Wednesday 5 January, 2011

2010 பதிவுலக விருதுகள் – இந்தமுறை நெஜமாலுமே…

ஒரு விருதுக்கு மதிப்பு என்பது அந்த விருது கொடுக்கப்படும் நேர்மையை பொருத்தது. நேர்மையற்று கொடுக்கப்படும் விருதுகள், கொடுப்பவருக்கோ, வாங்குபவருக்கோ தற்காலிக சந்தோசத்தை கொடுத்தாலும், அதிக காலம் நிலைப்பதில்லை. யுனிவர்சிட்டிகளின் தற்போதைய டாக்டர் பட்டங்களுக்கு நேர்ந்த கதிதான். விஜயகாந்துக்கும், விஜய்க்கும் கொடுக்கப்படும் டாக்டர் பட்டங்கள், அவர்கள் பெயருக்கு முன்னால் வேண்டுமானால் போட்டுக்கொள்ள வசதியாக இருந்திருக்கும், ஆனால் அந்த பட்டங்களுக்கு….???

அவார்டு என்று பதிவு எழுத ஆரம்பித்தவுடனே, மனதில் ஒரு உறுதி கொண்டேன், கண்டிப்பாக நேர்மையுடன் வழங்குவதென்று. என்னால் முடிந்த அளவுக்கு நேர்மையுடனே இதை எழுதியிருக்கிறேன். ஆனால், கருத்துக்கள் மனிதர்களுக்கேற்ப மாறுமென்பது போல, இவை அனைத்தும் நான் படித்த , அல்லது என் கண்ணில் பட்ட பதிவர்களே. இன்னும் எழுதுவதே வெளியே தெரியாமல், ஓட்டுக்களும் கமெண்டுகளும் இல்லாமலேயே பல பதிவர்களின் படைப்புகளை பார்க்கும்போது என் மனதில் நிற்கும் ஒரே கேள்வி “ஏன் இவர்களெல்லாம் வெளிச்சத்துக்கு வருவதில்லை”

2010 – பதிவுலகம் என்று பார்த்தால், குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் நிகழவில்லை. பதிவுலக சங்கம் என்று ஆரம்பிக்கும் எண்ணம் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது. இதுதான் இங்கு பலவீனமும் கூட.. பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும், ஒன்றாக இணையவேண்டும் என்ற ஒற்றுமை யாரிடமும் இருப்பதாய் தெரியவில்லை. “இவன் பேச்சை நாம் என்ன கேட்பது”, “ஒருவேளை நம்மை ஊறுகாய் ஆக்குறாயிங்களோ” என்ற எண்ணமே அனைத்தையும் பாழாக்கியது. முதல்படியாக ஆரம்பித்த குழு இமெயில் “டீச்சர் என்னை கிள்ளி வைச்சுட்டான்” என்ற சண்டை போடவே சரியாய் போனது. மாறி, மாறி சண்டை போட்ட இமெயில்களை பார்த்தாலே, கடுப்பாய் வந்தது. இதனாலேயே நிறைய பேர் விட்டால் போதும்டா சாமி என்ற அலறியடித்து ஓடினார்கள்

நிறைய பதிவர்களின் நூல்கள் வெளிவந்தது சந்தோசமாக இருந்தது. வாரஇதழ்களின் பார்வையும் பதிவர்களின் பக்கம் திரும்பியது, பதிவர்களுக்கு சற்றே நம்பிக்கையை கொடுத்தது. பதிவுலகம் பரவலாக கவனிக்கப்படுகிறது என்பதற்கு இதுவே சான்றாக அமைந்தது. ஆனாலும் வெகுஜனமக்களிடம் இருந்து பதிவர்கள் கொஞ்சம் தள்ளி இருப்பதாகவே தோன்றுகிறது. பலமுறை வெகுஜனமக்களின் முடிவுகளுக்கும், பதிவர்களின் கருத்துக்களுக்கும் பெரிய இடைவெளி என்ன, பள்ளதாக்கே இருப்பதாய் தோன்றுகிறது.

படிப்பவர்களை முடிந்த அளவுக்கு, சிந்திக்க வைக்கும் அல்லது சிரிக்கவைக்கும் பொறுப்பு பதிவர்களுக்கு இருப்பதையே, பல பேர் மறந்துபோய்விடுகிறோம். கட்அவுட்டுக்கு பால் ஊத்துவதையும், நடிகன் படம் ரீலீஸ் ஆகும்போது, கோயிலில் அங்கபிரட்தசணம் செய்வதை தவறு என்று இன்னுமே நினைக்காத ரசிகன், பதிவுகளில் இன்னமும் நியாயப்படுத்தப்படுகிறான். “தலைவர் மேல் உள்ள அன்பே இதற்கு காரணம்” என்று பதிவுகளில் எழுதப்பட்டு, படிக்கும் ரசிகனும் இன்னும் வெறியேத்தப்படுகிறான். இது ஒவ்வொருவருக்காய் பரவி, பரவி, ஒரு தலைமுறையே நாசமாக போகும் ஆபத்து, இன்னும் உணரப்படவில்லையே என்பதே ஆதங்கமாய் இருக்கிறது. இதை தவறு என்று புரியவைக்க நினைக்கும் சிலபதிவர்களுக்கு வரும் கெட்டவார்த்தை கமெண்டுகளாலேயே பயந்துபோய்விடுகிறார்கள். “எக்கேடு கெட்டு போங்கயா” என்ற சராசரி மனநிலைக்கே கூடிய சீக்கிரம் ஆளாக்கபட்டுதல், பதிவுலகத்தின் இன்னுமொரு கொடுமை.

வெகுஜனமக்களின் பிரச்சனைகளை தொட்ட சில பதிவர்களும், புகழின் போதையில் மாறிப்போனார்கள். ஹிட்ஸ் கணக்குகளும், ஓட்டுப்பட்டையின் அதிகப்பட்ச நம்பர்களும், உணர்ச்சிவசப்பட்ட ஒன்றிரெண்டு வாசகர்களின் “உங்கள் பதிவை படித்தாலே..” என்பது போன்ற இமெயில்களும் தலைக்கேறி பிரபலபதிவர் ஆயிட்டோமுல்ல மனப்பான்மையை சீக்கிரம் கொண்டுவந்துவிடுகிறது. சுயதம்பட்ட பதிவுகளில் ஆரம்பித்து, காலையில் பல்விளக்கியது, பணியாரம் சாப்பிட்டது என்று தன்னைப்பற்றியே எழுதி, தங்களுடைய அடையாளத்தை சுத்தமாக தொலைத்துப்போனார்கள்.

மேலே உள்ள அனைத்து கருத்துக்களில் கூறப்பட்ட “பதிவர்கள்” என்ற வார்த்தைகளில் நானும் இருப்பதை கண்டிப்பாக ஒத்துக்கொள்கிறேன். இந்த புத்தாண்டிலாவது, முடிந்த அளவிற்கு வெகுஜனமக்களின் பிரச்சனைகளைத் தொடுவதிலோ, அல்லது அவர்களுடைய உணர்வுகளை பிரதிபலிப்பது போன்ற பதிவுகளை எழுதுவதிலோ, கவனம் செலுத்தவதாய் முடிவு செய்துள்ளேன்.

இனி விருதுகள் – பதிவுலகம் 2010

சிறந்த திரட்டி – தமிழிஷ்

சிறந்த இணைய செய்திதாள் – தட்ஸ்தமிழ்.காம்

சிறந்த திரைத்துறை இணைய செய்தித்தாள் – தமிழ்சினிமா.காம்

சிறந்த பதிவர் – சுரேஷ்கண்ணன் – பிச்சைபாத்திரம்

சிறந்த பதிவு – அபத்தமான சமகாலம் - சுரேஷ்கண்ணன்

சிறந்த நகைச்சுவை பதிவர் – பன்னிக்குட்டி ராமசாமி

சிறந்த சர்ச்சைக்குரிய பதிவு – டோண்டு ராகவனின் – பார்வதி அம்மாளுக்கு அனுமதி மறுத்த விஷயம்

சிறந்த ஏமாற்றிய விமர்சனம் – கேபிள்சங்கரின் – களவானி விமர்சனம்

சிறந்த கவிதை – ஹைக்கூ – நாஞ்சில் பிரதாப்

சிறந்த நக்கல் – விருதகிரி – லக்கிலுக்

சிறந்த சினிமா விமர்சகர் – சி.பி செந்தில்குமார்

சிறந்த தொழில்நுட்ப பதிவர் – சூர்யாகண்ணன்

சிறந்த சமூகஅக்கறையுள்ள ப்ளாக் – வினவு

ரசித்த பதிவு – சூப்பர்ஸ்டாரிடம் சிலகேள்விகள் – பிலாசபி பிரபாகரன்

சிறந்த விமர்சனம் – ரத்தசரித்திரம் – ஓ ஆனால் நெகட்டிவ் – கார்க்கி

சிறந்த அறிமுக பதிவர் – சி.பி செந்தில்குமார் – அட்ராசக்க

சிறந்த செய்தி அலசல் - ரத்த சரித்திரம் - ரத்தம் தெறிக்கும் உண்மைக்கதை

35 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

super..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

“ஒருவேளை நம்மை ஊறுகாய் ஆக்குறாயிங்களோ” என்ற எண்ணமே அனைத்தையும் பாழாக்கியது. முதல்படியாக ஆரம்பித்த குழு இமெயில் “டீச்சர் என்னை கிள்ளி வைச்சுட்டான்” என்ற சண்டை போடவே சரியாய் போனது. மாறி, மாறி சண்டை போட்ட இமெயில்களை பார்த்தாலே, கடுப்பாய் வந்தது. இதனாலேயே நிறைய பேர் விட்டால் போதும்டா சாமி என்ற அலறியடித்து ஓடினார்கள்///

naanumthaan hehe

சேலம் தேவா said...

அருமையான தேர்வுகள்ண்ணே..!! :-)

Prathap Kumar S. said...

ராசாண்ணே... என்ன திடீர்னு சீரியஸாயிட்டீங்க போலருக்கு...கூல்

என்னையும் தேர்ந்தெடுத்தெதற்கு மிக்க நன்றி. இனியாவது இந்த விருதுக்கு என்னை தகுதியுடையவானாக மாற்றிக்கொள்ள முயல்கிறேன் (நன்றி: கமல்) :))))))))

பொன் மாலை பொழுது said...

சரிதான்!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ராசாண்ணே,

பதிவின் விருதுப் பகுதியை விடவும் தங்கள் விளக்கப் பகுதியை மிகவும் ரசித்தேன். நேர்மையாக எழுதியிருக்கிறீர்கள். ஒரு வணக்கம்.

விருதுப் பக்கமும் நன்றாக இருந்தது. சில பதிவுகளை நான் படிப்பதில்லை. படிக்க ஆரம்பிக்கிறேன்.

அனைவருக்கும் வாழ்த்துகள்.

இவன் சிவன் said...

Present sir

Saravanakumar said...

அனைவரையும் வாழ்த்துகிறன்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சிறந்த நகைச்சுவை பதிவர் – பன்னிக்குட்டி ராமசாமி///

எங்க தலைக்கு வாழ்த்துக்கள்

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Madhavan Srinivasagopalan said...

என்னப் பத்தி ஒங்களுக்கு தெரியாதோ ?
(சாரி.. சும்மா விளம்பரத்துக்குதான்..)

movithan said...

நியாயமான கணிப்பு.

Unknown said...

பதிவுலகம் பற்றிய சரியான அலசல், நேர்த்தியான வார்த்தைகள்,
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Unknown said...

//ஆனாலும் வெகுஜனமக்களிடம் இருந்து பதிவர்கள் கொஞ்சம் தள்ளி இருப்பதாகவே தோன்றுகிறது. பலமுறை வெகுஜனமக்களின் முடிவுகளுக்கும், பதிவர்களின் கருத்துக்களுக்கும் பெரிய இடைவெளி என்ன, பள்ளதாக்கே இருப்பதாய் தோன்றுகிறது.//

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்லா தான் செலக்ட் பண்ணியிருக்கீங்க...

ஜெயந்த் கிருஷ்ணா said...

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Angel said...

FANTASTIC AND FABULOUS SELECTIONS.
CONGRATS.

மாதேவி said...

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Philosophy Prabhakaran said...

நண்பரே... நான் உங்கள் எழுத்துக்க்களை நீண்ட காலமாக விரும்பிப் படிக்கிறேன்... இதை எனது இடுகைகளில் சில இடங்களில் கூட வெளிப்படுத்தியிருக்கிறேன்... ஆனால் நீங்கள் என்னைப் படிக்கிறீர்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை... மிகவும் ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது... நன்றியோ நன்றி...

Sivakumar said...

இப்பதிவின் மூலம் நண்பர் கேபிள் ஷங்கரின் களவாணி விமர்சனம் படித்தேன். நீங்கள் சொன்னது போல் ஏமாற்றமாக இருந்தது. திரைக்கதைதான் படத்தின் பலம் என அனைத்து நடுநிலை பத்திரிக்கைகளும் பாராட்டின. ஆனால் அவர் பிடிக்கவில்லை என்று கூறி இருக்கிறார். சினிமா ஞானம் எனக்கு திரைக்கதையை அலசும் விதத்தில் மிகவும் குறைவு என்பதால் இது பற்றி சொல்ல இயலவில்லை. ஆனால் படம் நன்றாகத்தான் இருந்தது....நல்ல தேர்வு தங்களுடையது.

நீச்சல்காரன் said...

விருதுகளை தவிர விளக்கம் எல்லாம் அருமை.
நீங்க புதுசா எதிர்மறையா எல்லாம் விருது கொடுக்குறீங்க!

அவிய்ங்க ராசா said...

////////////////////////////////
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
super..
5 January 2011 7:20 PM
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
“ஒருவேளை நம்மை ஊறுகாய் ஆக்குறாயிங்களோ” என்ற எண்ணமே அனைத்தையும் பாழாக்கியது. முதல்படியாக ஆரம்பித்த குழு இமெயில் “டீச்சர் என்னை கிள்ளி வைச்சுட்டான்” என்ற சண்டை போடவே சரியாய் போனது. மாறி, மாறி சண்டை போட்ட இமெயில்களை பார்த்தாலே, கடுப்பாய் வந்தது. இதனாலேயே நிறைய பேர் விட்டால் போதும்டா சாமி என்ற அலறியடித்து ஓடினார்கள்///

naanumthaan hehe
5 January 2011 7:23 PM
////////////////////////////
நன்றி ரமேஷ்ண்ணே..))

அவிய்ங்க ராசா said...

//////////////////////////////
சேலம் தேவா said...
அருமையான தேர்வுகள்ண்ணே..!! :-)
5 January 2011 7:36 PM
/////////////////////////////
நன்றி தேவா..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////
நாஞ்சில் பிரதாப்™ said...
ராசாண்ணே... என்ன திடீர்னு சீரியஸாயிட்டீங்க போலருக்கு...கூல்

என்னையும் தேர்ந்தெடுத்தெதற்கு மிக்க நன்றி. இனியாவது இந்த விருதுக்கு என்னை தகுதியுடையவானாக மாற்றிக்கொள்ள முயல்கிறேன் (நன்றி: கமல்) :))))))))
5 January 2011 7:46 PM
//////////////////////////
புல்லரிக்குதுண்ணே..ஹி..ஹி..))

அவிய்ங்க ராசா said...

////////////////////////////////
கக்கு - மாணிக்கம் said...
சரிதான்!
5 January 2011 7:49 PM
//////////////////////////////
நன்றி மாணிக்கம்..))

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////
ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...
ராசாண்ணே,

பதிவின் விருதுப் பகுதியை விடவும் தங்கள் விளக்கப் பகுதியை மிகவும் ரசித்தேன். நேர்மையாக எழுதியிருக்கிறீர்கள். ஒரு வணக்கம்.

விருதுப் பக்கமும் நன்றாக இருந்தது. சில பதிவுகளை நான் படிப்பதில்லை. படிக்க ஆரம்பிக்கிறேன்.

அனைவருக்கும் வாழ்த்துகள்.
5 January 2011 9:31 PM
/////////////////////////////
நன்றி செந்தில்..)

அவிய்ங்க ராசா said...

////////////////////////////
இவன் சிவன் said...
Present sir
5 January 2011 9:34 PM
///////////////////////////
நன்றி இவன்சிவன்..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
tms.blogspot.com said...
அனைவரையும் வாழ்த்துகிறன்...
5 January 2011 10:03 PM
////////////////////////
நன்றி டி.எம்.எஸ்

அவிய்ங்க ராசா said...

////////////////////////////////////////
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சிறந்த நகைச்சுவை பதிவர் – பன்னிக்குட்டி ராமசாமி///

எங்க தலைக்கு வாழ்த்துக்கள்

அனைவருக்கும் வாழ்த்துக்கள்
5 January 2011 10:41 PM
Madhavan Srinivasagopalan said...
என்னப் பத்தி ஒங்களுக்கு தெரியாதோ ?
(சாரி.. சும்மா விளம்பரத்துக்குதான்..)
5 January 2011 10:45 PM
malgudi said...
நியாயமான கணிப்பு.
5 January 2011 11:56 PM
பாரத்... பாரதி... said...
பதிவுலகம் பற்றிய சரியான அலசல், நேர்த்தியான வார்த்தைகள்,
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
6 January 2011 2:03 AM
பாரத்... பாரதி... said...
//ஆனாலும் வெகுஜனமக்களிடம் இருந்து பதிவர்கள் கொஞ்சம் தள்ளி இருப்பதாகவே தோன்றுகிறது. பலமுறை வெகுஜனமக்களின் முடிவுகளுக்கும், பதிவர்களின் கருத்துக்களுக்கும் பெரிய இடைவெளி என்ன, பள்ளதாக்கே இருப்பதாய் தோன்றுகிறது.//
6 January 2011 2:05 AM
////////////////////////////////
நன்றி ரமேஷ், பாரதி, மாதவன், மால்குடி..

அவிய்ங்க ராசா said...

///////////////////////////////
வெறும்பய said...
நல்லா தான் செலக்ட் பண்ணியிருக்கீங்க...
6 January 2011 2:11 AM
வெறும்பய said...
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
6 January 2011 2:11 AM
angelin said...
FANTASTIC AND FABULOUS SELECTIONS.
CONGRATS.
6 January 2011 2:22 AM
மாதேவி said...
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
6 January 2011 3:03 AM
////////////////////////////////
நன்றி வெறும்பய, ஏஞ்சலின், மாதேவி..

அவிய்ங்க ராசா said...

//////////////////////////////////
Philosophy Prabhakaran said...
நண்பரே... நான் உங்கள் எழுத்துக்க்களை நீண்ட காலமாக விரும்பிப் படிக்கிறேன்... இதை எனது இடுகைகளில் சில இடங்களில் கூட வெளிப்படுத்தியிருக்கிறேன்... ஆனால் நீங்கள் என்னைப் படிக்கிறீர்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை... மிகவும் ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது... நன்றியோ நன்றி...
6 January 2011 2:36 PM
சிவகுமார் said...
இப்பதிவின் மூலம் நண்பர் கேபிள் ஷங்கரின் களவாணி விமர்சனம் படித்தேன். நீங்கள் சொன்னது போல் ஏமாற்றமாக இருந்தது. திரைக்கதைதான் படத்தின் பலம் என அனைத்து நடுநிலை பத்திரிக்கைகளும் பாராட்டின. ஆனால் அவர் பிடிக்கவில்லை என்று கூறி இருக்கிறார். சினிமா ஞானம் எனக்கு திரைக்கதையை அலசும் விதத்தில் மிகவும் குறைவு என்பதால் இது பற்றி சொல்ல இயலவில்லை. ஆனால் படம் நன்றாகத்தான் இருந்தது....நல்ல தேர்வு தங்களுடையது.
6 January 2011 3:40 PM
நீச்சல்காரன் said...
விருதுகளை தவிர விளக்கம் எல்லாம் அருமை.
நீங்க புதுசா எதிர்மறையா எல்லாம் விருது கொடுக்குறீங்க!
6 January 2011 5:28 PM
//////////////////////////////
நன்றி சிவா,பிரபாகரன், நீச்சல்காரன்..

பாலகுமார் said...

சரியான தேர்வுகள். நல்லா எழுதி இருக்கீங்க.
நன்றி.

aveenga said...

Viruthu kutuka nee yaruda ? nee enna periya putinkeeya....ot...ku..pannada

பிச்சைப்பாத்திரம் said...

இப்போதுதான் பார்த்தேன். மிகவும் நன்றி. :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நன்றி சார், முன்பே படித்து கமெண்ட் போட்ட ஞாபகமும் இருக்கிறது, ஆனால் எதேச்சையாக வந்து பார்த்தால், இல்லை. சாரி ஃபார் லேட் கமெண்ட்....!

சி.பி.செந்தில்குமார் said...

thanx for selection. sorry for late.

Post a Comment