Sunday, 13 March, 2011

ஓ ஜப்பான்....

முந்தைய கம்பெனியில் நான் வேலை செய்தபோது, என்னுடைய பிராஜெக்டில், ஜப்பானிய நண்பர் ஒருவர் உண்டு. முதலில் சற்று சங்கோஜமாக பழகிய எனக்கு, பிற்காலங்களில் மிகவும் நெருங்கிய நண்பராகிப்போனார். நட்பைக் காட்டிலும், நான் அவரிடம் வியந்த ஒன்று, வேலையில் ஒன்றிப்புத்தன்மையும், நேரம்தவறாமையும். “அது எப்படியா..24 மணிநேரமும் வேலையைப் பற்றியே சிந்தனை” என்று கிண்டலடித்தால், பதிலுக்கு புன்னகையே தருவார்.

ஒருமுறை அவர் ஒரு பிரசென்டேசன் கொடுக்கவேண்டும். காலை 9 மணி என்று நேரம் ஒதுக்கப்பட்டது. நாம்தான் என்றைக்கு அலுவலகத்திற்கு 9 மணிக்கு செல்கிறோம்.. சர்வசாதரணமாக 9:30 மணிக்கு கான்ப்ரன்ஸ் ஹாலுக்கு செல்கிறேன். மனுசன் 08:30 மணிக்கெல்லாம் வந்து பிரசெண்டேஷனை ரெடி பண்ணிவைத்துவிட்டு, தனியாக ப்ராக்டிஸ் செய்துபார்க்கிறார். என்ன ஆச்சரியம் என்றால், அந்த அறையில் யாருமே இல்லை.

“ஏன்யா..ரொம்பதான் பண்ணுற..09:00 மணிக்குன்னா, 09:00 மணிக்கு ஆரம்பிக்கணுமா..முன்னபின்ன இருக்கலாம்ல..” என்றேன்..

சிரித்துக்கொண்டே சொன்னார்..

“நண்பா..என் வேலை 9 மணிக்கு ப்ரசென்டேஷன் ஆரம்பிப்பது..அதை செய்யாவிட்டால், நான் பார்க்கும் வேலைக்கு துரோகம் செய்வதுபோல்..நான் துரோகியாக வாழ விரும்பவில்லை..”

செருப்பால் அடித்தது மாதிரி இருந்தது. அவ்வளவு டெடிகேஷன். நான் அந்த கம்பெனியை விட்டு வந்தாலும், அடிக்கடி அவரிடம் தொலைபேசியில் உரையாடுவது வழக்கம். முதலில் போனை எடுத்தவுடன், வணக்கம் சொல்லிவிட்டு முதலில் அவர் கேட்கும் கேள்வி “வேலை எப்படி போகுது..” சிலநேரங்களில் அவருடன் பேசும்போது, நானெல்லாம் இன்னும் வேலை செய்ய ஆரம்பிக்கவில்லையோ என்று தோணும். எப்போதும் சுறுசுறுப்பு. ஒழுங்கு, நேரம்தவறாமை..

இரண்டு நாட்களுக்கு முந்தி, ஜப்பானில் சுனாமி என்று கேள்விபட்டவுடன் பெரியதாக அலட்டிக்கொள்ளவில்லை. நம்ம ஊருக்குதான் நிலநடுக்கம் சுனாமி என்பது பெரிய செய்தி. ஜப்பானில் இது அவர்களுக்கு வருடம் ஒரு பருவம் மாதிரி. எல்லாவற்றிற்கும் தயாராக இருப்பார்கள். நிலநடுக்கம் முடிந்தவுடன், அவர் அவர்கள், தங்கள் வேலையை பார்க்க போய்விடுவார்கள். அப்படி ஒன்றுதான் என நினைத்து அந்த வீடியோவைப் பார்த்தபோது, அதிர்ந்து போனேன்.

முதலில் லாங்க்ஷாட்டில் ஆரம்பித்த, அந்த வீடியோவில் , ஏதோ குப்பையை தண்ணீர் அடித்து வருவதுபோல் எண்ணினேன். ஆனால் அருகில் செல்ல, செல்ல ஒரு நிமிடம் விக்கித்துப்போனன், அனைத்தும் வீடுகள் மற்றும் கார்கள். சுனாமி கோரத்தாண்டவம் ஆடி, அனைத்தையும் இழுத்துக்கொண்டு, ஒரு கப்பலை அப்படியே இழுத்து சென்றபோது, எந்த மனிதனும் கலங்காமல் இருக்க மாட்டான்.

எவ்வளவு உயிர்கள்…எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும்..நல்ல வேலை, நல்ல வீடு, அமைதியான குடும்பம்..அனைத்தும் ஒரு நொடியில் தகர்ந்து போயிற்றே. சுனாமி அழித்து சென்றது, உயிரில்லா வீடுகளையும், வாகனங்களையும் மட்டுமல்ல, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் அமைதியையும், கனவுகளையும்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல், ஜப்பானில் உள்ள அணு உலைகள் இரண்டு பாதிக்கப்பட்டு கதிர்வீச்சை வெளியிட ஆரம்பித்துள்ளன. அவற்றை தற்காலிகமாக கட்டுப்படுத்துவிட்டாலும், ஜப்பானிய அரசு கொஞ்சம் கலங்கித்தான் போனது. அனைத்து நிவாரண நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன், நம்ம ஊர் அரசியல்வாதிகளின் வார்த்தை அளவில் இல்லாமல், செயல் அளவில்.

இரண்டால் உலகப்போரில், அணுகுண்டு வீசி தாக்கப்பட்டபோது, அடைந்த மனநிலையே இப்போது ஜப்பானியர்களும் இருப்பதை உணரமுடிகிறது. கடின உழைப்பால் ஒரு தேசத்தையே கட்டி எழுப்பி, தொழில்நுட்பதுறையில், இன்று முதலாவதாக வந்த ஒரு தேசத்திற்கு, இது ஒரு சின்ன பின்னடைவாக இருக்குமே தவிர, கதை முடிந்தது என்று கனவிலும் வலுவிலக்க மாட்டார்கள்.


சுனாமி பற்றிய வீடியோ பார்த்தபோது, முதலில் எனக்கு ஞாபகம் வந்த என் ஜப்பானிய நண்பருக்கு உடனே தொலைபேசினேன்..

குரல் சற்று கலங்கித்தான் இருந்தது..

“விஷயம் கேள்விப்பட்டேன்..என்னுடைய அனுதாபங்கள்..ஊரில் எல்லாரும் நலமா..??”

“ராசா..எங்கள் குடும்பம் தற்போது அங்கு இல்லாவிட்டாலும், உறவினர்கள் நிறைய உண்டு. இரண்டு குடும்பங்கள், சுனாமி தண்ணீரில் அடித்து சென்றதாக கேள்விப்பட்டேன். அவர்கள் எனக்கு நெருங்கிய சொந்தங்கள்..”

பேசும்போது அவருக்கு அழுகை மீறிக்கொண்டு வந்தது..என்னால் அவருக்கு என்ன சமாதனம் சொல்லமுடியவில்லை….சிறிதுநேர மௌனத்திற்கு பின்பு அவரே சொன்னார்..

“ராசா..இன்னும் 5 நிமிடத்தில் ஒரு வேலையை செய்து முடிப்பதாக உறுதி அளித்துள்ளேன்..தொடர்ந்து பேசமுடியாததற்கு வருத்தம். பிறகு பேசுகிறேன்..”

லைன் கட் ஆகிப்போனது..

22 comments:

Katz said...

நாமெல்லாம் சுனாமி வராமலே செத்து போகலாம்.

FOOD said...

ஏன் ஜப்பான் முன்னேறுகிறது? இவர் போன்றோர்தான் காரணம்.
உங்கள் நண்பரின் உறவினர்
குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Anonymous said...

“ராசா..இன்னும் 5 நிமிடத்தில் ஒரு வேலையை செய்து முடிப்பதாக உறுதி அளித்துள்ளேன்..தொடர்ந்து பேசமுடியாததற்கு வருத்தம். பிறகு பேசுகிறேன்..”

Ingathan nikkiran japankaran... 100% avarkal jeithu kattuvarkal.

அவிய்ங்க ராசா said...

////////////////////////////
Katz said...
நாமெல்லாம் சுனாமி வராமலே செத்து போகலாம்.
13 March 2011 5:23 PM
//////////////////////////////
:( வருகைக்கு நன்றி..

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
FOOD said...
ஏன் ஜப்பான் முன்னேறுகிறது? இவர் போன்றோர்தான் காரணம்.
உங்கள் நண்பரின் உறவினர்
குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
13 March 2011 10:08 P
//////////////////////////
நன்றி நண்பா..

அவிய்ங்க ராசா said...

//////////////////////////////
Anonymous said...
“ராசா..இன்னும் 5 நிமிடத்தில் ஒரு வேலையை செய்து முடிப்பதாக உறுதி அளித்துள்ளேன்..தொடர்ந்து பேசமுடியாததற்கு வருத்தம். பிறகு பேசுகிறேன்..”

Ingathan nikkiran japankaran... 100% avarkal jeithu kattuvarkal.
13 March 2011 10:56 PM
/////////////////////////////////
மிகச்சரியான வார்த்தை..

asiya omar said...

நல்ல இடுகை,ஆழ்ந்த அனுதாபங்கள்...

Suresh said...

A touching article.

Aaryan66 said...

முடிந்தால் அவர் புகைப்படம் போடுங்கள்.

கே. ஆர்.விஜயன் said...

எவ்வளவு உயிர்கள்…எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும்..நல்ல வேலை, நல்ல வீடு, அமைதியான குடும்பம்..அனைத்தும் ஒரு நொடியில் தகர்ந்து போயிற்றே. சுனாமி அழித்து சென்றது, உயிரில்லா வீடுகளையும், வாகனங்களையும் மட்டுமல்ல, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் அமைதியையும், கனவுகளையும்///

சரியாக சொன்னீர்கள். அந்த உழைப்பாளிகளின் வாழ்க்கைப்பறிக்கப்பட்டதில் மனம் அதிகம் வேதனை அடைகிறது. நல்லவர்களைதான் கடவுள் அதிகமாக சோதிப்பாரோ.

நண்பன் said...

நியூஸ்-இல் பார்த்தபோது உங்க மனநிலை தான் எனக்கும்.. அவர்களின் உழைப்பை நாம் எப்போதும் வேடிக்கைதான் பார்போம் .. நாம் உழைக்க ஆரம்பித்து விட்டால் இந்தியா என்றோ முதல் வரிசையில் உட்கார்ந்து இருக்கும்.
நம் ஜப்பானிய மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Venu said...

நண்பா நானும் ஒரு ஜப்பான்காரனோட கம்பெனிலதான் வேலை செயுறேன் ஆனா கம்பெனி லாஒஸ்ல இருக்கு. ஒரு கொடுமையான விஷயம் என்னோட மொதலாளி செண்டாய் சிட்டி இருக்காரு. இதுவார அவரோட ஃபோன் நம்பர் வேலை செய்யல. மிகவும் வருததுடன்.......

Anonymous said...

ellam sarithaan naama eppo thiruntha porom??

bandhu said...

சொந்த சோகத்திற்கு நேரம் ஒதுக்காமல் வேலை பார்ப்பதின் அர்த்தம் எனக்கு புரியவில்லை. அதனால் அதை அப்ரிசியேட் செய்ய முடியவில்லை. என் பாஸ் சொன்னதில் எனக்கு பிடித்தது, This is just a job. not our life!

வசந்தா நடேசன் said...

//Katz said...
நாமெல்லாம் சுனாமி வராமலே செத்து போகலாம்.
13 March 2011 5:23 PM//

உண்மை தான்.. நான் இதை வழி மொழிகிறேன்.

angelin said...

மனதை தொட்ட பதிவு .
i pray for those suffering people.

Anonymous said...

Dei rasa... Aavunna nenjai nakiran ya..

Jai Jackie aa paru unnakuu pottiya kannerala kalai kaluveerkaru...

அவிய்ங்க ராசா said...

நன்றி ஓமர், சுரேஷ்
நன்றி ஆரியன்..அவர் புகைப்படம் என்னிடம் இல்லை. முயற்சிக்கிறேன்.
நன்றி விஜயன், நண்பன், வேணு, அனானி,
நன்றி பாந்து..கண்டிப்பாக ஒத்துக்கொள்கிறேன். ஆனால், வேலையில் டெடிகேஷன், நேரம்தவறாமை பற்றியே எழுதியதாக கருதுகிறேன்.
நன்றி வசந்தா
நன்றி ஏஞ்சலின்
நன்றி அனானி..

Venkateshan.G said...

It is a tragedy never forget from the human history. We pray for them.

புதிய பாமரன் said...

வைகோ பற்றிய கட்டுரையை முதன் முதல் படித்தேன்.
இந்தக் கட்டுரை நான் உமது வலைப்பூவில் படிக்கும்
இரண்டாம் கட்டுரை.

அந்த ஜப்பானிய உழைப்பாளி சொன்னதை கட்டுரையில்
முத்தாய்ப்பாய் வைத்ததுதான், இக்கட்டுரை உமக்குக் கொடுக்கும்
அதிகபட்ச மதிப்பீடு.

வில்லவன் என்றொரு பதிவரைப் போலவே உமது எழுத்தும்
மரியாதை செய்ய வைக்கிறது.

மிகச் சுளுவான, இலகுவான, புரிந்துகொள்ளக்கூடிய எழுதுமுறை!

அவிய்ங்க ராசா said...

நன்றி வெங்கடேசன் சார்..
நன்றி புதிய பாமரன்..

Siva said...

This dedication will make Japan to come out of this tragedy.

Visit http://itoverflow.blogspot.com

Post a Comment