக்குமதி பிசினஸ் பண்றேன்..பிசினஸ் விசயமா இண்டியா போறேன்…”

அவரா அறிமுகம் செஞ்சுக்கிட்டாருண்ணே..அடப்பாவி, ஒன்னரை சீட்டுல உக்கார்ந்துக்கிட்டு அரை சீட்டை குடுக்குறேயேய்யா…

கர்சிப்பை எடுத்து முகத்தை பொத்திக்கிட்டேண்ணே.. என் பொண்டாட்டிக்கு ஆச்ச்ர்யம் தாங்க முடியலண்ணே..

“என்னங்க, ஏங்க கர்ச்சிப்பை எடுத்து பொத்திக்கிறீங்க..பன்னி காயிச்சல் பயமா..”

“அய்யோ இது அத விட கொடுரம்டி…விமானத்துல அவனவன் பாத்ரும் போறதுக்கு சோம்பேரித்தனப் பட்டுக்கிட்டு கேஸ் பேக்டரிய ஓப்பன் பண்ணி விட்டுருவாயங்க..பன்னி காயிச்சலாவது ஒரேயடியா ஆளைக் கொல்லும்டி..இது, கொஞ்சம் கொஞ்சம் ஆளைக் கொல்லும்டி..நீயும் ஏதாவது துணியை எடுத்து முஞ்சிய போத்திக்கடி..”

“அடப் போங்க..வெள்ளைக்காரய்ங்க அப்படியெல்லாம் பண்ண மாட்டாயிங்க..”

அடிப்பாவி..கருப்பா இருக்குறவயிங்களையெல்லாம் நாய் கடிக்காது ரேஞ்சுல பேசிறேயடி..சரி உனக்கு பட்டாத்தாண்டி தெரியும்னு விட்டுட்டேண்ணே..

நேரம் ஆக, ஆக அவனவன் பலமுனைத் தாக்குதல் நடத்த ஆரம்பிச்சுட்டாயிங்கண்ணே…என் பொண்டாட்டி கதறிட்டாயிங்கண்ணே…

“ஏங்க, எனக்கு குடலை பிரட்டுதுங்க..ஒரு துணி இருந்தா தாங்களேன்..முகத்தை பொத்திக்குறேன்” கெஞ்சுறான்ணே…

“ஏங்க நீங்களுமா..”

“ஐயோ..என்னை அப்படி சந்தேகப் பார்வை பார்க்காதடி..ஏர்போர்ட் வர்றதுக்கு முன்னாடியே நாலஞ்சு தடவை பாத்ரூம் போயிட்டண்டி..”

யாரா இருக்கும்னு திரும்பி பார்த்தா, நம்ம வெள்ளைக்கார தாத்தா..பர்கரை சாப்பிட்டுக்கிட்டே சிரிக்குறாருண்ணே..

அடப்பாவி..நீதானா அந்த படுபாவி..இதுதான் இறக்குமதி பிஸுனஸடா..நல்லா இருங்கடா..நீ சாப்பிடுறது பர்கராடா அல்லது பொணமாடா..

“சார்..பொணத்தை சாப்பிடுங்க..ஆனா கொஞ்சம் உப்பு போட்டு சாப்பிடுங்க..”

“என்ன பிரதர்..”

ஐயோ ஆளை விடுடா சாமி..சென்னை இறங்குற வரைக்கும் முகமூடிய கழட்டவே இல்லண்ணே… இப்ப என் பொண்டாட்டி ஆரம்பிச்சிட்டாங்கண்ணே..

“ஓ..வாட் எ வெயில்.. வாட் எ வெயில்…” இங்கிலிஸ பாருங்கண்ணே…

“ஏங்க, ஒரு கேப் கூப்பிடுறீங்களா…” டாக்சின்னு சொல்ல மாட்டாளம்ணே..

டாக்சிக்காரன் வந்தாண்ணே..என் பொண்டாட்டியே பேசட்டும்னு அமைதியா இருந்துட்டேண்ணே..

“இங்க இருந்து கீழ் கட்டளைக்கு எவ்வளவுங்க..”

“400 ரூபாங்கம்மா..”

“ஓ..இட்ஸ் காஸ்ட்லி…நாங்க அட்லாண்டாவுல இருந்து கலிபோர்னியா போறதுக்கே 100 டாலர்ஸ்தான் குடுப்போம் தெரியுமா..”

“சார்..இன்னா சார் பேசுறாங்க..ஒன்னுமே பிரியல சார்..கொஞ்சம் வெளங்குற மாதிரி சொல்லு சார்..”

போதும்டா சாமி..அம்மா தாயே..முதல வண்டியில ஏறு..

“பரவாயில்லங்க..மீனம்பாக்கம் ரோடு நல்லா இருக்குங்க..இண்டியா இஸ் சேஞ்சிங்க..”

டிரைவர் கொலை வெறி ஆகிட்டாண்ணே…

“சார், அம்மாவுக்கு எந்த ஊரு சார்…”

“அது , மதுர பக்கத்துல இருக்குற கொட்டாம்பட்டி..”

இப்ப கொலைவெறி மனைவிக்கு ஷிஃப்ட் ஆகிடுச்சுண்ணே…ஒரு வழியா, வீடு வந்து சேர்ந்துட்டோம்ணே..

“ஏங்க வீட்டில ஏ.சி. இல்லயா..இட்ஸ் டூ ஹாட்ன்னா..”

முடியலண்ணே…அம்மா வந்துட்டாங்கண்ணே…

“வாம்மா..பிரயாணம் எப்படிம்மா இருந்துச்சு..பிளைட்டுல ஒன்னும் சாப்பிடாம வந்து இருப்பீங்க..சாம்பார் சோறு சாப்பிடிறீங்களா..”

“இல்ல ஆண்டி..கெல்லாக்ஸ் இருக்கா..கார்ன் பிளக்ஸ் இருக்கா..”

“ஏம்பா, நான் இப்ப என்ன கேட்டுட்டேன்னு உன் பொண்டாட்டி கெட்ட வார்த்தையில திட்டுறா…”

அட நாராயணா..இந்த என்.ஆர்.ஐ ய்ங்க கொசுத் தொல்லை தாங்க முடியலடா சாமி…

Saturday 9 May, 2009

பிளடி இண்டியன்ஸ்.....

“பிளடி இண்டியன்ஸ்” ன்னு ஒரு வெள்ளைக்காரன் உங்க கிட்ட சொன்னா உங்களுக்கு எப்படிண்ணே இருக்கும்..அவன சாகடிக்கலாம் போல இருக்கும்லண்ணே..எனக்கு ஏக்கமா இருக்கும்ணே…

இங்க அமெரிக்காவுல, எங்க அபார்ட்மெண்டுக்கு அடுத்த வீட்டுல ஒரு வெள்ளக்கார தாத்தா இருக்காருண்ணே..பேரு “ஜக் பென்ட்லே”…80 வயசு இருக்கும்ணே..எழுந்து நடக்க முடியாது..எப்போதும் வீல் சேர் தான்..அவர் மட்டும் தனியா இருக்காருண்ணே..பொண்டாட்டி கிடையாது..அவரோட மகன் தனிக்குடித்தனம் இருக்கான் போல..அப்ப, அப்ப வந்து பார்ப்பான்..

ஒரு நாள் என்னோட வாசல்ல நின்னுக்கிட்டு நம்ம சேக்காளிங்களோட பேசிக்கிட்டு சத்தம் போட்டு பேசுக்கிட்டு இருந்தேண்ணா..அவருக்கு இடஞ்சலா இருந்துருக்கும் போல, வீல் சேருல இருந்தபடியே வெளியே வந்துட்டாரு…

“ஹலோ…என்ன இங்க சத்தம்,பக்கத்து வீட்டில குடியிருக்க வேணாமா…பிளடி இண்டியன்ஸ்…”

சத்தம் போட்டு பேசுனது தப்புதாண்ணே..அதுக்காக இப்படியான்னே பேசுறது..எனக்கு நாக்கு மேல கோவம் வந்து கன்னாபின்னான்னு பேசிட்டேண்ணா..எனக்கே கஷ்டமா இருந்துச்சுண்ணே..தாத்தா வயசுண்ணே…

ஒருநாள் ஆபிஸ் விட்டு வந்தேண்ணே…பக்கத்து வீட்டு இருந்து சத்தம்..பயந்து போயி, கதவை தொறந்து பார்த்தா, பாவம்ணே..தாத்தா பாத்ரூம் போனப்ப கிழே விழுந்துட்டாருண்ணே…அவருனால எந்திருக்க முடியாம அப்படியே தவழ்ந்து, தவழ்ந்து வந்தார் பாருங்கண்ணே…வாழ்க்கையே சீ..ன்னு ஆகிடுச்சுண்ணே..எதிரிக்கு கூட இந்த நிலமை வரக்கூடாதுண்ணே…உடம்பெல்லாம் மலம்ணே..என்னால தாங்க முடியலைண்ணே..நம்மல்லாம் மனுசயங்கண்ணே..அப்படியே அவர அள்ளி தூக்கிக்கிட்டேண்ணே…

“ராஜா..ராஜா..வேண்டாம்பா..உடம்பெல்லாம் அசிங்கம்பா..உனக்கும் ஒட்டிக்கும்பா..” அழுகுராருண்ணே…

மனசுல இருக்குற அசிங்கத்தை விடவாண்ணே. இதெல்லாம்..

“பரவாயில்ல சார்…”  அப்படின்னுட்டு அப்படியே ஒரு துணிய எடுத்து துடைச்சி விட்டேண்ணே… என் கைய அப்படியே பிடிச்சுக்கிட்டு குழந்தை மாதிரி அழுகுறாருண்ணே..

“ஏண்டா ராஜா..நீ எனக்கு பொறக்கலை…”

“சார், என்ன ஆச்சு..ஏன் தனியா இருக்கிறீங்க..நீங்க உங்க பையனோட இருக்கலாமே…”

அவர் முகம் விரக்தியாருச்சுண்ணே…

“இல்லப்பா..என்னோட பையன் ஒத்துக்கல..அவனுக்கு அவன் ஆபிஸ் வேலை பார்க்கவே நேரம் இல்லையாம்..வெளியே அனுப்பிட்டான்..மாசத்துக்கு ஒரு தடவை வந்து பார்ப்பான்..”

“என்ன சார் உலகம் இது..பெத்த அப்பா விடவா காசு..”

“சரிப்பா, அப்ப நீ ஏன் உங்க வீட்டை விட்டு இங்க வந்த..”

எனக்கு யாரோ செருப்ப கழட்டி அடிக்குற மாதிரி இருந்துச்சுண்ணே..அம்மா, அப்பாவை இந்த வயசான காலத்துல விட்டுட்டு இங்க வந்து சந்தோசமா இருக்கோம்னு நினைக்கிறீங்களா..இல்லண்ணே…சுயநலம்ணே…ஒவ்வொரு மாசமும் சம்பளக்காசு வரும்போதும் அம்மா, அப்பா ஞாபகம் தாண்ணே வரும்..பாவக் காசுண்ணே…நமக்காக தன் வாழ்க்கையே குடுத்தவங்கள அங்க தனியா விட்டுட்டு எங்க சுய வாழ்க்கைக்காக இங்க வந்து கிடக்கோம்ணே…பாவம்ணே..இப்பயும் எங்க அம்மாகிட்ட கேளுங்க, “என் பையன் பாரின்லே இருக்கான்..”அப்படியே பூரிச்சு போயிடுவாங்கண்ணே…ஒருநாள் அம்மானால தாங்க முடியல..”தம்பி ராசா..இங்க வந்துருப்பா, உன்னை பார்க்காம இருக்க முடியலப்பா..” அழுதாங்கண்ணே..வீட்டுல திட்டிருப்பாய்ங்க போல..அடுத்த நாள் அவசரமா போன் பண்ணி..

”தம்பி அவசரம் இல்லப்பா..இப்பல்லாம் அமெரிக்கா ஈசியா போக முடியாதாமே..எங்களை பத்தி கவலைப்படாதப்பா..நாங்கல்லாம் இன்னைக்கோ நாளைக்கோ..நீதான் வாழப் போறவன்..”

நம்மோட எதிர்காலத்துக்காக, தன்னோட நிகழ்காலத்தையே தியாகம் பண்றவங்கண்ணே…

அப்புறம் “ஜக்” நமக்கு நல்ல பிரண்ட் ஆகிட்டாருண்ணே..ஆனாலும் என்னை “பிளடி இன்டியன்” னுதான் கூப்பிடுவாருண்ணே..ஆனா, செல்லமா…நானும் குசும்புக்காரன் தாண்ணே..”சக்” ன்னு கூப்பிடுவேன்..

“ராசா, “சக்” குன்னு கூப்பிடாதப்பா..அது கெட்டா வார்த்தப்பா..”

“நீங்க பிளடி இண்டியன்னு கூப்பிடிறதை நிறுத்துங்க..அப்பத்தான்..”

குழந்த மாதிரி சிரிப்பாருண்ணே…அவருக்கு உறைப்பு பண்டம்ன்னா சுத்தமா ஆகாது..நாங்க வேணும்னே அவருக்கு உறைப்பு முருக்கு குடுத்து கலாய்ப்போம்..பாத்ரூம்ல போயி, அவசரம் அவசரமா வாயைக் கழுவிட்டு “பிளடி இண்டியன்ஸ்” ன்னு சொல்லி சிரிப்பாரு..

அன்னைக்கி அவருக்கு பொறந்த நாளுண்ணே…நானும் என்னோட மனைவியும் அவருக்காக உறைப்பு கம்மியா செஞ்சு அசத்தலாம்னு ஆசைப்பட்டு, காலையில எழுந்து எல்லா வேலையும் முடிச்சிட்டு அவரக் கூப்பிடலாம்ன்னு நினச்சுக்கிட்டு இருந்தேன்..யாரோ கதவைத் தட்டுறாங்கண்ணே..திறந்து பார்த்தா, பெரியவரோட பையன்..

“தம்பி..கொஞ்சம் வீடு வரைக்கும் வந்து போறீங்களா..”

சரி கேக் வெட்டத்தான் கூப்பிடுறாங்கன்னு அவசரம் அவசரமா “குளோப் ஜாமுன்”ன ஒரு ட்ப்பால எடுத்துக்கிட்டு போயி அவரு வீட்டுக்கு போறேன்….அப்படியே வீல் சேருல செத்து கிடக்குறாருண்ணே…கண் அப்படியே என்னையே பார்க்குதுண்ணே..உதடு ஏதோ சொல்ல வந்தது போல தொறந்து அப்படியே இருக்குண்ணே..என் உசிரை யாரே என்கிட்ட இருந்து பிச்சி எடுத்துக்கிட்டு போன மாதிரு இருந்துச்சுண்ணே..அப்படியே வாய தொறந்து “பிளடி இண்டியன்”னு கூப்பிடுவாருன்னு அவர் வாயவே பார்த்துக்கிட்டு நின்னேண்ணே..உலகத்துலே கொடுமையான விசயம் சாவுதாண்ணே…


Wednesday 6 May, 2009

சூப்பர் ஸ்டாருடன் நான். எந்திரன் சூட்டிங் அனுபவம்

நம்பவே முடியலண்ணே..நிஜம் தான்னே..சூப்பர் ஸ்டாரை நேருல பார்த்தேங்கண்ணா..எந்திரன் சூட்டிங் அமெரிக்காவில் நடப்பதா சொன்னாங்க..ஆனா அது எங்க இடத்துல நடக்கும்னு தெரியாதுண்ணே..தினமும் ஆபிஸ் போயிட்டு போற வழியில அன்னிக்கு பார்த்தா ஒரு சலசலப்பு..என்னன்னு பார்த்தா, நம்ம எந்திரன் சூட்டிங்குண்ணே..அய்யோ…இன்னும் நம்பவே முடியலண்ணே..நம்ம சூப்பர் ஸ்டார் சூப்பரா நிக்கிறாரு.. பக்கத்துல போயி “சார்” ன்னு கூப்பிட்டேன்..”அடடே..நம்ம ஊரா..வாங்க, வாங்க…” ன்னுட்டு அப்படியே கேரவன் வேனுக்குள்ள கூப்பிட்டு போயிட்டார்..கூடவே தலைவர் மகளும் வந்துட்டாங்க…

“சார்..என்னால நம்பவே முடியலை சார்..”

“ஹா.ஹா…சொல்லுங்க என்ன சாப்பிடுறீங்க..டீ..காபி..”

“எதுவும் வேணாம் சார்..உங்களை நேருல பார்த்தா சில கேள்விகள் கேக்கலாமுன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.கேக்கவா..??”

“என்னப்பா நிருபரா வேலை பார்க்குறிங்களா..பரவாயில்லை கேளுங்க..”

எனக்கு ஒரு சின்ன பிரச்சனைண்ணே..நம்ம கிட்ட ஒரு பாழாப் போன மனசாட்சி இருக்கு..எப்ப பார்த்தாலும் சாகடிக்கும்..அதுவும் கேள்வி கேப்பேன்னு அடம் புடிக்குதுண்ணே..

“எப்ப சார் அரசியலுக்கு வருவீங்க…”

“ஹா..ஹா..சொல்லி போரடிச்சிருச்சுப்பா…ஆண்டவன் சொன்னா வருவேன்..”

(என் மனசாட்சி) அப்ப ஆண்டவங்கிட்டயே கேட்டிருக்குலாமோ..”


“ஆண்டவன் எப்ப சார் சொல்லுவாரு..”

“நான் சொல்லுறப்ப..”

(என் மனசாட்சி) விசு அரட்டை அரங்கம் பார்ப்பிங்களா சார்..”

 

“சார், நீங்க அரசியலுக்கு வரதை தெளிவா சொல்லலாமே சார்..”

“பாருங்க தம்பி..இதுக்கு நான் குசேலன் படத்துலேயே பதில் சொல்லிட்டேன்”

(என் மனசாட்சி) நான் இடைவேளை போட்டவுடனே ஓடியாந்துட்டேன்


“நானும் கேள்விப்பட்டுத்தான் ஒரு மாசம் கழிச்சு படத்துக்கு போனேன் சார்..ஆனா நீங்க அதைப் பத்தி பேசுனதெல்லாம் தூக்கிட்டாங்க”

“அது என்ன பண்றது தம்பி..கோடி கோடியா பணத்தைப் போட்ட தயாரிப்பாளர் சொல்லிட்டாரரு..கேக்கனுமில்ல”

(என் மனசாட்சி) “தலைவர் வாழ்க” ன்னு அடித்தொண்டையில கத்திக்கிட்டே ஒரு நாள் சம்பாதிச்ச பணத்தை செலவழிச்சு, பால் வாங்கி உங்க கட் அவுட்ல ஊத்துறானே, அவனப் பத்தி நமக்கு என்ன கவலைண்ணே..”

 

“அப்பா, கூடிய சீக்கிரம் அரசியலுக்கு வருவாருன்னு உங்க பொண்ணு சொல்லுறாங்களே சார்..”

“ஹா..ஹா…அதை அவுங்ககிட்ட தான் கேக்கனும்..”

(என் மனசாட்சி) “சுல்தான்”  படம் எப்ப ரீலிஸ் சார்

சார் என்ன பேசிக்கிட்டு இருக்கும் போதே மேல சுடு தண்ணி ஊத்துறீங்க….முழிச்சி பார்த்தா என் பொண்டாட்டி பத்ரகாளி மாதிரி நிக்கிறாண்ணே… அடப்பாவமே எல்லாம் கனவா..ஒரு நாளாவது நல்ல கனவு வருதா பாருங்கண்ணே..

“ஏங்க, என்ன எருமை மாடு மாதிரி  ஒரு தூக்கம்..பல் விளக்கலைன்னா காபி கிடையாது, சொல்லிப்புட்டேன்..”

“அடிப்பாவி..கனவுல குறுக்கால வந்து கெடுத்துட்டேயேடி.. ரொம்ப நாளைக்கு அப்புறம் கொஞ்சம் தூக்கி நிறுத்துற மாதிரி கனவு வந்துச்சுடி”

“அது சரி, முதல்ல லுங்கிய தூக்கி கட்டுங்க....அது என்ன தூக்கத்துல “தமிழா, கட் அவுட்டுக்கு பால் ஊத்தாதேடா..அழுகுற உன் குழந்தைக்கு ஊத்துடா” ன்னு பினாத்துறீங்க..

“அது பாழாப்போன மனசாட்சிடி..சூப்பர் ஸ்டாரை பேட்டி எடுக்குற மாதிரி கனவு கண்டேன்டி..”

“அய்யோ…சூப்பர் ஸ்டாரா…சூப்பருங்க…ஏங்க, ஏங்க, அப்படியே எந்திரன் படம் எப்ப ரீலிஸ்ன்னு கேட்டு சொல்லுங்க..”

கடவுளே…நான் வீட்டில இருந்து ஆரம்பிக்கனும் போலயே…

Monday 4 May, 2009

நியுட்டனின் மூன்றாம் சதி

சதி பண்ணியிருக்காயிங்கண்ணே..சதி பண்ணியிருக்காயிங்க..அது நியுட்டன் மூன்றாம் விதி இல்லண்ணே..மூன்றாம் சதி..நியுட்டன் நம்மளை எல்லாம் மாட்ட வைக்க அந்த காலத்துல இருந்தே பிளான் பண்ணிருக்காருண்ணே..கடலை பர்பி சாப்பிட்டுக்கிட்டு மானாட மயிலாட பார்த்துக்கிட்டு(தப்பா நினைக்காதீங்கண்ணே..அன்னிக்கு பார்த்து மிட்நைட் மசாலா டி.வி ல போடல..அதான்) இருந்த போதுதான் இது தோணிச்சுண்ணே..கீழ இருக்குறத படிச்சுட்டு நீங்களே சொல்லுங்கண்ணே…

வினை: இலங்கைத் தமிழர் பிரச்சனை இந்த தேர்தலில் எதிரொலிக்கும் – கருத்துக் கணிப்பு

எதிர் வினை: தனி ஈழம் அமைப்போம் – ஜெயலலிதா அறிவிப்பு.


வினை: தனி ஈழம் அமைப்போம் – ஜெயலலிதா அறிவிப்பு.

எதிர் வினை : இலங்கைத் தமிழர்களுக்காக கலைஞர் உண்ணாவிரதம்


வினை: எந்திரன் ரீலிஸ் தேதி விரைவில் அறிவிப்பு..டைரக்டர் சங்கர் அறிவிப்பு

எதிர் வினை: அப்பா சீக்கிரம் அரசியலுக்கு வருவார் – சௌந்தர்யா ரஜினிகாந்த்


வினை: போட்டியிடும் எல்லாத் தொகுதிகளிலும் ஜெயிப்போம் – டி.ராஜேந்தர்

எதிர்வினை : வண்டலுர் உயிரியல் பூங்காவிலிருந்து கரடிக்குட்டி தப்பி ஓடியது..போலிஸ் தேடுகிறது..


வினை: நானே ஹீரோவாக நடித்து ஒரு படம் இயக்க ஆசை – பேரரசு

எதிர்வினை: விழுப்புரத்தில் ஒரு குடும்பமே விஷம் குடித்து தற்கொலை.

 

வினை : மானாட மயிலாடவில் நடுவராக இருப்பதில் பெருமை – குஷ்பு

எதிர்வினை – இந்த வருடம் சுனாமி வருவதற்கான வாய்ப்பு – முன்னெச்சரிக்கை அறிவிப்பு


வினை : தி.மு.க அ.தி.மு.க கூட்டணியைத் தோற்கடிப்போம்- நடிகர் கார்த்திக் அறிவிப்பு

எதிர்வினை: ஹியுமர் கிளப் இரண்டாம் ஆண்டு கூட்டம் சென்னையில் கூடியது

 

வினை : ஏண்டி..எவ்வளவு நேரம் சீரியல் பார்ப்படி..சீக்கிரம் வந்து சோத்தைப் போடுடி..

எதிர்வினை: சப்பாத்திக் கட்டையில் அடிவாங்கி கணவன் மருத்துவமனையில் சேர்ப்பு..

 

வினை : நியிட்டனின் மூன்றாம் சதி – அவியிங்க பிளாக்

எதிர் வினை – ஓடிப்போயிடு..அடிவாங்கியே சாகப்போற..வாசகர்கள் கோபம்..

 

ஹி.ஹி..கடைசிது மட்டும் நம்மதுண்ணே..அண்ணே..ஓடாதிங்கண்ணே..கீழ உள்ள ஓட்டுப் போட்டுட்டு போங்க….