Saturday 31 December, 2011

2011 – திரைத்துறை விருதுகள்




இதுபோன்ற திரைத்துறை விருதுகள் கொடுப்பதில் ஒரு சவுகரியம். நம்ம யாருக்கு விருது கொடுத்தாலும், விருது வாங்குபவர்கள் யாரும் அதைப் படித்து பாராட்டப் போவதில்லை. அதனால், தலைக்கனமும் நம்முள் ஏறப்போவதில்லை. விருது வாங்காதவர்களும்எனக்கேண்டா விருது கொடுக்கலைஎன்று சட்டையைப் பிடித்துக் கேட்கப்போவதில்லை. அட்லீஸ்ட் படிக்கப் போவது கூட இல்லை. யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லாதபோது, இந்த விருதுகளை கொடுப்பதில் எனக்கு என்ன பிரச்சனை இருக்கப்போகிறது.. ஆனால் முடிந்தவரை, என் மனதில் பட்டதை, நேர்மையாக தேர்வு செய்துள்ளேன் என்று நினைக்கிறேன். படித்து வீட்டு நீங்களே சொல்லுங்களேன்..

சிறந்த திரைப்படம்வாகை சூடவா
சிறந்த இயக்குநர்சரவணன்(எங்கேயும் எப்போதும்)
சிறந்த நடிகர்விக்ரம்(தெய்வத்திருமகன்)
சிறந்த நடிகர் சிறப்பு பரிசுதனுஷ்(ஆடுகளம், மயக்கம் என்ன)
சிறந்த நடிகைரிச்சா(மயக்கம் என்ன)
சிறந்த பிளாக்பஸ்டர்மங்காத்தா
சிறந்த இசையமைப்பாளர்ஹாரிஸ் ஜெயராஜ்(எங்கேயும் காதல், கோ)
சிறந்த பிண்ணனி இசையுவன்சங்கர் ராஜாஆரண்ய காண்டம்
சிறந்த புதுமுக இசையமைப்பாளர்ஜிப்ரான்(வாகை சூடவா)
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம்காஞ்சனா
சிறந்த நகைச்சுவை நடிகர்சந்தானம்-(சிறுத்தை, ஒஸ்தி, மற்றும் பல)
சிறந்த நகைச்சுவை நடிகைகோவை சரளா(காஞ்சனா)
சிறந்த மோசமானத் திரைப்படம்ராஜபாட்டை, வெடி
சிறந்த வசகனகர்த்தாபாஸ்கர் சக்தி(அழகர்சாமியின் குதிரை)
சிறந்த மெலோடிநெஞ்சில் நெஞ்சில்(எங்கேயும் காதல்)
                                       என்னமோ, ஏதோகோ
                                       மழைவரும்வெப்பம்
                                       யாரதுகாவலன்

சிறந்த நடனஇயக்குநர்தினேஷ்(ஒத்த சொல்லாலஆடுகளம்)
சிறந்த பாடலாசிரியர்மதன் கார்க்கி(என்னமோ ஏதோகோ)
சிறந்த ப்ளாக்கர்யுவகிருஷ்ணா –(லக்கிலுக்)
சிறந்த பதிவுகுமரன்குடில்மீள்பதிவாக இருந்தாலும்(http://www.luckylookonline.com/2011/08/blog-post_20.html)
சிறந்த குத்துப்பாட்டுடிய்யா, டிய்யா, டோலு-(அவன், இவன்)
சிறந்த எடிட்டர் - ப்ரவீன், ஸ்ரீகாந்த் - மங்காத்தா
சிறந்த குணச்சித்திர நடிகர் – சோமசுந்தர் – ஆரண்யகாண்டம்
சிறந்த பாடகர், பாடகி – தெரியலையேப்பா..நீங்களே சொல்லுங்களேன்..



பதிவர் சந்திப்பு – எனது பார்வை



சும்மா இருக்கறவனை சொரண்டி விடுறதே, இந்த கோவாலுக்கு வேலையாகிப் போச்சுண்ணே..கரண்ட் அடிச்ச மாதிரி, வருச கடைசி அதுவுமா, அந்த கேள்வியைக் கேட்டுப்புட்டான்

ராசாபதிவர் சந்திப்பு பார்க்கணும்னு ஆசையா இருக்குடா..எங்கிட்டாவது அது நடந்தா, என்னையும் கூட்டிட்டு போடா..”

அவ்வளவுதேன்..எனக்கு நடுங்கிருச்சு..

கோவாலுஅது ரத்த பூமிடா..உன்னை மாதிரி பச்சைப் புள்ளைங்களெல்லாம் உள்ள விடமாட்டாய்ங்க..”

டே..ராசாஎன்னடா இப்படி சொல்லிப்புட்டஅப்படி என்னதாண்டா அங்க நடக்கும்…”

கோவாலு..நீ தண்ணி அடிப்பியா…”

ச்சீ..ச்சீ..ச்சீ…”

அடங்கொன்னியா..அங்கயே பாதி தகுதி அடிபட்டு போச்சு..”

என்னடா சொல்லுற…”

ஆமாண்டா..கிளம்புறதுக்கு முன்னாடி, நல்லா புல் ரவுண்டு ஏத்திக்கணும்..இன்னும் ரெண்டு மூணு பேரைச் சேத்துக்கணும்முந்தா நாளு ரூமு போட்டு செமக்கூத்து அடிக்கணும்….”

அய்யயோ..ரூம் போடுற அளவுக்கு எங்கிட்ட காசு இல்லைடா..”
அடிங்கதமிழுல மட்டுமில்ல ஆல் லாங்குவேஜ்ஜூல எனக்கு பிடிக்காத வார்த்தையே, “செலவழிக்கிறது”..அதெல்லாம் கவலைப்படாதேராத்திரியும் பகலுமா கஷ்டப்பட்டு சேத்துவைச்சிருக்கிற காசை வைச்சு, அவிங்களே நமக்கு ரூம் போட்டு தருவாய்ங்கநம்ம வேலை, சோக்கா, சட்டையப் போட்டமா, சண்டையப் போட்டாமாண்ணு இருக்குறதுதான்…”

அவ்வளவுதான் கோவாலு அழுவ ஆரம்பிச்சிட்டாண்ணே..குழந்தை மாதிரி கேவி, கேவி அழுவுறான்..

கோவாலு..இப்ப என்ன நடந்துச்சுன்னு கேவி, கேவி அழுவுற..”

ராசா..ஊருக்குள்ள இம்புட்டு நல்ல பேரு இருக்காய்ங்கன்னு ஒரு வார்த்தை முன்னாடியே சொல்லியிருந்தேன்னா, நானும் எப்பவோ, பதிவுலகத்துக்கு வந்திருப்பேனடாபோடா துரோகி..கஷ்டப்பட்டு சேர்த்த காசை வைச்சு, நம்ம தண்ணி அடிக்கிறதுக்காக, ரூமெல்லாம் போட்டு..அழுகை, அழுகையா வருதுடா…”

டே..கோவாலு..அழுவாதடா..”

அப்பறம் என்னடா நடக்கும்…”

நேரா பதிவர் சந்திப்பு போகணுமா..அதுக்கப்பறம், அங்கயே ப்ரேக்பாஸ்ட்..”

அட..சூப்பரு..”

டே..டேஅப்படியெல்லாம் பாராட்டுனா..ஊருக்குள்ள நாலு பய மதிக்க மாட்டாய்ங்க..முட்டை பணியாரத்துல முட்டைய காணாம்..மைசூர் பாக்குல மைசூரை காணோம்..காபியில கொசு கிடந்துச்சுன்னு ரெண்டு மூணு அடிச்சு விடணும்…”

டே..ராசா..அதெல்லாம் பாவம் இல்லையா…”

கோவாலு..நீ பதிவரா ஆகனுமா இல்லையா..”

ஆவணும்டா..ஆவணும்…”

அப்படின்னா சொல்ற பேச்சைக்கேளு..ப்ரேக்பாஸ்ட் முடிஞ்சப்புறம்..அங்கிட்டு இங்கிட்டு ஸ்டைலா ரெண்டு வாக்கிங்கை போடணும்..அவசரப்பட்டு, நீயா யாருகிட்டயும் பேசிரக்கூடாது..அவிங்களா கூப்பிடுவாய்ங்கஹல்லோ..சார்..நீங்க எந்த ப்ளாக்கு…”

நான் B பிளாக்கு..”

“டே…ஒன்னும் தெரியாதவேனே..பிளாக்குடா..பிளாக்கு..அப்புறம், அங்க இருக்குறவய்ங்க கூட ஒரு டிஸ்கசனைப் போட்டுட்டு ஒரு காபி தண்ணியக் குடிச்சுப்புட்டு, மாலையில டைரக்டா லஞ்சுதான்…”

“வாவ்..மச்சி…செமடா..லஞ்சுக்கெல்லாம் காசு..”

“அதெல்லாம்..அவிங்க பார்த்துக்குருவாய்ங்க..நம்ம வேலை..பதிவைப் போட்டாமா..பதிவர் சந்திப்பு போனாமான்னு இருக்குறதுதான்…அப்புறம் சாப்பிட்ட சாப்பாடு கொஞ்சம் அசதியா இருக்குமில்லையா..ஒரு குட்டித்தூக்கத்தை போட்டுட்டு, அப்படியே ஒரு பஸ்ஸோ, ஆட்டோவா புடிச்சுட்டு வீட்டுக்கு வந்துரு..”

“வாவ்..சூப்பருடா…அவ்வளவுதான் பதிவர் சந்திப்பா…”

“நோ..நோ..அப்புறம்தான் முக்கிய கட்டம் இருக்கு…”

“அய்யய்யோ..என்னாது..”

“வந்து முதல் வேலையா, லேப்டாப்பை தொறந்து, “பதிவர் சந்திப்பு…”ன்னு ஆரம்பிச்சு..”

“ஆரம்பிச்சு…”

“நம்ம தண்ணி அடிக்குறதுக்காக ரூம் போட்டு கொடுத்த நல்லவய்ங்களுக்கு ஒரு தேங்க்ஸ சொல்லிப்புடணும்..பாராட்டுறோமோ இல்லையா..என் கண்ணில் கண்ட குறைகள்..இதையெல்லாம் அடுத்த பதிவர் சந்திப்புல சரிசெய்தா நன்றாக இருக்கும்..அப்படின்னு மறக்காம சொன்னாத்தான் அடிச்ச போதை இறங்கும்..”

“ஆஹா..ராசா…அம்புட்டுதானா..”

“என்னடா கோவாலு..இப்படிச்சொல்லிப்புட்ட..டெய்லி வயித்தை கலக்குற மாதிரி..இது..மனசை கலக்குற மாதிரி டெய்லி ஒரு பதிவைப் போடணும்…”

“போட்டா..”

“மதுரைப் பக்கம் ரெண்டு ஏக்கரு வாங்கிரலாம்…”

“ராசா..நான் புதுசுதான்..அதுக்காக, இப்படியெல்லாம் அடிச்சு விடாதே..பதிவு எழுதுனா..ரெண்டு ஏக்கரெல்லாம் எப்படிடா..ரொம்பத்தான்..”

“அதுக்குத்தான் முதல்லயே சொன்னேன்..நீ குழந்தை மாதிரின்னு..டே..ஊருக்குள்ள எம்புட்டு நல்லவய்ங்க இருக்காய்ங்க தெரியுமா..டெய்லி உருக்கமா, பதிவு போட்டுக்கிட்டே இருக்கணும்..”

“அப்படி போட்டா..”

“இந்த நல்லவய்ங்க இருக்காய்ங்க தெரியுமா..”அண்ணே..இந்தாங்கண்ணே, 50 ஆயிரம்..அண்ணே..இந்தாங்கண்ணே..ஒரு லட்சம்ணு குடுத்துக்கிட்டே இருப்பாய்ங்க..”

“பார்றா..அவிங்க பாவம் ராத்திரி பகலுமா நெத்தி வியர்வை சிந்தி சம்பாதிக்கிற காசை எதுக்குடா, நம்மக்கிட்ட கொடுக்கணும்..”

“எல்லாம் உன்னோட எழுத்துக்குதாண்டா…உன்னோட வேலை..தண்ணியப் போடுறது, எலக்கிய சந்திப்பு எதுவாச்சு நடந்துச்சுனா கலந்துக்குறது..டெய்லி பதிவைப் போடுறது..மப்புல தூங்குறது..திரும்பவும் பதிவைப் போடுறது…”

“டெய்லி பதிவா ரொம்ப கஷ்டமாச்சேடா..”

“ஒன்னியும் கவலப்படாதே..இப்ப ரோட்டுப் பக்கம் போற,..மழை பெஞ்சு தண்ணியா கிடக்கு..என்ன பண்ணுவ…”

“தாண்டிப் போவேன்..”

“அங்கதான் தப்பு பண்ணுற..தாண்டி போவியோ இல்லையோ..முதல்ல வந்து பதிவப் போடு…”ரோட்டில் தண்ணீர் தேங்கியிருந்தது..நான் தாண்டிப் போனேன்..அந்தப் பக்கம் போன பாப்பா, என்னை பார்த்து சிரித்தாள்..ரெண்டு வீடு தாண்டி தங்கியிருக்கும் அந்தப் பெண் இந்தப் பக்கம் சென்றாள்…”

“அட..சூப்பரு..அப்படி போட்டா..”

“நீ போட்டு பாரு..கமெண்டு வரும் பாரு..”நல்ல பதிவுண்ணே..சமூக விழிப்புணர்வுள்ள பதிவு..உங்க பதிவப்பார்த்த பிறகுதான் எனக்கு காலையில வெளிக்கி வருது..”

“ஆஹா..அம்புட்டு நல்லவய்ங்களா..”

“ம்..ஹீம்…இவிங்கள்ளாம் இல்லை..உண்ணாம, கொள்ளாம, கஷ்டப்பட்டு மாசா, மாசம் சேர்த்த காசை நம்மளுக்கு அனுப்பி…”அண்ணே..வைச்சுக்குங்கண்ணே..” உரிமையோட அனுப்புறாய்ங்க பாரு..அவிங்கதான் ரொம்ம்ம்ம்ப நல்லவய்ங்க…”

கோவாலு டக்குன்னு எழுந்து கெளம்புறான்…

“ராசா..நான் போறேன்…”

“கோவாலு..இப்ப என்ன நடந்துச்சுன்னு கிளம்புற..”

“இப்பவே….நான் பார்த்துக்கிட்டு இருக்குற வேலைய ராஜினாமா பண்ணுறேன்..நாளையில இருந்து ஆகுறேண்டா பதிவரு…”

“ஆஹா..கோவாலு…என்ன வேணும்னாலும் பண்ணிக்க..ஆனா, அந்த காபி டம்ளரை வைச்சுட்டு போ…”

“காபியாடா போட்டுருக்கிங்க,..உங்க வீட்டுல…காபில பாலே காணோம்….இட்லி சாம்பாருல, உப்பைக் காணோம்…தண்ணில கலரே இல்ல…”

ஆஹா..அண்ணே..விட்டா விருதே வாங்கிருவான் போலிருக்கே…

Sunday 11 December, 2011

ஒஸ்தி – ஒலகத்திரைப்பட விமர்சனம்




நான் பொதுவா, ஒலகத்திரைப்படமெல்லாம் பார்க்குறதில்லைண்ணே..கழுதை, அத யாருண்ணே, பொறுமையாக  உக்கார்ந்து பார்க்குறது. அவிங்க ஒன்னுக்கு போறதையே , ஒன்றரை மணிநேரம் காமிப்பாய்ங்க..அதுக்கெல்லாம் பொறுமை பத்தாதுண்ணே..நேத்துதான் கோவாலு தமிழுல சிம்பு நடிச்சஒஸ்தின்னு ஒரு ஒலகத்திரைப்படம் வந்துருக்கதான்னு சொன்னான்..

நமக்கு சிம்பு படம் பார்க்குறதுன்னாலே, அவரு மாதிரியே விரலு நடுக்கமுண்ணே..ஏதோ, “விண்.தா.வருவாயா”, “வானம்மாதிரி நடிச்சதுதானலே, நம்பிக்கையா போனேன்ணே..அதுவுமில்லாம, “குருவிங்கிற மாபெரும் ஒலகத்திரைப்படத்தை இயக்கிட்டு, ஒன்னுமே தெரியாம, அமைதியாக இருக்கிற ஒலகப்படத்தை இயக்கிய தரணி இயக்குரான்னு தெரிஞ்சவுடனே, என்னோட நம்பிக்கை டபுள் மடங்காச்சுண்ணே..

பவர்ஸ்டார், சாம் ஆண்டர்சன் மேல சத்தியமா சொல்லுறேண்ணே..நம்பிக்கை வீண் போகல..பல ஒலகத்திரைப்படங்களின் இலக்கண விதிகளை அநாயசமா மீறியிருக்குண்ணே, இந்தப் படம். இந்த படம் அடையப்போற உயரத்தை நினைச்சா, அந்த எல்..சி டவருக்கே(அடச்சே, உலகத்தரமுல்ல)..அது..வந்து..ஆங்க்..அந்த ஈபிள் டவரே கூச்சப்படப்போகுதுண்ணே..

ங்கொய்யாலே, அப்படி என்னடா உலகத்தரத்தை மீறியிருக்குதுன்னு கேக்குறீங்களாபேனா, பேப்பரை எடுத்து நோட் பண்ணிக்கீங்க.

இதுவரைக்கு சிம்பு நடிச்ச ஒலகத்திரைபடம் எல்லாத்துலயும், விரலை ஆட்டி, ஆட்டிதான் நடிச்சுருக்காப்ல..ஆனா, இந்த படத்துல, மொத்த ஒடம்பையும், டோட்டலா ஆட்டு, ஆட்டுன்னு ஆட்டுறாருன்னே. இதுதாண்ணே, முத இலக்கண மீறல்

இரண்டாவது, ஹீரோ கேரக்டரைசன்ணே..25 வயசு பயபுள்ள, இன்ஸ்பெக்டராக முடியுமா….அப்படின்னெல்லாம் கேட்கக்கூடாதுங்குறதுல டைரக்டர் கவனமா, கவனம் செலுத்தி, சிம்புக்கு 6 பேக்ஸ் வரவைச்சு அதை நியாயப்படுத்துராருண்ணே..சூர்யா, விக்ரம் போன்ற ஒலகநடிகரெல்லாம் இனிமேல் போலீசா நடிச்சா, இதைத்தான் இனிமேல் ரெபரன்ஸ் பண்ணனும் என்கிறதே, இலக்கணமீறல் தானே.

                             

திருநெல்வேலிகாரய்ங்க கூட அம்புட்டுலேபோட்டுருக்க மாட்டாய்ங்கண்ணே..படம் புல்லாலேபோட்டு ஒரு சாதனை புரிஞ்சுருக்காய்ங்கண்ணே..நல்லா பானிபூரி விக்குறவன் மாதிரி இருக்குற வில்லன திருநெல்வேலி பாஷையிலலேபோடவைச்சு, இன்னொரு இலக்கணமீறல் நடத்தியிருக்காருண்ணே இயக்குநர். ஆனாலும் ஒரு குறைண்ணே..படப்பெயரைஒஸ்திலேஅப்படின்னு மாத்தியிருந்தா, இன்னொரு இலக்கண மீறலா இருந்துருக்கும்

அடுத்ததுதாண்ணே, பெரிய இலக்கண மீறல். எல்லா ஒலகப்படத்திலயும் யதார்த்தத்தை காண்பிக்கிறேன்னுக்கிட்டு, கதாநாயகியை எண்ணை வடிஞ்ச மாதிரி அசிங்கமா காண்பிச்சிருக்காயிங்கண்ணேகடுப்பு கடுப்பா வரும். இதை மீறுரமாதிரி, நம்ம இயக்குநர், மண்பானைத்தொழில் செய்யுற ஹீரோயின் ரிச்சாவை செமரிச்சாகாமிச்சிருக்காருண்ணே..எப்ப பார்த்தாலும் அழகா, வடநாட்டுக்கார பொண்ணு மாதிரி, அழகா, மேக்கப் போட்டு, மஸ்காரா போட்டு, கண் மை இட்டு, கிராமத்துல தொப்புளை காட்டிக்கிட்டு வர்ற மாதிரி பண்ணி, இலக்கண விதிகளை எல்லாம்டமார்”, “டமார்ன்னு தெருவுல போட்டு உடைச்சிருக்காருண்ணே..அதுவும் பாடல் காட்சியில வெளிக்கி வர்ற மாதிரி சிம்பு டான்ஸ் ஆடுற பார்த்துக்கிட்டு, கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக்கிட்டு , கைய கால ஆட்டாம, ஒரு மூவ்மெண்ட்ஸ் கொடுக்காம, அப்படியே ரசிக்குறாங்க பாருங்க..க்ளாஸ்ணே..ஒலகத்தரம்கிராமத்துல ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுற பொண்ணு இடுப்புல சின்ன சைஸ் தங்க சங்கிலி போட்டுவிட்டதுதாண்ணே, பின்நவீனத்துவ இலக்கணமீறல்


இதுவரைக்கும்சுள்ளான்படம்தான் ஒலகத்திரைப்படத்துலயே டாப்புன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனால், இதெல்லாம் அதுக்குமேலண்ணே..டாம் க்ரூசு கூட இப்படியெல்லாம் பைட் பண்ண முடியாதுண்ணே..போலிஸ் ஜீப்பு மேல அப்படியே தாவி, அப்படியே ஏருலயே பறந்து, அதே நேரத்துல, இரண்டு கையில இருக்குற துப்பாக்கிய எடுத்து, இரண்டு வில்லனை அட் டையத்துல சுட்டு..யப்பாடி..கார்கில் போர் நடக்குறப்ப, சிம்புவை விட்டிருந்தா, இம்புட்டு சேதாரம் நடந்துருக்காதுண்ணே..ங்ங்கொன்னியா, பீரங்கிலாம், பீர்க்கங்காய் மாதிரி, தூக்கி எறிஞ்சுருப்பாருண்ணே. பெரும் இலக்கண மீறல் நடந்துருக்குண்ணே..

இம்புட்டு இலக்கண மீறலை பண்ணிட்டு ஒன்னுமே தெரியாத சின்னப்புள்ள மாதிரி, கடைசி காட்சியில ஹீரோவுக்கு சிக்கன் ஊட்டுற இயக்குநரைப் பார்த்ததுமே, எம்புட்டு அழுகாச்சியா வந்துச்சு தெரியுமாண்ணே..ங்கொய்யாலே, அப்படியே தெருவுக்கு போயி நானுமொரு இலக்கண மீறல் பண்ணனும்னு அம்புட்டு ஆசைண்ணே

அது சரிபடத்துல இலக்கண மீறலே இல்லாத காட்சிகள் எதுவுமே இல்லையாண்ணு கேட்டா..இருக்கு..சந்தானம் நகைச்சுவை காட்சிகள், நாசரை சிம்பு ஆஸ்பத்திரியில் மீட் பண்ணும் காட்சிகள், தமனின் இசையில் சில பாடல்கள். அவ்வப்போது ரசிக்கவைக்கும், சிம்புவின் குறும்புகள், ஜித்தன் ரமேஷின் ஆச்சர்யபடவைக்கும் நடிப்பு அப்படின்னு சில..

ஆனாலும் இத்தனையும் மீறி, ஒரு ஒலகப்படத்தை கொடுத்துட்டு, சிம்பு அப்பா, எவ்வளவு தன்னடக்கமா, “டே நாங்கல்லாம் யாரு தெரியுமா..அந்த காலத்துல டம்ஜிக்கு..டம்ஜிக்கு…சடாங்க்..சடாங்க்க்..என்னையெல்லாம் ஆப்பிரிக்கா காட்டுல கொண்டு விட்டாகூட ம்யீசிக் பண்ணுவேன்னு…” டி.வியில பேசுறதுதாண்ணே…இவ்வளவு தன்னடக்கம்தாண்ணே, இலக்கண மீறலோ, இலக்கணமீறல்..

கடைசியா, இந்த படத்தை எதுலயாவது வகைப்படுத்தலைன்னா, என்னை ஒலகத்திரைப்பட விமர்சகர்ன்னு ஏத்துக்குற மாட்டீங்கறதுன்னாலே, இந்தப்படம்….

“ஒலகத்திரைப்படங்களுக்கெல்லாம் ஒலகத்திரைப்படம்..மெகா ஒலகத்திரைப்படம்..”