எனக்கு ஒரு் உயிர் நண்பன் இருக்காண்ணே..பேரு கோவாலு..ஒண்ணாப்பு படிக்கறதுல இருந்து கூடவே இருக்கான்..ஆனா பச்ச மண்ணுன்னே..ரொம்ப அப்பிராணி..யாரு என்ன சொன்னாலும் நம்பிருவான்..பேரரசு நல்ல படம் எடுத்துக்குராண்ணு சொன்னா, ‘அப்படியாண்ணே’ ன்னு கேட்பான்னா பார்த்துக்கங்களேன்…எல்லாத்தையும் தலைவரா ஏத்துக்கிருவான்…
ஆறிப்போன இட்லி
ரொம்ப வருசத்துக்கு முன்னாடி பரபரப்பா எங்கிட்ட வந்தாண்ணே..
“ராசா,ராசா..வந்தாச்சுடா..வந்தாச்சு..தமிழ்நாட்டுக்கு மறுமலர்ச்சி வந்தாச்சு…புரச்சி புயல் வைகோ டீஎம்கே விட்டு வெளியே வந்த்தாச்சு..”
“டே..கோவாலு..வேணாம்..இந்த அரசியல்ல யாரையும் நம்பாதே..”
“போடா..அவரோட பேச்சை ஒரு நிமிசம் கேட்டுப் பாருடா..இளைஞர்களோட விடிவெள்ளிடா..நீ வேணா பாரேன்..தனியா நின்னு சாதிக்க போறார் பாரேன்..”
கொஞ்ச நாளிலே வைகோ, “கலைஞர் அண்ணே” ன்னு சொல்ல, நம்ம பையன் நெஞ்சு வலிக்குதுண்ணேன்னு சொல்லுரான்..பின்ன அவனுக்கு அமிர்தாஞ்சனம் தேய்ச்சி விட்டு சரி பண்றதுக்குள்ள போதும்னு ஆகிடுச்சு..போன வாரம் கூட பாருங்க..”பாருங்கண்ணே, இப்ப வந்த பா.மா.கவுக்கு 6 சீட் ஒதுக்கிட்டு எங்க தலைவருக்கு 3 சீட் தானா..எங்க தலைவர் தண்மான சிங்கம்ணே..இதுக்கு ஒத்துக்க மாட்டார்..ணுன்றான்..
நான் தெளிவா சொல்லிப்புட்டேன்…”இந்த பாரு தம்பி..டெய்லி வந்து உனக்கு நான் அமிர்தாஞ்சனம் தேய்க்க முடியாது..நீயே தான் உன் உடம்பை பார்த்துக்கனும்..”
ஊசிப்போன வடை
நம்ம கோவாலுக்கு டாக்டர் அய்யா மேல ஒரு பாசம் இருக்கு..
ஒரு சில வருசதுக்கு முன்னாடி,
“ஓரு சொல்காரர்னே..பார்த்திங்களா..அம்மா மரியாதை தரேலேன்னு சொன்னவுடனே, கூட்டணீயை தூக்கி எறிஞ்சாருண்ணே..பாருங்க, நான் இனிமேல் அதிமுக வோட கூட்டு சேர மாட்டேன்னு பத்திரம் எழுதி தரேன்னு சொல்லுராரு..மானம்னே..” சொன்னான்..
“சொன்னாரே..பத்திரம் எழுதி தந்தாரா..வேணாண்டா கோவாலு..”
“எண்ணன்னே..நம்பனும்னே..நம்பிக்கைதானே முக்கியம்”ண்றான்..”
கொஞ்ச நாளிலே டாக்டர் அய்யா..”அன்பு சகோதரி” ன்னு சொல்ல நம்ம ஆளு பேச்சு மூச்சு இல்லாம ஆகிட்டான்..அப்புறம் அவனை கோவிலுக்கு கூட்டி போய், மந்திருச்சு..நிறைய செலவுண்ணே..”
நாத்தம் புடிச்ச பொங்கலு
நம்ம கோவாலுக்கு வூரு பாசம் அதிகம்னே..நம்ம மதுரைகாரர் யாராவது சி.எம் மா வரணும்னு மூக்கம்புட்டு ஆசை..அப்பதாண்ணே, நம்ம விஜயகாந்து அரசியலிலே தொமுக்கடிருண்ணு குதிச்சாரு..நம்ம கோவாலுக்கு சநதோசம் தாங்கலை..
“பாருடா..ராஜா..மதுரை சிங்கம்டா..நீ வேணா பாரேன்..அரசியலுலே ஒரு புரச்சியே உண்டு பண்ண போறாரு..மத்தவங்கலெல்லாம் குடும்ப அரசியல் நடத்துராங்க..நம்ம மதுரக்காரர் தான் மக்களுக்காக அரசியல் நடத்த போறாரு..” அவனுக்கு சிலிர்க்குதுண்ணே…
“நீ திருந்தவே மாட்டாயா கோவாலு..அவர் எங்க போனாலும் கூட மனைவியும் மச்சானும் தானடா கூட போறாங்க..”
“டே..உனக்கெல்லாம் ஊருப்பாசம் இருக்காடா..மனைவியும் மச்சானும் கூட போனா அது குடும்ப அரசியலாடா..நீ வேணா பாருடா..எலக்சனுல அவங்களுக்கு சீட் தர மாட்டாருடா..உண்மை தொண்டனுக்கு தான் சீட் தருவாரு..நான் வேணா பந்தயம் கட்டுறேன்….சிலிர்க்குறான்..
முந்தா நாள், பேப்பரை பாத்த கோவாலு விஜயகாந்த் மச்சான் சுதிஷ்க்கு சீட்டுன்னு செய்திய பார்த்தவுடனே நெஞ்ச புடிச்சு கீழே விழுந்துட்டான்..பேச்சு மூச்சே இல்லை..அப்புறம் அப்பலோவுல சேர்த்து, 2 நாள் பெட்டுல சேர்த்து வைத்தியம்ணே..டாக்டர் ஹார்ட் ரொம்ப வீக்கா இருக்குன்னு சொல்லிட்டாரு..”
ரெண்டு நாள் கழிச்சு தான் கண் முழிச்சு பார்க்குறான்..சுத்தி அம்மா, அப்பா, சொந்த பந்தம்….நல்லா இருக்கிங்களான்னு கேட்பான்னு பார்த்தா..
“ராஜா..அழகிரி உயிருக்கு கம்யுனிஸ்ட் கட்சியினால ஆபத்துன்னு கலைஞர் சொல்லுராறே..உண்மையிலே ஆபத்தாடா..”ன்னு கேக்குறாங்க..
எப்படி இருக்காய்ன் பாருங்க..பச்ச மண்ணுங்க….
11 comments:
பதிவெழுத எடுத்துக்கொண்ட ஸ்டைல் சூப்பர். முழுப்பதிவும் ரசிக்கும்படி இருந்தது.
அமெரிக்கால இருக்கிற ஒரு பையன், இந்த மாதிரி இட்லி, வடை-ன்னு தலைப்புல எழுதுறானே-ன்னு யோசிச்சேன். பிச்சு உதறிட்டீங்க.
அந்த புள்ளையே உடம்ப பாத்துக்க சொல்லுங்க.
அரசியல்வியாதிகளுக்கு அபோல்லோ, செட்டிநாடு எங்க வேணும்னாலும் சிகிச்சை கிடைக்கும், நமக்கு அப்படியா?
நாத்தம் புடிச்ச மேட்டர் பத்தி எழுதி.. நம்ம மதுரை வாசன ஊரெல்லாம் ஜம்முனு பரவ விட்டிகளே ராசா...பென்டாஸ்டிக் ...
உங்க எழுது நடை நல்லாருக்கு.. வாழ்த்துக்கள்.
அப்டியே தரணி போற்றும் தனித்தலைவன் ஜெ.கே.ரித்திஷ் குமார் பத்தி ஏதாவது ரத்தின சுருக்கமா நாரடியுங்களேன்...
இவன்.
"அண்ணன்" முகவை குமார் பேரவை.
ராஜா அண்ணே முடியலன்னே என்னால :))))))))))))))))
I like your writing style...
Guru...
sooperngga !!
namma ooru nalla ooru ippa romba kettu pochanne
I just finished reading all of your posts...you have got really special writing skills...especially "என் மனைவியும் சைடு நவீனத்துவம் மற்றும் பூரிக்கட்டையும்"… wow!
i must say your style is UNIQUE...Keep it up
Guru...
supero superngoo
மச்சான் அருமையா கலக்கிட்ட ஹ ஹ :-) சூப்பர் மச்சான் தொடர்ந்து எழுதுங்க..
உனக்கு தமிஷ்ல வோட்டு போட்டாச்சு
நானும் இரு பதிவு நகைச்சுவையாய் போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,
படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)
ராமதாஸின் அரசியல் யுக்தியும் அம்மாவின் புத்தியும்
http://sureshstories.blogspot.com/2009/04/ramadoss-and-amma-politics.html
காதல் - படித்து பாருங்க பசங்களா - பேச்சுலர் தேவதாஸ்களுக்கு
http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_10.html
ரொம்ப நல்லா இருக்கு பாஸ்
Post a Comment