Monday, 13 April, 2009

மானாட மயிலாட, நான் சோத்துக்கு அல்லாட

வீட்டுல ஒரே அக்கப்போருங்கண்ணே..வார இறுதி வந்துட்டா ஒரே பிரச்சனை தான்..வேற ஒன்னும் இல்லைண்ணே..நம்மளுக்கு டையத்துக்கு சாப்பிடலைன்னா வயிறு ரித்தீஷ் மூஞ்சி மாதிரி ஆகிடும்..கரெக்டா சாப்பிட ஒக்காந்தா, கெரகம் புடிச்ச மானாட மயிலாட நிகழ்ச்சி போடுறாய்ங்க..சீரியல் பைத்தியம் கேள்விப்பட்டு இருப்பீங்க, ரியாலிட்டி ஷோ பைத்தியம் கேள்விப்பட்டு இருக்கீங்களா..ஒரு நிமிசம், வாராளான்னு பார்த்துகுறேன்..என் பொண்டாட்டி தாங்க..

 

இப்படித்தாங்க, போன வாரம் கொலைப்பசி..கண்ண கட்டுதுண்ணே..சோறை போடுண்ணு சொன்னா, “இருங்க, மானட மயிலாட முடியட்டும்” ங்குறாங்க..அதுக்குள்ளே என் உசிரு முடிஞ்சிடும் போல..அது என்னடி, எல்லாரும் சீரியல் பார்க்குறாங்க, நீ மட்டும் வித்தியாசமா, மானாட மயிலாட பார்க்குறேன்னு கேட்டா, “சீரியல் என்னங்க சீரியல், இது என்னம்மா செண்டிமெண்டா இருக்கு தெரியுமா…எனக்கு அழுகை, அழுகையா வருது தெரியுமான்னு” கேட்கிறாய்ங்கண்ணா..எனக்கு பசியிலே அழுகை தாங்க முடியலே.”சரி போட்டுத் தொலை” ன்னு சொன்னதுதாங்க நான் வாழ்க்கையிலே பண்ணுன ரெண்டாவது தப்புங்க..

ஷோ ஆரம்புத்துலே, ஒரு பையன் வந்து மூச்சு விடாம பேசுராய்ங்க..காம்பியராம்..கூட ஒரு பாப்பா, கர்ச்சிப் மாதிரி ஏதோ துணி போட்டு வந்து எண்ணமோ பேசுதுங்க..அப்புறம் ஜட்ஜஸ்ச கூப்பிட்டாங்க பாருங்க..குஷ் மேடம், கலா அக்காவும்(அப்படித்தான் ஷோவுல கூப்பிடுராய்ங்க..) வந்து ஒரு ஆட்டம் போட்டாய்ங்க பாருங்க, நிலநடுக்கம் அமெரிக்காவுல வராதுண்ணு கேள்வி பட்டு இருக்கேன்..தப்புண்ணே..நேருல பார்த்தேண்ணே…என்னொட லேப்டாப் ரெண்டு நிமிசம் ஆடிப் போயிடுச்சுண்ணே..இருக்க புடிச்சிக்கிட்டேன்..”என்னடி இது”ன்னு கேட்டா “அய்யோ…பாருங்க, எப்படி ஆடுறாங்கண்ணு”  சிலிக்குறாங்கண்ணே..எனக்கு பசி காதை அடைக்குதுண்ணே..”அடியே எப்படி முடிப்பாயிங்க” கேட்டா, கொலைவெறி பார்வை பார்க்குறா…

நிகழ்ச்சியை பார்க்க, பார்க்க எனக்கு கண்ணை கட்டுச்சுண்ணே..ரெண்டு பேர் வந்து சினிமாவுல ஆடுறதை விட சரி நெருக்காமாய் ஆடுறாய்ங்கண்ணே..” எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சுண்ணே, ஆஹா இவ்வளவு நாளா, மிட்நைட் மசாலா பார்த்தோமே, இதை பார்க்காமண்ணு..”அதுக்கப்பறம் ரம்பா மேடம் பேசினாங்க பாருங்க..இன்பத்தேனுங்க..தமிழை இவ்வளவு தெளிவா நன்னன் அய்யா கூட பேச முடியாதுங்கண்ணே..எனக்கு புல்லரிச்சிருச்சுண்ணே…

கொஞ்ச நேரம் கழிச்சு பார்த்தா எல்லாரும் அழுக ஆரம்பிச்சுட்டாய்ங்கண்ணே..என்னடான்னு பார்த்தா, யாரையோ போட்டிய விட்டு நீக்குராய்ங்களாம்..அவிங்க வாழ்க்கையே போன மாதிரி கேவி கேவி அழுகுறாய்ங்கண்ணே..” என்னடா நிகழ்ச்சியில தானே அழுகுறாய்ங்க, பக்கத்துல அழுகை சத்தம் கேக்குதுண்ணே..’ பார்த்தா, என் பொண்டாட்டி..என்னை கட்டிக்கிட்டு பொறந்த வீட்டை விட்டு வரும்போது கூட இப்படி அழுகலை, அப்படி ஒரு அழுகை..சமாதானப்படுத்தறதுக்குள்ளே போதும் போதும்னு ஆகிடுச்சு..

ஓரு வழியா கூடி கும்மியடிச்சுட்டு அழுது புரண்டு முடிச்சுட்டாயங்க..எனக்கு பாதி பசி போகிடுச்சுண்ணே..சரி இப்பவவாவது சோத்தை போடுடிண்ணு சொன்னா, “அய்யோ, நிகழ்ச்சி பார்க்குற அவசரத்துல அரிசிய அடுப்புல வைச்சுட்டு ஸ்டவ் பத்த வைக்காம விட்டுண்ணேன்னு சொல்லுராயிங்க…” சரி இப்பவாவது வைடி ன்னு சொன்னா, இருங்க “பாய்ஸ் vs கேர்ள்ஸ்” முடியட்டும் சொல்றாய்ங்கண்ணே..இன்னக்கி வழக்கம் போல தண்ணிக்கஞ்சி தான்..உங்க வூட்டுல எப்படிங்கண்ணே..

17 comments:

டக்ளஸ்....... said...

எல்லா வீட்டுலயும் இந்த பிரச்சனைதேன்...
நம்ம பக்கம் வந்து பாருங்க!
டிவி பண்ணுற லொள்ளுகள....!

டக்ளஸ்....... said...

ஏனுங்கண்ணே அமெரிக்காவுலயுமா "மானாட மயிலாட" நைட்டே பொடுறாங்கே...
நீங்க வெயிட் பண்ணுனது நைட்டு சாப்பாட்டுக்கா?

Suresh said...

super appu :-) ha ha apprum vottum pottachu

Suresh said...

ungala follow panlam na follower widget illaiyae thalai

Joe said...

ஹா ஹா ஹா!
கலக்குறீங்க தம்பி!

அனைவருக்கும் எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.
http://joeanand.blogspot.com/2009/04/blog-post_9262.html

ஜி said...

:)) இருங்க போய் அப்படி என்னத்தான் மிட்நைட் மேட்டர் இருக்குன்னு பாத்துட்டு வர்றேன் ;))

Senthil said...

neenga veliyile sollitteenga, naanga sollalai
,ambuttuthan

பித்தன் said...

எள்ளது வூடுளையும் இதுதான் நடந்துகினு கீது...

இப்ப எல்லாம்,, ரியாலிட்டி ஷோ செண்டிமெண்ட் சீன் எழுதுரதுக்குதான் சம்பளம் அதிகமாம்.. அப்படியே அவிங்க நடிகுறது கூட தத்ரூபமா இருக்கு...

என்ன பண்ண சீரியல வச்சி எவ்வளவு நாளைக்கு தான் பொழப்ப ஓட்டமுடியும்....

ச்சின்னப் பையன் said...

வாய்ப்பே இல்லை. சிரிச்சிக்கிட்டே இருக்கேன்.
:-))))))))

Girijaraghavan's Blog said...

உங்கள் நகைச்சுவை எழுத்து நடை பிரமாதம் !
பெண்களை முட்டாள்கள் ஆக்கிக் கொண்டிருக்கின்றன இந்த மாதிரி ஷோக்கள் !

வழிப்போக்கன் said...

ஹூஹாஹாஹா...
பதிவை படித்து சிரித்தேன்...
:)))

sasirekha said...

சிரிச்சிக்கிட்டே இருக்கேன்........

tamil cinema said...

ஒரு முறை வாருங்கள். உங்களுக்கு பிடித்த புக்மார்க் தளம்
nellaitamil

ajrajini said...

pottaachu.. pottaachu... yethannai

TAARU said...

எங்கள் தலைவனின் [ரித்திஷ்]முகம் பற்றி சிறு குறிப்பு கொடுத்த நண்பன் ராசாவுக்கு நன்றி...

ஊரெல்லாம் இதே கொடுமை தானுங்கோ. இத ஆரம்பிச்சு வச்சது விஜய் டிவி [அவிங்கள மொதல்ல கொல்லணும்].... அதையும் கூட இவிங்க காப்பி அடிகிராய்ங்க.....

/* வந்து ஒரு ஆட்டம் போட்டாய்ங்க பாருங்க, நிலநடுக்கம் அமெரிக்காவுல வராதுண்ணு கேள்வி பட்டு இருக்கேன்..தப்புண்ணே.. */
இதுக்கே இப்டியா? என் தல விஜய் படத்துல குஷ் போட்ட ஆட்டத்த நீங்க பாக்கலன்னு நினைக்கிறேன்... ங்கொக்க மக்கா.... அத மொதல்ல பாருங்கோ... :-)

/* ரெண்டு பேர் வந்து சினிமாவுல ஆடுறதை விட சரி நெருக்காமாய் ஆடுறாய்ங்கண்ணே..*/
ஓசில கிடைக்குரத, இப்டி எதாவது எழுதி கெடுத்துபுடாதீக அண்ணே... உங்களுக்கு கோடி கும்புடு.

from: அய்யனார்.

tamil said...

கலா அக்கா , நல்லா கிழிச்சாங்களா ?

anuncia said...

ரொம்ப அருமைங்க…தொடர்ந்து எழுதுங்க…

Post a Comment