Thursday 24 March, 2011

முந்தும் திமுக..தடுமாறும் அதிமுக

இந்த தேர்தலில் என்னால் ஓட்டுபோடமுடியாவிட்டாலும், தமிழக அரசியலில் நடக்கும் நிகழ்வுகள் எனக்கு ஓரளவிற்கு அத்துப்படி. காலையில் எழுந்து காபி குடிக்கிறேனோ இல்லையோ, தினப்பத்திரிக்கை படிக்காமல் ஒருபோதும் இருந்ததில்லை. தமிழக சட்டசபை தேர்தல் சூடுபிடித்திருக்கும் இந்தவேளையில், ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்ற பரபரப்பு, உலகக்கோப்பையை யார் வாங்கப்போவது என்பதை(கண்டிப்பா, இந்தியாவுக்கு இல்லைன்னு தெரியும்..பாகிஸ்தான்???) விட மேலோங்கியே இருக்கிறது.

இணையதளங்களைப் படிக்கும்போது, அதிமுக கூட்டணியே வெற்றிபெறும் என்ற கூற்று முன்னோக்கி இருக்கிறது. அது என்னவோ தெரியவில்லை, பெரும்பாலான இணைய எழுத்தர்களுக்கு கலைஞரைப் பிடிக்கவில்லை. ஈழத்தமிழ் படுகொலைகளை கண்டித்து உறுதியான முடிவு எடுக்காதது, ஸ்பெக்ட்ரம் பற்றிய ஆழமான பார்வை, குடும்ப அரசியலை முன்னெடுப்பது, இந்த காரணங்களே கலைஞரை வெறுப்பதற்கு முன்னோக்கிய காரணங்களாக இருக்கின்றன.

ஆனால் மொத்தம் 20% பேர் உபயோகிக்கும் இணையத்தின் கணிப்புகளையும், கருத்துக்களையும் ஒரேயடியாக நம்பிவிடுவதில்லை(கவனிக்கவும்..முழுவதுமாக இல்லை). ஏனென்றால் நாள்தோறும் கூலிவேலை செய்து வயிற்றைக் கழுவும், ஏழைமக்களையும், மாதச்சம்பளம் வாங்கி குடும்பத்தை நகர்த்தும் நடுத்தர மக்களின் எண்ணங்களை, இணையதளங்கள் பிரதிபலிக்கின்றனவா என்று கேட்டால், துரதிருஷ்டவசமாக இல்லை என்றே சொல்லுவேன்.

கடந்த இரண்டு வாரங்களாக, எங்கள் ஊரிலும், மற்ற ஊர்களிலும் உள்ள நண்பர்கள், உறவினர்கள் என்று கணிசமான பேர்களிடம் பேச நேர்ந்தது. அவர்கள் யாரும் இணையத்தை உபயோகித்ததில்லை. அனைவரும் தினக்கூலி, மாதக்கூலி வாங்கும் நடுத்தர மக்கள். இவர்கள்தான், அடுத்த முதல்வரையும், தமிழக அரசியலையும் தீர்மானிப்பவர்கள் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை எனக்கு உறுதியாக உண்டு. அப்படி பேசியதில் இருந்து நான் கவனித்த விஷயங்கள் சிலவற்றை தொகுத்துப் பார்த்தபோது எனக்கு கிடைத்தது.

1) கலைஞர் ஆட்சியின் மேல் பரவலாக ஆதரவோ, குற்றச்சாட்டோ இல்லை. “பரவாயில்லைங்க” என்ற கருத்தே மேலோங்கி இருந்தது

2) ஸ்பெக்ட்ரம் நகர்ப்புறங்களில் வேண்டுமானால் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் கிராமங்களில்..ம்..ஹீம்..நிறைய பேருக்கு, ஸ்பெக்ட்ரம் என்றாலே தெரியவில்லை. தெரிந்தவர்களும் “யாருதான் கொள்ளை அடிக்கலை” என்ற மனநிலையில் இருப்பது ஆச்சர்யம்

3) திமுகவின் இலவசங்கள் பலரைக் கவர்ந்திருக்கிறது. இந்த ஆட்சியில் கிடைத்த இலவச தொலைக்காட்சியில் சன்செய்திகள் பார்ப்பதாக சொல்லும்போதே இதை உணரமுடிகிறது

4) அதிமுகவிற்கு ஓட்டுப்போடும் மனநிலையில் சிலர் இருந்தாலும், ஏனோ சிறிது தயக்கம் இருக்கிறது. முந்தைய அதிமுக ஆட்சியின் பாதிப்பா, அல்லது “அம்மா வந்தா ஓவராகிடுமோ” என்ற பயமா என்று தெரியவில்லை. இந்த குழப்பமே, அதிமுகவிற்கு பாதகமாக வர வாய்ப்பில்லை

5) கலைஞரின் குடும்ப அரசியலும், ஆதிக்கமும் பரவலாக அனைவருக்கும் பிடிக்கவில்லை. ஆனால் இவையெல்லாம் கலைஞருக்கு எதிரான ஓட்டாக மாறாதது, அதிர்ஷ்டம் அல்லது துரதிருஷ்டம்(முறையே திமுக மற்றும் அதிமுக)

6) விஜய்காந்த் பெற்ற நடுநிலை ஓட்டுகள் அப்படியே ஜீரோ

ஆகிப்போனது. அம்மாவிடம் சரண்டைவார் என்று எதிர்பார்த்ததாகவே அனைவரும் கூறினர்.

7) ஒரு மாற்றம் வரட்டுமே என்று அதிமுகவிற்கு ஓட்டளிக்க போவதாக சிலர் கூறினர்

8) வைகோவை வெளியேற்றியதை நிறைய பேர் ரசிக்கவில்லை. “பாவம்யா அவரு” என்ற மனநிலையே நிறைய பேரிடம் இருக்கிறது.

அனைத்தையும் தொகுத்துப் பார்த்தபோது. இந்தமுறையும் கலைஞர் முதல்வராகிவிடுவார் என்றே தோன்றுகிறது. ஆனால் சென்றமுறை போல எளிதாக இல்லை. மிகவும் குறைந்த வித்தியாசத்தில். ஆனால் உலகத்திலேயே மிகவும் சீக்ரெட்டான இடமான தமிழகமக்களின் இதயம் என்ன சொல்லப்போகிறது என்று மே 13 ஆம் தேதி தெரிந்துவிடும்.


17 comments:

taaru said...

// உலகத்திலேயே மிகவும் சீக்ரெட்டான இடமான தமிழகமக்களின் இதயம் //
இது மேட்டர்... இந்த அம்மா கொஞ்சம் அடக்கி வச்சுட்டு result வந்தப்புறம் இந்த ஆட்டம் ஆடி இருக்கலாம்....அகங்காரி....!!! என்னத்த சொல்ல...?!! எல்லாம் அழிவுக்கு தான்....பாக்கலாம்....
இந்த தடவை நான் ஒட்டு போடுறேன்...அண்ணே...எதுக்கு னு அப்புறம் சொல்றேன்.

DR said...

எனக்கும் கலைஞர் தான் வருவாருன்னு தோணுது...

FREIND-நண்பன் said...

(Sorry boss, i don't have tamil translator) nobody thinks how can he so much things free... why cant he give petrol/Current free? he gives only entertainment things, not essential things. Also, People thinks, let us get some thing from govt, for what we pay(tax).
“யாருதான் கொள்ளை அடிக்கலை”
thats also true naa. The people with honesty/values have become very less in number.

சேலம் தேவா said...

//ஆனால் உலகத்திலேயே மிகவும் சீக்ரெட்டான இடமான தமிழகமக்களின் இதயம் என்ன சொல்லப்போகிறது என்று மே 13 ஆம் தேதி தெரிந்துவிடும்.//

சூப்பர்ண்ணே... யதார்த்தமா சொல்லியிருக்கீங்க. :)

ராஜேஷ், திருச்சி said...

//ஆனால் மொத்தம் 20% பேர் உபயோகிக்கும் இணையத்தின் கணிப்புகளையும், கருத்துக்களையும் ஒரேயடியாக நம்பிவிடுவதில்லை(கவனிக்கவும்..முழுவதுமாக இல்லை). //

உண்மை - கடந்த 2 தேர்தல்களில் இது வெளிச்சம்.. 2006 மற்றும் 2009 தேர்தல்களில் இணையத்தில் நடைபெற்ற சர்வே அனைத்தும் அ தி மு க தான் வெல்லும் என்று கூறியது ஆனால் உண்மையில் நடந்தது வேறு.. குறிப்பாக 2009 , எதிர் மாறாக நடந்தது.. ! இணையத்தை பொறுத்த வரை எப்போதும் அ தி மு க தான் வெற்றி .. ஆனால் உண்மையில் வேறு .. காரணம் இணையத்தில் வாக்களிப்பவர்கள் ஒன்று வெளிநாட்டிலிருந்து செய்திகளை அலசுபவர்கள்.. அல்லது உள்நாட்டிலே இருந்து கொண்டு இணையதி மேய்வது , கருணாநிதி எதிர்ப்பு காட்டுவது , இட்லி வடை, பரோட்டா குருமா, மட்டன் சுக்க நடத்தும் சர்வேய்வில் அ தி மு க விற்கு ஒரு ஓட்டு
போட்டாலே தங்கள் ஜனநாயக கடமை முடிந்ததாக கருதும் கூட்டம்

அம்மாவின் அதிகார போக்கு , ஆணவம் , திமிர் எதுவும் மாறவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.. கூட்டணி கட்சிகள் இணைந்து ஒரு பிரசார மீட்டிங் கூட இல்லை . .எப்படி கீழ் மட்ட தொண்டன் உழைப்பான்?

கேப்டேனோடு வாக்குபதிவுக்கு முன்னரே அம்மா முட்டிக்கொண்டு நின்றாலும் ஆச்சிர்யம் இல்லை.. வி. க. வும் விட்டு கொடுத்து போகும் குணம் இல்லாதவர்..

அம்மாவின் தேர்தல் அறிக்கை வெளியிடு கூட சுரத்தே இல்லாமல் தான் நடந்தது.. தேமே என்று வெளியிட்டா.. தி மு க அறிக்கை வெளியிடு லைவிலியாக இருந்தது.. அம்மாவின் அறிக்கை வெறும் கட் அண்ட் பேஸ்ட் என்ற நிலை தான்

தி மு க வெல்லவே வாய்ப்பு அதிகம்..

Anonymous said...

sariyana karuthu thangal ezuthiyathu 100=100 unmay

Prakash said...

Even before coming to Power Jaya & Sasi group (ADMK) have received bribe of 1000 Crores to keep Vai Ko out of alliance, think what they'll do if they unfortunately comes to power again in TN.

Dear Voters be careful..

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=50858

http://thatstamil.oneindia.in/news/2011/03/24/vaiko-blames-sterlite-mdmk-ouster-admk-alliance-aid0091.html

Unknown said...

இங்க ராஜெஷ் என்கிற ஒரு திமுக அல்லக்கை எல்லா பிளாக்குலயும் கொடுக்கபட்ட கஞ்சிக்கு ஏற்ப ஒரே பின்னூட்டத்தை இட்டிருக்கிறது.. நண்பர்கள் அனைவரும் இன்றைய தேர்தல் பற்றிய பிளாக் எழுத்துகளை பார்க்கவும் ...என் பேச்சில் சந்தேகம் இருப்பின்.

ramya said...

DMK THERTHAL ARIKKAYAI COPY ADICCHA YAR NAMBUVARGAL,+1,+2,COLLEGE STUDENTS ANAIVARUKKUM LAPTOP,LAPTOP ENNA MALIGAI KADAYILA VIRKUTHU,ADUTTHA MURAI ELECTION ARIKKAIN POLUTHU KALAIGNARIDAM IDEA KELUNGAL

ramya said...

ammavin election arikkaithan engal ooril ippothaya comedy

CrazyBugger said...

குடும்பத்தை நகர்த்தும் நடுத்தர மக்களின் எண்ணங்களை, இணையதளங்கள் பிரதிபலிக்கின்றனவா என்று கேட்டால், துரதிருஷ்டவசமாக இல்லை என்றே சொல்லுவேன்.

// Power cut, vilaivaashi, kudumbakkollai
ithu pothumae amma vara(??!!)

Anonymous said...

அப்போ கலைஞரே மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்கிறீர்களா?

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஆளுங்கட்சிக்கு சாதகமா ஒரு பதிவா? இப்படியும் ஒரு நம்பிக்கையா?

எனது வலைபூவில் இன்று: மதியோட்டை மதிசுதா'வின் சிறப்பு பேட்டி - விரைவில்

Siva said...
This comment has been removed by the author.
Siva said...

Ayya o Amma o , TamilNattu pillaiga Patni thaan

Visit my blog http://itoverflow.blogspot.com/

Anonymous said...

stalin:

naam thamizhar katchi seeman, verum congress aatchikku varakoodathunu solraru.. appo avangalukku bathil yaaru varanumnu koncham sonnaruna avarukku mathippu yerum... dmkvum venamnu solraru.. admkku adharavu panala nu solraru.. appo yaaru thaan antha maatru sakthi? periyaroda aavi thaan ithukku pathil sollanum:-(

oru vela adutha election vaikkovum ivarum kootaniyo?

aaahhhhh mudiyala!

rasa annae neenga yaaru varanumnu ethirpaarkureenga? enakku kalaingar varanumnu thonuthu!

நிஷாந்தன் said...

சரியான அலசல். தமிழகத்தில் வசிக்கா விட்டாலும் தமிழக அரசியலை நாடி பிடித்துப் பார்த்த நல்லதொரு பதிவு.

Post a Comment