Monday, 31 January 2011

என் ஓட்டு அம்மாவுக்குதாண்ணே…

(இது ஒரு மீள்பதிவு)

நம்ம எல்லாம் அமெரிக்காவுல இருந்தாலும் அம்பானி பரம்பரை எல்லாம் இல்லீங்கண்ணே..சோத்துக்கே சிங்கி அடிச்சவயிங்க தான்..வீட்டில வாயைக்கட்டி, வயித்தைக்கட்டி படிக்க வச்சாயிங்க….அந்த விசயத்துல அம்மாவ மறக்க முடியாதுண்ணேஎத்தனையோ நாளு நான் படிக்கிறதுக்கு தன்னோட வாழ்நாளை தியாகம் பண்ணியிருக்காங்கண்ணே..

எங்க அம்மாவுக்கு என் மேல அம்புட்டு பாசம்ணே..உயிரே விட்டிடுவாயிங்கநேத்து கால் பண்ணியிருந்தாங்க..சேக்காலிங்களோட(நண்பர்கள்) பேசிக்கிட்டு இருந்தேன்..எப்போதும் அம்மா பேசுனா ஸ்பீக்கர்ல தான் போடுவேன்..காதுல கேக்குறத விட மனசால கேக்கலாம்ல..

தம்பி ராசா, உடனே கிளம்பி வந்துருடா..”

ஏன்மா..ஏதாவது பிரச்சனையா..”

இல்லடா ராசா, ஏதோ பன்னி காயிச்சலாம்பாடி.வில காமிக்கிறாயிங்கப்பா..குலை நடுங்குதுப்பா..சம்பாதிச்சது போதும்பா..வந்துருடா ராசா..”

பக்கத்துல இருக்குற சேக்காளி சும்மா இருக்காம,

அம்மா, நீங்க கவலைப்படாதிங்கம்மா..ராசவ ஒன்னும் பண்ணாதுபன்னில இருந்து மனுசனுக்கு தான் பரவுதுதாம்..பன்னில இருந்து பன்னிக்கு பரவாதாம்..”

அடி செருப்பால..நீதான்டா எறுமை..” அம்மா செல்லமா திட்டுனாயிங்கண்ணே..

அம்மா இப்படித்தாண்ணேஎல்லாத்துக்கும் பயப்புடுவாயிங்கண்ணேஓரு நாள் எல்லாரும் இங்க இருக்குறப்ப அவசரமா அம்மாகிட்டயிருந்து கால்..

தம்பி, ஓடிடா..நிலநடுக்கம் வருதாம்..”

என் சேக்காளி அப்பிடியே டேபிளுக்கு அடியில போயிட்டாண்ணே..என்ன ஒரு முன்ஜாக்கிரதை பாருங்க. நானும் நடுங்கி போயிட்டேன்..

அம்மா, என்ன சொல்லுறீங்க..”

சன் டிவில பிளாஸ் நியுஸ் போடுறாயிங்கடா ராசா..ஜப்பானுல நிலநடுக்கமாண்டா..அமெரிக்கா ஜப்பான் பக்கத்துல தானே இருக்கு..ஓடிடுடா..”

ஒரு பக்கம் சிரிப்பா வந்தாலும், குழந்தைப் பாசம்..

இப்படித்தான் நான் சென்னையில வேலை பார்க்கும்போது மதுரையில இருந்து சென்னைக்கு ரயிலுல கிளம்புவேன்..என்னை உக்கார வச்சுட்டு தண்ணி பாட்டில் வாங்க போனாங்கண்ணே..பக்கத்துல உக்கார்ந்திருக்குரவர் அறிமுகம் செஞ்சுகிட்டாரு..ஏதோ பிஸ்கட் சாப்பிட்டு இருந்தார்..அம்மா வந்துட்டாங்கண்ணே..

தம்பி ராசா, பத்திரமா போயிச்சேருப்பா..நிறைய திருட்டுப்பசங்க ரயில்ல வராயிங்களாம்பா..எதாவது பிஸ்கட் குடுத்தா வாங்கி சாப்பிடாதப்பா..கெரகம் புடிச்சவயங்க, மருந்து வச்சிருப்பாயிங்க..ஒன்னுக்கு போறப்ப பேக்க எடுத்துட்டே போப்பா..”

பக்கத்தில இருப்பவன் நிலமைய யோசிச்சு பாருங்க..அப்படியே பிஸ்கட்ட மறச்சு வச்சிட்டு சிரிக்கிறாருண்ணேஅவருக்கும் அம்மா இருக்கும்தாண்ணேஅம்மா கண் நெறய தண்ணி..ரயில் கிளம்பும்போது சேலைய கையில புடுச்சிக்கிட்டு கூடவே ஓடி வாராங்கண்ணே…75 வயசுண்ணேஅப்பிடியே ரயில் சங்கிலிய புடிச்சி இழுத்துலராம் போல இருந்துச்சுபாசத்துல எல்லா அம்மாவும் குழந்த மாதிரிண்ணே

எனக்கு எங்க கம்பனியிலிருந்து அமெரிக்கா அனுப்புனாங்க..எங்க வூட்டுல இருந்து வழியனுப்ப சென்னை வந்துந்துராயிங்கண்ணே..நமக்குத்தான் அமெரிக்க சான்சுன்னா பிரண்ட்ஸ் பார்ட்டி தான்னே..பிரண்ட்ஸ் கூட ஒரே பார்டி..வீட்டுல இருந்து அம்மா வந்ததே மறந்துட்டேண்ணே..ஏர்போர்ட் வந்து எல்லாருக்கும் டாடா சொல்லுறப்ப தான் அம்மா நிக்குறதே ஞாபகம் வருது..சிலையா நிக்குறாங்கண்ணேஅப்படியே வந்து கட்டிப்பிடிச்சு அழுதாங்க பாருங்க..அவுங்க நெஞ்சுக்கூட்டுல இருக்குற பாசம் இன்னைக்கும் என் நெஞ்ச தொட்டுப்பார்த்தா தெரியும்னே….

ராசா..விட்டிட்டு போறியடா..உன்னப் பார்க்காம எப்பிடிடா இருக்க போறென்..”

“2 வருசம் தானம்மா..வந்துடுவேன்மா…”

எங்க அம்மா பணம் வைக்கிறதுக்கு ஒரு சுருக்குப்பை வைச்சிருப்பாங்க..அதுக்குள்ள கைய விட்டு எல்லாப் பணத்தையும் எடுத்து என் கையில திணிச்சாங்கண்ணே..எல்லா பணமும் அழுக்குண்ணேஆனா இப்பவும் மோந்து பார்த்தா எங்கம்மா வாசம்ணே

ராசா..செலவுக்கு வச்சிக்கடா..அப்பாகிட்ட சொல்லாதேடா..உடம்ப பத்திரமா பார்த்துக்கடா..”

அம்மா, எதுக்கும்மா..அங்க எல்லாம் டாலர் தான்மா..”

பரவாயில்லடா..எப்பவாவது உதவும்…”

பொஞ்சாதி தெய்வம்னு ஒரு பதிவுல எழுதினேன்னே..தெய்வம் கூட இருக்கா இல்லயான்னு தெரியாதுண்ணே..அம்மா தெய்வத்துக்கும் மேலண்ணே..பகுத்தறிவுக்கு எட்டாத ஒன்னுன்னா அது அம்மா பாசம்தாண்ணே

இந்த தேர்தல்ல கண்ட காவாளிங்களுக்கு நல்ல ஓட்டுப் போடுறத விட எங்கம்மாவுக்குத்தாண்ணே கள்ள ஓட்டு போடப்போறேன்..ஒரு சீட்லஎங்கம்மான்னு எழுதி வச்சிட்டு வந்துடப் போறேன்..


11 comments:

அவிய்ங்க ராசா said...

நன்றி எல்.கே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

நெகிழ வைத்த பதிவு..

அம்மாவுக்கு இணையான தெய்வமேது...

டக்கால்டி said...

அண்ணே செண்டிமெண்ட் செம்மல் என்ற பட்டதை தார்மீகமாக வெச்சுக்கோங்க...

நகைச்சுவை கலந்த வரிகளில் பாசத்தை புகுத்தி அசத்தலான பாணியில் எழுதி இருக்கீங்க. அருமை அருமை

துளசி கோபால் said...

மனசு ஒரு மாதிரி ஆயிருச்சு.

Robin said...

//இந்த தேர்தல்ல கண்ட காவாளிங்களுக்கு நல்ல ஓட்டுப் போடுறத விட எங்கம்மாவுக்குத்தாண்ணே கள்ள ஓட்டு போடப்போறேன்..ஒரு சீட்ல “எங்கம்மா”ன்னு எழுதி வச்சிட்டு வந்துடப் போறேன்.// :)

சுந்தரா said...

நெகிழவைக்கிற பாசம்...

இங்க,அநேகர் ஓட்டு அவங்கவங்க அம்மாவுக்காய்த்தானிருக்கும்.

Unknown said...

கண்ட .....யெல்லாம் அம்மா, அன்னைனு திரியரப்ப நம்ப சொந்த உண்மை அம்மா பதவிக்கு வந்தா ஒன்னும் வீணாகாது. எதுக்கு கள்ள ஓட்டு நல்ல ஓட்டே போடலாமே!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க..:)

அமுதா கிருஷ்ணா said...

http://amuthakrish.blogspot.com என் அம்மா புராணம் இங்கே..அம்மா அம்மா தான்..

Anonymous said...

ம்ம் சூப்பர்

க ரா said...

ayya rasa.. nesamalume nee rasathanya kunathilayum.. urukuthu eluthu...

Post a Comment