Monday, 6 April, 2009

கொன்னுபுட்டாய்ங்கடா குமாரு......

நமக்கு மதுரைக்காரங்கய்னா கொஞ்சம் பாசம் அதிகம்ணே….
என்னுடைய அமெரிக்க அலுவலகத்தில் ஒருத்தர் கூட நம்மூர்காரங்க இல்லண்ணே…நம்ம பாஷை பேசாம ரொம்ப கஷ்டமா இருக்கும்ணே……

கொஞ்சநாள் கழித்து ஒருத்தர் சிக்கினாய்ங்க..பெயர் ரத்தினம்…புதிதாக வேலைக்கு வந்திருந்தாங்க…கால் கொஞ்சம் ஊனங்க….(மன்னிச்சிடுங்க தமிழில எப்படி சொல்றதுன்னு தெரியலேண்ணே……….)

முதல் நாள் பார்த்த உடனே தெரிஞ்சு போச்சு…….நம்ம ஊர்க்காரர்ருனு…
சிக்கினான்டா என்று ராமனாதபுரம் கிடைத்த ரித்தீஷ் போல சந்தோசம் எனக்கு..

“அண்ணே ,வாங்கண்ணே …எப்படிண்ணே இருக்கீங்க…..”

“நல்லா இருக்கேண்ணே….எந்த ஊருங்க …மதுரைப்பக்கம்…’’

“நம்மளுக்கு சோழவந்தான் பக்கம்…நீங்கண்ணே??”

“நம்மளுக்கு அலங்காநல்லூர் அண்ணே..”என்றார்.

“அமெரிக்கா எப்படி இருக்குண்ணே..”என்றேன்.

“கொன்னுப்புட்டாய்ங்கடா குமாரு…..(என்னுடைய பெயர் ராஜாவாக இருந்தாலும் என்னை குமாரு என்றே கூப்பிடுறாரு…அவரு சொந்தகார பய என்னை மாதிரி இருக்கானாம்…..)
சிரித்தேன் ….அவர் பேச பேச கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கும்….
எப்ப பார்த்தாலும் “கொன்னுபுட்டாய்ங்கடா குமாரு…”என்பார்…அந்த வார்த்தையைக் கேட்டாலே எனக்கு சிரிப்பு வந்துடும்…அவருக்கு தான் ஊனம் என்பது பற்றி சிறிது தாழ்வு மனப்பான்மை உண்டு… நாங்க தான் அவருக்கு ஊக்கமா இருப்போம்….

ஒருநாள் எங்கிட்டே வந்தார் தயக்கமாய்…..

“தம்பி ….கேட்டுறேன்னு தப்பா எடுத்துக்காதே… இங்கே பப் எங்க இருக்கு” என்றார்.

பப் என்பது இங்கு குடித்து விட்டு கும்மாளம் போடும் இடம்…”
“அண்ணே…..எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு…என் பொண்டாட்டி கொண்ணே புடுவாய்ங்கண்ணே…..நான் இடம் சொல்றேன்…நீங்க போய்ட்டு வாங்க”என்றேன்.

“குமாரு என்னை எல்லாம் உள்ளே விடுவாய்ங்களா”

“அண்ணே ….என்ன அண்ணே இப்படி எல்லாம் கேக்குறிங்க…நம்ம ஊருதேன் அப்படி இருக்கும்….இங்கே எல்லாமே சமத்துவம்ணே….நீங்க போங்கண்ணே….”என்றேன்.

அடுத்த நாள் அவர் முகத்தை பார்க்கும்போது 100 வாட்ஸ் பல்பு இருந்தது.

“அண்ணே எப்படின்னே இருந்துச்சு…”என்றேன்.

“கொன்னுபுட்டாய்ங்கா குமாரு…என்னம்மா இருக்கு ..இங்க பொண்ணுங்க.. டான்ஸ் ஆடித் தீர்த்து புட்டோம்ல..”என்றார்.

விழுந்து விழுந்து சிரித்தேன்.

கொஞ்ச நாள் அவர் நடவடிக்கைகளில் கொஞ்சம் மாற்றம் தெரிந்தது…அடிக்கடி போன் பேச ஆரம்பித்தார்..

“அண்ணே …ஆளு கொஞ்சம் மாறீட்டீங்க..என்ன நடக்குது..”என்றேன்.

“குமாரு…எனக்கெல்லாம் கல்யாணம் ஆக்ப்போகுது நம்மளையும் ஊருல ஒரு பொண்ணு கட்டிக்கிறேன்னு சொல்லியிருக்கு குமாரு…நிச்சயதார்த்தம் கூட பண்ணிடடாங்க நான் இல்லாம…தினமும் வெப்கேம்ல பார்த்து பேசிக்கிறோம்லா.. சொல்லும்போதே பெருமிதம் தெரிந்தது.

“அண்ணே….சொல்லவே இல்லை..ரொம்ப சந்தோசம்னு …….சிரித்தேன்…..
இரண்டு மூன்று வாரங்கள் கழித்து அவரை அலுவலகத்தில் பார்க்கவே முடியவில்லை…அவரைத் தேடி வீட்டிற்கே போனேன்…ஒரு கையில் சிகரெட்,இன்னொரு கையில் பீர்….இரண்டு நாள் தூங்கவில்லை போலும்….”

“அண்ணே ..என்ன ஆச்சுண்ணே..என்ன நடந்துச்சு… ஆளே பார்க்க முடியலே….

“குமாரு ……முடியலேடா……வேலையை விட்டு தூக்கிட்டாய்ங்கடா…..ப்ராஜெக்ட் முடிஞ்சுசாம்படா…நீ எனக்கு தேவையில்லைன்னு சொல்லிட்டாய்ங்க……”

“அண்ணே…. விடுங்கண்ணே… இதுக்கு போய் கவலைப்பட்டுக்கிட்டு…”என்றேன்.

“இல்லடா குமாரு…வேலை போனது கூட பரவாயில்லைடா ..பொண்ணு வீட்டிலே கல்யாணத்தை நிறுத்திபுட்டாய்ங்கடா…அந்த பொண்ணு போன் பண்ணாக்கூட எடுக்க மாட்டீங்க்குது…எனக்கெல்லாம் பொண்ணு கிடைக்கிறதே கஷ்டமுடா…..எல்லாம் அமைஞ்சும் இப்படி ஆகியிடுச்சேடா….. கொன்னுப்புட்டாய்ங்கடா குமாரு…..”என்றார்.

இந்தமுறை என்னால் சிரிக்க முடியவில்லை.

11 comments:

Anonymous said...

கொன்னுப்புட்டாய்ங்கடா

biskothupayal said...

சொல்லி தெரிவதில்லை வாழ்க்கை!
சொல்லிதெரிய வைத்துவிட்டிர்கள்
வாழ்த்துக்கள் !

டக்ளஸ்....... said...

உலகத்துல காசுதான் எல்லாமே...
காசு இல்லைன்னா கழுதை கூட மதிக்காது..
இதுல ரத்தினமென்ன நீயென்ன நானென்ன?
யாரும் விதிவிலக்கில்லை...!

ஆமா நீங்க சோழவந்தானா?

கார்த்திகைப் பாண்டியன் said...

நம்ம ஊரு நடையில நல்லா எழுதி இருக்கீங்க.. கொன்னுபுட்டீங்க போங்க.. உங்கள் நண்பருக்கு நடந்தது உண்மை என்றால் அவரை தேற்ற வேண்டியது உங்கள் கடமை..

Suresh said...

raaja super a eluthuringa unga followe agalam na follower gadget kanom sari neenga enna follow panunga h ah ;)

i have read u have very good humours sense

have also voted both in tamilmanam and tamilish

Senthil said...

konnutteenga

ஆதிரை said...

//ராமனாதபுரம் கிடைத்த ரித்தீஷ் போல சந்தோசம் எனக்கு..//

"ரித்தீஷ் கிடைத்த ராமனாதபுரம் போல" என்றல்லவா இருக்க வேண்டும்.

:)

நல்லா இருந்தது

Joe said...

நகைச்சுவையாக ஆரம்பிச்சு, பயங்கர சோகமா முடிஞ்சு போச்சு. அதிகம் குடிக்காமே அடுத்த வேலை தேடுரதில இறங்க சொல்லுங்க.

இன்னொரு வேலையும், நல்ல பொண்ணும் நிச்சயம் கிடைக்கும் உங்க நண்பருக்கு.

ஜுர்கேன் க்ருகேர் said...

சிரிச்சிக்கிட்டே படிச்ச நான் கடைசியில் என்னாலும் சிரிக்க முடியவில்லை.
வேலை தானே போச்சி ......நல்லதே நடக்கும் ....கவலை வேண்டாம் என சொல்லுங்க

nambi said...

ungal pathivu supe

nambi said...

ungal pathivu supe

Post a Comment