Friday, 28 January, 2011

ஏ.ஆர் ரகுமானுக்கு வேற வேலையே இல்லையா….

தல ஏ.ஆர் ரகுமானுக்கு,

நீங்க எல்லாம் இந்த கடுதாசியை படிக்க மாட்டீங்க..இருந்தாலும் பதிவுலக இலக்கணப்படி எழுத வேண்டிய கட்டாயத்துல இருக்கேன். ஒரு மனுசனுக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கும், குளிக்குறது, பல்லு விளக்குறது, சாப்பிடுறது, புஸ்தகம்(சாரு அல்ல) படிக்குறது, இன்டெர்நெட்டுல பிளாக்கு படிக்குறது, தூங்குறது, ஊர்சுத்துறதுன்னு ஆயிரத்தெட்டு வேலை இருக்கும். ஆனா, இதையெல்லாம் விட்டுப்புட்டு உங்களுக்கு அவார்டு வாங்குறதே வேலையா போச்சுயா..உங்களுக்கு தூக்கமே வராதா..ஆ, ஊன்னா, ஒரு அவார்டை வாங்கிப்புடுறீங்க…

அதுவும் எனக்கு என்ன கடுப்புன்னா, இம்புட்டு அவார்டு வாங்குனதுக்கப்புறமும், எம்புட்டு அடக்கமா “எல்லாப் புகழும் இறைவனுக்கே” ன்னு ஒரு உலகமேடையில நம்ம தமிழுல சொல்லிப்புடுறீங்க..கழுத நம்ம வேற ஒன்னாப்புலருந்து தமிழ் மீடியத்துல படிச்சுட்டதால, பெருமிதத்துல உணர்ச்சிவசப்பட்டு முடியெல்லாம் நட்டுகிட்டு நிக்குது. எழுந்து வேற கைதட்டவேண்டியதா இருக்கு, நமக்கெல்லாம் ஒரு 25 ஓட்டும் , ஒரு வாசகர் கடிதமும் வந்தாவே, கொஞ்சநேரம் மோட்டுவாயை பார்த்துக்கிட்டு கன்னத்துல கைவைச்சிக்கிட்டு “நானெல்லாம் பிளாக் எழுத ஆரம்பிச்சது ஒரு ஆக்சிடெண்ட்” ன்னு தமிழ்கொலை செய்யும் நடிகை மாதிரி பேச ஆரம்பிச்சுர்றோம். ஆனா இரண்டு கையில இரண்டு ஆஸ்கார் வைச்சுகிட்டு இவ்வளவு அடக்கமா சிரிக்கிறீங்களே..எப்படிண்ணே..

இன்னைக்குதாண்ணே, நீ “கிரிஸ்டல்” வாங்குன அவார்டைப் பார்த்தேன். நீ எல்லாப் புகழும் இறைவனுக்கே ன்னு சாதரணமா சொல்லிப்புட்ட..எனக்கு நைட்டு தூக்கமே வரலை தெரியுமா..இன்னமும் புல்லரிக்குதுண்ணே..அவார்டெல்லாம் போதுமுண்ணே..நீ அதுக்கும் மேல ஏதாவது வாங்கணும்…

ஆனாலும், பயபுள்ள மனசுல ஒரே ஒரு ஏக்கமான கோரிக்கைண்ணே..ரொம்ப நாளா அடஞ்சு கிடக்கு. இலங்கையில் இம்புட்டு பேர் , நம்ம தமிழனுங்க, அனாதையா, நாதியத்து நிக்குறாங்கண்ணே..அவிங்களுக்காக, ஒரு பாட்டு, ஒரே பாட்டு, ஆறுதலா போடுவியாண்ணே..அந்த ஒரு பாட்டு போதுமுண்ணே, அத கேக்குற, பார்க்குற மனுசனுங்க, ஒரு சொட்டு கண்ணீர் விடுவாய்ங்கண்ணே..அந்த கண்ணீரு , அங்க அனாதையா நிக்குற நம்மாளுங்களுக்கு ஏதாவது பண்ணும்ணே..கண்ணீருக்கு அம்புட்டு சக்தி இருக்குண்ணே. நீ பண்ணுவண்னே..நம்பிக்கை இருக்கு..

இப்படிக்கு

நம்ம ஊரு பயபுள்ளைதாண்ணே

அவிங்க ராசா

26 comments:

சேலம் தேவா said...

இது போன்று உலகப் புகழ் பெற்ற தமிழர்கள் இந்த விஷயங்களில் தலையிட்டால் கண்டிப்பாக சிறிதேனும் மாற்றம் பிறக்கும்.கண்டு கொள்ளாதது வேதனை.சரியான நேரத்தில் சரியான பதிவுண்ணே..!!

Anonymous said...

சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

தமிழன் ஒரு இளிச்சவாயன். ‍ ஜடம்.

.

ஞாஞளஙலாழன் said...

அருமையான பதிவு. துள்ளி குதிக்கிற பதிவில் உருக்கம் கலந்து உணர்வுகளைக் கொள்ளையடித்து விட்டீர்கள்.
அப்புறம் ஒன்று.... 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் 'வெள்ளை பூக்கள்' பாடல்.....

revathy rkrishnan said...

முதல் வரியை படிச்சதும் வேலையில்லாம ஒரு போஸ்டு போட்டுட்டீங்கன்னு நெனச்சேன்... கடைசிப்பத்தியில் கலங்க வெச்சுட்டீங்க...
@ஞாஞளஙலாழன் (எப்படிங்க இப்படி குடிகாரன் உளர்ற மாதிரியே பேர் வெச்சுருக்கீங்க) - வெள்ளைப்பூக்கள் பாடல் அந்த படத்தின் படைப்பாளிக்கும், வார்த்தைகளால் ரஹ்மானின் இசைக்கு பெருமை சேர்த்தவருக்குமே உரியதாகும். பாடலின் உணர்ச்சிகளுக்கு குரல் கொடுத்து அழகுப்படுத்தியிருப்பார் ரஹ்மான்

கும்மி said...

ரஹ்மான் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அவர்கள் படும் துயரங்கள் பற்றியும் பேசினார். எந்த சந்திப்பு என்று சரியாகத் தெரியவில்லை.

Slum Dog Millionaire திரைப்படத்தில் பாடிய பாடகி M.I.A (மாயா) வின் தந்தை ஈழத்தில் ஆயுதக் குழுக்களின் தொடக்கத்தில் பங்கெடுத்தவர். தற்பொழுது சர்வதேச சமூகத்திடம் ஈழ ஆதரவு பிரச்சாரம் மேற்கொள்ளும் M.I.A , ரஹ்மானுக்கு ஈழத்தைப் பற்றி நிறைய சொல்லியுள்ளார். அதனை அவரும் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.

ரஹ்மான் Golden Globe விருது வாங்கியபோது Thank you Maya என்று கூறினார். அப்பொழுது யார் மாயா என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு ஈழம் பற்றி பேசியுள்ளார்.

கும்மி said...

@ revathy rkrishnan

அம்மணி கவனிக்கவே இல்லை. நலமா? ஊட்டுக்காரர் எப்படி இருக்கார்?

..:: Mãstän ::.. said...

<<<
அவார்டெல்லாம் போதுமுண்ணே..நீ அதுக்கும் மேல ஏதாவது வாங்கணும்…
>>>

:)

Riyas said...

mmmm correct

செந்தழல் ரவி said...

ட்விட்டரில் இருக்கும் தமிழக மீனவர் பிரச்சினை பற்றி பதிவு போடவும் ராசா.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தொடர்ந்து போராடுவோம்

சுவனப்பிரியன் said...

சரியான நேரத்தில் சரியான பதிவு

Samy said...

Padunkanne. Kannerai parisa tharukirom. Sathi

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////////
சேலம் தேவா said...
இது போன்று உலகப் புகழ் பெற்ற தமிழர்கள் இந்த விஷயங்களில் தலையிட்டால் கண்டிப்பாக சிறிதேனும் மாற்றம் பிறக்கும்.கண்டு கொள்ளாதது வேதனை.சரியான நேரத்தில் சரியான பதிவுண்ணே..!!
28 January 2011 9:55 PM
//////////////////////////////
நன்றி தேவா..

அவிய்ங்க ராசா said...

///////////////////////////
Anonymous said...
சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

தமிழன் ஒரு இளிச்சவாயன். ‍ ஜடம்.

.
28 January 2011 10:18 PM
///////////////////////////////
வருகைக்கு நன்றி..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////
ஞாஞளஙலாழன் said...
அருமையான பதிவு. துள்ளி குதிக்கிற பதிவில் உருக்கம் கலந்து உணர்வுகளைக் கொள்ளையடித்து விட்டீர்கள்.
அப்புறம் ஒன்று.... 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் 'வெள்ளை பூக்கள்' பாடல்.....
29 January 2011 12:51 AM
/////////////////////////////
நன்றி நண்பா..இன்னும் ஈழத்து உணர்வுகளை சொல்லும்பாடலை ஏ.ஆர் ரகுமான் அளிக்க வேண்டும்..

அவிய்ங்க ராசா said...

///////////////////////////////
revathy rkrishnan said...
முதல் வரியை படிச்சதும் வேலையில்லாம ஒரு போஸ்டு போட்டுட்டீங்கன்னு நெனச்சேன்... கடைசிப்பத்தியில் கலங்க வெச்சுட்டீங்க...
@ஞாஞளஙலாழன் (எப்படிங்க இப்படி குடிகாரன் உளர்ற மாதிரியே பேர் வெச்சுருக்கீங்க) - வெள்ளைப்பூக்கள் பாடல் அந்த படத்தின் படைப்பாளிக்கும், வார்த்தைகளால் ரஹ்மானின் இசைக்கு பெருமை சேர்த்தவருக்குமே உரியதாகும். பாடலின் உணர்ச்சிகளுக்கு குரல் கொடுத்து அழகுப்படுத்தியிருப்பார் ரஹ்மான்
29 January 2011 3:47 AM
////////////////////////////////
நன்றி ரேவதி..

அவிய்ங்க ராசா said...

////////////////////////////////////
கும்மி said...
ரஹ்மான் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அவர்கள் படும் துயரங்கள் பற்றியும் பேசினார். எந்த சந்திப்பு என்று சரியாகத் தெரியவில்லை.

Slum Dog Millionaire திரைப்படத்தில் பாடிய பாடகி M.I.A (மாயா) வின் தந்தை ஈழத்தில் ஆயுதக் குழுக்களின் தொடக்கத்தில் பங்கெடுத்தவர். தற்பொழுது சர்வதேச சமூகத்திடம் ஈழ ஆதரவு பிரச்சாரம் மேற்கொள்ளும் M.I.A , ரஹ்மானுக்கு ஈழத்தைப் பற்றி நிறைய சொல்லியுள்ளார். அதனை அவரும் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.

ரஹ்மான் Golden Globe விருது வாங்கியபோது Thank you Maya என்று கூறினார். அப்பொழுது யார் மாயா என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு ஈழம் பற்றி பேசியுள்ளார்.
29 January 2011 5:10 AM
////////////////////////////////
தகவலுக்கு நன்றி கும்மி...

அவிய்ங்க ராசா said...

///////////////////////////////////
..:: Mãstän ::.. said...
<<<
அவார்டெல்லாம் போதுமுண்ணே..நீ அதுக்கும் மேல ஏதாவது வாங்கணும்…
>>>

:)
29 January 2011 10:02 AM
Riyas said...
mmmm correct
29 January 2011 10:14 AM
செந்தழல் ரவி said...
ட்விட்டரில் இருக்கும் தமிழக மீனவர் பிரச்சினை பற்றி பதிவு போடவும் ராசா.
29 January 2011 11:16 AM
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
தொடர்ந்து போராடுவோம்
29 January 2011 1:02 PM
சுவனப்பிரியன் said...
சரியான நேரத்தில் சரியான பதிவு
29 January 2011 3:05 PM
Samy said...
Padunkanne. Kannerai parisa tharukirom. Sathi
29 January 2011 4:51 PM
/////////////////////////////////
நன்றி மஸ்தான், ரியாஸ்,
கண்டிப்பா எழுதுறேன் ரவி
நன்றி ரவி, சுவனப்பிரியன், சாமி..

Viggu said...

ராசா அண்ணே, எப்படியாது இந்த பதிவ ரகுமான் அவர்களுக்கு சேர்த்துவிட வேண்டும். அற்புதமா எழுதிருக்கீங்க.

அதிரடி அடிதடி said...

கன்னத்தில் முத்தமிட்டால் படப்பாடல்களை கேட்டதில்லையா

விடை கொடு எங்கள் நாடே
வெள்ளைப்பூக்கள்

அதிரடி அடிதடி said...

கும்மி அவர்கள் ஏ.ஆர்.ஆர் என்னவெல்லாம் செய்துள்லார் என்று தெளிவாகவே விளக்கியுள்ளார்

எனவே தவறான தகவல்களின் அடிப்படையில் எழுதிய இந்த கடிதத்தை கிழித்து எறிந்து விட்டு
திருவண்ணாமலை கோயிலுக்கு கொடுத்த, ஈழத்தமிழர்களுக்கு ஒன்றும் செய்யாத இளையராஜாவிற்கு கடிதத்தை எழுதவும்

Anonymous said...

//அதிரடி அடிதடி.எனவே தவறான தகவல்களின் அடிப்படையில் எழுதிய இந்த கடிதத்தை கிழித்து எறிந்து விட்டு
திருவண்ணாமலை கோயிலுக்கு கொடுத்த, ஈழத்தமிழர்களுக்கு ஒன்றும் செய்யாத இளையராஜாவிற்கு கடிதத்தை எழுதவும்

urupadava mattengala neenga ellam? ippo athukku avarai izhukireenga?

Veera

அவிய்ங்க ராசா said...

//////////////////////////////
அதிரடி அடிதடி said...
கன்னத்தில் முத்தமிட்டால் படப்பாடல்களை கேட்டதில்லையா

விடை கொடு எங்கள் நாடே
வெள்ளைப்பூக்கள்
31 January 2011 6:30 AM
/////////////////////////
நண்பா..ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அவர் அப்போது இதை கொடுத்தபோது இருந்த சூழ்நிலைவேறு. இப்போது இன்னும் கொடுமை..அதை பிரதிபலிக்க ஒரு பாடல்..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////
அதிரடி அடிதடி said...
கும்மி அவர்கள் ஏ.ஆர்.ஆர் என்னவெல்லாம் செய்துள்லார் என்று தெளிவாகவே விளக்கியுள்ளார்

எனவே தவறான தகவல்களின் அடிப்படையில் எழுதிய இந்த கடிதத்தை கிழித்து எறிந்து விட்டு
திருவண்ணாமலை கோயிலுக்கு கொடுத்த, ஈழத்தமிழர்களுக்கு ஒன்றும் செய்யாத இளையராஜாவிற்கு கடிதத்தை எழுதவும்
31 January 2011 6:31 AM
Anonymous said...
//அதிரடி அடிதடி.எனவே தவறான தகவல்களின் அடிப்படையில் எழுதிய இந்த கடிதத்தை கிழித்து எறிந்து விட்டு
திருவண்ணாமலை கோயிலுக்கு கொடுத்த, ஈழத்தமிழர்களுக்கு ஒன்றும் செய்யாத இளையராஜாவிற்கு கடிதத்தை எழுதவும்

urupadava mattengala neenga ellam? ippo athukku avarai izhukireenga?

Veera
31 January 2011 10:46 AM
///////////////////////////
இப்போது உள்ள சூழ்நிலையில் இளையராஜா - ஏ.ஆர் ஒப்புமை வேண்டாமே..(

Muhunthan said...

http://www.change.org/petitions/boycott-of-sri-lanka-cricket-2011

Thananjeyan said...

hi
www.thanalogic.com

Post a Comment