Thursday, 23 April, 2009

பொங்ஞ்சாதி தெய்வம்ண்ணே...

இப்ப நான் சொல்லப் போற விசயம் கல்யாணம் ஆகாதவங்களுக்கு உணர்வுப் பூர்வமா புரியுமுன்னான்னு தெரியலை. ஆனா கல்யாணமானவங்களுக்கு(அழுவாதிங்கண்ணே..) கண்டிப்பா தெரியும்ணே…

கல்யாணம் ஆகாததுக்கு முன்னாடி நமக்கு சோக்காலிங்க(நண்பர்கள்) அதிகம்ணே..உசிரக்கூட குடுப்போம்ணே..தளபதி படம் பார்த்த பிறகு வெறி புடிச்சு அலைஞ்சோம்ணே..யாரு முதல உயிரக் குடுப்பதுக்குன்னு..வீட்டுல இருந்த நேரத்த விட சோக்காலிங்க கூட இருந்த நேரம்தான் ஜாஸ்தின்ணே..

டாவடிக்கிறதுக்கு கூட நாங்க சண்டை எல்லாம் போட மாட்டோம்ணே..பாரபட்சம் பார்க்காம டாவடிப்போம்ணே…அப்படி இருந்த நேரத்துல தான் நம்ம சோக்காலி ஒருத்தன் கேட்டாய்ங்க..

“ஏண்டா, நாம் இப்படி எல்லாம் ஒன்னா இருக்கோமேடா..கல்யாணம் ஆனப்பிறகு இது போல ஒன்னா இருப்போமாடா…”

எனக்கு கோவம் காவிரி ஆத்து தண்ணி(விடுங்கண்ணா, அரசியல் பேசக்கூடாது) போல பொத்துகிட்டு வந்துச்சுங்கண்ணே..

“டே..சோக்காளிங்களா, ஒரு பொண்ணுனால நம்ம வாழ்க்கை பிரியக்கூடாதுடா..கல்யாணத்துக்கு அப்புறம் கூட சேர்ந்தே இருக்கணும்டா..”

சிலிர்த்துகிட்டே சபதம் செஞ்சோம்ண்ணே..

நமக்கு கல்யாணம் ஆனப்பிறகு கூட, பொஞ்சாதிக்கிடா ஸ்டிரிக்டா சொல்லிப்புட்டேன்..

“இந்தா புள்ள..(விஜயகாந்த் மாதிரி வாசிக்காதிங்கப்பூ..), நமக்கு சோக்காலிங்க தான் முதல்ல..அப்புறம் தான் நீ..ஆபிஸ் முடிஞ்சு சோக்காலிங்களோட பேசிட்டுத்தான் வீட்டுக்கு வருவேன்..”

நமக்கு நட்பு கற்பு மாதிரிண்ணே…சொன்ன மாதிரியே ஆபிஸ் முடிஞ்ச பிறகு, சோக்காலிங்கட்ட போயிருவேண்ணே..வார இறுதியானா, சோக்காலிங்களுக்கு வீட்டுல தானே சாப்பாடு..நம்ம பசங்க நம்மளை பத்தி பெருமையா பேசுனாயிங்கண்ணே…

அப்பதாண்ணே அது நடந்துச்சு…மஞ்சக்காமாலை வந்து படுத்த படுக்கையாயிட்டேண்ணே..ரொம்ப கஷ்டம்ணே..யாருக்கும் அது வரக்கூடாதுண்ணே..எந்திருக்ககூட முடியாதுண்ணே..நம்ம சோக்காலிங்க வந்தாய்ங்கண்ணே ஹார்லிக்ஸ் பாட்டிலோட..1 மணி நேரம் கவலைபட்டாயிங்கண்ணே..போயிட்டாங்கண்ணே..அவிய்ங்களையும் சொல்லக் கூடாதுண்ணே…நாந்தானா அவிங்க வாழ்க்கை..கூடவே இருந்தா பாருங்க, பொஞ்சாதி..அம்மா மாதிரிண்ணே…அதுதாண்ணே உண்மையான அன்பு….துடிச்சு போயிட்டாங்கண்ணே..ஒரு வாரமா அவ தூங்கி பார்க்கலைண்ணே..என்னால எழுந்திரிக்க கூட முடியலண்ணே..என்ன அப்படியே தாங்கிக்கிட்டாண்ணே..எத்தனை நாள் ஊரு சுத்திட்டு 10 மணிக்கு வந்திருப்பேன்..எத்தனை நாள் சொல்லாம கொள்ளாம சோக்காலிங்களோட படத்துக்கு போயிருப்பேன்..எல்லாத்தையும் தாங்கிக்கிட்டாண்ணே..அதுதாண்ணே பொஞ்சாதி..

எப்படி இருந்தவிங்க, நம்மளை நம்பி எல்லாத்தையும் விட்டுட்டு வந்துருப்பாயிங்கண்ணே..பொஞ்சாதிங்க எதிர்பார்க்குரது நகையும் சேலையும் இல்லிங்கண்ணே..நம்மகிட்ட இருந்து கொஞ்சம் அன்புண்ணே..ஆபிஸ் போகும்போது, “நீதான் என் உயிரு”ண்ணு ஒரு வார்த்தை சொல்லி பாருங்க, பொங்கிருவாயிங்கண்ணே…

நம்மளையே நம்பி வந்துருக்கயிங்கண்ணே..எங்கேயோ இருக்கிற தெய்வம் நம்ம கேட்டாதாண்ணே எதுவும் கொடுக்குது..எதுவும் கேக்காம கொடுக்கிற தெய்வம் பொஞ்சாதிங்கண்ணே..

இப்ப கூட பாருங்க..நைட் லேட் ஆகிடுச்சு..டீ போட்டுத் தரவான்னு கேக்குராங்கண்ணே..தெய்வம்ண்ணே…

இந்த பதிவை படிக்கிறப்ப உங்க பொஞ்சாதி ஞாபகம் வந்தா…நீங்களும் நம்ம ஜாதிங்கண்ணே… கீழ உள்ள வோட்டை போட்டுட்டு அண்ணிய கேட்டதா சொல்லுங்கண்ணே..


30 comments:

Anonymous said...

//இந்த பதிவை படிக்கிறப்ப உங்க பொஞ்சாதி ஞாபகம் வந்தா…நீங்களும் நம்ம ஜாதிங்கண்ணே… கீழ உள்ள வோட்டை போட்டுட்டு அண்ணிய கேட்டதா சொல்லுங்கண்ணே..//
சரியாய் சொ்ண்ணிங்கண்ணே....

கார்த்திகைப் பாண்டியன் said...

ஆகா.. கடைசில செண்டிமேன்ட்ட பிழிஞ்சு எடுத்துட்டீங்க நண்பா.. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை.. ஆனாலும் ஒன்னு சொல்றேன்.. எங்க அண்ணி.. அதானே.. உங்க ஆதுக்காரம்மா கொடுத்து வச்சவுங்க..

satheeskannan said...

its so touching....

Vetri said...

தம்பி இதை முதல்ல படிச்சது உங்க அண்ணிதான்...ஊர்ல எல்லாரும் எப்பிடி இருக்காங்க பாருங்க.. நீங்களும் இருக்கீங்களேன்னு ஒரு இடி...ரொம்ப டாங்க்சுங்கோ தம்பி

Joe said...

அண்ணே, அண்ணே-ன்றானுங்க, இங்க எவன் அண்ணன், எவன் தம்பி-ன்னே தெரிய மாட்டேங்கிது!

"ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடி டீ சாப்பிட கூடாது, வேணும்னா ஒரு லிட்டர் பீர் ஊத்திக் கொடு, என் தெய்வமே"-ன்னு சொல்லிடுங்கப்பு!

தீப்பெட்டி said...

அப்படீன்னா கல்யாணம் பண்ணிகலாம்னு சொல்லுறீங்களா...பாஸ்

biskothupayal said...

பொங்ஞ்சாதி தெய்வம்ண்ணே...


நல்லதா சொன்னா கேட்டுக்கிரோம்

Senthil said...

nallaa ice vachtteenga

good

Anonymous said...

//இந்த பதிவை படிக்கிறப்ப உங்க பொஞ்சாதி ஞாபகம் வந்தா…நீங்களும் நம்ம ஜாதிங்கண்ணே…//

சூப்பர் தலைவா பின்னிட்ட நானும் ஒங்கட்சி தான்

mythees said...

சூப்பர் தலைவா பின்னிட்ட......................

TAARU said...

நம்ம ஊரு காரைங்க நல்லவிங்க.....
நீங்க ரொம்ப நல்லவரு.....

ஒன்னு இல்ல .... ஒன்பது ஒட்டு போடலாம்னே...
already ஒன்னு போட்டாச்சு..

am a bachelor; but உங்க blog ஆழ்மனச தொட்டுருச்சு..keep it Up...
வாழ்த்துக்கள்.

உங்களயும் பின் பற்றுகிறேன்... அட follower list ல add ஆயிருக்கேன்னேன்.

பித்தன் said...

உங்களுக்கு கிடைத்த பொஞ்சாதி தெய்வம் அதான் ரொம்ப பீலிங்க்ஸ்சா எழுதிபுட்டிக, எங்கள பாருக. ......

roja said...

romba nalla irukkunga.....வாழ்த்துக்கள்!தொடர்ந்து எழுதுங்க...

ராஜா said...

Anonymous said...
//இந்த பதிவை படிக்கிறப்ப உங்க பொஞ்சாதி ஞாபகம் வந்தா…நீங்களும் நம்ம ஜாதிங்கண்ணே… கீழ உள்ள வோட்டை போட்டுட்டு அண்ணிய கேட்டதா சொல்லுங்கண்ணே..//
சரியாய் சொ்ண்ணிங்கண்ணே..///

வருகைக்கு நன்றிண்ணே.....

ராஜா said...

///
கார்த்திகைப் பாண்டியன் said...
ஆகா.. கடைசில செண்டிமேன்ட்ட பிழிஞ்சு எடுத்துட்டீங்க நண்பா.. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை.. ஆனாலும் ஒன்னு சொல்றேன்.. எங்க அண்ணி.. அதானே.. உங்க ஆதுக்காரம்மா கொடுத்து வச்சவுங்க..
///

நல்ல அண்ணி கிடைக்க இப்பவே வாழ்த்துக்கள்..

ராஜா said...

//
satheeskannan said...
its so touching..//

நன்றி சதீஷ்..

ராஜா said...

Vetri said...
தம்பி இதை முதல்ல படிச்சது உங்க அண்ணிதான்...ஊர்ல எல்லாரும் எப்பிடி இருக்காங்க பாருங்க.. நீங்களும் இருக்கீங்களேன்னு ஒரு இடி...ரொம்ப டாங்க்சுங்கோ தம்பி
///

வாழ்க்கையிலே இதல்லாம் சகஜம்னே..

ராஜா said...

Joe said...
அண்ணே, அண்ணே-ன்றானுங்க, இங்க எவன் அண்ணன், எவன் தம்பி-ன்னே தெரிய மாட்டேங்கிது!

"ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடி டீ சாப்பிட கூடாது, வேணும்னா ஒரு லிட்டர் பீர் ஊத்திக் கொடு, என் தெய்வமே"-ன்னு சொல்லிடுங்கப்பு
////

மதுரைப்பக்கம் எல்லாத்தையும் அண்ணேன்னு தான் கூப்பிடுவோம்...பீரா..ஆத்தாடி...

ராஜா said...

தீப்பெட்டி said...
அப்படீன்னா கல்யாணம் பண்ணிகலாம்னு சொல்லுறீங்களா...பாஸ்
///

பண்ணிக்குங்கண்ணே..அப்புறம் நாங்க வாங்குற அடியெல்லாம் நீங்க எப்ப வாங்குறது...

ராஜா said...

biskothupayal said...
பொங்ஞ்சாதி தெய்வம்ண்ணே...


நல்லதா சொன்னா கேட்டுக்கிரோம்
/////////

நன்றிண்ணே..

ராஜா said...

Senthil said...
nallaa ice vachtteenga

good
///////

வேற என்ன பண்றதுண்ணே...சோறு வேணும்ல

ராஜா said...

Anonymous said...
//இந்த பதிவை படிக்கிறப்ப உங்க பொஞ்சாதி ஞாபகம் வந்தா…நீங்களும் நம்ம ஜாதிங்கண்ணே…//

சூப்பர் தலைவா பின்னிட்ட நானும் ஒங்கட்சி தான்
///

you mean P.M.K , "Pontatigal Munnetra Kazhagam"

ராஜா said...

mythees said...
சூப்பர் தலைவா பின்னிட்ட.....................
///////////////

நன்றிண்ணே..

ராஜா said...

//நம்ம ஊரு காரைங்க நல்லவிங்க.....
நீங்க ரொம்ப நல்லவரு.....

ஒன்னு இல்ல .... ஒன்பது ஒட்டு போடலாம்னே...
already ஒன்னு போட்டாச்சு..

am a bachelor; but உங்க blog ஆழ்மனச தொட்டுருச்சு..keep it Up...
வாழ்த்துக்கள்.

உங்களயும் பின் பற்றுகிறேன்... அட follower list ல add ஆயிருக்கேன்னேன்////////

வருகைக்கு நண்றி அண்ணே...கூடிய சீக்கிரம் பத்திரிக்கை அனுப்புங்க..

ராஜா said...

பித்தன் said...
உங்களுக்கு கிடைத்த பொஞ்சாதி தெய்வம் அதான் ரொம்ப பீலிங்க்ஸ்சா எழுதிபுட்டிக, எங்கள பாருக. .....
/////

ஹி..ஹி...

Kanna said...

// கூடவே இருந்தா பாருங்க, பொஞ்சாதி..அம்மா மாதிரிண்ணே…அதுதாண்ணே உண்மையான அன்பு….துடிச்சு போயிட்டாங்கண்ணே..ஒரு வாரமா அவ தூங்கி பார்க்கலைண்ணே..என்னால எழுந்திரிக்க கூட முடியலண்ணே..என்ன அப்படியே தாங்கிக்கிட்டாண்ணே..//


கலக்கல்... ராஜா...

அருமையான நடை...

தொடருங்கள்......

குடுகுடுப்பை said...

பித்தன் said...
உங்களுக்கு கிடைத்த பொஞ்சாதி தெய்வம் அதான் ரொம்ப பீலிங்க்ஸ்சா எழுதிபுட்டிக, எங்கள பாருக. .....
//
நாங்கெல்லாம் ஒரு சாதி

Sasirekha Ramachandran said...

புரிஞ்சிகிட்டதுக்கு உங்கள பாராட்டாம இருக்க முடியல...அப்புறம் அதென்ன சோக்காளி...அது சோக்காளி இல்ல சேக்காளி...

சுபா பிரேம்குமார் said...

நல்ல பதிவு... :)

பாராட்டுகள் :)

I LOVE YOU said...

AV,無碼,a片免費看,自拍貼圖,伊莉,微風論壇,成人聊天室,成人電影,成人文學,成人貼圖區,成人網站,一葉情貼圖片區,色情漫畫,言情小說,情色論壇,臺灣情色網,色情影片,色情,成人影城,080視訊聊天室,a片,A漫,h漫,麗的色遊戲,同志色教館,AV女優,SEX,咆哮小老鼠,85cc免費影片,正妹牆,ut聊天室,豆豆聊天室,聊天室,情色小說,aio,成人,微風成人,做愛,成人貼圖,18成人,嘟嘟成人網,aio交友愛情館,情色文學,色情小說,色情網站,情色,A片下載,嘟嘟情人色網,成人影片,成人圖片,成人文章,成人小說,成人漫畫,視訊聊天室,性愛,聊天室,情色,a片,AV女優

Post a Comment