Monday, 31 January 2011

எல்லாரும் பார்த்துக்கங்கப்பா..நாங்களும் என்.ஆர்.ஐ தான்

அலுவலக வேலை விசயமா, ஒரு வாரம் அமெரிக்காவிலுருந்து சென்னை வந்து மீண்டும் அமெரிக்கா திரும்ப வேண்டிய சூழ்நிலைண்ணே..என் பொண்டாட்டியும் சென்னை வருவேன் என அடம் பிடிக்க, அவளையும் கூட்டிக்கிட்டு சின்சினாட்டி ஏர்போர்ட் வந்தேண்ணே..1 வருசம் கழித்து என் மனைவி தாயகம் போறா, ஏதாவது சென்டிமென்டா பேசுவான்னு எதிர்பார்த்து காத்திருந்தேண்ணே

ஏங்கநம்மளும் என்.ஆர். தானங்க…”

ஆகாஇந்த வியாதி இவளுக்கும் தொத்திக்கிச்சா..எத்தனையோ பேர பார்த்து இருக்கோம்னே..ஏர்போட் புல்லாம் ஒரே அலப்பரை தான்..நம்ம ஊருல போயி ரெண்டு நாளைக்கு விறைப்பா அலைவாயிங்க..நல்லா மொட்ட வெயிலு மூஞ்சில அடிச்சா எல்லாம் சரியாப் போயிடும்…..

அடியே..நம்ம என்.ஆர். இல்லடி..என்.பி...”

அது என்னங்க புதுசா என்.பி.…”

ம்….."நாசாமா போன இண்டியன்ஸ்"..அடியே..நம்மளே பஞ்சம் பொழைக்க வந்துருக்கோம்டிபொழப்புல மண்ண அள்ளி போட்டுறாதடி..மகராசி..”

நீங்க சும்மா இருங்கயாராவது கேட்டா,என்.ஆர். தான்னு சொல்லப் போறேன்..கெடுத்து விட்டுறாதிங்க..”

சரி உனக்கு மொட்டை வெயிலு அடிச்சாதான் திருந்துவஏர்போர்ட் நடைமுறை எல்லாம் முடிஞ்சு விமானத்துல ஏறி உக்கார்ந்துட்டோம்னே..பக்கத்துல ஒரு வெள்ளைக்கார தாத்தா..நல்லா அண்டா சைசுல இருந்தாருண்ணே..கையில பர்கர் வேற..அவர் பக்கத்துல கோழிக்குஞ்சு மாதிரி உக்காந்திருந்தோம்ணே..

வணக்கம் பிரதர்..நீங்க இந்தியர் தானே..நான் இறக்குமதி பிசினஸ் பண்றேன்..பிசினஸ் விசயமா இண்டியா போறேன்…”

அவரா அறிமுகம் செஞ்சுக்கிட்டாருண்ணே..அடப்பாவி, ஒன்னரை சீட்டுல உக்கார்ந்துக்கிட்டு அரை சீட்டை குடுக்குறேயேய்யா

கர்சிப்பை எடுத்து முகத்தை பொத்திக்கிட்டேண்ணே.. என் பொண்டாட்டிக்கு ஆச்ச்ர்யம் தாங்க முடியலண்ணே..

என்னங்க, ஏங்க கர்ச்சிப்பை எடுத்து பொத்திக்கிறீங்க..பன்னி காயிச்சல் பயமா..”

அய்யோ இது அத விட கொடுரம்டிவிமானத்துல அவனவன் பாத்ரும் போறதுக்கு சோம்பேரித்தனப் பட்டுக்கிட்டு கேஸ் பேக்டரிய ஓப்பன் பண்ணி விட்டுருவாயங்க..பன்னி காயிச்சலாவது ஒரேயடியா ஆளைக் கொல்லும்டி..இது, கொஞ்சம் கொஞ்சம் ஆளைக் கொல்லும்டி..நீயும் ஏதாவது துணியை எடுத்து முஞ்சிய போத்திக்கடி..”

அடப் போங்க..வெள்ளைக்காரய்ங்க அப்படியெல்லாம் பண்ண மாட்டாயிங்க..”

அடிப்பாவி..கருப்பா இருக்குறவயிங்களையெல்லாம் நாய் கடிக்காது ரேஞ்சுல பேசிறேயடி..சரி உனக்கு பட்டாத்தாண்டி தெரியும்னு விட்டுட்டேண்ணே..

நேரம் ஆக, ஆக அவனவன் பலமுனைத் தாக்குதல் நடத்த ஆரம்பிச்சுட்டாயிங்கண்ணேஎன் பொண்டாட்டி கதறிட்டாயிங்கண்ணே

ஏங்க, எனக்கு குடலை பிரட்டுதுங்க..ஒரு துணி இருந்தா தாங்களேன்..முகத்தை பொத்திக்குறேன்கெஞ்சுறான்ணே

ஏங்க நீங்களுமா..”

ஐயோ..என்னை அப்படி சந்தேகப் பார்வை பார்க்காதடி..ஏர்போர்ட் வர்றதுக்கு முன்னாடியே நாலஞ்சு தடவை பாத்ரூம் போயிட்டண்டி..”

யாரா இருக்கும்னு திரும்பி பார்த்தா, நம்ம வெள்ளைக்கார தாத்தா..பர்கரை சாப்பிட்டுக்கிட்டே சிரிக்குறாருண்ணே..

அடப்பாவி..நீதானா அந்த படுபாவி..இதுதான் இறக்குமதி பிஸுனஸடா..நல்லா இருங்கடா..நீ சாப்பிடுறது பர்கராடா அல்லது பொணமாடா..

சார்..பொணத்தை சாப்பிடுங்க..ஆனா கொஞ்சம் உப்பு போட்டு சாப்பிடுங்க..”

என்ன பிரதர்..”

ஐயோ ஆளை விடுடா சாமி..சென்னை இறங்குற வரைக்கும் முகமூடிய கழட்டவே இல்லண்ணேஇப்ப என் பொண்டாட்டி ஆரம்பிச்சிட்டாங்கண்ணே..

..வாட் வெயில்.. வாட் வெயில்…” இங்கிலிஸ பாருங்கண்ணே

ஏங்க, ஒரு கேப் கூப்பிடுறீங்களா…” டாக்சின்னு சொல்ல மாட்டாளம்ணே..

டாக்சிக்காரன் வந்தாண்ணே..என் பொண்டாட்டியே பேசட்டும்னு அமைதியா இருந்துட்டேண்ணே..

இங்க இருந்து கீழ் கட்டளைக்கு எவ்வளவுங்க..”

“400 ரூபாங்கம்மா..”

..இட்ஸ் காஸ்ட்லிநாங்க அட்லாண்டாவுல இருந்து கலிபோர்னியா போறதுக்கே 100 டாலர்ஸ்தான் குடுப்போம் தெரியுமா..”

சார்..இன்னா சார் பேசுறாங்க..ஒன்னுமே பிரியல சார்..கொஞ்சம் வெளங்குற மாதிரி சொல்லு சார்..”

போதும்டா சாமி..அம்மா தாயே..முதல வண்டியில ஏறு..

பரவாயில்லங்க..மீனம்பாக்கம் ரோடு நல்லா இருக்குங்க..இண்டியா இஸ் சேஞ்சிங்க..”

டிரைவர் கொலை வெறி ஆகிட்டாண்ணே

சார், அம்மாவுக்கு எந்த ஊரு சார்…”

அது , மதுர பக்கத்துல இருக்குற கொட்டாம்பட்டி..”

இப்ப கொலைவெறி மனைவிக்கு ஷிஃப்ட் ஆகிடுச்சுண்ணேஒரு வழியா, வீடு வந்து சேர்ந்துட்டோம்ணே..

ஏங்க வீட்டில .சி. இல்லயா..இட்ஸ் டூ ஹாட்ன்னா..”

முடியலண்ணேஅம்மா வந்துட்டாங்கண்ணே

வாம்மா..பிரயாணம் எப்படிம்மா இருந்துச்சு..பிளைட்டுல ஒன்னும் சாப்பிடாம வந்து இருப்பீங்க..சாம்பார் சோறு சாப்பிடிறீங்களா..”

இல்ல ஆண்டி..கெல்லாக்ஸ் இருக்கா..கார்ன் பிளக்ஸ் இருக்கா..”

ஏம்பா, நான் இப்ப என்ன கேட்டுட்டேன்னு உன் பொண்டாட்டி கெட்ட வார்த்தையில திட்டுறா…”

அட நாராயணா..இந்த என்.ஆர். ய்ங்க கொசுத் தொல்லை தாங்க முடியலடா சாமி

12 comments:

பொன் மாலை பொழுது said...

அதிலும் இந்த பெண்கள் தங்கள் பிள்ளைகளுடன் பண்ணும் அலப்பரைகள் மகா வேடிக்கைதான்.பார்த்த உடனே தெரிந்துவிடும். பார்த்து ரசிக்கலாம்.நீங்கள் எழுதியதை படித்து ரசித்தோம்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஹா ஹா
அண்ணே செம காமெடி...

துளசி கோபால் said...

:-))))))))))))))

ஆயில்யன் said...

//400 ரூபாங்கம்மா..”

“ஓ..இட்ஸ் காஸ்ட்லி…நாங்க அட்லாண்டாவுல இருந்து கலிபோர்னியா போறதுக்கே 100 டாலர்ஸ்தான் குடுப்போம் தெரியுமா..”//

LOL :))))))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அருமை

அமுதா கிருஷ்ணா said...

ஒத்துக் கொள்கிறோம்..அவிய்ங்களோட அவுங்க NRI தான்.

Unknown said...

rocking :-)

Anonymous said...

wow!! super "THE GREAT INDIAN"

bandhu said...
This comment has been removed by the author.
தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

:) முடியல சார், முடியல ,,, :)

சி.பி.செந்தில்குமார் said...

kalakkal கலக்கல் காமெடி சார்

Anonymous said...

உங்க கத சிரிப்பா சிரிக்குதுங்க

Post a Comment