Sunday, 19 April, 2009

நல்லாதாம்பா பேசுறாய்ங்க…

நாம காலையில எழுந்து கக்கா போறோமோ இல்லயோ, அன்னிக்கு நடந்த நியுஸ் படிக்கலைன்னா, கை, காலெல்லாம் ஒரு மாதிரி ஆகிடும்ணே… நமக்கு அப்படியே எதிர் என் பொண்டாட்டி..சுத்தமா, அரசியல் புடிக்காது. ஆனா நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, ரியாலிட்டி ஷோ வந்தா அன்னிக்கு தண்ணி கஞ்சி தான்..

இப்படித்தான், இன்னிக்கு காலையில எழுந்தவுடனே, வழக்கம் போல நியுஸ் படிக்க ஆரம்பிச்சேன்..கனவில் வேறு சிம்பு, ரித்திஷ், பேரரசுன்னு வந்ததால் கொஞ்சம் நடுங்கி போயிருந்தண்ணே…

ஏண்டி, கொஞ்சம் டீ எடுத்துட்டு வாயேன்..

ஏங்க, காலையில நியுஸ் படிக்க ஆரம்பிச்சுட்டிங்களா..பல்லை முதல்ல விளக்கிட்டு வாங்க..ஆமா, அதென்ன ராத்திரியில, அய்யோ, என்னை விட்டுடுங்க, விட்டுங்கன்னு புலம்புறீங்க..

ஆமாண்டி, கெட்ட கனவு கண்டேன்…பேரரசு சிம்புவை வைச்சு ஒரு படம் டைரக்ட் பண்ணுறாரு..ரித்திஷ் வேற சைடு கேரக்டர் பண்ணுறாரு…..

சரி, இனிமே டெய்லி சாமி கும்பிட்டு படுங்க…ஆனா பல் விளக்குனா தான் இப்ப டீ தருவேன்..

ஏற்கனவே, நான் கனவு கடுப்புலே இருக்கேன்…ரொம்ப கடுப்பேத்தாதே…

அப்படி என்ன நியுஸ்ல இருக்கு..இன்னைக்கு நானும் உங்களோட நியுஸ் படிச்சுட்டுதான் டீ போடுவேன்…

அய்யோ வேனான்டி..நீ இந்திய பிரதமர் நரசிம்மராவான்னு கேக்குற ஆளு…ஆள விடு…

ஏங்க, நான் எப்படி அரசியல் தெரிஞ்சுக்கிறது.. பக்கத்துல உக்காந்துக்கிட்டாண்ணே..

ஈழத்துக்கு 10000 கோடி புனரமைப்பு திட்டம் – ஜெயலலிதா..

ஆமா, நேத்து வரைக்கும் ஜெயலலிதாம்மாவுக்கு ஈழம்ன்னு சொன்னாவே, புடிக்காதேங்க, இப்ப எப்படி திடீர்ன்னு..

எலெக்சன் நெருங்கியிறுச்சுலடி..அதுதான்..

என்னங்க, என்ன சொல்லுறிங்க..இப்பதானே,கலைஞர் சி.எம் ஆனாரு..அதுக்குல்லாருமா..

இல்லடி இது பாராளுமன்ற தேர்தல்..

ஓ…மறந்துட்டேன்..அப்ப வாஜ்பாய் 5 வருசம் முடிச்சிட்டாரா..

போடீங்க..உன்னோட பொது அறிவுல தீயை வைக்க..என்ன நியுஸ் படிக்க விடு…

40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்..ராமதாஸ்….

அவர பாரட்டனுங்க..இன்னும் தனிச்சே நிக்குறார் பாருங்க..

அடிப்போடி..அவர் திமுக, அதிமுக, திமுக, அதிமுக..(என்னங்க ஒரு கோர்வையா வருதா…)

மன்சூர் அலிகான் திருச்சியில் போட்டி..டி.ராஜேந்தர் அறிவிப்பு..

ஏன்ங்க, இந்த டி.ராஜேந்தர் யாருங்க…

ஹே..என்னடி சொன்ன..டி.ராஜேந்தர் தெரியாதா…ஏ எப்படி நீ சொல்லலாம்..யு ஆர் அப்பரசிங்க் அண்டு டிப்பரசிங் டி.ஆர்…ஏ டண்டணக்கா, ஏ டணக்குணக்கா..

அய்யொ,,நான் என்ன சொன்னேன்னு இப்படி குதிக்கிறிங்க…ஒரு தாடி வச்ச டாடி, டி.வில வந்து, “ஏ..நான் தமிழன்டா, நான் தமிழன்டா..அப்படின்னு சொல்லுவரே..அவரா..ஏங்க, அவருக்கு ஆந்திரா, கேரளாகாரவுங்க வந்து தகராறு பண்ணிணாங்களா..”

இல்லடி..எல்லாம் நம்ம ஊருக்காரயிங்க தான்..

இந்த மன்சூர் அலிகான் யாருங்க..மேடையில, ஈழத்துல தமிழ் பெண்களை கற்பழிக்கிறாங்கன்னு உருக்கமா பேசுன்னாரே..அவரா..ஏதோ, கேசுல இருக்காருன்னு கேள்விப்பட்டேன்..என்னங்க அது..

இவர் தமிழ்நாட்டுல ஒரு தமிழ் பொண்ணை கற்பழிச்சுட்டாரு…

காவிரியில் தண்ணி வர ஏற்பாடு – கலைஞர்..

இது ஒன்னுதாங்க கலைஞர்கிட்ட எனக்கு புடிச்சது..பேச்சு மாற மாட்டாரு..எப்போதும் ஒரே சொல்லுதான் 10 வருசமா…

அழகிரிக்கு கம்யுனிஸ்ட் கட்சிகளால் ஆபத்து..கலைஞர்..

ஏங்க அப்படியாங்க..

ஆளை விடு சாமி..இதுக்கு நான் பதில் சொன்னேனா, என் உயிருக்கு ஆபத்து…

5 comments:

பித்தன் said...

குசும்பு கொஞ்சம் சாஸ்தியாத்தான் இருக்கு ராசாவுக்கு :)

ராஜா said...

//

பித்தன் said...
குசும்பு கொஞ்சம் சாஸ்தியாத்தான் இருக்கு ராசாவுக்கு :)
19 April, 2009 2:36 AM
//

mathurakaranla athuthan..:)) thodar varukaikukku nari anney..

Joe said...

செம தமாசு!
சும்மா பிச்சு உதருரீங்கப்பு!

TAARU said...

"எப்போதும் ஒரே சொல்லுதான் 10 வருசமா…" செய்தி சூப்பரு.

சின்சினாட்டில இருக்குரோம்ன்ர தைரியம் இப்டி எல்லாம் "அனா" பத்தி பேசிட்டு இருக்கிரு.. அண்ணனோட உண்மை தொண்டர்கள் உலகம் பூரா உண்டு..even in cincinati... தினகரன் ஆப்பிஸ் எரிஞ்ச மாதிரி உங்க வூடும் எரியும் அதையும் video பண்ணி வச்சுருவோம்.. சாக்கிரதை... அப்புறம் பாத்துக்கோங்க அப்பு... சரியா?

"ஓ…மறந்துட்டேன்..அப்ப வாஜ்பாய் 5 வருசம் முடிச்சிட்டாரா."
"ஏன்ங்க, இந்த டி.ராஜேந்தர் யாருங்க…"
ரொம்ப கொடுத்துவச்சவரு ராசா... மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

I LOVE YOU said...

AV,無碼,a片免費看,自拍貼圖,伊莉,微風論壇,成人聊天室,成人電影,成人文學,成人貼圖區,成人網站,一葉情貼圖片區,色情漫畫,言情小說,情色論壇,臺灣情色網,色情影片,色情,成人影城,080視訊聊天室,a片,A漫,h漫,麗的色遊戲,同志色教館,AV女優,SEX,咆哮小老鼠,85cc免費影片,正妹牆,ut聊天室,豆豆聊天室,聊天室,情色小說,aio,成人,微風成人,做愛,成人貼圖,18成人,嘟嘟成人網,aio交友愛情館,情色文學,色情小說,色情網站,情色,A片下載,嘟嘟情人色網,成人影片,成人圖片,成人文章,成人小說,成人漫畫,視訊聊天室,性愛,聊天室,情色,a片,AV女優

Post a Comment