Saturday, 5 March, 2011

திமுக கூட்டணியில் காங்கிரஸ் வெளியேற்றம் – கோவாலு அதிர்ச்சி

இன்னைக்கு கோவாலு செம டென்சனா வந்தாண்ணே..

“ராசா..ராசா..எங்கடா இருக்க..”

“மனிதன் ஒரு சமூக குட்டி.இல்ல..குரங்கு..அய்யோ..மிருகம்..கரெக்ட்டு..விலங்குன்னு கூட சொல்லலாம்..”

“ராசா..என்னடா பண்ணுற..நாலாம் வகுப்பு புத்தகம் எதுவும் படிக்கிறீயா,,,”

“சீ..சீ..இல்லடா..என்னை சீண்டுறவங்களுக்கு பதில் சொல்லிக்கிட்டு இருக்கேன்..”

“அதுக்கு ஏண்டா பாவம் சமூகத்தை புடிச்சு இழுக்குற..அது என்ன பாவம் பண்ணுச்சு..”

“இல்ல..என்னை சீண்டினா..அப்படிங்குறதுக்கு ஒரு நாலு பாராகிராப் தயார் பண்ணிக்கிட்டு இருக்கேன்..”

“ஆமா..இவரு பெரிய கவர்ச்சி நடிகை..உன்னை சீண்டுறாயிங்க..நானே ரொம்ப டென்சனா வந்துக்கிட்டு இருக்கேன்…”

“ஏண்டா கோவாலு..என்னடா ஆச்சு……நடுநிசிநாய்கள் எதுவும் துரத்துச்சா..”

“ஐயோ..இல்லடா ராசா..”

“பின்ன..??”

“காங்கிரசு கூட்டணியில் இருந்து திமுக வெளியே போயிடுச்சாம்டா..”

“டே..கோவாலு நல்லா சொல்லு..தி.மு.க கூட்டணியில் இருந்து காங்கிரசு வெளியே ஓடிடுச்சா..இல்லாட்டி, காங்கிரசு கூட்டணியில் இருந்து திமுக வெளியே ஓடிடுச்சா..”

“ராசா..பூவை, பூவுன்னு சொல்லலாம், புய்ப்பம்னு சொல்லலாம், இல்லாட்டி நீ சொன்ன மாதிரியும்..”

“கோவாலு..கொலைவெறிய கிளப்பாத..நீதான் புரச்சித்தலைவிக்கு தொண்டனாச்சேடா..உனக்கு சந்தோசமாத்தானடா இருக்கும்..நீ ஏண்டா டென்சனாகுற..”

“போடாங்க..ஏதோ காங்கிரசு தி.முக பக்கம் இருக்குறதால, நாங்க ஈசியா ஜெயிச்சுடுவோம்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்..இப்ப அந்த நினைப்புல மண் விழுந்துரும் போல இருக்கேடா..”

“அதுதான் மதுரை சிங்கம் விசயகாந்து இருக்காருலடா..”

“அதுதாண்டா எங்க பெரும் கவலையே..”

“ஏண்டா..உங்க தலைவி, குடிகாரன்னு சொன்னதை நிரூபிக்கிற மாதிரி. பாட்டிலும் கையுமா பிரச்சாரத்திற்கு வருவாரா..”

“டே..அததான் நாங்க எப்பவுமே மறந்துட்டோம்டா..இப்பதான் நாங்க கூட்டணி வைச்சுக்கிட்டோம்ல..”

“இதெல்லாம் உடனே மறந்துருங்கடா..ஆனா, ஆட்சிக்கு வந்தவுடனே, மக்களை மறந்துருடாதீங்கடா..ஆமா..அப்பவே கேக்கணும்னு நினைச்சேன்..தொகுதி பங்கீடு விசயமா, உங்க மதுரை தங்கம், தலைவிய பார்த்து பேசப்போனப்ப , மதுரை தங்கத்தோட , இளைஞர் அணிச் செயலாளருன்னு யாரோ இருந்தாரே..யாருடா..”

“அதுதாண்டா..இளைஞர்களின் வெடிவெள்ளி..சாரி..விடிவெள்ளி..சுதீஷ்….தலைவரோ மச்சான்..”

“அடப்பாவி..கலைஞர் குடும்ப அரசியல் நடத்துறாருன்னு சொல்லித்தாண்டா, எதுக்குறீங்க..இதுக்கு பேரு என்னடா..”

“அது..அது வந்து..”

“சரி..அதை விடு..இன்னமும் அரசியலுக்கு வருவாருன்னு, நீ பல்லு விளக்காம கூட காத்துக்கிட்டு இருக்குற, உங்க ரசினிகாந்து என்னடா பேசாம இருக்காரு..”

“அவருதான் ராணா படப்பிடிப்புல பிசியால இருக்காரே..”

“ஏதோ, எல்லாத்தையும் கூப்பிட்டு விருந்து வைக்கிரேன்னெல்லாம் சொன்னாரேடா..செம விருந்து போல..”

“கடுப்பேத்தாதடா ராசா..தலைவருக்கு எத எப்படி, என்னைக்கு பண்ணனும்னு நல்லா தெரியும்.,.சரியான நேரத்துல வாய்சு கொடுப்பாரு பாரேன்..”

“எது..அம்மா ஜெயிச்சப்பிறகு, “தைரியலட்சுமிக்கு வாழ்த்துக்கள்” ன்னு மேடையில பேசப்போறாரே..அத சொல்லுறியா..”

“அதெல்லாம், அரசியல் சாணக்கியத்தனம்டா..உனக்கு என்ன தெரியும்..”

“நல்லா தெரியும்டா..நீ ஒவ்வொரு படரீலீசு அன்னைக்கு கட் அவுட்டுக்கு பால் ஊத்திக்கிட்டு வெயிட் பண்ணிக்கிட்டே இரு..அவரும் “ஆக்சுவலி..காதல் அணுக்கள் பாட்டுக்கு டான்ஸ் மூவ்மெண்ட் ரொம்ப டப்” ன்னு சன் டிவியில பேட்டி கொடுப்பாரு..நாடு விளங்கிரும்..”

“ஆமா..இப்ப அப்படியே நாடு பூத்துக்குலுங்குற மாதிரி…அதுதான்..2G, 3G ன்னு கோடி, கோடியா பிச்சுக்கிட்டு போகுதே..அப்புறம் என்ன”

“சரியா சொன்னடா..கோவாலு..யாரு வந்தா நாட்டுக்கு நல்லதுடா..”

“இளைய தளபதி டாக்குடரு விசய்…”

“டே..கோவாலு..கொலைவெறியில இருக்கேன்..”

“ம்….இவிங்களுக்கெல்லாம் மாற்றா..யாராவது ஒருத்தரு..ம்..யாரு வரலாம்….ஐ..கண்டுபிடிச்சுட்டேன்..ஏன் பதிவர்களெல்லாம் சேர்ந்து ஒரு கட்சி ஆரம்பிக்ககூடாது..”

“கோவாலு..10 பேரு சேர்ந்து, சங்கமே ஆரம்பிக்க முடியல..கட்சி ஆரம்பிக்கவா..சுத்தம்…..சரி..இந்த தேர்தலுல யாருக்கு ஓட்டுபோடபோற..??”

“இரட்டை இலைக்குதான்..”

“மவனே..அம்மா ஆண்டிபட்டில இருந்து கிளம்புறப்ப, கிண்டியில டிராபிக்கை நிறுத்திருவாய்ங்க..இப்பவே ரெடியாகிக்க…”

19 comments:

akbar said...

KALAKKAL :))))))))))
ORU MATRAM THEVAI. :)

அத்திரி said...

//“மவனே..அம்மா ஆண்டிபட்டில இருந்து கிளம்புறப்ப, கிண்டியில டிராபிக்கை நிறுத்திருவாய்ங்க..இப்பவே ரெடியாகிக்க…”.//

:))))))))))))))))))))))))))

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

:)

ஆர்.கே.சதீஷ்குமார் said...

போடாங்க..ஏதோ காங்கிரசு தி.முக பக்கம் இருக்குறதால, நாங்க ஈசியா ஜெயிச்சுடுவோம்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்..//
கவலைபடாதேய்ம் ஓய்..ராத்திரி ஃப்ளைட்ல குலாம் நபி வர்றாராம்...சமாதான தூது..30 கொடுத்தாலும் ஓகே வாம்..கலைஞரின் அரசியல் பார்த்து டில்லிக்கு டவுசர் கிழிஞ்சிருச்சாம்

தமிழ்வாசி - Prakash said...

நாளைக்கு காங்கிரசும், விஜயகாந்த்தும் கூட்டணியாம், தெரியுமா?

எனது வலைபூவில் இன்று:
ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்

அஹோரி said...

கனி க்கு வாரன்ட்ன்னு கேள்வி பட்டது கருணாநிதிக்கு பொத்துகிச்சு.

tharuthalai said...

இனிமேல் என்ன வேணும்னாலும் நடக்கட்டும். கணி களி திங்க போகட்டும். தயாளு தற்கொலை செய்துகொள்ளட்டும். அதெல்லாம் பாவத்தின் சம்பளமாக இருக்கட்டும்.

அனால், இந்த காங்கிரஸ் கபோதிகளை கடைசிவரை இழுத்து வந்து முச்சந்தியில் வைத்து நச்சு நச்சுனு குத்தி இனிமேல் தமிழகத்தில் தலை எடுக்க முடியாதபடி கறுவறுத்து கழுவேற்றும் முடிவை எடுத்த தி.மு.க. வுக்கு நன்றி! நன்றி! நன்றி!

-------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் -மார் '2011)

Anonymous said...

Santhadi sakkula annan Jackie ya pottu thakkunathuggu enthu vanmaiyana kandanangal.....

சாமக்கோடங்கி said...

உரலுக்கு ஒரு புறம் மட்டும் இடி.. மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி.. நாம எல்லாம் மத்தளங்கள்..

தங்கராஜா கீர்த்திராஜ் said...

பாஸ் கிளப்புங்க கிளப்புங்க ....என்சாய்...
கலைஞர் அய்யா ரெண்டாவது தரமும் களி திங்க ஆசையா...ஸ்பெக்ட்ரம் லட்டு 1.70 கோடிதான்...

அவிய்ங்க ராசா said...

////////////////////////////
akbar said...
KALAKKAL :))))))))))
ORU MATRAM THEVAI. :)
6 March 2011 2:23 AM
////////////////////////////
நன்றி அக்பர்..கண்டிப்பா..

அவிய்ங்க ராசா said...

///////////////////////////////
அத்திரி said...
//“மவனே..அம்மா ஆண்டிபட்டில இருந்து கிளம்புறப்ப, கிண்டியில டிராபிக்கை நிறுத்திருவாய்ங்க..இப்பவே ரெடியாகிக்க…”.//

:))))))))))))))))))))))))))
6 March 2011 2:31 AM
ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...
:)
6 March 2011 2:36 AM
//////////////////////////////
வருகைக்கு நன்றி அத்திரி, செந்தில்

அவிய்ங்க ராசா said...

////////////////////////////////
ஆர்.கே.சதீஷ்குமார் said...
போடாங்க..ஏதோ காங்கிரசு தி.முக பக்கம் இருக்குறதால, நாங்க ஈசியா ஜெயிச்சுடுவோம்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்..//
கவலைபடாதேய்ம் ஓய்..ராத்திரி ஃப்ளைட்ல குலாம் நபி வர்றாராம்...சமாதான தூது..30 கொடுத்தாலும் ஓகே வாம்..கலைஞரின் அரசியல் பார்த்து டில்லிக்கு டவுசர் கிழிஞ்சிருச்சாம்
6 March 2011 2:55 AM
/////////////////////////////////
இந்த எலக்சனுக்கு அப்பால தமிழ்நாட்டுல காங்கிரஸ் கஷ்டம்தாண்ணே..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////////
தமிழ்வாசி - Prakash said...
நாளைக்கு காங்கிரசும், விஜயகாந்த்தும் கூட்டணியாம், தெரியுமா?

எனது வலைபூவில் இன்று:
ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்
6 March 2011 4:54 AM
அஹோரி said...
கனி க்கு வாரன்ட்ன்னு கேள்வி பட்டது கருணாநிதிக்கு பொத்துகிச்சு.
6 March 2011 7:07 AM
////////////////////////////////
ஆஹா..தமிழ்வாசி..இது என்ன புதுசா இருக்கு..
அஹோரி..தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்..))

அவிய்ங்க ராசா said...

///////////////////////////
tharuthalai said...
இனிமேல் என்ன வேணும்னாலும் நடக்கட்டும். கணி களி திங்க போகட்டும். தயாளு தற்கொலை செய்துகொள்ளட்டும். அதெல்லாம் பாவத்தின் சம்பளமாக இருக்கட்டும்.

அனால், இந்த காங்கிரஸ் கபோதிகளை கடைசிவரை இழுத்து வந்து முச்சந்தியில் வைத்து நச்சு நச்சுனு குத்தி இனிமேல் தமிழகத்தில் தலை எடுக்க முடியாதபடி கறுவறுத்து கழுவேற்றும் முடிவை எடுத்த தி.மு.க. வுக்கு நன்றி! நன்றி! நன்றி!

-------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் -மார் '2011)
6 March 2011 7:17 AM
/////////////////////////////
அண்ணே..எந்தப்பாவமும் நமக்கு வேணாமுன்னே..)

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
Anonymous said...
Santhadi sakkula annan Jackie ya pottu thakkunathuggu enthu vanmaiyana kandanangal.....
6 March 2011 10:39 AM
////////////////////////////
ஆஹா...)))

அவிய்ங்க ராசா said...

////////////////////////////
சாமக்கோடங்கி said...
உரலுக்கு ஒரு புறம் மட்டும் இடி.. மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி.. நாம எல்லாம் மத்தளங்கள்..
6 March 2011 11:04 AM
தங்கராஜா கீர்த்திராஜ் said...
பாஸ் கிளப்புங்க கிளப்புங்க ....என்சாய்...
கலைஞர் அய்யா ரெண்டாவது தரமும் களி திங்க ஆசையா...ஸ்பெக்ட்ரம் லட்டு 1.70 கோடிதான்...
6 March 2011 12:21 PM
///////////////////////////////
நம்ம என்னைக்குமே அப்படித்தான் கோடாங்கி அண்ணே..
சூப்பரு தங்கராஜா..))

ஆனந்தி.. said...

:))

taaru said...

//ஆண்டிபட்டில இருந்து கிளம்புறப்ப, கிண்டியில டிராபிக்கை நிறுத்திருவாய்ங்க//
எங்க ஊர்ல இருந்து கிண்டிக்கு ஸ்ட்ரைட் ரோடு போட்டா மக்கள் திலகம், blog spot புலி, சோழை பெற்றெடுத்த முரட்டு சிங்கம்.. வாழ்க...வாழ்க... [இத எப்பிடியாவது அ.னா ஆளுகளுக்கு படுற மாதிரி போட்ருன்னே...!!!! :):):) பின் விளைவுகளுக்கு கொம்பெனி பொறுப்பு ஏற்காது?]

Post a Comment