Monday 21 February, 2011

கொத்து திரைவிமர்சனம்

கடந்த ஒரு வாரமாக தூக்கம் வராமல் கன்னாபின்னாவென்று படங்களை பார்க்கநேர்ந்தது. இப்படியே இன்னும் ஒரு வாரத்திற்கு படம் பார்க்க நேர்ந்தால், நடுநிசிநாய்கள் வீராவாக மாறிவிடுவேனோ என்ற பயத்தாலேயே, படம்பார்ப்பதை, இந்த வாரம் நிறுத்திவைத்திருக்கிறேன். அடுத்தவாரம், ஔவையார், காளிதாஸ், ஹரிதாஸ் போன்ற படங்களை பார்த்து விமர்சனம் பண்ணலாம் என்ற திட்டம் உள்ளதால், தயவுகூர்ந்து உங்கள் பொன்னான ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இனி படங்கள் பற்றிய என் பார்வை, உங்கள் பார்வைக்கு

நடுநிசிநாய்கள்

கவுதம்மேனனுக்கு அரிப்பு வந்தால் எப்படி சொரிந்துகொள்வார் என்பதற்கு இந்தபடம் ஒரு உதாரணம். ஒரு கிரைம் திரில்லர் எடுக்க ஆசைப்பட்டு, ஒரு பாடாவதியான திரைப்படத்தை கொடுத்திருக்கிறார். 18+ வயதினர் மட்டுமல்ல, 75+வயது ஆனால் கூட பார்க்ககூடாத ஒரு படம். தந்தை மகனை வண்புணர்ச்சி செய்வதும், மகன் வளர்ப்புத்தாயை புணர்வது போன்ற செய்திகள், செய்தித்தாளில் வந்தாலே, கொஞ்சம் தர்மசங்கடத்தோடு அடுத்தபக்கத்திற்கு தாவும் இந்த சமூகத்திற்கு அதை திரைப்படத்தில் காட்டமுயன்றிருக்கிறார். பரங்கிமலை ஜோதியில் பார்க்கும் படங்களில் கூட முறையற்ற உறவுகளை காட்சிப்படுத்துவதில்லை. மின்னலே, காக்க காக்க போன்ற படங்கள் எடுத்து, ஒரு படி ஏறியிருந்த கவுதம்மேனன், இரண்டு படிகள், தலைகுப்புற தவறிவிழுந்திருக்கிறார். இந்த பாவத்தை கழுவுவதற்கு, ஔவையாரை ஹீரோயினாக போட்டு ஒரு தமிழ்படம் எடுத்து, பிரயாசித்தம் தேடுமாறு, வேண்டுகோள் விடுக்கிறேன்.

I saw the devil(கொரியன் மொழி திரைப்படம்)

வேண்டா வெறுப்பா புள்ளைய பெத்து “காண்டாமிருகம்” ன்னு பேர் வைச்சானாம்கிற மாதிரி, கேபிள் சங்கர் விமர்சனத்தை படிச்சுட்டு சும்மா இல்லாம நம்மளும் ஒரு ஒலகப்படம் என்று இந்த படத்தை பார்த்ததின் விளைவே, அன்று இரவு தூக்கம் போச்சு. தனியே சிக்கும் பெண்களை வண்புணர்ந்து கொடூரமாக(கொடூரம்னா , உங்கவீட்டு கொடூரம் எங்கவீட்டு கொடூரம் இல்லைண்ணே..வடிவேலு பாணியில் சொல்லப்போனால் கர்ணகொடூரம்) கொலை செய்யும் சைக்கோ, எப்போதும் போல ஒரு பெண்ணை கொலைசெய்கிறார். தேன்கூட்டில் கைவிட்ட கதையாக, கொலைசெய்யப்பட்டவள், ஹீரோவின் காதலியாகப் போக, நம்ம ஊரு ஹீரோவாக இருந்தால், ஒருரீலில் கதையை முடித்திருப்பார். ஆனா, இங்கதான் வைக்கிறாரு, நம்ம சப்பைமூஞ்சி கொரியன் டைரக்டரு, ஒரு ட்விஸ்டு. “நீ சாதரணமா செத்தா, ஒன்னும் இல்லைடா..என் காதலி சாகுறப்ப எவ்வளவு வலி அனுபவிச்சாளோ, அதைவிட 10000 மடங்கு வேதனை அனுபவிக்கணும். அப்புறம் தான் உன்னை கொல்லுவேன்” என்று சபதம் எடுக்கிறார். அவனுக்கே தெரியாமல் கேப்சூல் வடிவில் , ஜீ.பி.எஸ்சை முழுங்கவைத்து,வில்லன் எந்த பெண்ணை தொட நினைத்தாலும் அங்கு சென்று மரண அடி கொடுக்கிறார் ஹீரோ..அடி ஒன்னும் மரண அடிண்ணே..குழம்பி போகிறான் வில்லன். அதன் பின்பு, ஜீ.பி எஸ்சை கண்டுபிடித்து கக்கா(சுத்த தமிழில் ஆய் என்று கூட சொல்லலாம்) வழியாக அதை வெளியேற்றி, ஆடுபுலி ஆட்டம் ஆரம்பிக்கிறான் வில்லன். அதற்கப்புறம் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் ஜிவு,ஜிவு. இந்த வில்லனா நடித்த ஒரு நடிகன், பிறவியிலே சைக்கோவா இருக்கணும் போல. ங்கொய்யாலே, என்னாமா ஆக்டு கொடுக்குறான்யா.. வில்லனை மாட்டிவிட்டு, கடைசியாக கூலாக ஹீரோ நடந்துவரும்போது, நான் எழுந்து கைதட்டினேன். உங்களுக்கு கோவாலு மாதிரி இளகிய மனசு இருந்துச்சுன்னா படத்தை பார்க்காதீங்கப்பு..அப்புறம் ஒரு வாரத்துக்கு சிக்கன் கூட சாப்பிட மாட்டீங்க..

பயணம்

கந்தகார் விமான கடத்தலை மையமாக எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம். செண்டிமெண்டில் அவிங்க ராசாவை மிஞ்சும், டைரக்டர் ராதாமோகன், வேறு ஒரு தளத்தில்(செகண்ட் புளோர் இல்லீங்க) பயணித்த ஒரு களம்(தளம் – களம்..ராசா..வரவர உன் எலக்கிய அறிவு கூடிக்கிட்டே போகுது). 20, 30 ஆட்களை ஒரே கையால் அடிக்கும் தெலுங்கு பார்முலாவை விட்டுவிட்டு நாகர்ஜூன் அடக்கிவாசித்திருக்கிறார். கடத்தலுக்கு நடுவில் நடக்கும், சிறு சிறு நிகழ்வுகள் சுவாரஸ்யம். பயணம் , கண்டிப்பாக நல்லபடம் என்ற போதிலும் எனக்கு ஒரு டவுட்டு. அது என்னப்பா, எல்லா படத்திலயும் பாதிரியார்களை எல்லாம் வெள்ளை அங்கி போட்டு “காட் பிளஸ் யூ மை சன்” என்று தவறாக சிலுவை அடையாளம் போடுறமாதிரியே காட்டுறீங்க.. சர்ச் விட்டுவெளியே வந்தால் அதிகபட்ச பாதிரியார்கள், ஜூன்ஸ் கூலிங்கிளாஸ், ரீபாக் ஷூ ல போடுறாங்க..

ஆடுகளம்

“இங்கேரா..இவிங்களை” என்று ஆரம்பிக்கும்போது, ஆஹா, இன்னொரு மதுரைப்படத்தை ஆரம்பிச்சுட்டாயிங்களா என்று கேள்வி எழுவதை தவிர்க்கமுடியவில்லை. நல்லவேளையாக டைரக்டர் வெற்றிமாறன், சேவல் சண்டை என்ற கதைக்களத்தை எடுத்து ஜெயித்திருக்கிறார். குறிப்பாக இடைவேளைக்கு அப்புறம் பேட்டைக்காரன், கருப்பு, மற்றும் கிஷோர் கதாபாத்திரங்களுக்கு இடையே வரும் மைண்ட் கேம்(மேஜர் சுந்தர்ராஜன் ஸ்டைலில் சொல்லவேண்டுமென்றால்..எஸ்..மைண்ட் கேம்.அதாவது மனவிளையாட்டு) எடுத்து செல்லும் விதம் அற்புதம். சாரு சந்தித்தால் மட்டும் அவருக்கு பிடித்ததாக சொல்லப்பட்ட இசையமப்பாளார் ஜீ.வி பிரகாஷ் நன்றாக செய்திருக்கிறார். மூன்று மணிநேரம், ஏதோ, மதுரைப் புழுதியில் புரண்டு வந்தமாதிரி ஒரு அனுபவம். ஒருவரியில் சொல்லவேண்டுமென்றால் “கலக்கிப்புட்டாயிங்க பங்க்ஸ்..”

யுத்தம் செய்

செண்டிமெண்ட் காட்சிகளில், புருவத்தை உயர்த்தி மோட்டுவளையை பார்த்து, கண்களை, கசக்கி, தானும் அழுது, பார்ப்பவர்களையும் “ஏண்டா வந்தோம்” என்று அழவைத்த சேரனா, இது. நம்பமுடியவில்லை. சி.பி.சி.ஐ.டி போலிஸ் வேடத்தில் கச்சிதம். திடிரென்று ஒரு அட்டைப்பெட்டியில், மனித உறுப்புகள் வெட்டப்பட்டு முக்கியமான இடங்களில் வைக்கப்பட, தியேட்டர் வெளிச்சத்தில் அவசரம் அவசரமாக தத்தம் கை, கால்களை சரிபார்த்து கொள்கிறோம். இப்படியெல்லாம் நடக்கிறதா என்று யோசிக்கும்முன்பு, கதைக்குள் நம்மை இழுத்து சென்று விடுகிறார், குளிக்கும்போது கூட கூலிங்கிளாசை கழட்டாத இயக்குநர் மிஷ்கின். குறிப்பாக, நெயில் கட்டரை எடுத்துக்கொண்டு, சேரன் போடும் அந்த சண்டை, நிமிர்ந்து உக்காரவைக்கிறார் அதற்கு பின்பு வரும் காட்சிகள், குறிப்பாக, கிளைமாக்ஸ் காட்சியில், நிறைய அப்ளாஸ். ஆனால், “நாய் கடிச்சிடுச்சுப்பா” என்று சொல்வது மாதிரி, மிஷ்கின் ஆட்டிவைக்கும் கதாபாத்திரங்கள், ஒருமாதிரி வியாதி வந்தமாதிரி தலையை குனிந்துகொண்டே பேசுவது, “ம்” என்றால் லாங்க் ஷாட் என்று ஒரே மாதிரி ஸ்டைலில் படம் எடுப்பதை மிஷ்கின் நிறுத்தாவிட்டால், அவருடைய அடுத்த படத்திலிருந்து அவருக்கு ஆப்பு ஆரம்பம் என்பதை உணரமுடிகிறது.

மந்திர புன்னகை

குடைக்குள் மழை என்ற படத்தை எடுத்த, அடுத்து எப்படி படம் எடுப்பது என்று இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கும் இயக்குநர் பார்த்திபன் வரிசையில், இதோ இன்னொரு இயக்குநர் கருபழனியப்பன். மனநிலை பிறழ்ந்தவனின் பார்வையில் கதை ஆரம்பிக்கிறது. அந்த கதாபாத்திரம் பேசும் டயலாக்குகள் “அடடே” போடவைத்தாலும், படம் முழுவதும் ஒரே மாதிரியாக பேச ஆரம்பித்தது மிகவும் சலிக்கவைக்கிறது. நல்லவேளையாக சந்தானம் காமெடி ஆறுதலாக இருந்து படத்தை ஒரு அளவுக்கு காப்பாற்றுகிறது. படத்தின் தயாரிப்பாளர், இன்னமும் விநியோகிஸ்தர்களிடம் பேரம் பேசுவதாக நினைத்துக்கொண்டு தனியாக பேசிக்கொண்டு இருப்பதாக கேள்வி.

ஈசன்

இடைவேளையின் போது ஈசனாக நடிப்பவர், வில்லனை பின்மண்டையில் ஒரு கட்டையால் ஓங்கி ஒரு அடிஅடிக்கிறார், அப்படியே சசிகுமாரை நம்பி, தியேட்டருக்கு வந்த ரசிகர்களையும்தான். ஆனாலும் போலீசாக நடித்த சமுத்திரக்கனியின் பாத்திரபடைப்பு, கொஞ்சம் வித்தியாசப்படவைக்கிறது. ஆனாலும், மெதுமெதுவாக செல்லும் திரைக்கதை, சுப்பிரமணியபுரத்தை நம்பி வந்த ரசிகர்களுக்கு, திருநெல்வேலி அல்வாவை ஊட்டுகிறது. கொடுத்த காசுக்கு , “ஜில்லா, விட்டு ஜில்லா வந்த” என்ற பாடலை முனுமுனுத்துக் கொண்டு , ரசிகன், தியேட்டரின் வெளியே வரும்போது, ஒவ்வொருவர் காதிலும் ரத்தம். “இதுக்குதான் ரொம்ப பேசக்குடாதுன்னு சொல்லுறது..”

29 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

super

Anonymous said...

super olukka seelare...

taaru said...

//I saw the devil//
இன்னிக்கு தான் டவுன்லோட் போட்டு இருக்கேன்... அவ்ளோ கொடூரமா?!!! பாக்கலாம்.... ஓல்ட் பாய் பாத்தியான்னே?!!
// செண்டிமெண்டில் அவிங்க ராசாவை மிஞ்சும், டைரக்டர் ராதாமோகன்,//
அந்த படத்தோட காமடி மாதிரி... இங்கனுக்குள்ள சிரிச்சுபுட்டேன்...

//அவருடைய அடுத்த படத்திலிருந்து அவருக்கு ஆப்பு ஆரம்பம் என்பதை உணரமுடிகிறது//
ஆரம்பிச்சுருச்சு... அவராண்ட இருந்து "நீங்கள் கேட்டவை" மாதிரி ஒரு படம் எதிர் பாக்குறேன்...[நெறையா படிக்கிறவர், பண்ணிகாட்டட்டும்...]

மற்றது எல்லாம்.... சரியா தாண்ணே சொல்லி இருக்கே...

அமுதா கிருஷ்ணா said...

ஆகா எத்தனை படங்கள்.

CrazyBugger said...

Thambi ponga poi pullakuttigala padikka vainga... appidikka neengalum oru thadava padinga... kappi thanama paesikittu ~ Ivan ~ Maduraimalli

Prabhu said...

super sir...

www.kaathalil-thotravan.blogspot.com
I read this new blog yesterday nice lines..
try this...

Anonymous said...

கலக்கிட்ட தல கலக்கிட்ட...இம்புட்டு படமா? அட்ராசக்க சி பி அவர்களை பீட் பண்ணிடிவீங்க போல?

வெங்கடேஷ்

மதுரை சரவணன் said...

அனைத்து விமர்சனங்களும் அருமை.. வாழ்த்துக்கள்.இதையும் படிக்கவும்http://veeluthukal.blogspot.com/2011/02/blog-post_20.html

Philosophy Prabhakaran said...

ஆறு பதிவா போட வேண்டியதை ஒரே பதிவா போட்டுட்டீங்களே...

அவிய்ங்க ராசா said...

///////////////////////
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
super
21 February 2011 5:35 AM
///////////////////////////
நன்றி ரமேஷ்

அவிய்ங்க ராசா said...

//////////////////////
Anonymous said...
super olukka seelare...
21 February 2011 5:48 AM
////////////////////////
நன்றி அனானி நண்பரே..

Anonymous said...

Osila download panni parthuttu.. enna naalavan vesam vendi kedakku....

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////////
taaru said...
//I saw the devil//
இன்னிக்கு தான் டவுன்லோட் போட்டு இருக்கேன்... அவ்ளோ கொடூரமா?!!! பாக்கலாம்.... ஓல்ட் பாய் பாத்தியான்னே?!!
// செண்டிமெண்டில் அவிங்க ராசாவை மிஞ்சும், டைரக்டர் ராதாமோகன்,//
அந்த படத்தோட காமடி மாதிரி... இங்கனுக்குள்ள சிரிச்சுபுட்டேன்...

//அவருடைய அடுத்த படத்திலிருந்து அவருக்கு ஆப்பு ஆரம்பம் என்பதை உணரமுடிகிறது//
ஆரம்பிச்சுருச்சு... அவராண்ட இருந்து "நீங்கள் கேட்டவை" மாதிரி ஒரு படம் எதிர் பாக்குறேன்...[நெறையா படிக்கிறவர், பண்ணிகாட்டட்டும்...]

மற்றது எல்லாம்.... சரியா தாண்ணே சொல்லி இருக்கே...
21 February 2011 8:44 AM
/////////////////////////////
நன்றி தாரு..மிஷ்கின் பண்ணுவார் என்ற நம்பிக்கை உண்டு..

அவிய்ங்க ராசா said...

////////////////////////////
அமுதா கிருஷ்ணா said...
ஆகா எத்தனை படங்கள்.
21 February 2011 10:13 AM
//////////////////////////
நன்றி அமுதா..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
CrazyBugger said...
Thambi ponga poi pullakuttigala padikka vainga... appidikka neengalum oru thadava padinga... kappi thanama paesikittu ~ Ivan ~ Maduraimalli
21 February 2011 11:32 AM
/////////////////////////
மதுரை மல்லி..போன் பண்ணு..இருக்கு உனக்கு..))

அவிய்ங்க ராசா said...

////////////////////////
Prabhu said...
super sir...

www.kaathalil-thotravan.blogspot.com
I read this new blog yesterday nice lines..
try this...
21 February 2011 11:46 AM
////////////////////////
நன்றி பிரபு..அப்படி ஒரு பிளாக்கே இல்லைன்னு சொல்லுதே..

அவிய்ங்க ராசா said...

////////////////////////////
Anonymous said...
கலக்கிட்ட தல கலக்கிட்ட...இம்புட்டு படமா? அட்ராசக்க சி பி அவர்களை பீட் பண்ணிடிவீங்க போல?

வெங்கடேஷ்
21 February 2011 12:17 PM
//////////////////////////////
ஆஹா..அவரெல்லாம் பெரிய ஆளுங்கோ..)

அவிய்ங்க ராசா said...

///////////////////////////////
மதுரை சரவணன் said...
அனைத்து விமர்சனங்களும் அருமை.. வாழ்த்துக்கள்.இதையும் படிக்கவும்http://veeluthukal.blogspot.com/2011/02/blog-post_20.html
21 February 2011 12:36 PM
//////////////////////////////
நன்றி..படித்தேன்..ரசித்தேன்..)

அவிய்ங்க ராசா said...

///////////////////////////
Philosophy Prabhakaran said...
ஆறு பதிவா போட வேண்டியதை ஒரே பதிவா போட்டுட்டீங்களே...
21 February 2011 6:09 PM
/////////////////////////////
ஆறுபதிவு தாங்காதுப்பா..)) வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்..

Anonymous said...

if you don't like it(nadunasi nayakghal) go kill yourself nobody put a gun to your head to watch the movie.

Arun said...

Ama puthu tamil padam elam yepadi pathinga.. laptop la download pannitanne ;-) ??

சேக்காளி said...

//கொத்து// படத்தோட விமர்சனம் எங்கேங்க?

Vignesh said...

//...போன்ற செய்திகள், செய்தித்தாளில் வந்தாலே, கொஞ்சம் தர்மசங்கடத்தோடு அடுத்தபக்கத்திற்கு தாவும் இந்த சமூகத்திற்கு அதை திரைப்படத்தில் காட்டமுயன்றிருக்கிறார்.//
great tamil directors! plz don't film crimes and violence even though it is based on a real 'true story'.creators must have some social responsibility b'coz cinema is a powerful mass media which has direct n huge impact on our society. instead of creating awarness it will only going to have inverse effect.

yethuku ippadi padam yedukanum, pinnadi kulanthaikal, karpini pengal matrum palaveenamaanavarkaluku alla'nu podanum?

appa yaaruku msg sollareenga?
thodarnthu media'vil ippadi patta seythikalai keetka keetka thavaru seypavarkal itthu ellam sagajam enndra mananilaiku vannthu viduvaarkal. problem innum perithu thaan aagum!

though i'm a student i don't support violoence. all kinds of medias must have some social responsibilities.
thanks anna, coz u don't support such kinds of films like other bloggers.
(sry i don't know how to type in tamil font)

அவிய்ங்க ராசா said...

//////////////////////////////
Anonymous said...
if you don't like it(nadunasi nayakghal) go kill yourself nobody put a gun to your head to watch the movie.
21 February 2011 11:50 PM
/////////////////////////////////
சூப்பருங்கோ...))

அவிய்ங்க ராசா said...

////////////////////////////////
Arun said...
Ama puthu tamil padam elam yepadi pathinga.. laptop la download pannitanne ;-) ??
22 February 2011 1:35 AM
//////////////////////////////
ஹி..ஹி..

அவிய்ங்க ராசா said...

////////////////////////////
சேக்காளி said...
//கொத்து// படத்தோட விமர்சனம் எங்கேங்க?
22 February 2011 1:53 AM
//////////////////////////////
ஆஹா..ஆரம்பிச்சாச்சா...))

அவிய்ங்க ராசா said...

///////////////////////////////
sai said...
//...போன்ற செய்திகள், செய்தித்தாளில் வந்தாலே, கொஞ்சம் தர்மசங்கடத்தோடு அடுத்தபக்கத்திற்கு தாவும் இந்த சமூகத்திற்கு அதை திரைப்படத்தில் காட்டமுயன்றிருக்கிறார்.//
great tamil directors! plz don't film crimes and violence even though it is based on a real 'true story'.creators must have some social responsibility b'coz cinema is a powerful mass media which has direct n huge impact on our society. instead of creating awarness it will only going to have inverse effect.

yethuku ippadi padam yedukanum, pinnadi kulanthaikal, karpini pengal matrum palaveenamaanavarkaluku alla'nu podanum?

appa yaaruku msg sollareenga?
thodarnthu media'vil ippadi patta seythikalai keetka keetka thavaru seypavarkal itthu ellam sagajam enndra mananilaiku vannthu viduvaarkal. problem innum perithu thaan aagum!

though i'm a student i don't support violoence. all kinds of medias must have some social responsibilities.
thanks anna, coz u don't support such kinds of films like other bloggers.
(sry i don't know how to type in tamil font)
/////////////////////////////////
நன்றி சசி..நல்லா எழுதியிரிக்கீங்க..நீங்க ஒரு ப் ளாக் ஆரம்பிக்கலாமே..

Arun said...

அவிய்ங்க ராசா said..
////////////////
நீங்க ஒரு ப்ளாக் ஆரம்பிக்கலாமே..
///////////////
Pavam vidringa.. pavam sai.. student life enjoy pannatum.. :D

Anonymous said...

The most drastic movie-nadunisi-I do agree

Post a Comment