Monday, 27 April, 2009

“மரியாதை”யா ஓடி போயிடு

நான் வேலை பார்க்குற அமெரிக்க ஆபிஸில் “சாம்” ன்னு அமெரிக்க கிளையன்ட் ஒருத்தர் இருக்காருண்ணே..சரியான சிடுமூஞ்சிண்ணே..எப்ப பார்த்தாலும் வள்,வள்ன்னு விழுவான்..அவன பழி வாங்குறதுக்கு சரியான சந்தர்ப்பத்த எதிர்பார்த்துக்கிட்டு இருந்தேண்ணே..

ஒரு நாள் சரியா எங்கிட்ட மாட்டினான்..அவனுக்கு இந்தியாவோட கலாச்சாரம் பத்தி தெரிஞ்சுக்க ஆசை வந்துருச்சி போல..

“ராஜா..என்னை ஒருநாள் இண்டியன் சினிமாவுக்கு கூட்டிட்டு போயேன்..”

ஆஹா..பட்சி செமையா வந்து மாட்டிகிச்சு..அந்த நேரம் பார்த்து இங்க ஒரு தியேட்டர்ல விஜயகாந்த் நடிச்ச “மரியாதை படம்” ரீலிஸ் ஆச்சுண்ணே..

“சாம், இந்த வாரம் ஒரு இண்டியன் படத்துக்கு கூட்டிட்டு போறேன்..”

வெட்டப் போறோம்னு தெரியாம பலியாடு தல ஆட்டுச்சுண்ணே..

ஆளை “மரியாதை”(சப்டைட்டில்) படத்துக்கு கூட்டிட்டு போயிட்டேண்ணே..

நியுஸ் ரீல் போடுறப்ப நம்ம ஆளு..

“ரொம்ப தேங்க்ஸ் மேன்..ஒரு நல்ல இண்டியன் மூவி பார்க்கணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்..இது நல்ல மூவியா இருக்கும்னு நினைக்கிறேன்..”

இருடி மவனே..போக, போக பாரு…

விஜயகாந்த் அறிமுகக் காட்சி..

“ராஜா, இது யாரு..இந்த படத்தோட காமெடியனா..”

“இல்ல சாம்..இதுதான் ஹீரோ..”

அவன் மூஞ்சி லைட்டா மாறுச்சுண்ணே..

“பார்க்க வயசானவர் மாதிரி இருக்காரேப்பா..”

நான் அடிச்சு விட்டேன்..

“உங்க ஹாரிசன் போர்டு இல்லயா..அது மாதிரி..”

எங்கே சுவர் ஏறி குதிச்சுறுவானோன்னு முன்னெச்சரிக்கையா சொன்னேன்..

“சாம், எங்க இந்தியாவுல ஒரு பழக்கம் இருக்கு..யாராவது படத்துக்கு கூட்டிட்டு போனா முழுப்படமும் பார்க்கணும், அதுதான் அவுங்களுக்கு குடுக்குற மரியாதை..”

“ஓ.கே..ராஜா..”

நல்லா கேட் போட்டு வச்சிட்டேண்ணே..நேரம் ஆக, ஆக விஜயகாந்த் நடிப்ப பார்த்துட்டு பய துடிக்க ஆரம்பிச்சுட்டாண்ணே..

“ராஜா..அது என்ன படத்துல லா..லா..லா..ன்னு ஒரு சத்தம்”

“எங்க வூருல செண்டிமென்ட் சீனுக்கு இதுதான் பின்னனி இசை சாம்”

ஒரு கட்டத்துல பையன் வாய் விட்டு கதறிட்டாண்ணே..

“ராஜா..எனக்கு ஒரு வேலை இருக்கு..நான் வேனா இன்னொரு நாள் பார்க்கட்டா..”

எங்கடி எஸ்கேப் ஆகப் பார்க்குற..

“இல்ல சாம், முழுப்படமும் பார்க்கனும்..அதுதான் நீங்க எனக்கு குடுக்குற மரியாதை..”

பாவம்னே அவன்..எனக்கே கஷ்டமா போச்சு..துடிக்குறாண்ணே..

நேரம் ஆக, ஆக நாக்கு வெளியே தள்ளாத குறை தான்..படம் முடிஞ்சதும் எங்கிட்ட ஒன்னுமே பேசலை.. வெளியே வந்து கேட்டேன்

“என்ன சாம், படம் எப்படி இருந்துச்சு..” நமக்கு ஒரு ஆனந்தம்

அவன் என்னை ஒரு கொலைவெறி பார்த்தான் பாருங்கண்ணே..என் பொண்டாட்டி கூட கோவப்பட்டா அப்படி பார்த்ததில்லைண்ணே..

ஒன்னுமே சொல்லாம காரை எடுத்துட்டு போயிட்டான்னே..

எனக்கு அவன சரியா பழி வாங்கிட்டோம்னு ஒரு திருப்திண்ணே..

அடுத்த நாள் ஆபிஸ் போறேன்..சீட்டுல ஆளை காணோம்..பக்கத்துல இருக்குற ஆள்கிட்ட கேட்டேண்ணே..

“சாம் எங்க ஆளைக் காணோம்..”

“உனக்கு விசயம் தெரியாதா ராஜா..நேத்து நைட்டுல இருந்து அவருக்கு செம காய்ச்சல்..ஆஸ்பத்திரி போயிருக்காரு..டாக்டர் ரெண்டு நாள் ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டாரு..”

இந்த அளவுக்கு போகும்னு நான் எதிர்பார்க்கலைண்ணே.."


38 comments:

பூக்காதலன் said...

ஆனாலும் உங்களுக்கு குசும்பு ரொம்ப ஜாஸ்தி.
பாவம் அவர்.
(டிஸ்கி: நீங்க சும்மானாச்சிக்கும் ஒரு பதிவு போட்டாலும், நாங்க பீலிங்கோடு கமென்ட் போடுவோமுல்ல..)

r.selvakkumar said...

பயங்கர நக்கல் . . . சிரிச்சுக்கிட்டே படிச்சேன்

Anonymous said...

பாவம் சாம் ...
அப்படியே தவசி படத்துக்கு கூட்டிட்டு போங்க பாஸ்.. ...
விஜய்

Suresh said...

ஹா ஹா நக்கல் சாசி கலக்கிட்ட மச்சான்

Anonymous said...

சாம்'க்கு நீங்க கிராமராசன் படம் கூட்டிகிட்டு போய் காமிச்சுருக்கலாம்..

படா தமாசா இருந்திருக்கும் !

அறிவன்

Anonymous said...

அடங்கொய்யாலே, தலையவா பழிக்குறே. இருடி..இரு...ன்னு கட்சிக்காரனுவ அடிக்க வந்துரப் போறானுவ. பாத்துக்கப்போய்...

இராகவன் நைஜிரியா said...

//“உனக்கு விசயம் தெரியாதா ராஜா..நேத்து நைட்டுல இருந்து அவருக்கு செம காய்ச்சல்..ஆஸ்பத்திரி போயிருக்காரு..டாக்டர் ரெண்டு நாள் ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டாரு..” //

என்னா ஒரு கொலைவெறி...

நடக்கட்டும்..

Subbu said...

எப்படின்னே உங்கலால இப்படியெல்லாம் எழுத முடியிது :)))))))))). வயிரு வலிக்கிதுன்னே, நானும் டாக்டர்கிட்ட போரேன்னே :)))))))))))))))

Subbu said...

அப்படியே ஓட்டும் போட்டாச்சின்னே ;))))

Senthil said...

HA HA HA HA

Cable Sankar said...

அப்படியே சாமை குங்குமபூவும் கொஞ்சு புறாவுக்கும் கூட்டி போங்க்

Anonymous said...

very interesting

Anonymous said...

Super appadiye shock ayiten

ராஜா said...

////////////////

பூக்காதலன் said...
ஆனாலும் உங்களுக்கு குசும்பு ரொம்ப ஜாஸ்தி.
பாவம் அவர்.
(டிஸ்கி: நீங்க சும்மானாச்சிக்கும் ஒரு பதிவு போட்டாலும், நாங்க பீலிங்கோடு கமென்ட் போடுவோமுல்ல..)
27 April, 2009 9:10 PM
/////////////////////

நன்றி அண்ணே...

ராஜா said...

/////////

r.selvakkumar said...
பயங்கர நக்கல் . . . சிரிச்சுக்கிட்டே படிச்சேன்
27 April, 2009 9:31 PM
///////////////

நன்றிங்க..

ராஜா said...

///////////nonymous said...
பாவம் சாம் ...
அப்படியே தவசி படத்துக்கு கூட்டிட்டு போங்க பாஸ்.. ...
விஜய்
27 April, 2009 9:58 PM
///////////////

இதுக்கு மேல போனா கொலை கேசுல மாட்டிக்குவோம்..

ராஜா said...

//////////////////

Suresh said...
ஹா ஹா நக்கல் சாசி கலக்கிட்ட மச்சான்
27 April, 2009 10:13 PM
//////////////////

நன்றி மச்சி..உன்னொட 50வது பதிவு சூப்பர்..

ராஜா said...

////////////
nonymous said...
சாம்'க்கு நீங்க கிராமராசன் படம் கூட்டிகிட்டு போய் காமிச்சுருக்கலாம்..

படா தமாசா இருந்திருக்கும் !

அறிவன்
27 April, 2009 10:18 PM
////////////

பாவம்னே...

ராஜா said...

//////////////
nonymous said...
அடங்கொய்யாலே, தலையவா பழிக்குறே. இருடி..இரு...ன்னு கட்சிக்காரனுவ அடிக்க வந்துரப் போறானுவ. பாத்துக்கப்போய்..
/////////////

அமெரிக்காவுல share auto இல்லீங்கண்ணா..

ராஜா said...

/////////////////

இராகவன் நைஜிரியா said...
//“உனக்கு விசயம் தெரியாதா ராஜா..நேத்து நைட்டுல இருந்து அவருக்கு செம காய்ச்சல்..ஆஸ்பத்திரி போயிருக்காரு..டாக்டர் ரெண்டு நாள் ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டாரு..” //

என்னா ஒரு கொலைவெறி...

நடக்கட்டும்.
////////////////////////
பழிவாங்குறதுல ஒரு ஆனந்தம் தான்..

ராஜா said...

//////////////

Subbu said...
அப்படியே ஓட்டும் போட்டாச்சின்னே ;))))
28 April, 2009 2:26 AM
//////////////////
நன்றி அண்ணே..

ராஜா said...

///////////////

Cable Sankar said...
அப்படியே சாமை குங்குமபூவும் கொஞ்சு புறாவுக்கும் கூட்டி போங்க்
28 April, 2009 3:15 AM
/////////////////

வேணாம்னே..கொலை கேசா ஆயிடும்..

Maduraikkaran said...

ssssssh!!!! mudiyalai....yappa oru bedda podungappa....nanum vandhu admit ayikkiren

பித்தன் said...

i can't control my laugh :)

வழிப்போக்கன் said...

இத விட அவன கொலை பண்ணி இருக்கல்லாம்...
:)))

வழிப்போக்கன் said...

விஜய்க்கபறம் அதிகமா "ண்ணா" போடுறது நீங்களா தான் இருப்பீங்க...
:)))

கார்த்திகைப் பாண்டியன் said...

அந்தக் கொலைவெறிப் படத்த நானும் பார்த்து மிரண்டு போயிட்டேன் நண்பா.. விமர்சனம் போட்டிருக்கேன்.. முடிஞ்சா படிச்சு சிரிங்க

குடுகுடுப்பை said...

வெடிச்சிரிப்பு. படத்தை விமர்சிக்க படத்தை பத்தி சொல்லாம வெளிநாட்டுக்காரன வெச்சு சொன்ன விதம் அருமை.

மரியாதையால் கிடைத்த சிரிப்பு

SUREஷ் said...

எச்சரிக்கை;-

இனிவரும் அனைத்துப் படங்களுக்கும் உங்களின் இடுகையைப் பலரும் உபயோகப் படுத்துவார்கள். சில பத்திரிக்கைகளில் உங்களின் பெயரைப் போடாமல் அவர்களே எழுதியது போலவும் போடுவார்கள்.

எச்சரிக்கையாக இருங்கள்

TBCD said...

தொடர்ச்சியாக கலக்கலான பதிவுகளை கொடுக்குறீங்க..வாழ்த்துக்கள்

Suresh said...

ஹா ஹா ம்ச்சான் சூப்பர் வோட்டு போட்டாச்சு

உங்க பதிவுக்கு தமிழ்ஷ்ல வோட்டு போட்டாச்சு

அப்படியே நம்ம பதிவு படிச்சு புடிச்சா தமிழ்ஷல வோட்ட போடுங்க


ஆளும் கட்சிக்கு வோட்டு ?

http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_29.html


சிலேட்டு சின்னத்தை பார்த்து. போடுங்கம்மா ஒட்டு !

http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_28.html

Anonymous said...

Your writing style really makes me laugh.
Thanks.
Good wishes

roja said...

you are really talanted .keep it up.best wishes...

Joe said...

என்ன தான் அந்த வெள்ளைக்காரன் மேல கோவம் இருந்தாலும், இப்படி கொலைவெறித் தாக்குதல் எல்லாம் பண்ணக் கூடாது.

காந்தி பிறந்த மண்ணிலிருந்து போனவங்க நாம, அதை மனசில வைச்சுக்கணும்.

E said...

Ada paavigala... ipdiya avana koduma paduththurathu... ;)

கல்கி said...

இனியும் சாம் உங்ககிட்ட வம்பு பண்ணா சொல்லுங்கண்ணே... என் கிட்ட கேப்டன் பட மொத்த கலெக்சனும் இருக்கு கிப்டா அனுப்பிடலாம்.

கடைக்குட்டி said...

யப்பா கலக்கல் :-)


the best நக்கல்

Kirubakaran said...

ha ha ha..sema comedy sir..next time maatina perarasu padathuku kutitu ponga...

Post a Comment