வூட்டுல இருந்து அம்மா கால் பண்ணியிருந்தாய்ங்க….நல்லது கெட்டது பேசிட்டு அம்மா சொன்னாங்க…
”ராஜா உனக்குத் தெரியுமா… நம்ம டீக்கடை கோயிந்துக்கு கல்யாணமாம்டா…”
என்னால நம்பவே முடியலேண்ணே…..அப்படியே சிலை ஆகியிட்டேன்…….
“அம்மா உண்மைதானா….நம்பவே முடியலே”….
“நான் என்ன பொய்யா சொல்லுறேன்..உண்மை தான்டா வேணுண்னா நீயே கால் பண்ணி கேளு…”
என்னாலே இதுக்கு மேல பேச்சை தொடர முடியலைங்கண்ணே…உடனே போனை கட் பண்ணியிட்டு,கோயிந்து கால் பண்ண ஆரம்பிச்சிட்டேன்…ரிங்கு போயிக்கிட்டேயிருக்கு..இந்த நேரத்தில டீக்கடை கோயிந்து பத்தி சொல்றேன் கேளுங்கண்ணே…..
எனக்கெல்லாம் ஐசிஐசிஐயில்ல அக்கவுண்டு ஓப்பன் பண்ணுறதுக்கு முன்னாடி வாழ்க்கையில்ல இருந்த ஒரே அக்கவுண்டு எங்க வூட்டுக்கு பக்கத்தில இருக்க டீக்கடை கோயிந்து அக்கவுண்டுதான்….ரொம்ப அமைதியான ஆளுண்ணே..அப்பிராணியான ஆளுண்ணே…சிம்பு கையை காலை ஆட்டாம ஒரு படத்துல நடிச்சிருக்காருன்னு சொன்னா எந்த படத்திலன்னு கேப்பாருண்ணா பார்த்துக்குங்களேன்….நம்ம சூப்பர் ஸ்டார் வெறியர்….அப்படின்னுக்கூட சொல்லக் கூடாது..பக்தர்…சூப்பர் ஸ்டார கடவுளா நினைச்சிக்கிட்டு இருக்கிற ஒரு ஆளு..அவரு டீக்கடை குடிசையிலே இருக்கிற ஓட்டையை விட கடையிலிருக்கிற ரஜினி போஸ்டர்தான் அதிகம்…ரஜினி படம் ரிலிசு ஆகுறப்ப முதல் ஷோ,முதல டிக்கெட் வாங்காம பல் கூட விளக்க மாட்டாருண்ணே..என்னதான் அமெரிக்காவில பர்கர் சாப்பிட்டாலும், நாம எல்லாம் ஓசி டீ குடிச்சு வளர்ந்த பரம்பரை தானே…அதுக்கும் ஒரு வழி வச்சியிருந்தோம்ண்ணே..நேரா கோயிந்து கடைக்கு போவோம்…..
“அண்ணே..என்ன உங்க தலைவரு ஐஸ்வரியாராய் கூட நடிக்கிறாரு போல….”
“தம்பி உண்மையாவா …பேப்பர்ல கூட வரல..இந்த தம்பி டீ குடிச்சிட்டு மேல சொல்லு…”
நல்லா டீ குடிச்சிட்டு விழுந்து விழுந்து சிரிப்போம்…….
“என்னண்ணே …இன்னுமா நம்பிருங்கிங்க..உங்க மனச்சாட்சியைத் தொட்டு சொல்லுங்கண்ணே ..ஐஸ்வரியாராய் அவருக்கு பேத்தி மாதிரி இருக்கு…அது எப்படி சரியா வரும்ணே..…..” கடுப்பேத்துவோம்..
“போங்கடா தம்பிங்களா…எங்க தலைவரு ஒரு நாள் ஐஸ்வரியாகூட ஜோடி போட்டு நடிக்கத்தான் போறாரு…அப்ப உங்க மூஞ்சியை எங்கு வைப்பிங்கல்லாம்….”
அவரு அப்படியிருக்கிறதுதான் நல்லதுன்னு நினச்சிகிட்டேன்..டெயிலி ஒசி டீ கிடைக்குமே….ரஜினி ஒரு நாள் வெடிகுண்டு கலாச்சாரம் பத்தி பேசவும் …நம்ம ஆளுக்கு மனசில வெடிகுண்டு வெடிச்சிடுச்சி…..
“ராஜா பாத்தியா …..எங்க தலைவருக்கு மக்கள் மேல உள்ள அக்கறையை.. தலைவருதாண்டா அடுத்த சி.எம்”…அப்படியே ஆட்டம் போடுறாங்கண்ணே”….
“கோயிந்து அது என்ன உங்க ஆளு, அவர் படத்துக்கு பிரச்சனை வந்தா மட்டும் பின்னி எடுக்குறாரு..இதுக்கு முன்னாடி எவ்வளவோ கலவரம், வெட்டுக்குத்துன்னு ஆகி இருக்கு..காவிரியில தண்ணி வராம எலிக்கறி சாப்பிடுறான்..அதை பத்தி உங்க தலைவர் வாயே தொறக்கலையே..”
“தெரியும்டா உங்களை பத்தி..அதுக்குத்தான் எங்க தலைவரு ஒரு படத்துல பதில் சொல்லி இருக்காரு..நான் எப்படி வருவேன், எப்ப வருவேண்ணு யாருக்கும் தெரியாது..ஆனா வரவேண்டிய நேரத்துல கண்டிப்பா வருவேன்..”
என் பக்கத்துல இருந்த குசும்பு புடிச்சவன் சும்மா இருக்காம..
“ஏண்டா, காலையில பாத்ரூம் கூட எப்ப வரும் எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது, ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வரும்..அதுவும் உங்க தலைவரும் ஒன்னா?…”
நம்ம ஆளு சூடாகிட்டாயிங்கண்ணே…வாழ்க்கையில நான் கேட்காத கெட்ட வார்த்தை எல்லாம் அன்னைக்கு கேட்டேண்ணே..
ஒரு நாள் பரபரப்பா எங்கிட்ட வந்தாண்ணே..
“ராஜா..நம்ம அண்ணி லதா(கொடுமைடா சாமி) ஒரு ப்ரோகிராம் பண்ணிக்கிட்டு இருக்காங்கடா..தலைவர் வந்து 25 வருசம் ஆச்சா..அதனாலே, “ரஜினி-25”ன்னு ஒரு கச்சேரி..அவங்களே பாடுராங்களாம்..நம்ம ஊருக்கு வாராங்க..நீயும் எங்கூட வரணும்..”
நான் அவியிங்க கூக்குரலை ஏற்கனவே “வள்ளி” படத்துல கேட்டு இருந்ததலே அலறிட்டேன்..
“கோயிந்து..யாரவது சொந்த செலவுல சூனியம் வையிப்பாயிங்களா..ஆள விடுடா சாமி..”
“ராஜா..நீ மட்டும் என்கூட வரலேண்ணா, கடை பக்கம் வரக்கூடாது..”
எனக்கு அந்த காலங்களில் ஓசி டீ தேவைப்பட்டதால் வேற வழியில்லா கூட போகிட்டேண்ணே..ஒரு பாட்டுக்கூட வாயிக்கு விளங்கல….நம்ம ராகினிஸ்ரீயை கையெடுத்து கும்பிடலாம்ணே..தியேட்டருல நல்லா இல்லாத பாட்டுக்குத்தான் வெளியே தம்மடிக்க போவாய்ங்க..இங்க ஒவ்வொரு பாட்டுக்கும் வெளிய தாண்ணே இருந்தேன்..நம்ம ஆளு கைத்தட்டி ஆர்ப்பரிக்கிறான்ண்ணே….அப்புறம் ரஜினி25 ஸ்டிக்கர் பனியன் மட்டும் ஓசியில கிடைக்குதுன்னு போனா …அம்புட்டும் காசுண்ணே… ரூ.50,ரூ.100.நம்ம ஆளு நொந்துட்டான்..கையிலே இருக்கிறது 15 ரூவா தான்..
“ராஜா..ஒரு 50 ரூவா இருந்தா தாயேன்..”
“கோயிந்து..எங்கப்பன் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசுடா..ஒரு பிச்சைக்காரனுக்கு கூட குடுப்பேன்..இதுக்கு தர மாட்டேன்..”
“ராஜா..உன் காலில் விழுந்து கேக்கிறேன் …குடுப்பா..”ன்னு அப்படியே என் காலில் விழுந்துடாருண்ணே…எனக்கு கூனி குறுகி போச்சு…கோயிந்து என்னதான் டீக்கடை வச்சிருந்தாலும் ரோஷக்காரண்ணே..ஆனா இன்னிக்கு எல்லாரு முன்னாலையிலும் என் காலில் விழ்ந்தது…முடியலைண்ணே…
“அண்ணே..இதுக்கு போயி என் காலில விழுந்துகிட்டு ….இந்தாங்கண்ணே….”
ஓடிப்போயி ஸ்டிக்கர் வாங்கியிட்டு..சட்டையில குத்திக்கிட்டு…இப்படி கத்துறாண்ணே…
“சுப்பர் ஸ்டார் வாழ்க…வருங்கால சிஎம் வாழ்க…”
“அடப்பாவி..அவரு ஒரு கோடி வாங்கியிட்டு படத்தில கத்துறாரு…நீ தெருக்கோடியில இருந்துகிட்டு கத்துறீயேடா…”
அப்பறம் தலைவர் ஒவ்வொரு படம் ரிலிஸ் ஆகுறதக்கு முன்னாடியும் அரசியலுக்கு வர்றேன்னு சொல்லுறதும் நம்ம ஆளு சிலிர்க்கிறதும் சகஜமாய் போச்சு….நம்ம ஆளு தலைவரு குறுக்கால,சைடால, பின்பக்கமாவது அரசியலுக்கு வருவாருன்னு நினைச்சுகிட்டு இருந்தான்… எதுவும் நடக்கலை…4 அல்லது 5வருசம் போக நம்ம ஆளு கொஞ்சம் டயர்டு ஆகிட்டான்..எனக்கு வேற நல்ல வேலை கிடைச்சி அமெரிக்க போற நிலைமை வந்துடிச்சி….சரி அவன கூப்பிட்டு கொஞ்சம் நல்லது சொல்லிப்புட்டு போகலாமுன்னு அவன் வூட்டுக்கு போனேன்….
“கோயிந்து..சொல்லுறேன்னு தப்பா நினைச்சிடாதே…உங்க சூப்பர் ஸ்டார் அவர் வேலையை பாக்கிறாரு…நீயும் உன் வேலை பாரு..அவரு படம் ஓடுறதுக்காக பஞ்ச் டயலாக்கு பேசுறாரு..யோசிச்சி பாரு அவர் படம் ரிலிசு ஆகுறதுக்கு முன்னாடி தான் அரசியலுக்கு வருவேனன்னு தெரியாது…கடவுள் தான் தீர்மானிக்கனும்னு சொல்லுவாரு…நமக்கு எல்லாம் பகுத்தறிவுன்னு ஒன்னுயிருக்கு…யோசிச்சி பாரு…நீயே டீக்கடை வச்சி பொழப்ப டத்துற..நீயும் கல்யாணம் பண்ணி முன்னேற வேண்டாமா…”
அவனுக்கு அப்படியே கோவம் வந்ததேண்ணே….
“நீ கமல் ரசிகன்டா அதான் இப்படி பேசுற..தலைவரு அரசியலுக்கு வர்ற வரைக்கும் நான் கல்யாணம் பண்ணமாட்டேன்டா….”
இனிமேல் ரஜினியே வந்து அவனை திருத்த முடியாதுன்னு கிளம்பி இங்கே வந்துட்டேன்….
ம்ம்ம்ம்…..ரிங்கு போகுது….
“அண்ணே… கோயிந்து அண்ணே….எப்படியண்ணேயிருக்கிங்க…கல்யாணமுன்னு கேள்விப்பட்டேன்….ரொம்ப சந்தோசம் என்னால நம்பவே முடியல…எப்படிண்ணே…”
“ராஜா..உணர்ந்துட்டேன்டா..எல்லாம் புரிஞ்சிடுச்சி…தலைவரு அரசியலுக்கு வர போறாரு..எல்லா ரசிகர்களையும் பார்க்க விரும்புறார்னு, சென்னைக்கு வரச்சொன்னதா சொன்னாயிங்க..டீக்கடையை வித்துட்டு அந்த காசில 5 பஸ்சு புடிச்சு கூட்டமா சென்னை போனோம்டா..மண்டபத்துக்குள்ளேயே விட மாட்டிங்குறாய்ங்கடா..சரி கேட் ஏறி பார்க்கலாமுன்னு ஏறுன்னா, போலிஸ் அடி பின்னினதுல, கை உடன்ஞ்சு போச்சுடா..எங்கம்மா வேற உடம்பு முடியாம இருந்தாங்களா, செத்துட்டாங்கடா..(அழுகிறான்)..எனக்கு தகவல் சொல்ல முடியலே..நான் இல்லாமலே எல்லா காரியமும் முடிஞ்சிடுச்சுடா…ஊருக்கு போன கையில சாம்பல குடுக்கிறங்கடா…யாரோ என்னை செருப்பாலே அடிச்ச மாதிரி இருந்தச்சிடா…நானெல்லாம் ஒரு மனிசனாடா…..”
எனக்கு அப்படியே அவனை கட்டிபிடிச்சிக்கிலாம் போல இருந்தது….நம்ம தான் மதுரை குசும்பனாச்சே….விளையாண்டு பார்க்கலாமுன்னு சொன்னேன்..
“கோயிந்து…அதான் உங்க தலைவரு மகள் அப்பா அரசியலுக்கு வருவாருன்னு சொன்னிச்சிடா …பின்ன என்னடா…”
“போடாங்க....சுல்தான்,எந்திரன் படம் வரப்போகுதுல்ல..அதுதான் அப்படி பேசுறாய்ங்க…”
எனக்கு நம்பிக்கை வந்துச்சிருண்ணே..கோயிந்து முன்னேறிருவான்…
16 comments:
Raja nee sonna mathiri vote pannittaen...100 roovaya accountukku anupichurru... Varttah
எனக்கு நம்பிக்கை வந்துச்சிருண்ணே..கோயிந்து முன்னேறிருவான்…
IDHE MADHIRI ETTANAI GOINDUGAL EPPA THIRUNDA POGIRARGAL
பின்னி பெடலெடுத்திருக்கீங்க தல...
கடைசியில் சோகமாயிடுச்சு...
It is very sad. How many thousands of "govinds" we have in the country. Stars like Rajini exploit them for their own welfare.
“அடப்பாவி..அவரு ஒரு கோடி வாங்கியிட்டு படத்தில கத்துறாரு…நீ தெருக்கோடியில இருந்துகிட்டு கத்துறீயேடா…”
நூறு சதவிதம் உண்மை
படிச்சவனும் அப்படிதான் இருக்கான் படிகாதவனும் அப்படிதான் இருக்கான்...
என்ன படிச்சவனோட எண்ணிக்கை குறைவா இருக்கு.
நல்ல பதிவு... மற்றும் நிகழ்வை சொன்ன விதம் அற்புதம்...
ரசானா ராசாதான் :)
settings -> formatting language English க்கு மாத்துங்க அப்பத்தான் மற்றவர்கள் உங்களை பின்தொடரமுடியும்(உங்களுக்கு விருப்பமிருந்தா)
//மாத்துங்க அப்பத்தான் மற்றவர்கள் உங்களை பின்தொடரமுடியும்(உங்களுக்கு விருப்பமிருந்தா)
//
thaankss...now i add it...
//பின்னி பெடலெடுத்திருக்கீங்க தல...
கடைசியில் சோகமாயிடுச்சு.//
நன்றி அண்ணே..
///UNGALODU NAAN said...
எனக்கு நம்பிக்கை வந்துச்சிருண்ணே..கோயிந்து முன்னேறிருவான்…
IDHE MADHIRI ETTANAI GOINDUGAL EPPA THIRUNDA POGIRARGAL
////
நன்றி..ஏதொ என்னால முடிஞ்சது..
///அடப்பாவி..அவரு ஒரு கோடி வாங்கியிட்டு படத்தில கத்துறாரு…நீ தெருக்கோடியில இருந்துகிட்டு கத்துறீயேடா…”
நூறு சதவிதம் உண்மை
படிச்சவனும் அப்படிதான் இருக்கான் படிகாதவனும் அப்படிதான் இருக்கான்...
என்ன படிச்சவனோட எண்ணிக்கை குறைவா இருக்கு.
நல்ல பதிவு... மற்றும் நிகழ்வை சொன்ன விதம் அற்புதம்...
ரசானா ராசாதான் :)////
வருகைக்கு ரொம்ப நன்றி அண்ணே....
///Raja nee sonna mathiri vote pannittaen...100 roovaya accountukku anupichurru... Varttah///
வருகைக்கு நன்றி...
very good writing skills...congrats...i dont know that you are having such a skill
அட்ரா சக்க.. அட்ரா சக்க.... நடூ centre ல அடிச்சா மாதிரி சொல்லிருக்கிக... நம்ம ஊருகாரைய்ங்க தன்..இப்டி கடவுள் சாமீ அது இதுனு ஓவரா பண்றது.... உங்க புண்ணியத்துல இன்னும் நெறைய பேரு மாறினா ரொம்ப சந்தோசம்... keep writing more.
படம் வந்தா அரசியல் , தேர்தல் வந்தா வாக்குறுது மாதிரி
romba nalla pathivu nanbaa..
-panasai Natarajan
நல்ல பதிவு..சிரிக்க சிந்திக்க ..
நானும் இத மாதிரி நிறைய பேருக்கு புத்தி சொல்லியிருக்கேங்க ! எவனும் கேட்கலா..
பட்டாதான் புரியும்னு விட்டுடேன்..திருந்திடவாங்க பார்த்தா..இப்ப ரஜினியிலிருந்து விஜய்க்கு மாறிட்டானுங்க ! முடியலா!
ரஜினி பற்றிய என் பதிவு -http://m-valarpirai.blogspot.com/2009/02/blog-post.html
Post a Comment