நமக்கெல்லாம் பாகிஸ்தான்காரய்ங்க மேல அவ்வளவு கொலை வெறிங்க….அது என்னன்னு தெரியல..நம்ம ஊருல அப்படி வளர்த்து
விட்டுருக்கியாங்க..பாகிஸ்தான்காரய்ங்கள யாரு அதிகமா திட்டுராய்ங்களோ அவின்ய்க்களுக்கெல்லாம் தேச பக்தி அதிகம்னு..நம்ம ஊரு விஜயகாந்த்
கூட அவிய்ங்களை தானே சும்மா பறந்து பறந்து உதைக்குராரு..
அமெரிக்காவுக்கு பேச்சிலாரா வந்தப்ப எனக்கு தங்குறதுக்கு வீடு தேவைப்பட ஒரே ஒரு வீடு தாண்ணே கிடச்சது..பிரச்சனை என்னான்னா அந்த வீட்டுல
ஒரே ஒரு பாகிஸ்தான்காரன் இருக்கான். அவனோட வாடகைய பகிர்ந்த்துக்கனும்…வேற ஊரா இருந்தா தனி வூடு பார்க்கலாம்..இங்கே காசு அதிகம்னே..வேற வழியில்லாம அவன் கூட தங்கி இருந்தேங்க..
எனக்கு என்னமோ ஒரு தீவிரவாதி கூட தங்கி இருக்கிற மாதிரி ஒரு பீலிங்ணே..கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டேன் தனியாத்தான் அடுப்பு பொங்கணும்னு..நம்ம தேசத்த பாழ் பண்ற மனிசய்ங்க கூட எப்படின்னே ஒன்னா உக்கார்ந்து சாப்பிட முடியும்..தேச பக்தின்னு வந்துட்டா நமக்கு புல்லரிக்குமுண்ணே…
அப்பதாங்க நம்ம ஊரு பையன் ஒருத்தன் வீடு பார்த்துகிட்டு இருந்தான்..நம்ம வயித்துல பீர் வார்த்த மாதிரி இருந்துச்சு…நம்ம வீட்டுக்குள்ளே அவனயும் சேர்த்துகிட்டோம்..அப்புறம் என்ன..ஒரே கொண்டாட்டம் தான்னே..பாகிஸ்தான் காரனை கடுப்பேத்துரதுதான் நம்ம வேலை…வாழ்க்கையே வெறுத்து போய் இருக்கும்னே..
அப்பதான் அது நடந்ததுண்ணே..இந்த ஊருல பக்கத்து வீட்டுக்காரன் கொட்டாவி விட்டா கூட 101 க்கு கால் பண்ணுவாய்ங்க..பக்கத்து வீட்டுல ஒரு வயசான அமெரிக்க தம்பதி இருந்தாய்ங்க..அவிய்ங்க காரை யாரோ ஒருநாள்
ராத்திரி யாரோ உடச்சு போட்டுடாய்ங்கண்ணே..அந்த ராத்திரி தான் நான் நம்ம ஊரு பையன் கூட சாப்பிட வெளியே போயிருந்தேன்..எனக்கு அந்த மேட்டர் தெரியாதுண்ணே..
காலையில் எழுந்து பார்த்தா நம்ம வாசல்ல இம்மாந்தண்டி போலிஸ் அண்ணே..உண்மைய சொல்லுரேண்ணே.நமக்கு டிராபிக் போலிஸ் பார்த்தாவே கால் வழியா ஒன்னுக்கு போகிடும்..நடுங்கிடுச்சுண்ணே..நம்ம எது சொன்னாலும் நம்ப மாட்டிங்கிராருண்ணேய்..நம்ம கலர் அப்படிண்ணே..அண்டங்காக்காவுக்கும் நமக்கும் போட்டி வச்சா ஒரு பாயிண்டுல நம்ம தான் லீடிங்கு..நம்பவே மாட்டிங்குறாரு…
ஆகா..அப்பதாண்ணே நம்ம உயிர் , நம்ம ஊருக்காரன், நம்ம கொள்கை சிங்கம் நம்ம ரூம்மேட் கூப்பிட்டா ஆள் வாயத்துறந்து ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டிங்குராண்ணேய்..கேட்டா நமக்கு எதுக்குடா வம்பு ராஜா..நம்மனாலே கோர்ட் கேசுண்ணு அலைய முடியாதுன்னு சொல்லுரான்னே..நமக்கு கண்ணுல ஜலம் வந்துடுத்து நம்ம சூப்பர் சிங்கர் ராகினிஸ்ரீ மாதிரி..
அப்பதாண்ணே..நம்ம பாகிஸ்தான்காரன் வந்தான் பாருங்க..அவன் சொல்ரான் போலிஸ்காரங்கிட்ட..”சார்…நான் இவரோட உயிர் நண்பண்..நேத்து அவன் எங்கூட தான் இருந்தான்..நாங்க ரெண்டு பேரும் வெளியெ சாப்பிட போயிருந்தோம்..இத எங்க வந்து சொல்ல சொன்னாலும் சொல்லுரேன்..”
அப்படியே அவன் கைய புடிச்சுகிட்டேண்ணே..எவ்வளவு அவமானம் படுத்தி இருப்போம்…நன்றின்னு சொன்னேன்..அவன் சொன்னான்..
“ராஜா..எல்லா பாகிஸ்தான் காராங்களும் உங்க நாட்டுல குண்டு வக்கிரதுல்ல..யாரோ கொஞ்சம் பேரு குண்டு வக்கிரதுக்கு நாங்க என்ன பண்ணிணோம்..நாங்களும் மனிசங்க தாம்பா….”
எனக்கு அப்படியே செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சு..நம்ம புத்திக்கு இப்ப தாண்ணே உறைச்சது..அப்படியே திரும்புரேன்..நம்ம கொள்கை குன்று..நம்ம ஊருக்காரன் கொட்டாவி விடுரான்..
“வாடா ராஜா..இப்பதாண்டா தப்பிச்சோம்..”
“போடா..வெளக்கெண்ணை….”
12 comments:
//ஆகா..அப்பதாண்ணே நம்ம உயிர் , நம்ம ஊருக்காரன், நம்ம கொள்கை சிங்கம் நம்ம ரூம்மேட்//
அநேகமாக அவர் தமிழர்தானே...தமிழர் என்றோரு இனமுண்டு, தனியே அவர்கொரு இனமுண்டு!!!
ஸாரி
//ஆகா..அப்பதாண்ணே நம்ம உயிர் , நம்ம ஊருக்காரன், நம்ம கொள்கை சிங்கம் நம்ம ரூம்மேட்//
அநேகமாக அவர் தமிழர்தானே...தமிழர் என்றோரு இனமுண்டு, தனியே அவர்கொரு குணமுண்டு!!!
பகிர்ந்தமைக்கு நன்றி..
தண்ணி தரமாட்டேன் என்கிறது பக்கத்து மாநிலம், நிலம் தரமாட்டேன் என்கிறது பக்கத்து நாடு, என்ன பெரிய வித்தியாசம்..? அல்லது எது பெரிய தவறு..?
நல்ல பதிவுங்கண்ணோவ்..!!
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....
இவண்
உலவு.காம்
very much true
i experienced the same with pakistanis
they r very good
nalla irukku pathivu.
good to know that u realized ur mistake! love everybody :)
இப்படிதான் ரொம்ப நேரம் ஊர் பேர் தெரியாதவன்கூட சாட்டிங் பண்ணி கடைசில அவன் பாகிஸ்தான் காரன்னு தெரிஞ்சதும் ஒரு மாதிரியா இருந்தது. கடைசியா அவன் "எனக்கு இந்தியாவில் ரொம்ப பிடிக்கும்" அப்படின்னு சொன்னவுடன் பிரண்டு லிஸ்ட் ல ADD பண்ணிட்டேன்.
//தண்ணி தரமாட்டேன் என்கிறது பக்கத்து மாநிலம், நிலம் தரமாட்டேன் என்கிறது பக்கத்து நாடு, என்ன பெரிய வித்தியாசம்..? அல்லது எது பெரிய தவறு..?//
நிலம் தர மாட்டேன் என சீனாகாரன் மாதிரி சொன்னா பரவாயில்லை, மன்னிக்கலாம்,மறக்கலாம்.ஆனால், சுட்டுத்தள்ளவும் குண்டு வைக்கவும் ஆள் அனுப்பும் நாட்டை எப்படி ஏற்பது?
பாகிஸ்தானிலும் சில நல்லவர் உண்டு போல, என வேண்டுமானால் நம்பலாம்!!!
ஐக்கிய அரபுநாடுகளில் இந்தியர்களும் பாகிஸ்தானியர்களு்ம் சகஜமாக பழகுவதை பார்க்கலாம்.
சேர்ந்து உழைத்து, உண்டு, உறங்குகிறார்கள்.
ஜப்பானிலும் பாகிஸ்தான்-காரர்களுடன் நம்மவர்களுக்கு நல்லுறவு உண்டு.
அரசியல்வாதிகள் இனவெறியை உண்டு பண்ணுகிறார்கள், அண்டை நாடுகளில் உள்ள சராசரி மக்கள் நமது எதிரிகள் இல்லை.
Post a Comment