Sunday, 19 April, 2009

சாருநிவேதிதாவிடம் பாராட்டு வாங்குவது எப்படி??

சாருநிவேதிதா வெப்சைட்டின் ஒரு லட்சம் வாசகர்களில்(ஹிட் கௌண்டர் அட்ஜஸ்ட்மெண்ட்???சீ..சீ…இருக்காதுண்ணே..) பெருமைமிகு வாசகர்களில் நானும் ஒருத்தண்ணே..சைட்ல அவர் எந்த ப்ளாக் யாவது பாராட்டுனாய்ங்கண்ணா, அந்த சைட்டு ரொம்ப பேமஸ் ஆகிடும்ணே..நானும் எப்படியாவது பாராட்டு வாங்கணும்னே…உங்களுக்கும் சொல்லித் தரேண்ணே..ஏதொ நீங்க பார்த்து போட்டு கொடுங்கண்ணே ….சன்மானம்தான்.. ப்ளாக் எழுதும்முன் இதை பாலோ பண்ணீங்கனா, உங்க சைட்டும் பேமஸ் ஆக வாய்ப்பு இருக்குண்ணே….

  1. பதிவு எழுதுறதுக்கு முன்னாடி தண்ணி அடிச்சுருக்குணும்ணே..என்னது தண்ணி அடிக்க தெரியாதா..எந்திரிச்சு போயிருங்கண்ணே..சான்சே இல்ல…
  2. font கலர், பச்சையா இருக்கணும்னே…என்னது நல்லா இருக்காதா..இல்லண்ணே, அப்படித்தான் இருக்கணும்…
  3. யாருக்கும் புரியாத மாதிரி எழுத தெரியனும்ணே..பின்நவீனத்துவம், சைடுநவீனத்துவம், குறுக்கால, மறுக்கால நவீனத்துவம்னு கலந்து கட்டி எழுதத் தெரியனும்ணே…
  4. நல்லா புலம்ப தெரியனும்ணே..செல்போன் ரீசார்ஜ் பண்ணக் கூட காசு இல்ல, ஆட்டோல போகக் கூட காசு இல்லண்ணு புலம்பித் தள்ளனும்ணே…
  5. எல்லாத்தையும் திட்டத் தெரிஞ்சுருக்கனும்ணே..தமிழ்நாட்டுல எங்களுக்கு மதிப்பில்லே..கேரளாவை பாருங்க,பிரான்ஸ்சை பாருங்கன்னு அப்ப அப்ப எடுத்து விடத் தெரிஞ்சருக்கணும்னே….
  6. குட்டிக்கதைகள், புட்டிக்கதைகள்னு எழுதத் தெரியணும்னே..
  7. கிம் கு டுக், அரபி இலக்கியம், கேத்தி ஆக்கர்னு ஏதாவது கசமுசன்னான்னு எழுதத் தெரியனும்ணேன்….
  8. இலங்கை பிரச்சனை பத்தி மூச்சே விடக்கூடாதுண்ணே…யாரவது கேட்டா, வீட்டுக்கு ஆட்டோ வரும், நான் உயிர் வாழ்றது உங்களுக்கு புடிக்கலையான்னு சென்டிமென்டா பேசத் தெரியனும்னே.. அதுக்காக, நம்ம தைரியத்த விடக்கூடாதுண்ணே…நானெல்லாம் யாருக்கும் பயப்பட மாட்டேன்னு பிலிம் காட்ட தெரியணும்னே..
  9. அடிக்கடி, நான் வெப்சைட்டுல எழுறதை நிப்பாட்ட போறேன்..பே சைட் ஆக்க போறேன்னு பிகில் விடனும்ணே..வழக்கம் போல, ரெஸ்பான்ஸ் எதுவும் இல்லனா, சைலண்ட் ஆகிடனும்…

அண்ணே..இருங்க, இருங்க, எங்க ஓடுறீங்க..பேசிட்டு இருக்கோம்ல..அண்ணே.,.அண்ணே…ஓடாதிங்கண்ணே…

22 comments:

Anonymous said...

lol... really enjoyed it. Thanks.

Anonymous said...

Super appu...vijay

Suresh said...

ha aha super machan nalla enjoy panan, voteum pottachu un follower ayachu ini ll follow all of ur blogs

கார்த்திகைப் பாண்டியன் said...

அட விடுங்கப்பா.. ஏதோ அவரு பாட்டுக்கு சிவனேன்னு எழுதிகிட்டு இருக்காரு.. அதப்போய் ஓட்டிக்கிட்டு..

அறிவே தெய்வம் said...

நமக்கு வீட்ல நடக்கிறது, வெளியில நடக்கிறது,
குடும்பத்தில் எல்லோரும் அப்பாவியா இருக்கிறது
இதெல்லாம் எங்கே?

வாழ்த்துக்கள்...

டக்ளஸ்....... said...

இந்த மதுரக்காரய்ங்க திருந்தவே மாட்டாய்ங்கப்பா..?

சாருநிவேதிதா said...

தம்பி ப்ளாக் எழுத வந்து 10 நாளுதான்னா ஆகுது.
ஒரு பப்ளிசிட்டி வேண்டாமா அதான் நம்ம பேர யூஸ் பண்ணிட்டாப்புளா
இப்ப தமிழ்மணத்தில படிக்கிற நம்ம சிஷ்யபுள்ளைங்க லவோ தபோனு ஓடிவந்து பாத்துட்டு சைனு அப்படியே ஓடிப்போயிருப்பாங்க

தம்பி நைட்டு கையடிக்க மாட்டாருனு நினைக்கிறேன்

விஷ்ணு. said...

//டெய்லி, நம்மள ஜால்ரா தட்டி வர்ர லெட்டர்ஸ, போட்டுக்கிட்டே வரணும்..எதுவுமே வரலேன்னா, நம்மளா ரெண்டு எழுதி எடுத்து விடணும்… //

அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா

Bleachingpowder said...

//நல்லா புலம்ப தெரியனும்ணே..செல்போன் ரீசார்ஜ் பண்ணக் கூட காசு இல்ல, ஆட்டோல போகக் கூட காசு இல்லண்ணு புலம்பித் தள்ளனும்ணே//

இது மட்டுமல்ல, நான் ஆலன் சோலி ஜட்டி தான் போடுவேன் அதை மினரல் வாட்டர்ல தான் துவைப்பேன்னு அடிச்சு வுடனும்

பித்தன் said...

அப்பு கலக்கிபுட்டிக :)

Charu Nivedita said...

This is nonsense!

Cable Sankar said...

super

Senthil said...

kalakkal thala

andygarcia said...

when r u going to post second part

வண்ணத்துபூச்சியார் said...

நல்லாயிருக்கு சார்

Anonymous said...

அப்படியே 'உத்தம' என்ற வார்த்தைய அடிக்கடி உபயோக படுத்தனும் .

Charu said...

Some people use internet for blogging, some people use it for begging. You are former and Charu is later. thats all.. Good luck.

Anonymous said...

Super,it's true that charu's blogs are mostly seen by nuts

Anonymous said...

தன்னை விட அறிவாளி எவனும் இல்லை என்று சொல்லவேண்டும்.
உண்மையை மறுத்து எழுத வேண்டும்.
ஜெயமோகனை சீண்டிக்கொண்டு இருக்கவேண்டும். அந்த மனிதர் அதற்க்கு பத்து பக்க பதில் எழுதவேண்டும்.
இளையராஜாவை கேவலமாக எழுதவேண்டும். ரகுமான் குப்பையை கொட்டினாலும் அதை தன் தலைமேல் போட்டுக்கொள்ள வேண்டுm
என்ன பிழைப்பு இது?
- ஸ்ரீனிவாசன்

E said...

Kalakkal... voted ;)

Suresh said...

மச்சான் கலக்கல் பதிவு முதல் வரியிலே விழுந்து விழுந்து சிரித்தேன்

Anonymous said...

Excellent observation. I am stilling laughing....
-Sakthi

Post a Comment