Saturday, 19 March, 2011

திமுக தேர்தல் அறிக்கை – எல்லாம் ப்ரீ

கோவாலை அவ்வளவு சந்தோசமா பார்த்ததே இல்லைண்ணே..பற்றாக்குறைக்கு கூட ஒரு பயபுள்ள வேற கொடுக்கு மாதிரி வந்தான்..

“ராசா..ராசா.ரொம்ப சந்தோசமா இருக்கேண்டா..”

“முதல்ல..கூட இருக்குறவன் யாருன்னு சொல்லு..”

“அய்யோ..இவனை உனக்கு இன்ட்ரியூஸ் பண்ண மறந்துட்டேன்..ஹல்லோ..மீட் மிஸ்டர் ராசா..அவிங்க ராசா..”

“ஹாய் ராசா..ஐ ஆம் சுப்பையா..கிறுக்கு சுப்பையா..”

“ஆமா..ரெண்டு நாட்டு தலைவர்கள் மீட் பண்ணிக்குறாங்க..தமிழுல பேசுங்கடா, ங்கொய்யாலே..”

“ஆமா….சுப்பையா ஓகே..அதென்ன கிறுக்கு சுப்பையா..கோவாலு என்னடா இது..”

“ராசா..அது போகப்போக விளங்கும்..”

“சார்..நீங்கதான் அவிங்க ராசாவா…சார்..நான் உங்க பரம் ரசிகன் சார்..உங்க பிளாக்கு படிக்காம தூக்கம்…..”

“டே..சுப்பையா..”

“கால் மீ கிறுக்கு சுப்பையா..”

“ஆமா..ரொம்ப முக்கியம்..எம்.பி.பி.எஸ் பட்டம் பாரு..இனிமேல் யாரையும் நான் நக்கல் விடுறதா இல்லை. விளையாட்டா எடுத்துக்குருவாங்கன்னு சொல்லி, சும்மா ஜாலிக்கு நக்கல் விட்டா, ரொம்ப சீரியசா எடுத்துக்குறாங்க….நம்ம விடுற நக்கல் எல்லாம் பத்தி படிச்சுட்டு ஜாலியா சிரிச்சுட்டு ஆரோக்யமா எடுத்துக்குருவாங்கன்னு பார்த்தா, ஏதோ கொலைக்குத்தம் பண்ணுன மாதிரி திட்டுறாயிங்க..எதுக்குடா, அவிங்களை நக்கல் பண்ணி, நம்மளை நாமே தாழ்த்திக்கணும்..”

“ஏன் சார்..அவிங்க எல்லாம், டி.வில வர்ற அசத்தப்போவது யாரு, மிர்ச்சி சிவா நடிச்ச தமிழ்ப்படம் இதையெல்லாம் உர்ருன்னு உக்கார்ந்து பார்ப்பாயிங்களோ..”

“அட கிறுக்கு சுப்பையா..கோர்த்து விட்டுறாதடா….அவிங்களை பகைச்சுக்கிட்டதால கெட்ட, கெட்ட வார்த்தையில வர்ற இமெயிலை படிச்சுட்டு நானே குழம்பி போய் இருக்கிறேன். அவிங்களையெல்லாம் கிண்டல் பண்ணி பகைச்சுக்காதேடான்னு, நான் பதிவுலகம் வர்றப்பயே நண்பன் சொன்னான்..நாந்தான் கேக்கல..”

“ராசா சார்..இதென்ன சார்..பழைய படத்துல தாதா கிராமத்தையே அடிமையா வைச்சுக்குற மாதிரி சொல்லுறீங்க..அப்ப புதிய பதிவர்கள் யாரும் தைரியமா எழுத முடியாதா சார்..”

“எழுதுங்க..அரசியல்வாதிகள் பத்தி எழுதுங்க..அவிங்களுக்கு அரசியல்வாதிகள் எவ்வளவோ மேல்..நக்கல் விட்டாலும் சிரிச்சுட்டு போய்கிட்டே இருப்பாயிங்க..அட சுப்பையா..என்னைய மாட்டி விடுறதுலேயே இருக்கேயாடா..ஆமா கோவாலு ரொம்ப சந்தோசமா இருந்த மாதிரி இருந்துச்சு..என்ன விஷயம்..”

“வீட்டுக்கு லேப்டாப், மிக்சி, கிரைண்டர் வரப்போகுதுல்ல..அதுவும் ஓசியா..”

“அட கோவாலு..எதுவும் லாட்டரி கிடைச்சிருக்கா..சொல்லவே இல்லை..”

“போடாங்க..திமுக தேர்தல் அறிக்கைய பார்த்தேயில்ல..கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப், வீட்டுக்கு மிக்சி கிரைண்டர்..அமர்க்கப்பளப்படுதுல்ல..”

“அட கோவாலு..நீ எப்படா கல்லூரி மாணவனானே??”

“நம்ம ஏரியா கவுன்சிலர புடிச்சா, நம்மளும் கல்லூரி மாணவந்தான்..”

“அட நாதாரி..ஏதோ ஏழைபாழைங்க வாங்கிட்டு போனாலும் பரவாயில்லை..அமெரிக்காவுல 2 லட்சம் வாங்குற உனக்கு எதுக்குடா…”

“ராசா..சார்..எல்லாத்தையும் பீரியா கொடுக்குறோமுன்னு கலைஞர் சொல்லிட்டாரே..இனிமே மாச சம்பளத்தை வைச்சு என்னசார் பண்ணுறது..”

“உன்னை கிறுக்கு சுப்பையான்னு சொல்லுறது கரெக்டாதாண்டா இருக்கு..இன்னும் அம்மா தேர்தல் அறிக்கை வரலையில்ல..அதுவரைக்கும் பொறு..”

“இனிமேல் என்னசார் பீரியா கொடுக்கமுடியும்..அதான் கலைஞர் எல்லாத்தையும் ப்ரீயா கொடுக்குறேன்னு சொல்லிட்டாரே..”

“டே சுப்பையா..”

“கால் மீ கிறுக்கு சுப்பையா..”

“ரொம்ப முக்கியம்..கொடுக்குறதுக்கு பொருளாடா இல்லை..நீ வாடகை வீட்டுல இருந்தா , உனக்கு அந்த வீடு ப்ரீ..ஓனர் பய ஒன்னும் கேக்கமுடியாது..”

“சார்..அப்படியே அமேரிக்கால நான் தங்கியிருக்குற வீட்டுக்கும்..”

“அது, ஒபாமா அடுத்த தேர்தல் அறிக்கைல வரும்..”

“அப்புறம்..”

“அப்புறம்..இப்ப எல்லாம் பொதுமக்கள் கஷ்டப்பட்டு காலையில எழுந்து வேலைக்கு போய் கஷ்டப்படுறாங்கல்ல..இனிமேல் அதுவேண்டாம்..”

“எப்படி..”

“ஒவ்வொரு வீடா அரசு ஊழியர்கள் வந்து மூணுவேளையும் சோறு பொங்கி குழம்பு வைச்சு, கையில செலவுக்கு 200 ரூபா கொடுத்துட்டு போவாங்க..”

“ராசா சார்..என்னதான் சோறு பொங்கி கொடுத்தாலும், எழுந்து கைய கழுவிட்டு சாப்பிடணுமுல்ல..சிரமமா இருக்காதா..”

“அதுக்குதான், போட்டிருக்காங்க இன்னொரு திட்டம்..”சோத்துக்கு நாமே” திட்டம்..யாரும் எழுந்து சாப்பிடவே வேண்டியதுல்ல..அப்படியே உக்கார்ந்தா போதும்..சமைக்கிற ஊழியர்களே, அப்படியே ஊட்டிவிட்டு, பாட்டி வடை சுடுற கதை சொல்லி உன்னை தூங்க வைச்சிட்டுதான் போவாங்க..”

உடனே கிறுக்கு சுப்பையா அழ ஆரம்பிக்கிறான்..

“ஏண்டா சுப்பையா அழுகுறா..”

(அழுதுகிட்டே..)

“கால் மீ கிறுக்கு..”

“அடி செருப்பால…பெரிய டாக்டர் பட்டம்..எதுக்குடா அழுவுற..”

“இந்த நேரம் பார்த்து, ஊரில இல்லாம போயிட்டேனே சார்..இந்நேரம் ஊரில இருந்தா, இப்படி அமெரிக்கால இருந்து கஷ்டப்பட்டிருப்பேனா..போங்க சார்..”

21 comments:

Anonymous said...

super

soms
vkd

தினேஷ் said...

படிச்சு படிச்சு சிரிச்சு சிரிச்சு வயிறு வழி வந்தது தான் மிச்சம்... அசத்தல் தான் போங்க...

(தேர்தல் அறிக்கை படிச்சிட்டு வசூல்ராஜா கமல் வசனம் தான் ஞாபகம் வருது) டேய் கலையலங்காரா... மறுபடியும் எல்லாத்தையும் மாத்தி DMK ஆட்சிக்கு ரெடி பண்ணுங்கடா...

தமிழ்வாசி - Prakash said...

பிரி...பிரி...பிரி...பிரிச்சுட்டாங்கப்பா...


எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு

ramalingam said...

//இனிமே மாச சம்பளத்தை வைச்சு என்னசார் பண்ணுறது//
அது இனி எதுக்கு? அதான் பாலாறும் தேனாறும் ஓடப் போகுதே. இந்தத் தடவை கதாநாயகி காமெடி நாயகி ஆகப் போகிறாள்.

யோகா.எஸ் said...

சரி,ஊட்டி விடுவாங்க!வாயி அலம்பணுமே??????????????

பாரத்... பாரதி... said...

//அரசியல்வாதிகள் பத்தி எழுதுங்க..அவிங்களுக்கு அரசியல்வாதிகள் எவ்வளவோ மேல்..நக்கல் விட்டாலும் சிரிச்சுட்டு போய்கிட்டே இருப்பாயிங்க..//

ஆட்டோ அனுப்புவாங்க பின்னாடியே..

பாரத்... பாரதி... said...

//“டே சுப்பையா..”

“கால் மீ கிறுக்கு சுப்பையா..”//

Super...

jothi said...

//“அதுக்குதான், போட்டிருக்காங்க இன்னொரு திட்டம்..”சோத்துக்கு நாமே” திட்டம்..யாரும் எழுந்து சாப்பிடவே வேண்டியதுல்ல..அப்படியே உக்கார்ந்தா போதும்..சமைக்கிற ஊழியர்களே, அப்படியே ஊட்டிவிட்டு, பாட்டி வடை சுடுற கதை சொல்லி உன்னை தூங்க வைச்சிட்டுதான் போவாங்க..//

என்ன‌ங்க‌ கொஞ்ச‌ம் முன்னாடி போட்டிருக்க‌ கூடாதா?? தேர்த‌ல் அறிக்கைல‌ வ‌ந்திருக்கும்ல‌,..

அவிய்ங்க ராசா said...

நன்றி அனானி நண்பா

நன்றி தினேஷ்..அம்மா பாடுதான் இப்ப திண்டாட்டம்

நன்றி தமிழ்வாசி

நன்றி ராமலிங்கம்...எனக்கென்னமோ, அம்மா தேர்தல் அறிக்கைய வைச்சுதான் எதையும் முடிவு பண்ண முடியும்னு தோணுது

நன்றி பாரதி..அப்படின்னா தமிழ்நாட்டுல பாதி பத்திரிக்கைகாரங்க அப்பல்லோவிலதான் இருக்கணும்,,))

நன்றி ஜோதி..மிஸ் ஆயிடுச்சே..))

மதுரை சரவணன் said...

நல்ல விமர்சனம்..வாழ்த்துக்கள்

Anonymous said...

en peru stalin annae.ammavukku antha 2g matterla koncham koluppu yeri, vetri nichayamnu 160 thoguthila pottinu arivichuduchu... nethu thaan therinchirukkum (naama koncham overa poromonu)... athaan yaarum poi therthalku manu kodukaatheenganu arikkai vittirukku... nammaalu vantha malai ponaa ---nu pusvanam vittirukkar! paarpom makkalukku ஞானம் vanthirukkanu!

ஆகாயமனிதன்.. said...

தேர்தல் அறிக்கை 2011 கதாநாயகி (கதாநாயகன்)
http://aagaayamanithan.blogspot.com/2011/03/2011.html

Anonymous said...

அரசியல் நல்ல இருக்கு... நமக்கு தான் கிறுக்கு

ttpian said...

தேரோடும் சென்னையிலே
தேனொழுகும் சென்னையிலே
ஆரடித்தாரோ?
ஆரடித்தாரோ?

அத்திரி said...

;)))))))))) நீங்க சொல்ற எல்லாமே ப்ரீயா கொடுத்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை

அவிய்ங்க ராசா said...

Thanks Saravanan, Stalin, Puli, manithan,ttpian,atthiro..

Anonymous said...

அப்படியே பிரதி எடுத்து தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கு கொடுத்தாலும் அந்த (தமிழ் ரத்தங்களத்தான் சொல்றேன்) பச்சைபுள்ளைங்க அய்யாமாருக்கும் அம்மாமாருக்கும் ஒட்டுபோட்டுட்டுத்தான் மறு வேலை பாக்கும்...

CrazyBugger said...

.அமெரிக்காவுல 2 லட்சம் வாங்குற உனக்கு எதுக்குடா…”

- Dey note panungappa.. note panungappa.. pinraanpaa.. pinraanpaa..

தமிழ்ப்பறவை said...

:) :)))))

நண்பன் said...

nice comments, people do not think, how he can give this much for free... Again all the prices of mandatory things(like gas,Petrol, vegetables) will go high... But the truth is, the people who gets this free only will go to voting booth. Most of educated fellows will not put their votes.

நர்மதன் said...

இதையும் பாருங்க

கவுண்டமணியின் சில மணியோசைகள்

Post a Comment