சும்மா போறவனை சொரிஞ்சு விடுறது மாதிரி கோவாலு என்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டுபுட்டாண்ணே..
“நீயெல்லாம் ஒரு பதிவரா..”
எனக்கு சுள்ளுன்னு ஏறிப்புடிச்சு. என்னைப் பார்த்து “நீயெல்லாம் ஒரு மனுசனா” ன்னு கேட்டிருந்தா கூட பரவாயில்லைண்ணே..பதிவரான்னு நாக்கு மேல பல்லு போட்டு கேட்டுபுட்டான்ல..எனக்கு அன்னைக்கு முழுசும் தூக்கம் வரலை. என்னை விட என் வீட்டுக்காரம்மா தான் ரொம்ப கலங்கி போயிட்டா..
“விடுங்க..தெரியாம சொல்லியிருப்பாரு..”
“அவன் எப்படி என்னைப் பார்த்து அப்படி கேட்கலாம். ஒரு நாளைக்கு எத்தனை வாசகர் கடிதம் வருது தெரியுமா..நான் எழுதலைன்னா ரெண்டு பேரு தூக்குல தொங்குறதுக்கு கூட ரெடியா இருக்காய்ங்களாம்.”
“எழுதுனாவா..எழுதாம இருந்தாலாவா..”
“அடியே..உனக்கு நக்கல் அதிகமாகிப்போச்சு. ஒரு பிரபல பதிவரை நக்கல் பண்ணுறோம்கிறதை மனசுக்குள்ள வைச்சுக்க ஆமா..”
“எங்க..பிரபல பதிவர்கிறதை வைச்சிக்கிட்டு பக்கத்து வீட்டுல கொஞ்சம் உப்பு கடன் வாங்கிட்டு வாங்க பார்ப்போம்..”
“அது..வந்து..அது அவிங்க எங்க பிளாக்கெல்லாம் படிக்க போறாயிங்க..நான் அலெக்சா ரேட்டிங்குல பத்துலட்சம் வாங்குனதெல்லாம் அவிங்களுக்கு எப்படி தெரியும்”
“யாருங்க..அந்த சக்களத்தி அலெக்சா..”
“உன் ஜென்ரல் நாலேஜூல தீயைப் பொருத்திவைக்க..முதல்ல கோவாலுகிட்ட பேசணும்..அந்த செல்போனை எடு..”
கோவாலுதான் எடுத்தான்.பயபுள்ள தூங்கிக்கிட்டு இருப்பான் போல..எடுத்ததுமே கொட்டாவி விட்டான்..
"கோவாலு..என்னைப் பார்த்து ஏண்டா அப்படி கேட்ட,,இம்புட்டு பேரு இருக்காயிங்கள்ள..”
“நீயெல்லாம் ஒரு பதிவரே இல்லடா..பதிவரா இருந்திருந்தா இன்னேரம் கேள்வி பதில் ஆரம்பிச்சிருப்பியே..”
அப்பதான் எனக்கு செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சுண்ணே..ஆஹா..இது எப்படி எனக்கு தோணாமல் போச்சு..ஆரம்பிக்கிறேண்டா கேள்வி பதிலை அப்படின்னு பேனாவை சாரி லேப்டாப்பை எடுத்து இமெயிலை பார்ர்குறேன், அதுக்குள்ள பத்து மெயிலுண்ணே..எல்லாம் நம்ம வாசகர்கள்தாண்ணே..அதுக்குள்ள 10 கேள்விய கேட்டுபுட்டாயிங்க..எப்படிதான் நான் மனசுக்குள்ள நினைக்குறது அவிங்களுக்கு தெரியுதோ..இவிங்களை வாசகர்களா அடையுறதுக்கு நான் எம்புட்டு…(கண்ணீர்)..பயபுள்ளைக அலெக்சா ரேட்டிங்குல வேற பத்து லட்சத்தை கொடுத்துப்புட்டாயிங்க..சரி..சரி..கண்ணீரைத் தொடைச்சுப்புட்டு கேள்வி பதிலை படிக்க ஆரம்பிங்க..
வாசகர் எடுபுடி ஏகாம்பரம் :
கேள்வி : காலையில் எழுந்தவுடன் முதலில் செய்வது எது..ஆய் போவதா அல்லது பல்லு விளக்குவதா..
என் பதில் : என் சிந்தனையை கிளறிய கேள்வி இது. இரண்டும் இல்லை..காலையில் எழுந்தவுடன் அப்படியே ஊத்தவாயோடு பணியாரம் சாப்பிடுவது..
வாசகர் ஜால்ரா ஜம்புலிங்கம்
கேள்வி : எப்படி இம்புட்டு நல்லா எழுதுறீங்க..அதுவும் உங்கள் பதிவுகளைப் படிப்பதற்காக நாங்கள் கம்ப்யூட்டர் முன்னாடியே உக்கார்ந்திருப்போம் உங்களுக்கு தெரியுமா..உங்கள் பதிவை பார்த்தவுடன்தான் எங்களுக்கு மூச்சு வரும்..எல்லாவற்றையும் வசீகரிக்கும் எழுத்துக்கள்..அந்த சீக்ரெட்டை மட்டும் எனக்கு சொல்லுங்களேன்…எப்படி இவ்வளவு நல்லா எழுதுகீறீர்கள்..
(குறிப்பு..இந்த கேள்வியோடு என் ப்ளாக் லிங்கை கொடுத்துள்ளேன். தயவு செய்து என் லிங்கை உங்கள் பதிவில் போடும்போது மறக்காமல் ஜம்புலிங்கம் என்று சரியாக போடவும்)
என் பதில் : நன்றி….பதிவர்களை மதிக்க தெரியாத உலகமய்யா இது..இதே பதிவை பிரான்சுல எழுதியிருந்தா..இன்னேரம் என்னை ஜனாதிபதியா ஆயிருப்பேன். அதவிடுங்க..இங்க பக்கத்துல கேரளாவுல..சரி..அத விடுங்க..என் பதிவில் விளம்பரம் செய்ய ஏதாவது விளம்பரதாரர்கள் கிடைப்பார்களா..
வாசகர் சொர்க்கம் சொரிமுத்து
கேள்வி : முதுகுப்பக்கம் அரிப்பு வந்தா எப்படி சொரிவிங்க..
என் பதில் : இலக்கியத்தரமான கேள்வி இது..என்னைப்போன்ற எழுத்தாளர்களுக்கெல்லாம் எங்க சார் சொரிய நேரம் கிடைக்குது..ஆனால் அரிப்பு வந்த சொரியதானே செய்யணும்..அதுமாதிரி நேரத்துல எங்கவாவது சொரசொரன்னு சுவரு இருக்கான்னு பார்ப்பேன்..கூச்சப்படாம சட்டை கழட்டி சுவத்துல தேய்ச்சு சொரிஞ்சுக்குவேன்..
வாசகர் :பிளேடு பாஸ்கர்
கேள்வி : “அய்ய குந்திக்கப்பா..”, “த்தோடா கசுமாலம்” இதுபோன்ற அழகியல் சொற்கள் தமிழில் சேர்க்கபடுவதை ஆதரிக்கிறீர்களா..எதிர்க்கிறீர்களா..
என் பதில் : போடா பேமாளி..சோமாறி..கேள்வி கேக்கது பாரு..உன் மூஞ்சியில என் பீச்சாங்கையை வைக்க…
கேள்வி : நீங்கள் சமீபத்தில் பார்த்து மனம் நெகிழ்ந்த படம் எதும்
என் பதில் : பரங்கிமலை ஜோதியில் “அஞ்சரைக்குள்ள வண்டி” என்ற படத்தை பார்க்க நேர்ந்தது..ஆஹா..என்ன ஒரு எடிட்டிங்க்..இடைவேளைக்கு அப்பால ரெண்டு பிட்டு போட்டாயிங்க பாருங்கா..ஆஹா..இதுக்கெல்லாம் ஒரு ஞானம் வேண்டுமையா..
நீங்களும் கேள்வி பதில் அனுப்பலாம்..ஒரு நாளைக்கு பத்து கேள்வியெல்லாம் வேண்டாமே....யாரும் அனுப்பவில்லையென்றால், நானே க்ரியேட் செய்துள்ள ஐ.டியிலிருது கேள்வி எழுதப்படும் என்பதை தாழ்மையுடன் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்..
22 comments:
பிரபல பதிவர்கிறதை வைச்சிக்கிட்டு பக்கத்து வீட்டுல கொஞ்சம் உப்பு கடன் வாங்கிட்டு வாங்க பார்ப்போம்..”
HAHHAHA... ATHUTHANE
:)
>?>
My question:
intha npozhappu namakku thevaiyaa?
நீங்கள் இளங்கலையா? முதுகலையா? எச்சக்கலையா?
விளங்களையா? விளக்குவீர்களா?
-----------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-ஜன '2011)
யோவ் யார்யா நீ, எங்கேயோ பொறந்துட்டு பீரான்சுக்கே ஜனாதிபதி ஆவப் பாக்கிறது,,சோனியாவே
தேவலாம் போல,,ராசா (இப்படி கூப்பிடறதுக்கே பயமா இருக்குது) இங்கெல்லாம் (பிரான்ஸ்) ரெண்டு தடவெ ஓட்டு போடனும்யா,, முதல் ரவுண்டு பெரிய ,சில்லரை கட்சிகளெல்லாம் நிக்கும்,,ரெண்டாவது ரவுண்டுல ,,முதல் ரவுண்டில ஒன்னாவது ரெண்டாவது வந்தவங்கெ மட்டும்தான்
நிப்பங்க,, அதுவுமில்லாம இங்கெ கள்ள ஓட்டெல்லாம் கெடையாது,,நாணயம்,தெரமைய வெச்சிதான் ஓட்டு,,டவுசர் கிழிஞ்சிரும்டீ
ராசாண்ணே அஞ்சறைக்குள்ள வண்டி படத்தை பார்த்துட்டு இன்னும் விமர்சனம் போடாததை வன்மையாக கண்டிக்கிறேன்.... :))
செம காமெடிண்ணே...:))
comedya iruku epdi ipdilam yosikrinka pa?
சிரிச்சிக்கிட்டே இருக்கேன் :-))))
கேள்வி : காலையில் எழுந்தவுடன் முதலில் செய்வது எது..ஆய் போவதா அல்லது பல்லு விளக்குவதா..
என் பதில் : என் சிந்தனையை கிளறிய கேள்வி இது. இரண்டும் இல்லை..காலையில் எழுந்தவுடன் அப்படியே ஊத்தவாயோடு பணியாரம் சாப்பிடுவது..
ஹா ஹா முதல் கேள்வியும் பதிலும் அமர்களம்
ane innumaa unkala nampuraanka....
சா நி (மூணு சுழி ணி வரமாட்டேங்குது),
வந்தா நாறுமா?
எழுதுனாலே நாறுமா?
///////////////////////////
abbeys said...
பிரபல பதிவர்கிறதை வைச்சிக்கிட்டு பக்கத்து வீட்டுல கொஞ்சம் உப்பு கடன் வாங்கிட்டு வாங்க பார்ப்போம்..”
HAHHAHA... ATHUTHANE
8 January 2011 10:54
///////////////////////////
ஹி..ஹி..
/////////////////////////
ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...
:)
8 January 2011 11:03 PM
///////////////////////////
நன்றி செந்தில்
//////////////////////
ஜோதிஜி said...
>?>
9 January 2011 12:07 AM
//////////////////////
நன்றி ஜோதிஜி..
///////////////////////////
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
My question:
intha npozhappu namakku thevaiyaa?
9 January 2011 2:03 AM
///////////////////////////
கரகாட்டக்காரன் செந்தில் ஸ்டைலில் வாசிக்கவும்.."அண்ணே, ஒரு விளம்பரம்..."
/////////////////////////////
tharuthalai said...
நீங்கள் இளங்கலையா? முதுகலையா? எச்சக்கலையா?
விளங்களையா? விளக்குவீர்களா?
-----------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-ஜன '2011)
9 January 2011 2:13 AM
//////////////////////////
தறுதலை...))))
//////////////////////////
நாஞ்சில் பிரதாப்™ said...
ராசாண்ணே அஞ்சறைக்குள்ள வண்டி படத்தை பார்த்துட்டு இன்னும் விமர்சனம் போடாததை வன்மையாக கண்டிக்கிறேன்.... :))
செம காமெடிண்ணே...:))
9 January 2011 3:22 AM
////////////////////////
இதோ..அடுத்து விமர்சனம்தான்..))
//////////////////////////////////////
smilzz said...
comedya iruku epdi ipdilam yosikrinka pa?
9 January 2011 4:40 AM
KVR said...
சிரிச்சிக்கிட்டே இருக்கேன் :-))))
9 January 2011 5:43 AM
தங்கராசு நாகேந்திரன் said...
கேள்வி : காலையில் எழுந்தவுடன் முதலில் செய்வது எது..ஆய் போவதா அல்லது பல்லு விளக்குவதா..
என் பதில் : என் சிந்தனையை கிளறிய கேள்வி இது. இரண்டும் இல்லை..காலையில் எழுந்தவுடன் அப்படியே ஊத்தவாயோடு பணியாரம் சாப்பிடுவது..
ஹா ஹா முதல் கேள்வியும் பதிலும் அமர்களம்
9 January 2011 6:00 AM
வெறும்பய said...
ane innumaa unkala nampuraanka....
9 January 2011 6:38 AM
வானம் said...
சா நி (மூணு சுழி ணி வரமாட்டேங்குது),
வந்தா நாறுமா?
எழுதுனாலே நாறுமா?
9 January 2011 6:48 AM
//////////////////////////
நன்றி வெறும்பய, வானம்,தங்கராசு, கே.வி.ஆர். ஸிமைஸ்
"நான் எழுதலைன்னா ரெண்டு பேரு தூக்குல தொங்குறதுக்கு கூட ரெடியா இருக்காய்ங்களாம்.”
யாருண்ணே அந்த ரெண்டு பேரு? இது கேள்வி
அந்த ரெண்டு பேருல ஒண்ணு நீங்க.இன்னொன்னு யாரு?.அதாம்ணே நீங்க. அப்ப்டினெல்லாம் சொல்லக்கூடாது.
நூறாவது இடுகை எழுதியிருக்கிறேன்... படித்துவிட்டு கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்...
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/100.html
கஜுராஹோ இளவரசின்னு ஒரு பீரியட் பிலிம் வந்திருக்குண்ணே... அப்படியே அதையும் ஒரு எட்டு வந்து பாத்துடுங்க...
Post a Comment