Monday, 31 January, 2011

நாங்களும் ரவுடி ஆகிட்டோமுல்ல

தமிழ்மணத்தில் நட்சத்திர பதிவர் ஆனதை, கோவாலுக்கிட்ட சொல்லலாமுன்னு போறேன், பயபுள்ள குறட்டை விட்டு தூங்கிக்கிட்டு இருக்கான். எனக்கோ செம கடுப்பு, தலையுல ஒரு குட்டுவிட்டேன், பயபுள்ள அலறி அடிச்சுக்கிட்டு எழுந்திக்கிறான்..

“அய்யோ….என்னைக் கொல்லுறாங்க..என்னைக் காப்பாத்துங்க..”

நான் மிரண்டே போயிட்டேன்..

“கோவாலு..நான்தாண்டா..என்னடா ஆச்சு..விருதகிரி படம் பார்க்குற மாதிரி கனவு கண்டயா..”

“இல்லடா ராசா..நமீதாதான் கனவுல..”

“அதுக்கேண்டா இப்படி பயந்து கத்துன..”

“நமீதா சங்கத்தமிழ் பேசுற மாதிரி கனவுடா...”

“போடாங்க..உன்னையெல்லாம் திருத்தவே முடியாது..”

“அதை விடு ராசா..இப்படி பேய் மாதிரி தூக்கத்துல வந்து எழுப்புற..”

“இல்ல கோவாலு..அது வந்து..அது வந்து..”

“என்னடா ராசா..இப்படி தயங்குற….யாராவது உன்னைப் பாராட்டி வாசகர் கடிதம் எழுதி இருக்காய்ங்களா..”

“அய்யோ..இல்லடா..”

“விஜய் அரசியலுக்கு வந்துட்டாரா..”

“அய்யோ..வேணாண்டா..”

“பின்ன..”

“தமிழ்மணத்துல இந்த வாரம் நட்சத்திர பதிவர் ஆயிட்டேண்டா..”

அப்படியே என்னை முறைச்சு பார்த்துட்டு, திரும்பவும் தூங்குறான். எனக்குனா செம கடுப்பு..

“கோவாலு..எவ்வளவு பெரிய மேட்டர் சொல்லி இருக்கேன்..ஒன்னும் சொல்லாம தூங்குற..”

“டே..ராசா..புரூடா விடுறதுக்கும் ஒரு அளவு இருக்கு….நீ பதிவு எழுதுற நிறுத்திட்டேன்னு சொல்லு(எம்புட்டு ஆசை பாருங்க) நம்புறேன்..இதெல்லாம் ஓவரு” ன்னு சொல்லிட்டு திரும்ப தூங்குறான்..

எனக்குன்னா ரொம்ப கோவம்.. அப்படியே வீட்டுக்கு வந்து வீட்டுக்காரம்மா கிட்ட சொன்னேன்..

“அடியே..தமிழ்மணத்துல..”

“அய்யோ ரொம்ப புகழாதீங்க..நான் இன்னும் சமைக்கவே ஆரம்பிக்கல..”

“அடியே..உன்னோட சமையல் மணத்தை சொல்லல..தமிழ்மணம்..தமிழ்மணத்துல..”

“அது எங்கங்க விக்குது..இண்டியன் ஸ்டோருலயா..வர்றப்ப ரெண்டு டஜன் வாங்கிட்டு வர்றீங்களா..”

எனக்கு வந்த கொலைவெறியில, வழக்கம் போல அமைதி ஆகிட்டேன்..ஆனாலும் என்னால கோவத்தை கட்டுப்படுத்தமுடியலை. ஒரு பயபுள்ள நம்புதா பாரு..இன்னும் கடுப்பு ஜாஸ்தியாக, கத்தியே விட்டேன்..

“அய்யோ..நான் நட்சத்திர பதிவர் ஆயிட்டேன்..”

சத்தம் கேட்டு யாரோ கதவைத்தட்ட, தொறந்தா எதிர்த்த வீட்டு அமெரிக்கன்..

“வாட் மேன்..வாட் சௌண்ட்.. யூ ஆர் டிஸ்டர்பிங்க் மீ..”

“ஆக்சுவலி..ஐ ஆம் இன் தமிழ்மணம்..”

நான் கத்துனதை விட, நான் பேசுற இங்கிலீசு அவனை கோவமாக்கியிருச்சு..

“ஐ வில் கால் 911”

ஆத்தாடி..அப்படியே எனக்கு உதறல் எடுத்துருச்சு..

“ஓ..நோ..ஐ ஆம் நான் இட் தமிழ்மணம்..ஐ டோண்ட் நோ பதிவுலகம்..நோ வாசகர் கடிதம்..யூ சிலீப்பு,,”

கடுப்புல அவன் கிளம்பிட்டான்..பயத்துல நான் உள்ளவந்துட்டாலும், ஒரு பிரபல பதிவரை எவனும் மதிக்க மாட்டிங்குறாயிங்களேன்னு கோவம் இன்னும் போகலை..சரி அம்மாகிட்டயாவது சொல்லலாமுன்னு போன் பண்ணினேன்..

“யம்மா..”

“ராசா..நல்லா இருக்கியா.”

“இருக்கேன்மா..நான் தமிழ்மணத்துல..”

“அதை விடு..இப்படி உன் பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணலாமா..”

அப்படியே எனக்கு தூக்கிவாரிப் போட்டுருச்சு..

“அய்யோ..என்னம்மா சொல்லுறீங்க..”

“ஆமா..எப்ப உனக்கு கால் பண்ணாலும், ஒரு பொண்ணு ஏதோ பேசிட்டு கட் பண்ணுது..”

ஆத்தி..இது எப்போ நடந்துச்சு..

“அய்யோ..எனக்கு எதுவும் தெரியாதும்மா..யாரும்மா அது..”

“தெரியலப்பா..நான் என்ன பேசுனாலும் கேட்க மாட்டிங்குது..சொன்னதே திரும்ப திரும்ப சொல்லுது…அது பேசுறத கூட எழுதி வைச்சிருக்கேன்..”

“எங்க சொல்லுங்க..”

“தி..சப்ஸ்க்ரைபர் இஸ் கரண்ட்லி பிசி..”

“அய்யோ..அது ரெக்கார்டர்டு வாய்ஸ்மா..”

“என்ன வாய்சா இருந்த என்னப்பா..இப்படி கட்டுன பொண்டாட்டிய விட்டுட்டு..இது உன் வீட்டுக்காரம்மா தெரியுமா..”

ஆஹா..இன்னைக்கு சங்குதான் போலிருக்கே

“அம்மா..அதை விடுங்க..உங்க புள்ள தமிழ்மணத்துல..”

“அது யாரு இன்னொரு பொண்ணு..எவ அவ தமிழ்மணம்..”

ஆஹா..இதுக்கு மேல பேசுன குடும்பத்துல குத்துவெட்டு நடக்கும்னு சொல்லிட்டு கட்பண்ணினா, கரெக்டா கோவாலு கால் பண்ணுறான்..

“ராசா..சூப்பருடா..தமிழ்மணத்துல நட்சத்திர பதிவர் ஆயிட்டயாமில்ல..”

“அட கோவாலு..அததானடா இன்னைக்கு முழுக்க சொல்லிட்டு இருக்கேன்..”

“அதை விடு..உடனே லேப்டாப்பை எடுத்து “தமிழ்மணத்துல ஸ்டார் பதிவரா ஆக்குனதுக்கு நன்றி..என்னைப் படிக்கும் வாசகர்களுக்கு எப்படி நன்றி சொல்லுறதுன்னு தெரியல..உங்களால்தான் இப்படி நடந்துச்சு.” ன்னு செண்டிமெண்ட் கண்ணீர் பதிவு எழுதியிருப்பியே..

“ஆமா..அதுதான குலவழக்கம்..”

“மவனே..வெட்டுகுத்தா ஆயிடும்..என்ன எழுதப்போற..ஒழுங்கா சொல்லு..”

“தினமும் ஒரு பதிவு கஷ்டம்டா..இதுவரைக்கும் நான் எழுதுன பதிவையே தினமும் இரண்டு மீள்பதிவா போடலாமுன்னு இருக்கேன்.. முடிஞ்சா ரெண்டு நாளைக்கு ஒரு பதிவு எழுதலாமுன்னு..”

“சரி..ஏதோ பண்ணு.. இப்ப ஆளை விடு..” ன்னு கட் பண்ணிட்டான்..

அவனை விடுங்க..என்னை நட்சத்திர பதிவர் ஆக்கிய வாசகர்களுக்கு எப்படி நன்றி சொல்லுறதுண்ணே…..

ஏதோ செருப்பு பறந்து வர்றது மாதிரி இருக்கே…

27 comments:

கோவி.கண்ணன் said...

நட்சத்திர வாழ்த்துகள்

வெறும்பய said...

நட்சத்திர வாழ்த்துகள்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நட்சத்திர வாழ்த்துகள் ராசாண்ணே..

கோவால ஒரு சூப்பர் கேரக்டர் ஆக்கீட்டிங்க ராசாண்ணே. நீங்க சென்னை செல்லும் பொழுது கோவாலும் கூட வர்றாரான்னு கேட்டேன் நான்.

கலக்குங்க.

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
கோவி.கண்ணன் said...
நட்சத்திர வாழ்த்துகள்
31 January 2011 12:19 AM
////////////////////////////
நன்றி கண்ணன்..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
வெறும்பய said...
நட்சத்திர வாழ்த்துகள்
31 January 2011 12:25 AM
////////////////////////
நன்றி வெறும்பய..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...
நட்சத்திர வாழ்த்துகள் ராசாண்ணே..

கோவால ஒரு சூப்பர் கேரக்டர் ஆக்கீட்டிங்க ராசாண்ணே. நீங்க சென்னை செல்லும் பொழுது கோவாலும் கூட வர்றாரான்னு கேட்டேன் நான்.

கலக்குங்க.
31 January 2011 12:28 AM
///////////////////////////////
நன்றிண்ணே..கோவாலு இல்லாம ராசா இல்லண்ணே..

அரபுத்தமிழன் said...

அண்ணே ராசா, உங்க பாணியே தனி. அருமை அருமை.
மனசார சிரிக்க வக்கிற ஆளுய்யா,தினமும் பதிவ எதிர்பார்ப்போமுல்ல.
லேட்டா வந்தாலும் ஸ்டாருக்குப் பொறுத்தமான ஆளுய்யா நீரு.

சங்கரியின் செய்திகள்.. said...

சூப்பர்.......கலக்குங்க...........வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்.....அதுதான் இப்போதைய தேவை......கல்க்குங்க........வாழ்த்துக்கள்.

வரதராஜலு .பூ said...

வாழ்த்துக்கள் ராசா. படடைய கௌப்புங்க (கோவால கேட்டதா சொல்லுங்க)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நட்சத்திர வாழ்த்துகள்

taaru said...

இங்கேர்ரா!! முந்தா நேத்து எழுதுன மாறி இருக்கு.. அதுக்குள்ளே நட்சத்திரம், நிலா, வால் நட்சத்திரம்.. அது இதுன்னு பெரிய ஆளு ஆயிட்டியே அண்ணே... !!!!!! இதே அளப்பறைய தொடர அன்போடு வாழ்த்துறேன்....
அன்பன்,
அய்யனார்.

துளசி கோபால் said...

நட்சத்திர வாழ்த்து(க்)கள்

நசரேயன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் அண்ணே

ஜோதிஜி said...

பயபுள்ள ஆரம்புத்துலயிருந்து கோக்குமாக்கா எழுதுற போதே நினைச்சேன். ம்ம்ம்.... பாசக்கார பயபுள்ள.

வாழ்த்துக்ள்.

அன்புடன் அருணா said...

பூங்கொத்தோடு நட்சத்திர வாழ்த்துகள்

மாதேவி said...

நட்சத்திர வாழ்த்துகள்.

THOPPITHOPPI said...

வாழ்த்துகள்

வானம் said...

வாழ்த்துகள்

செ.சரவணக்குமார் said...

நட்சத்திர வாழ்த்துகள் அண்ணே.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நட்சத்திர வாழ்த்துகள்

பாலகுமார் said...

வாழ்த்துகள் ராசா

டக்கால்டி said...

நட்சத்திர வாழ்த்துகள் அண்ணே.

Anonymous said...

வாழ்த்துகள்

-
வெங்கடேஷ்

அவிய்ங்க ராசா said...

நன்றி அரபுத்தமிழன்
நன்றி சங்கரி
நன்றி வரதராஜூலு
நன்றி ரமேஷ்
நன்றி தாரு
நன்றி துளசிடீச்சர்
நன்றி நசரேயன்
நன்றி ஜோதிஜீ
நன்றி அருணா
நன்றி மாதேவி
நன்றி தொப்பிதொப்பி
நன்றி வானம்
நன்றி சரவணன்
நன்றி ராதாகிருஷ்ணன்
நன்றி பாலகுமார்
நன்றி டகால்டி
நன்றி வெங்கடேஷ்

Anonymous said...

Last line is super

இராமசாமி said...

enga bossu.. ore edathula irukom.. kovalu ku kita soninga.. en kita sollalaye neenga.. enmao ponga.. valthukal ....

அவிய்ங்க ராசா said...

நன்றி அனானி நண்பா,
ராமசாமி அண்ணா..இந்த தடவை மீட் பண்ண முடியலை..சாரி..))

Post a Comment