Thursday, 17 March, 2011

வைகோ – விடுறா, விடுறா சூனா பானா

(பட உதவி நன்றி – நண்பர் கார்க்கி)

மானமிகு புரச்சிப்புயல் வைகோ ஐயா அவர்களுக்கு,

ஐயா, அது என்னமோ தெரியலைங்கயா, அந்த “மானமிகு” ன்னு டைப்படிக்கும்போது மட்டும் கை நடுங்குது.. சரி கழுத மானம் கிடக்குது விடுங்க, எழுத வந்த விசயத்துக்கு வர்றேன்..அது வந்துயா, ரொம்ப நாளா, உங்களுக்கு ஒரு கடுதாசி எழுதணும்னு ஆசைய்யா..இன்னைக்குதான் டைம் கிடைச்சிச்சு..

ஒரு 12 ம் வகுப்பு படிக்கும்போது நினைக்கிறேன்யா..சரியா கூட ஞாபகம் இல்லை..வைகோ ன்னு ஒருத்தர் திமுகவை விட்டு வெளியே வந்துட்டாருன்னு பயபுள்ளைங்க சொன்னாய்ங்க. நமக்கெல்லாம் அப்ப அரசியலுங்குறது, காலையில பல்லு விளக்குற மாதிரி..காலையில பேப்பரை படிச்சுட்டு அப்படியே மறந்துருவோம். அப்பதான் ஒரு சேக்காளி, நீங்க பேசுன கேசட்டை கொடுத்தான். அப்பதான்யா முதமுறையா உங்க பேச்சை கேட்டேன்.

சத்தியமா சொல்லுறேன்யா..எந்திருச்சு நின்னு கைதட்டுனேன். என்னா ஒரு பேச்சு. அப்படியே நாடிநரம்பெல்லாம் சுண்டி இழுத்துச்சுயா..உங்க பேச்சுல காட்டிய பைபிள் மேற்கோளாகட்டும், உலக அரசியலைப் பற்றிய உங்க பார்வை ஆகட்டும், இளைஞர்களை கட்டி இழுத்து, அப்படியே உங்க பக்கம் தூக்கிட்டு போகும்னு, உங்க பேச்சை கேக்குற யாருன்னாலும் சத்தியம் செய்வாய்ங்க.

அன்னைக்குதான்யா, வாழ்க்கையில நான் முதல்முறையா ஏமாறுரோம்னு தெரியாம ஏமாந்தது.ரெண்டு மூணு நாள், தொடர்ச்சியா உங்க பேச்சுதான்யா எனக்கு சோறு, தூக்கம் எல்லாமே. ஒரு கையில புஸ்தகம், காதுக்கு உங்க பேச்சு..ம்..அதெல்லாம் சொர்க்கம்யா..

அடுத்து, அதிமுக தலைவியை எதிர்த்து நீங்க நடைபயணம் போனப்ப அப்படியே புல்லரிச்சு போச்சுய்யா..தமிழகத்துக்கு உண்மையிலேயே விடிவுகாலம் வந்துருச்சுன்னு சத்தம் போட்டு கத்தனப்ப பக்கத்து வீட்டுக்காரன் என்னை ஒருமாதிரியா பார்த்தான்யா….அப்பயே சுதாரிச்சுருக்கணும். விட்டுட்டேன்..பயபுள்ள இளரத்தம் பாருங்க..

திடிரீன்னு நண்பன் ஒருத்தன் “பாருடா உங்க தலைவரு கலைஞர் கூட சேர்ந்துக்கிட்டாருன்னு” கிண்டல் பண்ணப்ப, நான் நம்பவேயில்லையா..”போடா..மத்த அரசியல்வாதி மாதிரி இவரு இல்லைடா…இளைஞர்கள் இவரை நம்பிதாண்டா இருக்காங்க..அப்படியெல்லாம் பண்ண மாட்டாரு” ன்னு சொல்லிக்கிட்டே பேப்பரை புரட்டுறேன், தலை, லைட்டா கிர்ருன்னு சுத்துச்சுயா..நீங்க திமுக வைவிட்டு வந்தப்ப தீக்குளிச்ச அந்த புள்ளைங்க முகம்தான்யா எனக்கு ஞாபகத்துக்கு வந்துச்சு. அப்பவே எனக்கு பாதி நம்பிக்கை போச்சுயா..சரி, சந்தர்ப்பம் ன்னு நினைச்சு மனசை ஆத்திக்கிட்டா..இல்லை சந்தர்ப்பவாதம்னு தெரியுறதுக்கு நாலு, அஞ்சு வருசம் ஆச்சுயா..

அதுவும், எப்ப தெரியுமா,,,”நீங்க அருமை சகோதரி” ன்னு போன எலக்சனுல சொன்னப்ப..அது எப்படிங்கய்யா..உங்களை ஜெயிலுல போட்டதையெல்லாம் மறந்து, ஒருநிமிசத்துல கூட்டணி சேர்ந்து அருமை சகோதெரின்னு சிரிக்க முடியுது. உங்களை ஜெயிலுல போட்டப்ப, அடித்தொண்டை கிழிய “தமிழக அரசின் அராஜகம் ஒழிய” ன்னு கத்துன தொண்டனை ஒரு நிமிசம் நினைச்சு பார்த்தீங்களாயா..அதுசரி..எலக்சனுக்கு அப்புறம்..தொண்டனாவது, புடலங்காயாவது.. அதுவும் உங்க லட்சியமா நினைக்குற ஈழத்துக்கு எதிரான நிலைப்பாட்டோட இருக்குறவங்களோட..போங்கையா..அதிலருந்து , இந்த அரசியல் மேல இருக்குற கொஞ்சநஞ்ச மரியாதையும் விட்டுப்போச்சுய்யா..

இதோ, திரும்பவும், உங்க அருமைச்சகோதரி, உங்களை ஒரு பொருட்டாவே மதிக்காம, அவமானப்படுத்தினாலும், இன்னும் பொங்கியெழாம இருக்குறதை நினைச்சு, எனக்கு ஒன்னும் ஆச்சர்யம் இல்லைங்கையா..ஏன்னா, நமக்கு தன்மானத்தைவிட எலக்சன் சீட்டுதானய்யா முக்கியம்..

சரி விடுங்கையா..ரொம்ப நாளா உங்ககிட்ட ஒருகேள்வி கேக்கணும்னு, நெஞ்சுகுழியில தவிச்சுகிடக்குய்யா..நம்ம கட்சிப்பெயருல “மறுமலர்ச்சி, மறுமலர்ச்சி” ன்னு ஒன்னு இருக்குலயா..அது எந்த கடையிலயா கிடைக்குது..

32 comments:

சி.பி.செந்தில்குமார் said...

செம நக்கல் + நையாண்டி

சி.பி.செந்தில்குமார் said...

ஆனா பாவம் அவரே நொந்து போய் கிடக்காரே

அமுதா கிருஷ்ணா said...

பாவமா தான் இருக்கு வைகோவின் ஆதரவாளர்களை நினைத்தால்.

Anonymous said...

WELL WRITTEN

Anonymous said...

Now he is in trouble. Since you have mentioned, you like his all activities, you should not write this block now...

Still he is best politician in TN but our peoples is not supporting him... he was alone in his earlier elections...but lost everytime and everything....

So, we should support him in crisis.
Regards

Anonymous said...

if we trust vaiko then we are wasting our life
noww vaiko is no more role model for youths

baskar
brunei

Senthil said...

nach!!!!!!

senthil,doha

SHIVA said...

Vaiko chapter in Taminadu politics is over. No politician, bigger or small, dravidan, communitist or congress, actor or actress is trustworthy. We the people cast their votes are fool.

Am I right Rasa?

jothi said...

// “மறுமலர்ச்சி, மறுமலர்ச்சி” ன்னு ஒன்னு இருக்குலயா..அது எந்த கடையிலயா கிடைக்குது..///

ha ha ha ha

புதிய பாமரன் said...

இவ்வளவு தெளிவாக வைகோவின் வரலாறை(?) சுட்டியும், ஆதங்கப்பட்டும்...
எந்த வலைபூவிலும் நான் இந்த நொடி வரையில் கண்டுபிடிக்கவில்லை.
எழுத்து / கருத்துத் தெளிவு. வாழ்த்துக்கள் நண்பா!

Anonymous said...

En peru stalin. Etho ennala mudinchathu konjam koluthi podren. Avaroda soozhnilaiya koncham kavanichirukanum.. ilaingargal avara nambi emaantha maathiri,avaru yaara etha nambi emaanthaaro(ithula yen enna serkalangurathu pinnadi purinjudum). Arasiyalna evanavathu oruthan sakadaya alli veesuvaan thaan.. etho kalaingar pathaviyaalayum, panathunaalayum atha thodachu paathar.. koncha naal work aachu.. ippo etha pottalum kara povathu therinchu.. oooru pakkam poi settle aaguraru. ithanaikkum karanam oru aalu rasa!(ungala illane,neenga america rasane).. paavam vaikko avarukku ethuvum velangala... ellarayum nanbannu nammbi utkaanthaaru.douser kilichuttaanunga(enna utpada. aamane naanum antha katchila munnadi uripinar thaane. ippo illane!). Intha eezhathu prechanaila avaru, unmailiye poradinaru athayum evanum kandukala, aachila irukuravane poda dubukku en seatu thaan mukkiyamnu irukkaru. Ithellam koncham nenachu parunga.. vaiko evlavo thevalam!..(sencha paavathukku parigaram thedikittomla:) Aaana unmailiye vaiko thevalam. Ithu ennoda abiprayam!

Anonymous said...

நீங்கள் கொள்கை அரசியல் பற்றி எழுதி வைகோவை கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறீர்கள். தமிழ் நாட்டில் தனியாக ஒரு அரசியல் அமைப்பாக வளரவேண்டும் என்றால் முதலில் தலைவர் நடிகராக இருக்கவேண்டும். வைகோ வுக்கு அந்த தகுதி கிடையாது. அவருடைய அம்மாதிரியான சந்தர்பவாத அரசியல் தவறேன்றாலும் சினிமாக்கரனிடம் மயங்கும் தமிழக மக்களிடம் வேறு வழி இல்லை..உ.ம். தா.பாண்டியன் எவ்வளவு அனுபவம் வாய்ந்த பொதுவுடமை தோழர் ஆனால் அவர் சென்று கேப்டனின் கட்சி அலுவலகம் ஆலோசனை செய்கிறார். நீங்கள் தா.பாண்டியனின் மனநிலையை யோசித்துபாருங்கள்.. தமிழகத்தின் யதார்த்த அரசியல்*(கேவலமான போக்குதான்) புரியும். இதில் நீங்கள் வைகோ வை மட்டும் மட்டம் தட்டுவது. எனக்கு சரியாக படவில்லை. அவர் இன்று வரை ஈழ அரசியலை முன்னிறுத்தி பேசுகிறார். ஆனால் தமிழக மக்களிடமும் கிடைத்த விடை என்ன...? நீங்கள் கிழிக்க வேண்டிய அரசியல் வேட்டி வை.கோ.உடையது அல்ல...

Anonymous said...

very good post

Aveenga said...

mokka post... 5 min waste

அவிய்ங்க said...

சி.பி.செந்தில்குமார், அமுதா கிருஷ்ணா, Senthil ,SHIVA, jothi, புதிய பாமரன்
Ungaluku vera velai illaiya..ithula oru postnu athku message vera ?

Ipatiku,
அவிய்ங்க.(Aainga)
(Koiyalla)

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
சி.பி.செந்தில்குமார் said...
செம நக்கல் + நையாண்டி
17 March 2011 11:49 PM
சி.பி.செந்தில்குமார் said...
ஆனா பாவம் அவரே நொந்து போய் கிடக்காரே
17 March 2011 11:49 PM
////////////////////////
நன்றி சிபி அண்ணா..

அவிய்ங்க ராசா said...

///////////////////////////
2011 11:49 PM
அமுதா கிருஷ்ணா said...
பாவமா தான் இருக்கு வைகோவின் ஆதரவாளர்களை நினைத்தால்.
18 March 2011 1:39 AM
///////////////////////////////
ஒருகாலத்தில் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் ஆக இருந்தவர்..((

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
Anonymous said...
WELL WRITTEN
18 March 2011 2:15 AM
/////////////////////////
நன்றி நண்பா..

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
Anonymous said...
Now he is in trouble. Since you have mentioned, you like his all activities, you should not write this block now...

Still he is best politician in TN but our peoples is not supporting him... he was alone in his earlier elections...but lost everytime and everything....

So, we should support him in crisis.
Regards
18 March 2011 6:15 AM
/////////////////////////////
நண்பா...அவர் மூன்றாவது அணி அமைத்திருந்தால், கண்டிப்பாக ஆதரவு உண்டு..ஆனால்...!!!!!

அவிய்ங்க ராசா said...

////////////////////////
Anonymous said...
if we trust vaiko then we are wasting our life
noww vaiko is no more role model for youths

baskar
brunei
18 March 2011 7:07 AM
///////////////////////////
நம்பிக்கை எல்லாம் எப்பவோ போயிடுச்சு பாஸ்கர்..((

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
Senthil said...
nach!!!!!!

senthil,doha
18 March 2011 7:32 A
///////////////////////////
நன்றி செந்தில்..

அவிய்ங்க ராசா said...

//////////////////////////////
jothi said...
// “மறுமலர்ச்சி, மறுமலர்ச்சி” ன்னு ஒன்னு இருக்குலயா..அது எந்த கடையிலயா கிடைக்குது..///

ha ha ha ha
18 March 2011 11:51 AM
/////////////////////////////////
நன்றி ஜோதி..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////////
புதிய பாமரன் said...
இவ்வளவு தெளிவாக வைகோவின் வரலாறை(?) சுட்டியும், ஆதங்கப்பட்டும்...
எந்த வலைபூவிலும் நான் இந்த நொடி வரையில் கண்டுபிடிக்கவில்லை.
எழுத்து / கருத்துத் தெளிவு. வாழ்த்துக்கள் நண்பா!
18 March 2011 12:42 P
///////////////////////////////
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி பாமரன்..)

அவிய்ங்க ராசா said...

////////////////////////////////
Anonymous said...
En peru stalin. Etho ennala mudinchathu konjam koluthi podren. Avaroda soozhnilaiya koncham kavanichirukanum.. ilaingargal avara nambi emaantha maathiri,avaru yaara etha nambi emaanthaaro(ithula yen enna serkalangurathu pinnadi purinjudum). Arasiyalna evanavathu oruthan sakadaya alli veesuvaan thaan.. etho kalaingar pathaviyaalayum, panathunaalayum atha thodachu paathar.. koncha naal work aachu.. ippo etha pottalum kara povathu therinchu.. oooru pakkam poi settle aaguraru. ithanaikkum karanam oru aalu rasa!(ungala illane,neenga america rasane).. paavam vaikko avarukku ethuvum velangala... ellarayum nanbannu nammbi utkaanthaaru.douser kilichuttaanunga(enna utpada. aamane naanum antha katchila munnadi uripinar thaane. ippo illane!). Intha eezhathu prechanaila avaru, unmailiye poradinaru athayum evanum kandukala, aachila irukuravane poda dubukku en seatu thaan mukkiyamnu irukkaru. Ithellam koncham nenachu parunga.. vaiko evlavo thevalam!..(sencha paavathukku parigaram thedikittomla:) Aaana unmailiye vaiko thevalam. Ithu ennoda abiprayam!
18 March 2011 1:42 PM
//////////////////////////
உங்களுடைய வலுவான கருத்துக்கு நன்றி. ஆனால் இளைஞர்கள் வைகோவைப் பற்றிய பார்வை முற்றிலும் வேறுபட்டது. அதனால் வந்த ஆதங்கமே இந்த பதிவு..

அவிய்ங்க ராசா said...

///////////////////////////////
Anonymous said...
நீங்கள் கொள்கை அரசியல் பற்றி எழுதி வைகோவை கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறீர்கள். தமிழ் நாட்டில் தனியாக ஒரு அரசியல் அமைப்பாக வளரவேண்டும் என்றால் முதலில் தலைவர் நடிகராக இருக்கவேண்டும். வைகோ வுக்கு அந்த தகுதி கிடையாது. அவருடைய அம்மாதிரியான சந்தர்பவாத அரசியல் தவறேன்றாலும் சினிமாக்கரனிடம் மயங்கும் தமிழக மக்களிடம் வேறு வழி இல்லை..உ.ம். தா.பாண்டியன் எவ்வளவு அனுபவம் வாய்ந்த பொதுவுடமை தோழர் ஆனால் அவர் சென்று கேப்டனின் கட்சி அலுவலகம் ஆலோசனை செய்கிறார். நீங்கள் தா.பாண்டியனின் மனநிலையை யோசித்துபாருங்கள்.. தமிழகத்தின் யதார்த்த அரசியல்*(கேவலமான போக்குதான்) புரியும். இதில் நீங்கள் வைகோ வை மட்டும் மட்டம் தட்டுவது. எனக்கு சரியாக படவில்லை. அவர் இன்று வரை ஈழ அரசியலை முன்னிறுத்தி பேசுகிறார். ஆனால் தமிழக மக்களிடமும் கிடைத்த விடை என்ன...? நீங்கள் கிழிக்க வேண்டிய அரசியல் வேட்டி வை.கோ.உடையது அல்ல...
18 March 2011 3:11 PM
////////////////////////////
ஒத்துக்கொள்கிறேன் நண்பா..ஆனால் எலக்சன் சீட்டுகளுக்காகத்தான் அரசியலா..இளைஞர்களை முன்னிறுத்தி செல்லவேண்டாமா..இந்த விஷயத்தில் வைகோ தவறிவிட்டதாக்வே கருதுகிறேன்..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
Anonymous said...
very good post
18 March 2011 6:38 PM
//////////////////////////
நன்றி நண்பா..

அவிய்ங்க ராசா said...

////////////////////////
Aveenga said...
mokka post... 5 min waste
18 March 2011 6:39 PM
அவிய்ங்க said...
சி.பி.செந்தில்குமார், அமுதா கிருஷ்ணா, Senthil ,SHIVA, jothi, புதிய பாமரன்
Ungaluku vera velai illaiya..ithula oru postnu athku message vera ?

Ipatiku,
அவிய்ங்க.(Aainga)
(Koiyalla)
18 March 2011 6:49 PM
///////////////////////
நண்பா..ஏன் இப்படி..உங்கள் பெயரிலியே கமெண்ட் எழுதலாமே..

தமிழ்வாசி - Prakash said...

அண்ணே! போதும் விடுங்க..பாவம் அவரு...

எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு

Anonymous said...

Tamilnattu adimaikal cinemakkaaranukku oottu pottu mann alli pottukuthunga. Appuram enna pannrathu. Cinemakkaaran kaalai thaan thozha vendum

Anonymous said...

Cinemala nadikkiravangala thalaivan appadinnu sollittu neraya adimaikal naattukul irukuthu. Antha maathiri adimaikal irukkara varaikkum Tamilnaattukku perisa munnetram varaathu. Sariyaana nabarkalai thalaivanaka adaiyalam kaanath theriyaatha pakutharivatra makkal vaazhum idam Tamilnadu

இளங்கோ said...

உங்களது பதிவு அருமை.வைகோ ஒரு அரசியல்வாதியே கிடையாது.பிழைக்கத் தெரிந்த வழக்குரைஞர்.திமுகவில் இருந்தபோது தலைமையை கைப்பற்ற நினைத்தவர்.அதிமுகவில் கூட்டணி வைத்துக் கொண்டே அதன் அஸ்திவாரத்தை ஆட்ட நினைத்தவர்.கருணாநிதியைப் போல் இல்லாது ஜெயலலிதா உடனே சுதாரித்து விட்டார்.விளைவு கூட்டணியில் இருந்து தூக்கி எறியப் பட்டார்.இலங்கைத் தமிழர்களது பிரச்சினையை தனது சொந்த அரசியலுக்காக திசை திருப்பியவர்.இலங்கைத் தமிழர்கள் இவரை நம்பியதற்கு பதிலாக ஜெயலலிதாவையோ அல்லது கருணாநிதியையோ நம்பியிருந்தால் இவ்வளவு அழிவு நேர்ந்திருக்காது.சோனியாவை எதிர்ப்பார்;மன்மொகனுக்கு சால்வை போடுவார்.இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அத்வானியை கூப்பிடுவார்.ராமதாஸை விமர்சனம் செய்பவர்கள்,வைகோவின் தாவல் குணத்தையும் பேச வேண்டும்.

R said...

Super.. Unmaiyilum unmai...

Post a Comment