Monday, 7 February 2011

கேபிள் ஜாக்கி அண்ணே, மன்னிச்சிருங்க - கொத்து சாண்ட்விச்

(ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, கேபிள் சங்கர், ஜாக்கி அண்ணே, இந்த பதிவு சும்மாகாச்சிக்கும் ஜாலிக்குத்தான். படிச்சிட்டு சிரிப்பு வந்தா சிரிச்சுடுங்க..ஏன்னா சிரிப்புதான், பல கொலைகளை தடுக்குதாம்..ஊருக்குள்ள சொல்லுறாயிங்க..))))

சிந்தனையத் தூண்டுறதுல நம்ம கோவாலுக்கு நிகர் கோவாலுதாண்ணே. சும்மா இருந்த ஆளை சொரிஞ்சு வுடுறது மாதிரி ஒரு கேள்வி கேட்டுப்புட்டான்

“ராசா..பதிவரா இருந்து இந்த சமூகத்திற்கு என்ன செஞ்சிருக்க..”

ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன்.

“என்னடா கோவாலு, இப்படி சொல்லிப்புட்டே..வாரத்திற்கு ஒரு பதிவு போடுறேன். டெய்லி 100 வாசகர் கடிதம் வருது. அலெக்சா ரேட்டிங்குல வேற 10 லட்சத்தை கொடுத்துப்புட்டாயிங்க.. நான் டெய்லி எழுதாம இருக்குறதே, இந்த சமூகத்திற்கு செஞ்ச சேவை இல்லையா..”

“போடா..டுபுக்கு..சமூகத்திற்கு என்னடா செஞ்ச..”

“கோவாலு..அவசரமாக ஒன் பாத்ரூம் போகணும். போயிட்டு வந்துட்டுனா, சமூகத்திற்கு ஏதாவது செய்யவா..”

“அதெல்லாம் போகக்கூடாது..இந்த சமூகத்திற்கு ஏதாவது செஞ்சிட்டு போ..”

கோவாலுகிட்டு புடிக்காதது இது ஒன்னுதான், பயபுள்ள குழந்தை மாதிரி அடம் புடிப்பான்..

“சரி கோவாலு..இப்ப என்னதான் பண்ணனும்..சொல்லு..”

“இப்ப கேபிள் சங்கர், ஜாக்கிசேகர் எல்லாம் கொத்து புரோட்டா, சாண்ட்விச், இதுமாதிரி எழுதி, சமூகத்தை தட்டி எழுப்புறாங்கள்ள..அதுமாதிரி நீ ஏதாவது..”

“டே கோவாலு..அவுங்க எல்லாம் சூப்பரா எழுதுவாங்கடா..நம்மளே சரக்கில்லாம எழுதிக்கிட்டு இருக்கோம்..இதுல இது வேறயா.. ஆள விடுடா..”

“ராசா..அப்புறம் எப்படி சமூகத்தை தட்டி எழுப்புறது..நீ கண்டிப்பா அந்த மாதிரி கலவையா எழுதியே ஆகணும்..”

“கோவாலு..அவ்வளவு எழுதுறதுக்கு எங்கிட்ட மேட்டரே இல்லையேடா..”

“ப்ச்..நீயெல்லாம் ஒரு பதிவரா..”

இப்படி கேட்டவுடனே எனக்கு நாடி நரம்பெல்லாம் துடிப்பு ஏறிருச்சுண்ணே..

“கோவாலு..என்னைப்பார்த்து இப்படி சொல்லிப்புட்டியே..எழுதுறேண்டா நானும் கொத்துப்புரோட்டா, மினி சாண்ட்விச்சு.. ஆமா இதுக்கு என்னதான் பேரு வைக்கிறது”

“ராசா..கொத்துப்புரோட்டாவுல உள்ள புரோட்டா கட்டு, மினி சாண்ட்விச்சுல உள்ள மினி கட்டு..கொத்து சாண்ட்விச்..எப்படி..”

“சூப்பர்டா கோவாலு..போடுறேண்டா நானும் கொத்து சாண்ட்விச்…”

(சும்மா ஜாலிக்குதாண்ணே, இந்த பதிவு..சீரியசா எடுத்துக்கிட்டு எதுவும் நடவடிக்கை எடுத்துப்புடாதீங்க..ஹி..ஹி..)

இனி உங்களுக்காக கொத்து சாண்ட்விச். போறவாக்குல சமூகம் தூங்கிக்கிட்டு இருந்துச்சுன்னா, நீங்களே தட்டி எழுப்பி வுட்றுங்க

கொத்து சாண்ட்விச்சு

காலையில் 9 மணிக்கெல்லாம் எழுந்து வெளியே பார்த்தேன்..சூரியன் வட்டமாக இருந்தது..

****************************************************************************************

9 மணிக்கு சுடசுட காபி வந்தது..காபியில் சீனி கம்மி..

இந்த முறை பல்லுவிளக்கும்போது, நாலு இழுவைக்கு பதில் இரண்டுமுறைதான் இழுத்தேன்

இட்லி சுத்தமாக வேகவே இல்லை. சூடாக சாப்பிட்டால்தான் நன்றால் இருக்கும்..

சாப்பிட்டு விட்டு வெளியே சென்றேன்..அப்போதுதான் அந்த பெண்ணைப் பார்த்தேன். அவ்வளவு அழகு..வயது ஒரு 65 இருக்கும். இவ்வளவு சிறிய வயதில் ஏன் தள்ளாடி நடக்கிறார் என்று தெரியவில்லை..என்னைப் பார்த்து சிரித்தார்

வாசகர் கடிதம்

அன்புள்ள அவிங்க ராசா,

உங்களின் நெடுங்கால வாசகன். எனக்கு வயது 25. கடந்த 25 வருடங்களாக உங்கள் ப்ளாக்கை படித்துவருகிறேன். என்ன குழப்பமாக உள்ளதா..கண்டிப்பாக நம்பித்தான் ஆகவேண்டும். நான் டெலிவரி ஆகும்போது, முதலில் பார்த்தது, உங்கள் பதிவுகளைத்தான். டெலிவரி செய்யும் டாக்டர், ஒருமுனையில் கத்தி, மறுமுனையில் லேப்டாப்பில் உங்கள் பதிவுகளைப் படித்துக்கொண்டேதான் பிரசவம் பார்ப்பாராம்..உங்களுக்குதான் எவ்வளவு ரசிகர்கள். நான் “குவா, குவா” என்றுகூட அழவில்லை, “அவிங்க ராசா..அவிங்க ராசா” என்றுதான் அழுதேனாம். நர்ஸ் சொன்னார்..அந்த மருத்துவமனையில் எம்.டி யிலிந்து வார்டுபாய் வரை, உங்கள் பதிவுகளை படிக்காமால் வேலையை தொடங்க மாட்டாராம். உங்கள் பதிவுகள்தான் பலபேருக்கு தமிழ்நாட்டில் வேலை கொடுக்கிறது. எவ்வளவு தன்னம்பிக்கை கொடுக்கிறீர்கள். உங்கள் எழுத்துக்களை படிக்கும்போது, ஏனோ ஷேக்ஸிபியர் தான் ஞாபகம் வருகிறார்..தயவு செய்து எழுதுவதை நிறுத்திவிடுங்கள்..ஐயோ..சாரி..நிறுத்துவிடாதீர்கள்..நாட்டில் பலபேருக்கு நீங்கள் வழிகாட்டி..கடந்த சிலமாதங்களாக செவ்வாய் கிரக மனிதர்களோடு எனக்கு தொடர்பு ஏற்பட்டது. என்ன ஆச்சர்யம் என்றால், அவர்களும் உங்கள் வாசகர்களாம். அவர்கள் மொழியில் உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லச்சொன்னார்கள். இதோ உங்களுக்காக அந்த வாழ்த்துக்கள்..”கிர்…கிர்ர்ர்…கொர்ர்…கிர்ர்…”

இப்படிக்கு,

உங்கள் தீவிர ரசிகன்

அவிங்க ராசா..மன்னிக்கவும் அஷோக் கிருஷ்ணா..

ஏ ஜோக்கு

அப்போதுதான் அந்த நிகழ்வைப் பார்த்தேன். தெருவை மறைத்துக்கொண்டு, இரண்டு தெரு நாய்கள்..ச்சி..ச்சி..ச்சீ..

இந்த பதிவைப் படித்ததும், கத்துங்க எசமான்..கத்துங்க..

நீங்கள் அண்டார்டிகாவில் பிறந்திருந்தாலும், இந்த பதிவை 2100 ஆம் ஆண்டு பார்த்தாலும் பரவாயில்லை..தமிழ்மணத்திலும், தமிஸ்லயும் ஒரு ஓட்டு போட்ருங்க..ஓட்டு போடுறது எப்படின்னு, உங்க நாட்டு தேர்தல் கமிசனருக்கிட்டே, கேளுங்க சொல்லுவாரு..

26 comments:

Anonymous said...

நல்ல இருக்குங்கோவ்.....
இப்படிக்கு உங்கள் வருங்கால வாசகன்

தனி காட்டு ராஜா said...

:))

Philosophy Prabhakaran said...

நீங்கதான் ஏற்கனவே மிக்சர் ஜூஸ் எழுதுறீங்களே அண்ணே...

Philosophy Prabhakaran said...

அண்ணே... தலைப்புல கேபிள், ஜாக்கின்னு ரெண்டு பேரையும் போட்டுட்டு உள்ள ஜாக்கியை மட்டும் கலாய்ச்சிருக்கீங்க... அதுவும் கொஞ்சம் சீரியஸா கலாய்ச்சா மாதிரி இருக்கு... எதுவும் கோபமா...?

அரபுத்தமிழன் said...

இது நக்கலா இல்ல நிக்கலா, என்றாலும் சூப்பரா இருக்கு.
//இவ்வளவு சிறிய வயதில் ஏன் தள்ளாடி நடக்கிறார்// என்ற
வரியைப் படித்தவுடன் குலுங்கிக் குலுங்கி அழாமல் ஸாரி சிரிக்காமல்
இருக்க முடியவில்லை.

இனி அடிக்கடி கொத்து சாண்ட்விச் எதிர்பார்ப்பேன் :)

அவிய்ங்க ராசா said...

////////////////////////////
ப்ரீதம் கிருஷ்ணா said...
நல்ல இருக்குங்கோவ்.....
இப்படிக்கு உங்கள் வருங்கால வாசகன்
8 February 2011 12:07 AM
//////////////////////////
வாசகர் கடிதம் வரலைன்னா, பிச்சிபுடுவேன் பிச்சி..))

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////////
தனி காட்டு ராஜா said...
:))
8 February 2011 12:16 AM
////////////////////////////////////
நன்றி தனிகாட்டு ராஜா..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////
Philosophy Prabhakaran said...
நீங்கதான் ஏற்கனவே மிக்சர் ஜூஸ் எழுதுறீங்களே அண்ணே...
8 February 2011 12:17 AM
Philosophy Prabhakaran said...
அண்ணே... தலைப்புல கேபிள், ஜாக்கின்னு ரெண்டு பேரையும் போட்டுட்டு உள்ள ஜாக்கியை மட்டும் கலாய்ச்சிருக்கீங்க... அதுவும் கொஞ்சம் சீரியஸா கலாய்ச்சா மாதிரி இருக்கு... எதுவும் கோபமா...?
8 February 2011 12:19 AM
/////////////////////////////////
ஆஹா..பிரபாகரு..ரெண்டு பேருமே நம்ம பிரண்ட்சுதாம்பா..சும்மா தமாசுக்கு கலாய்ச்சிருக்கேன். மத்தபடி சீரியசா எல்லாம் எடுத்துக்காதீங்கப்பூ

அவிய்ங்க ராசா said...

////////////////////////////////////
அரபுத்தமிழன் said...
இது நக்கலா இல்ல நிக்கலா, என்றாலும் சூப்பரா இருக்கு.
//இவ்வளவு சிறிய வயதில் ஏன் தள்ளாடி நடக்கிறார்// என்ற
வரியைப் படித்தவுடன் குலுங்கிக் குலுங்கி அழாமல் ஸாரி சிரிக்காமல்
இருக்க முடியவில்லை.

இனி அடிக்கடி கொத்து சாண்ட்விச் எதிர்பார்ப்பேன் :)
8 February 2011 12:20 AM
////////////////////////////////
கண்டிப்பா..சமுதாயத்தை காப்பத்தணும்ல..))

Arun said...

Super Nakkal...

tamilan said...

சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

====>
நடிகர் விவேக்கும் சாமி சாணிசித்தரும்.

karthikkumar said...

நான் “குவா, குவா” என்றுகூட அழவில்லை, “அவிங்க ராசா..அவிங்க ராசா” என்றுதான் அழுதேனாம்////

ராசா அண்ணே , சிரிச்சு சிரிச்சு என்னால முடியல . செம நக்கல்னே ..... :)

Unknown said...

ஜெய் ஜாக்கி ...

ஜோதிஜி said...

சேகர் தப்பால்லாம் எடுத்துக்க மாட்டுரு. நல்லா சிரிக்க வச்சுருக்கீங்க. இந்த வாரத்ல ரொம்ப மெனக்கெட்டுருக்கீங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அண்ணே வீடியோவை காணோம்?

ஜெயந்த் கிருஷ்ணா said...

anne kalakkal..

Jackiesekar said...

ஸ்ட்ரெயிட்டா என் பேர் போட்டே எழுதி இருக்கலாம்... பாவம் கேபிள் அவரை வேற இழுத்து விட்டு இருக்கிங்க...

மரா said...

அவிங்க ராசா, அடுத்த ப்ளாக்கி லீக் மேட்டர்
இன்னா? :)

Cable சங்கர் said...

மாரா உனக்கு தெரியுமா?..

Unknown said...

முடியலே..
நிஜமாவே முடியலே...
:)))

மாணவன் said...

செம்ம கலக்கல்...

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

Nalla neram Satish and Sibi vazhaga....

அவிய்ங்க ராசா said...

நன்றி அருண்
நன்றி செந்தில்வேலன்
நன்றி தமிழன்
நன்றி செந்தில்
நன்றி கார்த்திக்
நன்றி ஜோதிஜீ
நன்றி ரமேஷ்..அடுத்த வாரம் வீடியோவோட..
நன்றி வெறும்பய
நன்றி ஜாக்கி
நன்றி மாரா..ஆட்டைக்கு நான் வரலை
நன்றி கேபிள் அண்ணா..
நன்றி கரிகாலன்
நன்றி மாணவன்

sathishsangkavi.blogspot.com said...

நல்லாத்தான் கலாச்சிருக்கறீங்க...

எண்ணங்கள் 13189034291840215795 said...

உங்கள் தீவிர ரசிகன்

அவிங்க ராசா..மன்னிக்கவும் அஷோக் கிருஷ்ணா//

ஹாஹா:)

//இதோ உங்களுக்காக அந்த வாழ்த்துக்கள்..”கிர்…கிர்ர்ர்…கொர்ர்…கிர்ர்…”//

சிரிச்சு முடியல..:))))))))

Post a Comment