Sunday, 5 April, 2009

இந்தி படிக்காதது தப்புங்களாயா….

நான் வசிக்கும் சின்சினாட்டி(அமேரிக்கா) நகரில் ஒரு உலக பல்பொருள் அங்காடி உள்ளது. அங்கே போனால் எல்லா நாட்டு பொருட்களும் கிடைக்கும்..ஒரு வார இறுதியில் அங்கு சென்றிருந்தேன்…எல்லா பொருட்களையும் வாங்கி விட்டு பில் போட வந்தால் அங்கு ஒரு வட இந்தியர்(குஜராத்தி) நின்றிருந்தார்..

ஆயியே..ஆயியே….என்று ஏதோ இந்தியில் பேசினார்..

நமக்கும் இந்திக்கும் காத தூரம்க…

சாரி சார்..எனக்கு இந்தி தெரியாது…..

ஒரு புழுவை பார்ப்பது போல பார்த்து…ஓ..மதராசி குத்தா…. என்றார்….

எனக்கு இந்தி தெரியாவிட்டாலும் இது போல வார்த்தைகள் தெரியும்…எனக்கு கோபம் பீறிறிட்டு வந்தது(வெ.ஆ மூர்த்தி போல வாசிக்காதங்கப்பூ….)

எனக்கு தமிழ் அல்லது தமிழனை பத்தி யாராவது தப்பா பேசினா எனக்கு சைலன்ஷ்..விஜய் மாதிரி கோபம் வரும்(நம்புங்க, சத்தியமா நான் தமிழன் தாங்க..)

போடாங்ங்கோத்தா… என்றேன்…

என்ன சொன்னிங்க என்றார்…

உங்க அம்மாவை பத்தி கேட்டேங்க…எப்படி இருக்காங்க..என்றேன்…
என்னங்க..இந்தி தெரியாதா…தமிழ்நாடு இந்தியாவுல தானே இருக்கு…என்றார்..

எனக்கு சீமான் நினைவுக்கு வர….ஆமாங்க..என்றேன் அவசரமாக…

ஒரு இந்தியனா இருந்துக்கிட்டு இந்தி தெரியாதுன்னு சொல்லுறிங்களே..வெக்கமா இல்ல…என்றார்…

இதுல என்னங்க வெட்கம்…..ஒரு இந்தியனா இருந்துக்கிட்டு நீங்க கூட அமேரிக்காவுக்கு வேலை பார்க்குரீங்க..உங்களுக்கு வெட்கம் இல்லயா…என்றேன்…

அவர் முகம் படத்துல பார்க்குற பேரரசு மாதிரி ஆகிடுச்சு…

மதராசிங்க நல்லவங்க..(அதான் காவிரில தண்ணி வர மாட்டிங்குது..) இந்த திராவிட கட்சிங்க தான் உங்களை கெடுத்துருச்சு…என்றார்..

அவங்க இருக்குதுனால தான் குஜராத் கலவரம் மாதிரி எதுவும் எங்க ஊருல நடக்கல..என்றேன்..

அவர் முகத்தை பார்க்கனுமே…போடா..தேச துரோகி..என்றார்…

சரீங்க….பின்னாடி பாருங்க..உங்க பேத்தி கூப்பிடுராங்க..என்றேன்..

அது அவர் மனைவி..அவர் முகம் இன்னும் கொடூரமாக..விடு ஜூட்… இந்தி படிக்காதது தப்புங்களாயா…

26 comments:

எட்வின் said...

இந்தி படிக்காதது தப்பில்ல ... தெரிஞ்சிகிட்டாலும் தப்பில்ல :)வாழ்த்துக்கள்

Anonymous said...

செம காண்டாயிட்டீங்களா?

ஜுர்கேன் க்ருகேர் said...

இன்னும் கொஞ்சம் அந்தாள திட்டி இருக்கலாம்.

Senthil said...

Good Reply

Manikandan said...

இதை பார்த்தும் சிரிபிர்கள் http://vinothkumarm.blogspot.com/2009/04/meenakshi-amman-temple-is-one-of.html

நளன் said...

அதுல என்னன்னா, இந்த வட இந்தியனுங்க இந்தி தான் இந்தியாவோட தேசிய மொழின்னு நெனச்சு, நம்ம விவேக் மாதிரி, தங்கள புணிதபடுத்திக்கனும்னு (இந்தியனாக்கிகனும்னு..) நெனச்சு கூவம் ஆத்துல (இந்தியில) குதிச்சுட்டாங்க. அவனவன் மொழி இந்தி ஆதிக்கத்துனால நாருதுன்னு கூட தெரியாத அலவுக்கு மூழ்கிட்டாங்கன்னா பாருங்களேன். வடநாட்டுல, எந்த மொழியோடா இலக்கியம் கடந்த காலங்கள்ள வளர்ச்சி அடஞ்சிருக்குன்னு பாத்தா நல்லா புரியும், இந்தி இந்த மொழிகளுக்கெல்லாம் என்ன பண்னிருகுன்னு. இந்தியாவுக்கு தேசிய மொழின்னு ஒன்னு கிடையவே கிடையாதுங்கறது பாதி தென்னிந்தியர்களுக்கு தெரியாது, முக்காளே-அரைக்காளே-முக்கா வட இந்தியர்களுக்குந் தெரியாது.

jas said...

தப்பு த்தேன்..........

எனக்கு ஹிந்தி தெரியாது இங்குட்டு உள்ள கட பிள்ளையோ என்ன பார்த்து சிரியா சிரிக்கிரானுவோ ........

அட போங்க சார் என்னத்த சொல்ல .

Suresh said...

Machaan super post ha ha i like it, u have to be like this nee tamilan da kalakita nalla petchu illai na yetchipuduvanga pu__ unku thierum enna sonnan nu seri unnnoda blogs youthful vikatan la good blogs la vanthu irukku, unaku therinchi iruka vaipu illai inga click pani paru athu nalla periya vishiyam

http://youthful.vikatan.com/youth/index.asp

பித்தன் said...

நம்மில்க்கு ஹிந்தி நல்லா தெரியிறான்..
ஆனால நமில்க்கு குஜராத் மேல் சோலி இல்லே
அதான் நம்மேல் தமிழ்நாடுமே போர்வை விக்கிறான்..
தமிழ் கத்துகிட்டு, நல்லா தமிழ் பேசுறான்....

ஹிந்தி கத்துகிறது தப்பில்லை, விருப்பபட்டா கத்துக்கலாம்...

ஆனால் கண்டிப்பா கத்துகனும்னு சொன்னா அது தப்பு....

Joe said...

ஹிந்தி படிச்சிருந்தா வடக்கனுங்க கூட ஹிந்தி-ல பேசலாம்.
ஆனாலும், நீங்க போனப்புறம், "wo kaalawala gaya..." (அந்த கருப்பன் போய்ட்டான்) என்று தான் சொல்லுவானுங்க.

Ravanan said...

YOU ARE THE MAN.... I APRRECIATE IT...

Ravanan P

ராஜா said...

எல்லாருக்கும் நன்றிங்க....

குடுகுடுப்பை said...

எனக்கும் இது போல அனுபவம் உண்டு.

மயிரு said...
This comment has been removed by the author.
சந்திரா said...

எனக்கு ஹிந்தி,தெலுங்கு,மலையாளம் என 3 இந்திய மொழிகள் தெரியும். ஒவ்வொரு மாநிலத்திலும் பணி புரியும் பொழுது டிரைவர், ஆபிஸ் பாய் இவர்களிடம் கற்றுக்கொண்டேன். எனக்கு அவர்கள் மொழி தெரியும் என்பதால்லேயே என்னிடம் மரியாதையாகவே நடந்து கொள்வார்கள்.போக விட்டு புறம் பேசுவது நம்மிடம் இல்லையா?
நிறைய மொழி தெரிந்து கொள்வது தன்னம்பிக்கயை வளர்க்கும். கூடுதல் தகுதி தரும்.

பனங்காட்டான் said...

ஆமா இந்தி கத்துக்கிட்டா மட்டும் பக்கத்துல உக்கார வெச்சு பட்டுத்துணி போத்திவிடுவாங்களாக்கும்...அதெல்லாம் சும்மா ஒரு காரணம் அவ்வளவுதான். நிஜக் காரணம் வேறு. வெளி மாநிலங்களில் சென்று படிக்க/பணியாற்றப் போகும் 1% மக்களுக்காக தமிழ்நாட்டவர் அனைவரும் இந்தி படிக்க வேண்டும் என்பது சரியல்ல. தேவையுள்ளவர்கள் கற்றுக் கொள்ளலாம். அதே நேரத்தில் கட்டாயமாக அனைவரும் கற்க வேண்டும் என்பது எதிர்க்கப் பட வேண்டிய ஒன்று. ராஜா அவர்களே, தங்கள் அனுபவம் நம்மில் பலர் அனுபவித்து வருவதுதான். உங்கள் பதில் நெத்தியடி! ஒரு தமிழனாக உங்களுக்கு நன்றி

பழமைபேசி said...

சுவராசியமா இருக்கு...

please disable word verification buddy...

Wolta said...

என்னமோ இந்தி தெரின்ஞ்சவனெல்லாம் கோடீஸ்வரன் ஆனது போலவும் மற்றவரெல்லாம் பிச்சை எடுப்பது போலவும் ஒ மாயை உருவாக்கி உள்ளனர்,ஆரிய நாய்கள்.இன்று தமிழ் நாட்டில் அதிகமான கூலி தொழிலாளர்கள் வட இந்தியர்களெ.அவர்கள் தமிழ் கற்கிறார்கள்.விஜய் படத்திற்கு வரிசையில் நிற்கிறார்கள்.

Anonymous said...

Nothing wrong in learning any language,but in a country which has so many languages and so many nation states ,giving importance to only one language is plainly wrong,and forcing it on other people is very wrong.
if anyone wants to study Hindi,let them study.
Treat it just as an other language,
Hindi is like Telugu,Marathi,Assami and Punjabi,just an other indian language.
it is nothing precious,just because more people
have it as their primary language in the artificial boundary which is called India,and just because people in Uttar predesh,Bihar etc are less keen about birth control compared to Malayalis and Tamils therefore produce more children ,we shouldn't be worshipping Hindi language .
In my opinion ,all the main languages of India (probably about thirty of them)should be made as national languages.
Anyway, why didn't this Gujarathi person learn to speak in English while he is residing in an English speaking country?
What is the necessity of a Gujarati person communicating with a Tamil person in an English speaking country in Hindi?
Don't you think it is absolutely irrational and ridiculous?

Anonymous said...

ஐயோ இந்தி படிக்க விடவில்லேயே என்று சிலர் கூப்பாடு போடுவதைக் கண்டிருக்கிறேன்.
பெரும்பாலும் தமது தாய்மொழி தவிர இன்னொரு மொழியைப் படிப்பது வேலை வாய்ப்புக்காகத்தான்
சிலர் மொழிகளைப் படிப்பது இலக்கியம்,மொழியியல் என்ற விருப்பம் காரணமாக.
பல வெளிநாட்டு அறிஞர்கள் தமிழ் ,சமஸ்கிருதம் என்று படிப்பது அப்படியான விருப்பத்தில்.
தமிழ் நாட்டுக்குள்ளே பெரும்பாலான வேலை பார்ப்பதற்கு தமிழே போதும்.
அதாவது தமிழனும் ,தமிழனும் தமக்குள்ளே தமிழ் பேசினால் -
வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை செய்ய ஆங்கிலம் தேவை.
அதே மாதிரி ஆங்கிலம் பேசாத வேறு நாடுகளுக்கு போனால் அந்தந்த நாடுகளின் முதன்மை மொழிகள் தெரிய வேண்டும்
பிரான்சில் வேலை பார்க்க பிரெஞ்சு மொழி தெரிய வேண்டும்
ஜெர்மனியில் வேலை பார்க்க ஜெர்மானிய மொழி தெரிய வேண்டும்
போலந்தில் வேலை பார்க்க போலிஷ் மொழி தெரிய வேண்டும்
இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு போனால் அந்தந்த மாநில மக்களின் முதன்மை மொழி தெரிவது நல்லது.ஒரிசாவுக்கு போனால் ஒரிய மொழியும் ,கல்கத்தாவுக்குப் போனால் வங்காள மொழியும் தெரிந்தால் நல்லது.
அதே மாதிரி டெல்லிக்கோ உத்த்தரப் பிரதேசத்துக்கோ போனால் ஹிந்தி தெரிவது நல்லது.
இதில் எல்லா மொழிகளுக்கும்தான் முக்கியத்துவம் உள்ளது.
இதில் இந்தி மட்டும் என்ன பெரிய உசத்தி ?
வெள்ளைக்காரன் வந்து இந்தியாவை ஒரு நாட்டாக்கி விட்டுப் போனால் ,எதோ இந்தி பேசுபவர்கள் அதில் கூடுதல் எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்றால் அது மட்டும்தான் தேசிய மொழியா?
மற்ற மொழி பேசுபவர்கள் எல்லாம் குறைந்த தகுதி உள்ளவர்களா?
கடைசியாய் எடுத்த சனத்தொகையின் படி ,
தமிழ் நாட்டில் ,தமிழைத் தாய் மொழியாகப் பேசுபவர்கள் மில்லியன் .
தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிராதவர்கள்
ஆனால் வெளி மாநிலங்களில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கை
இதிலிருந்து தெரிவது என்னவென்றால் மற்ற மாநிலங்கள் தமிழர்களுக்கு வேலை வாய்ப்புக் கொடுத்த எண்ணிக்கையை விட தமிழ் நாடு கூடுதல் எண்ணிக்கையில் மற்ற மொழி பேசுபவர்களுக்கு வேலை வாய்ப்பும் வாழ வசதியும்கொடுத்திருக்கிறது என்று .
அதிலும் இந்தி பேசும் மாநிலங்களில் தமிழர்களுக்கான வேலை வாய்ப்புகள் மிக குறைவு.
உண்மையில் நாங்கள்தான் இந்தி பேசும் மக்களுக்கு கூடுதலான வேலை வாய்ப்பு கொடுக்கிறோம்.
இந்த வடநாட்டு நடிக்கைகளுக்கு எல்லாம் நாங்கள்தான் லட்ச்சங்கள் கொடுத்து வேலை வாய்ப்பு கொடுக்கிறோம்.
அவர்கள் பத்து வருடங்கள் தமிழ் நாட்டில் வசித்தாலும் தமிழ் பேசாமல் பந்தா காட்டுகிறார்கள்
திறமை இருந்தால் ,சினிமா ஒரு காட்சி மீடியம் என்ற படியால் அழகும் இருந்தால் யாரும் தமிழ் படத்தில் நடிக்கல்லாம் ,நான் தவறு என்று சொல்லவில்லை எந்த மொழி படத்தில் நடிக்கிறார்களோ அந்த .மொழி தெரியாமல் இருப்பதையோ அல்லது அந்த மொழியைக் கற்க வேண்டும் என்ற அக்கறை இல்லாத திமிர்த் தனம்தான் எனக்குப் பிடிப்பதில்லை.இதற்க்கு தமிழர்களாகிய எமது இளிச்ச வாய்த்தனம்தான் காரணம்
இந்த நடிகைகள் ஆங்கிலம் தெரியாமல் ஹாலிவுட் படத்தில் நடிக்கப் போவார்களா ?
அப்படி ஆரம்பத்தில் தெரியாமல் இருந்தாலும் ,கஷ்டப் பட்டுப் படித்து பேசப் பழகுவார்கள் .நமது தென்னிந்திய நடிகைகள் ஹிந்திக்கு போவது என்றால் ஹிந்தி படிக்கத்தானே செய்வார்கள் அப்படித் தெரியாவிட்டால் இந்திப்பட உலகம் ,அவர்களை அடித்து துரத்தி விடும் என்பது நிச்சயம்.
நான் சொல்வது இதுதான்
ஹிந்தியை விருப்பம் என்றால் படியுங்கள்
ஆனால் அதைப் படிக்காமல் விட்டதால் தமிழர்களுக்கு பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை.

Anonymous said...

புள்ளி விபரத் தகவலில் சில இலக்கக் கணக்குகள் தவறி விட்டன.
தமிழ் நாட்டில் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்களின் எண்ணிக்கை ஐம்ப்ந்தைந்து மில்லியன் .
தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிராதவர்களின் எண்ணிக்கை. ஏழு மில்லியன்
வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழரின் எண்ணிக்கை ஐந்து மில்லியன் .
இது இரண்டாயிரத்து ஒன்று மதிப்பீடு.
இப்போது எல்லாத் தொகையும் எண்ணிக்கையில் கூடியிருக்கும்.
but the percentage will be the same ,more or less.
t

Anonymous said...

அது சரி இந்தக் குஜராத்திக் காரர் பல்பொருள் அங்காடி வைத்தருப்பது அமெரிக்காவில்தானே.
மத்தியப் பிரதேசத்திலோ அல்லது உத்தரப் பிரதேசத்திலோ இல்லைத்தானே?
அவருடைய கடைக்கு ,மெக்சிகோ நாட்டவர் ,சீனர், சோமாலியர்கள் போனால் அவர்களுடன் இந்தியில் தான் பேசுவாரா?
அப்படி என்றால் அவருக்கு வியாபாரம் நடக்காமல் பல் பொருள் அங்காடியை மூடித் தொல்பொருள் அங்காடி ஆக்கும்படி ஆகிவிடுமே?
நீங்கள் அங்கே ஒரு வாடிக்கையாளராகப் போனால் உங்களை அவர் மதிப்புடன் நடத்த வேண்டும் ,அப்போதுதான் வியாபாரம் ஒழுங்காக நடக்கும் .

பிரதீப் said...

too much, ippadi ellamaa pesuraanga!

Anonymous said...

சரீங்க….பின்னாடி பாருங்க..உங்க பேத்தி கூப்பிடுராங்க..என்றேன்..

அது அவர் மனைவி..அவர் முகம் இன்னும் கொடூரமாக..விடு ஜூட்...
super

'BLUESPACE' ARIVUMANI, GERMANY said...

Thalaivare pineeteenga!!..
aanaalum ivanuga thiruntha maattaanuga..!!
yetho Hindhi india vo National languagenu ninaippu.. ('India'kku national language kidayaathunnu neenga sollirukkalaam)..

Anyway good Answer..

I LOVE YOU said...

AV,無碼,a片免費看,自拍貼圖,伊莉,微風論壇,成人聊天室,成人電影,成人文學,成人貼圖區,成人網站,一葉情貼圖片區,色情漫畫,言情小說,情色論壇,臺灣情色網,色情影片,色情,成人影城,080視訊聊天室,a片,A漫,h漫,麗的色遊戲,同志色教館,AV女優,SEX,咆哮小老鼠,85cc免費影片,正妹牆,ut聊天室,豆豆聊天室,聊天室,情色小說,aio,成人,微風成人,做愛,成人貼圖,18成人,嘟嘟成人網,aio交友愛情館,情色文學,色情小說,色情網站,情色,A片下載,嘟嘟情人色網,成人影片,成人圖片,成人文章,成人小說,成人漫畫,視訊聊天室,a片,AV女優,聊天室,情色,性愛

Post a Comment