Wednesday 29 April, 2009

என் ஓட்டு அம்மாவுக்குதாண்ணே…

நம்ம எல்லாம் அமெரிக்காவுல இருந்தாலும் அம்பானி பரம்பரை எல்லாம் இல்லீங்கண்ணே..சோத்துக்கே சிங்கி அடிச்சவயிங்க தாண்ணே..வீட்டில வாயைக்கட்டி, வயித்தைக்கட்டி படிக்க வச்சாயிங்கண்ணே….அந்த விசயத்துல அம்மாவ மறக்க முடியாதுண்ணே…எத்தனையோ நாளு நான் படிக்கிறதுக்கு தன்னோட வாழ்நாளை தியாகம் பண்ணியிருக்காங்கண்ணே..

எங்க அம்மாவுக்கு என் மேல அம்புட்டு பாசம்ணே..உயிரே விட்டிடுவாயிங்கண்ணே…நேத்து கால் பண்ணியிருந்தாங்கண்ணே..சோக்காலிங்களோட(நண்பர்கள்) பேசிக்கிட்டு இருந்தேன்..எப்போதும் அம்மா பேசுனா ஸ்பீக்கர்ல தான் போடுவேன்..காதுல கேக்குறத விட மனசால கேக்கலாம்ல..

“தம்பி ராசா, உடனே கிளம்பி வந்துருடா..”

“ஏன்மா..ஏதாவது பிரச்சனையா..”

“இல்லடா ராசா, ஏதோ பன்னி காயிச்சலாம்பா…டி.வில காமிக்கிறாயிங்கப்பா..குலை நடுங்குதுப்பா..சம்பாதிச்சது போதும்பா..வந்துருடா ராசா..”

பக்கத்துல இருக்குற சோக்காளி சும்மா இருக்காம,

“அம்மா, நீங்க கவலைப்படாதிங்கம்மா..ராசவ ஒன்னும் பண்ணாது…பன்னில இருந்து மனுசனுக்கு தான் பரவுதுதாம்..பன்னில இருந்து பன்னிக்கு பரவாதாம்..”

“அடி செருப்பால..நீதான்டா எறுமை..” அம்மா செல்லமா திட்டுனாயிங்கண்ணே..

அம்மா இப்படித்தாண்ணே…எல்லாத்துக்கும் பயப்புடுவாயிங்கண்ணே…ஓரு நாள் எல்லாரும் இங்க இருக்குறப்ப அவசரமா அம்மாகிட்டயிருந்து கால்..

“தம்பி, ஓடிடா..நிலநடுக்கம் வருதாம்..”

என் சோக்காளி அப்பிடியே டேபிளுக்கு அடியில போயிட்டாண்ணே..என்ன ஒரு முன்ஜாக்கிரதை பாருங்கண்ணே. நானும் நடுங்கி போயிட்டேண்ணே..

“அம்மா, என்ன சொல்லுறீங்க..”

“சன் டிவில பிளாஸ் நியுஸ் போடுறாயிங்கடா ராசா..ஜப்பானுல நிலநடுக்கமாண்டா..அமெரிக்கா ஜப்பான் பக்கத்துல தானே இருக்கு..ஓடிடுடா..”

ஒரு பக்கம் சிரிப்பா வந்தாலும், குழந்தைப் பாசம்ணே..

இப்படித்தான் நான் சென்னையில வேலை பார்க்கும்போது மதுரையில இருந்து சென்னைக்கு ரயிலுல கிளம்புவேண்ணே..என்னை உக்கார வச்சுட்டு தண்ணி பாட்டில் வாங்க போனாங்கண்ணே..பக்கத்துல உக்கார்ந்திருக்குரவர் அறிமுகம் செஞ்சுகிட்டாருண்ணே..ஏதோ பிஸ்கட் சாப்பிட்டு இருந்தார்..அம்மா வந்துட்டாங்கண்ணே..

“தம்பி ராசா, பத்திரமா போயிச்சேருப்பா..நிறைய திருட்டுப்பசங்க ரயில்ல வராயிங்களாம்பா..எதாவது பிஸ்கட் குடுத்தா வாங்கி சாப்பிடாதப்பா..கெரகம் புடிச்சவயங்க, மருந்து வச்சிருப்பாயிங்க..ஒன்னுக்கு போறப்ப பேக்க எடுத்துட்டே போப்பா..”

பக்கத்தில இருப்பவன் நிலமைய யோசிச்சு பாருங்கண்ணே..அப்படியே பிஸ்கட்ட மறச்சு வச்சிட்டு சிரிக்கிறாருண்ணே…அவருக்கும் அம்மா இருக்கும்தாண்ணே…அம்மா கண் நெறய தண்ணி..ரயில் கிளம்பும்போது சேலைய கையில புடுச்சிக்கிட்டு கூடவே ஓடி வாராங்கண்ணே…75 வயசுண்ணே…அப்பிடியே ரயில் சங்கிலிய புடிச்சி இழுத்துராம் போல இருந்துச்சுண்ணே…பாசத்துல எல்லா அம்மாவும் குழந்த மாதிரிண்ணே…

எனக்கு எங்க கம்பனியிலிருந்து அமெரிக்கா அனுப்புனாங்கண்ணே..எங்க வூட்டுல இருந்து வழியனுப்ப சென்னை வந்துந்துராயிங்கண்ணே..நமக்குத்தான் அமெரிக்க சான்சுன்னா பிரண்ட்ஸ் பார்ட்டி தான்னே..பிரண்ட்ஸ் கூட ஒரே பார்டிண்ணே..வீட்டுல இருந்து அம்மா வந்ததே மறந்துட்டேண்ணே..ஏர்போர்ட் வந்து எல்லாருக்கும் டாடா சொல்லுறப்ப தான் அம்மா நிக்குறதே ஞாபகம் வருது..சிலையா நிக்குறாங்கண்ணே…அப்படியே வந்து கட்டிப்பிடிச்சு அழுதாங்க பாருங்க..அவுங்க நெஞ்சுக்கூட்டுல இருக்குற பாசம் இன்னைக்கும் என் நெஞ்ச தொட்டுப்பார்த்தா தெரியும்னே….

“ராசா..விட்டிட்டு போறியடா..உன்னப் பார்க்காம எப்பிடிடா இருக்க போறென்..”

“2 வருசம் தானம்மா..வந்துடுவேன்மா…”

எங்க அம்மா பணம் வைக்கிறதுக்கு ஒரு சுருக்குப்பை வைச்சிருப்பாங்கண்ணா..அதுக்குள்ள கைய விட்டு எல்லாப் பணத்தையும் எடுத்து என் கையில திணிச்சாங்கண்ணே..எல்லா பணமும் அழுக்குண்ணே…ஆனா இப்பவும் மோந்து பார்த்தா எங்கம்மா வாசம்ணே…

“ராசா..செலவுக்கு வச்சிக்கடா..அப்பாகிட்ட சொல்லாதேடா..உடம்ப பத்திரமா பார்த்துக்கடா..”

“அம்மா, எதுக்கும்மா..அங்க எல்லாம் டாலர் தான்மா..”

“பரவாயில்லடா..எப்பவாவது உதவும்…”

பொஞ்சாதி தெய்வம்னு ஒரு பதிவுல எழுதினேன்னே..தெய்வம் கூட இருக்கா இல்லயான்னு தெரியாதுண்ணே..அம்மா தெய்வத்துக்கும் மேலண்ணே..பகுத்தறிவுக்கு எட்டாத ஒன்னுன்னா அது அம்மா பாசம்தாண்ணே…

இந்த தேர்தல்ல கண்ட காவாளிங்களுக்கு நல்ல ஓட்டுப் போடுறத விட எங்கம்மாவுக்குத்தாண்ணே கள்ள ஓட்டு போடப்போறேன்..ஒரு சீட்ல “எங்கம்மா”ன்னு எழுதி வச்சிட்டு வந்துடப் போறேன்..

உணர்ச்சிவசப்பட்டு நீங்க எனக்கு வோட்டுப் போடாம இருந்துராதிங்கண்ணே..கீழ உள்ள வோட்ட போட்டுங்கண்ணே நம்ம அம்மாவை நினச்சுக்கிட்டு…. 

31 comments:

Anonymous said...

அம்மாவுக்கு வோட்டுப் போட்சு ... விஜய்

தென்னவன். said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க

Anonymous said...

Great Raja.. Good writing.. I am totally impressed. I am interested only in reading political news and blogs.. Your title attracted me to read this one an I read fully with full involvement

Samora

கண்ணா.. said...

// பாசத்துல எல்லா அம்மாவும் குழந்த மாதிரிண்ணே… //

ரசித்தேன்...

எப்பிடி பாஸ் ... இப்பிடில்லாம் கலக்குறீங்க...

என்னமோ போங்க.....

பூக்காதலன் said...

முதல் முதலாக ஒரு ப்லோக் பார்த்து அழுதுவிட்டேன். இப்படி அலுவலக நேரத்தில் என்னை கண்ணை கசக்க வைத்து விட்டேர்களே
(ஒரு அன்பு வேண்டுகோள்: உங்கள் அம்மாவை உங்கள் கூடவே வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்)

Joe said...

அருமையான பதிவு.

பல பேரை அழ வைத்திருக்கும்!

Rajeswari said...

very nice..unarvupooramaa irukku..
vaalthukkal

Senthil said...

great great style of writing

RAM said...

Great........... God bless You

Anonymous said...

really nice.. i cried when i read this.. nice to read this.. my wishes to u ....

Unknown said...

என் மனதை தொட்ட பதிவு...

என் மனதில் எனது அம்மா பற்றிய நிகழ்வுகள் .... ....

அதை அப்படியே அழகான வார்த்தைகளை கொண்டு எழுதி உள்ளீர்கள்.....

எனது அம்மா இப்படிதான் ....அவர் கையில் இருக்கும் அணைத்து பணத்தையும் எனக்கு கொடுத்து விடுவார்......

இப்போது நான் அவருக்கு கொடுக்கும் நிலையில் இருந்தாலும் . ..

விடுமுறை முடிந்து கிளம்பும் போது ருபாய் நோட்டுகளை கையில் திணித்து வாழ்த்தி அனுப்புவார்.......

திரும்பி பார்க்காமல் (எனென்றால் என் கண்கள் முழுதும் கண்ணீர் நிறைந்து இருக்கும்) நேராக பேருந்து நிறுத்தம் சென்று விடுவேன்.......

>பாஸ்கரன் சுப்பிரமணியன்

Maduraiveeran said...

Feelings of india.. what a pity?

வெற்றி-[க்]-கதிரவன் said...

படிகுரப்ப எங்க ஆத்தா நெனப்பு வந்திடுச்சி.

கார்த்திகைப் பாண்டியன் said...

ரொம்ப அருமையான பதிவு நண்பா.. லைட்டா கண்ணு கலங்கிடுச்சு.. எல்லாருக்குமே அவங்க அம்மான்னா ஒசத்திதான் இல்ல? எனக்கு உங்களைப் பார்த்த பெருமையா இருக்கு.. வெளிநாடு போனாலும் நம்ம ஊரு வாசத்தோட நல்ல நல்ல பதிவுகளா எழுதுறீங்க..கலக்குங்க.. வாழ்த்துக்கள்..

பார்த்தசாரதி செல்லதுரை said...

தெய்வம் கூட இருக்கா இல்லயான்னு தெரியாதுண்ணே..அம்மா தெய்வத்துக்கும் மேலண்ணே.. this word is very correct

Kathir said...
This comment has been removed by the author.
Kathir said...

நல்லாயிருக்குண்ணே.....

:))

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
nonymous said...
அம்மாவுக்கு வோட்டுப் போட்சு ... விஜய்
29 April, 2009 8:31 PM
தென்னவன். said...
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க
29 April, 2009 8:46 PM
Anonymous said...
Great Raja.. Good writing.. I am totally impressed. I am interested only in reading political news and blogs.. Your title attracted me to read this one an I read fully with full involvement

Samora
29 April, 2009 9:11 PM
////////////////
நன்றி, விஜய், தென்னவன், சமொரா..

அவிய்ங்க ராசா said...

//////////

Kanna said...
// பாசத்துல எல்லா அம்மாவும் குழந்த மாதிரிண்ணே… //

ரசித்தேன்...

எப்பிடி பாஸ் ... இப்பிடில்லாம் கலக்குறீங்க...

என்னமோ போங்க....
//////////

நீங்கல்லாம் குடுக்குற உற்சாகம் தான் பாஸ்

அவிய்ங்க ராசா said...

///////////////////
முதல் முதலாக ஒரு ப்லோக் பார்த்து அழுதுவிட்டேன். இப்படி அலுவலக நேரத்தில் என்னை கண்ணை கசக்க வைத்து விட்டேர்களே
(ஒரு அன்பு வேண்டுகோள்: உங்கள் அம்மாவை உங்கள் கூடவே வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்)
30 April, 2009 12:15 AM
/////////////////////////

ஜுலை மாசம் நம்ம ஊருக்கே வரேன்...

அவிய்ங்க ராசா said...

///////////////////

Joe said...
அருமையான பதிவு.

பல பேரை அழ வைத்திருக்கும்!
30 April, 2009 1:03 AM
Rajeswari said...
very nice..unarvupooramaa irukku..
vaalthukkal
30 April, 2009 1:06 AM
Senthil said...
great great style of writing
30 April, 2009 1:55 AM
ramakrishnan said...
Great........... God bless You
30 April, 2009 2:40 AM
Sachanaa said...
really nice.. i cried when i read this.. nice to read this.. my wishes to u ....
30 April, 2009 2:42 AM
////////////////////////
எல்லாத்துக்கும் ரொம்ப நன்றிங்க..

அவிய்ங்க ராசா said...

//////////////////

பாஸ்கரன் சுப்ரமணியன் said...
என் மனதை தொட்ட பதிவு...

என் மனதில் எனது அம்மா பற்றிய நிகழ்வுகள் .... ....

அதை அப்படியே அழகான வார்த்தைகளை கொண்டு எழுதி உள்ளீர்கள்.....

எனது அம்மா இப்படிதான் ....அவர் கையில் இருக்கும் அணைத்து பணத்தையும் எனக்கு கொடுத்து விடுவார்......

இப்போது நான் அவருக்கு கொடுக்கும் நிலையில் இருந்தாலும் . ..

விடுமுறை முடிந்து கிளம்பும் போது ருபாய் நோட்டுகளை கையில் திணித்து வாழ்த்தி அனுப்புவார்.......

திரும்பி பார்க்காமல் (எனென்றால் என் கண்கள் முழுதும் கண்ணீர் நிறைந்து இருக்கும்) நேராக பேருந்து நிறுத்தம் சென்று விடுவேன்.......

>பாஸ்கரன் சுப்பிரமணியன்
30 April, 2009 2:50 AM
////////////////
அம்மா அற்புதம்கண்ணே..

அவிய்ங்க ராசா said...

///////////////////

பித்தன் said...
படிகுரப்ப எங்க ஆத்தா நெனப்பு வந்திடுச்சி.
30 April, 2009 4:47 AM
///////////////////

ரொம்ப நன்றிண்ணே..

அவிய்ங்க ராசா said...

///////////////

கார்த்திகைப் பாண்டியன் said...
ரொம்ப அருமையான பதிவு நண்பா.. லைட்டா கண்ணு கலங்கிடுச்சு.. எல்லாருக்குமே அவங்க அம்மான்னா ஒசத்திதான் இல்ல? எனக்கு உங்களைப் பார்த்த பெருமையா இருக்கு.. வெளிநாடு போனாலும் நம்ம ஊரு வாசத்தோட நல்ல நல்ல பதிவுகளா எழுதுறீங்க..கலக்குங்க.. வாழ்த்துக்கள்..
30 April, 2009 5:37 AM
பார்த்தசாரதி செல்லதுரை said...
தெய்வம் கூட இருக்கா இல்லயான்னு தெரியாதுண்ணே..அம்மா தெய்வத்துக்கும் மேலண்ணே.. this word is very correct
30 April, 2009 7:47 AM
Kathir said...
This post has been removed by the author.
30 April, 2009 10:53 AM
Kathir said...
நல்லாயிருக்குண்ணே.....

:))
30 April, 2009 10:54 AM
////////////////////////

தொடர்ந்து தரும் ஊக்கத்திற்கு நன்றி...

Anonymous said...

அப்படியே கலக்கி கலங்க வச்சுட்டே கண்ணு.
ஆனாக்க கட்சீலே கவுத்துப் பிட்டியே நாயமாக்கும்.

அம்மாவுக்கு என்னத்தை வேண்ணாலும் கொடுக்கலாந்தான் ஆனால் இந்த பாழாப்போன ஓட்டு மட்டும் வேணாம்.அது போல ஒரு கேவலம் அம்மாவுக்கு வேண்டாம்.
பாரு படிச்சவனாம்,டாக்டரு வேறேயாம் அப்ப சொன்னான் இன்னம இந்த நாயிக்கிட்டே போனா பெத்த அம்மாவோட படுத்த மாதிரின்னான்,இப்போ சே அசிங்கம் வேணாம்.
அம்மாவோட அருமை தெரியாத அரசியல் வாதியின்
அசிங்கம் அந்த ஓட்டு,அது வேணாம் நம்ம அம்மாவுக்கு.வாரா வாரம் கூப்பிட்டுப் பேசினா அதுதான் பாசம்.ஓட்டெல்லாம் வேசம் கண்ணு!

Raja said...

அம்மாவுக்கு வோட்ட போடு
மத்தவிய்ங்களுகெல்லாம் வேட்ட போடு

SUBBU said...

//சிலையா நிக்குறாங்கண்ணே…அப்படியே வந்து கட்டிப்பிடிச்சு அழுதாங்க பாருங்க..அவுங்க நெஞ்சுக்கூட்டுல இருக்குற பாசம் இன்னைக்கும் என் நெஞ்ச தொட்டுப்பார்த்தா தெரியும்னே….//

கண்ணுல தன்னி வந்துடுச்சின்னே :( :( :(

E said...

Super super... pottachu ootuu...

sukanmani said...

எங்க அம்மாவை , அவங்களோட பாசத்தை நெனைக்க வைச்சுட்டீங்களே. அங்கேயே உங்க எழுத்து ஜெஜிச்சுடுச்சு. கண்ணுல தண்ணிதான் போங்க.

Anonymous said...

Excellent pieces. Keep posting such kind of information on your page.

Im really impressed by your site.
Hello there, You've done an excellent job. I'll certainly digg
it and for my part suggest to my friends. I am sure they
will be benefited from this site.

Here is my web-site: zetaclear reviews

Anonymous said...

I every time used to read post in news papers but now as I am a
user of web thus from now I am using net for articles, thanks to
web.

Here is my blog post: house cleaning phoenix

Post a Comment