Saturday 11 September, 2010

மிக்சர் ஜீஸ்

இந்த வார சோகம்

முரளி.,.மரணம் எல்லாருக்கும், எப்போதும் வரும் என்று சமாதானம் சொன்னாலும், சற்று மனசை ஆட்டிப்பார்க்கும். இன்னும் சொல்லப்போனால், சிலரது மரணம், மனதை ஒரு
உலுக்கி உலுக்கி விடும். அப்படிப்பட்ட நிகழ்வுதான் நடிகர் முரளியின் மரணம். அவரது அசைவற்ற உடலைப் பார்த்துவிட்டு, காபி வித் அனுவில் அவரது பேச்சை தொடர்ந்து
கேட்க முடியவில்லை. என்னை அறியாமல் கண்ணீர் விட்டுவிட்டு டி.வியை ஆப் செய்து விட்டேன். வசீகரமான முகம், மற்றும் அந்த பேச்சு..,,ம்,,மரணம்தான் எத்தனை
கொடியது.

இந்த வார வேண்டுகோள்

வேறு யாருக்கு..நம்ம பதிவுலகத்திற்குதான். திரும்பவும் சண்டையை ஆரம்பித்து விட்டார்கள். உண்மையிலேயே சலிப்பாக இருக்கிறது. தங்களுக்குள் பேசியோ, "சாட்" செய்தோ
தீர்த்து கொள்ளவேண்டிய பிரச்சனைகள் நடுத்தெருவுக்கு வருகின்றன. யாராவது, யாரையாவது குற்றம் சொல்லிக்கொண்டே இருக்கின்றனர். அவரும் நான் குற்றமற்றவன்
என்று காண்பிப்பதற்காக ஒரு பதிவிடுகிறார்...ஓட்டுகள் கன்னாபின்னாவென்று விழுகின்றன. தமிழ்மணம் அட்மின் என்ன செய்கிறார் என்று தெரியவில்லை. அட்மின்
ஐயா..தயவு செய்து இது போன்ற பதிவுகளை 100 ஓட்டு வாங்கினாலும் பரவாயில்லை. மட்டுறுத்துங்கள். அட்லீஸ்ட் அந்த இடத்திற்கு, ஒரு புதிய பதிவரின் நல்ல
பதிவு இடம் பெற்ற புண்ணியமாவது கிடைக்கும்.

இந்த வார படங்கள்

இந்த வாரம் ஆணி புடுங்குவது கம்மியாக இருந்ததால், நிறைய படங்கள் பார்த்தேன். பலே பாண்டியா, சிந்து சமவெளி, பாணா காத்தாடி, இரண்டு முகம்..இதில் என்னைக் கவர்ந்தது
பாணா காத்தாடி. நூல் போன்ற ஒரு கதையை, அழகாக பட்டமாக்கி பறக்க விட்டுள்ளனர். திரைக்கதையும், இசையும் அழகாக வானில் பறக்கின்றன. எனக்கென்னமோ, இந்தப்
பையன் அதர்வா கண்டிப்பாக ஒரு ரவுண்ட் வருவான் போல தோணுகிறது, அடுத்த படத்தில் பக்கத்தில் உள்ள வேலிக்கல்லை உடைக்காதவரை.. அடுத்து என்னைக் கவர்ந்த
ஒரு ஆங்கில படங்கள் "தி பிளைட் ஆப் த பீனிக்ஸ்", அப்புறம் "த மேன் ஆப் த ஹானர்..", "போன் பூத்..", "ஷூட்டர்" அனைத்தும் டாப் கிளாஸ் படங்கள். முடிந்தால் பாருங்கள்

இந்த வார பாடல்கள்

இசைஞானி இளையராஜாவின் பழைய(கவனிக்கவும், பழைய) பாடல்களுக்கு நீங்கள் மயங்காவிடால், நீங்கள் இந்த பூமியில் பிறந்தே வீண். இரவுப் பொழுதில் அவருடைய 80, 90 காலத்து பாடல்களை கேட்டுக் கொண்டு தூங்க முயற்சி செய்யுங்கள். இன்னொரு உலகத்திற்கு எடுத்து சென்று விடும். அத்தனையும் தேன். அப்படி மயங்கிய சில பாடல்கள்.

1. விழியிலே, உன் விழியிலே...
2. மஞ்சம் வந்த தென்றலுக்கு
3. சொர்க்கமே என்றாலும்
4. காதல் கவிதைகள் படித்திடும்
5. பூங்கதவே தாழ்திறவாய்
6. நான் தேடும் செவ்வந்தி
7.பூவே செம்பூவே
8. கீரவாணி, இரவிலே
9. பனிவிழும் இரவு
10. பனிவிழும் மலர்வணம்
11. என் கண்மனி, உன் காதலி
12. காதல் ஓவியம், பாடும் காவியம்
13. நான் பாடும் மௌனராகம்
14. பேசக்கூடாது
15. காதலின் தீபம் ஒன்று
16. நீ ஒரு காதல் சங்கீதம்
17. மயங்கினேன் சொல்ல தயங்கினேன்.
18. சங்கீத மேகம்
19. எங்கே என் ஜீவனே
20. வானிலே..தேனிலா..

கைவலிக்குதுயா..இசைஞானியே..இப்ப எங்க இருக்கீங்க...
இந்த வார வெற்றி

கடைசியாக ஜோடி நம்பர் ஒன் முடிவுக்கு வந்துவிட்டது. எனக்கு பிடித்த பிரேம் கோபாலே வின்னர் ஆனதில் கொஞ்சம் சந்தோசம்தான். ஆனால் பைனலில் அவரது டான்ஸ் ஏனோ எனக்கு
பிடிக்கவில்லை. ஆனால் பிரீபைனலில் ஒரு ஆட்டம் போட்டார் பாருங்கள். அதற்கே இந்த மகுடம். வலிக்க, வலிக்க ஈழத்தமிழர்களின் நிலையை சொன்ன விதம் அருமை.
நல்ல டான்ஸர் ஷெரீப் தோற்றது வருத்த்மே. விஜய் டிவியின் செல்லப்பிள்ளை டி.டி எந்த மகுடமும் வாங்காதது ஆச்சர்யமாக இருக்கிறது. விஜய் டி.வி திருந்திவிட்டதா???

இந்த வார உதவி

ஹிட்லரின் கடைசி நிமிடங்களை சொல்லும் படம் ஏதாவது இருக்கிறதா..இருந்தால் பெயர் சொல்ல முழியுமா..??(வாழ்கேர், தி பியானிஸ்ட், ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் , தி டௌன் பால் தவிர...)

இந்த வார சுவை(18++) (நண்பன் சொன்னது)

சுய இன்பம் பற்றி ஒரு ஆராய்ச்சியாளர் சர்வே ஒன்றை எடுத்திருந்தார். அதன் முடிவை சொல்வதற்காக அனைத்து பத்திரிக்கையாளரையும் அழைத்திருந்தார்.

ஆராய்ச்சியாளர்: நண்பர்களே நான் எடுத்த சர்வே, ஆச்சர்யம் அளிக்கிறது. இந்த உலகத்தில் 95% பேர் தாங்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவதாக ஒத்துக் கொள்கின்றனர்

பத்திரிக்கையாளர்: அப்படியானால் அந்த 5% பேர்

ஆராய்ச்சியாளர் : பொய் சொல்வதாக ஒத்துக் கொள்கிறார்கள்

10 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

மிக்சர் ஜீஸ் நல்ல சுவை...

@@@

நடிகர் முரளியின் மரணம் வருத்தத்தை தந்த ஒரு விஷயம்..

@@@

பதிவுலகமும் வர வர நம் நட்டு அரசியல் மாதிரி ஆகி விட்டது...யாராவது ஒருவர் முடித்தால் அடுத்தவர் ஆரம்பித்து விடுகிறார்..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

மிக்ஸர் ஜூஸ் சுவையாக :)

//நடிகர் முரளியின் மரணம் வருத்தத்தை தந்த ஒரு விஷயம்..//

:(

rse said...

முரளி.,.மரணம் எல்லாருக்கும், எப்போதும் வரும் என்று சமாதானம் சொன்னாலும், சற்று மனசை ஆட்டிப்பார்க்கும். இன்னும் சொல்லப்போனால், சிலரது மரணம், மனதை ஒரு
உலுக்கி உலுக்கி விடும்----- 100% correct sir . ரஜினி பொண்ணு கல்யாணத்துல போட்டோல பார்த்தேன்
நல்லாதான் இருந்தார். மனசு கஷ்டமா இருக்கு

நான் கூட இந்த பாடல்களை தான் இரவுப் பொழுதில் கேட்பேன் அல்லது vacation போறப்ப என் husband car டிரைவ் பண்ணுவாரு . நான் ஜாலியா இந்த பாடல்களை கேட்பேன் . ரெண்டு பக்கமும் வயல்வெளிகள் .. இளையராஜா பாடல்கள் ( 80's and 90's ) கேட்பதே ஒரு தனி சுகம்தான்.

நீங்க சொல்றமாதிரி இளையராஜா வை இப்ப வலை போட்டு தான் தேடனும்

பஞ்சமுகி படம் பார்த்துடீங்களா -- பார்த்தால் விமர்சனம் எழுதவும்

அவிய்ங்க ராசா said...

//////////////////////
வெறும்பய said...
மிக்சர் ஜீஸ் நல்ல சுவை...

@@@

நடிகர் முரளியின் மரணம் வருத்தத்தை தந்த ஒரு விஷயம்..

@@@

பதிவுலகமும் வர வர நம் நட்டு அரசியல் மாதிரி ஆகி விட்டது...யாராவது ஒருவர் முடித்தால் அடுத்தவர் ஆரம்பித்து விடுகிறார்..
11 September 2010 12:30 AM
//////////////////////////
நன்றி வெறும்பய..சரியாக சொன்னீர்கள்..

அவிய்ங்க ராசா said...

/////////////////
ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...
மிக்ஸர் ஜூஸ் சுவையாக :)

//நடிகர் முரளியின் மரணம் வருத்தத்தை தந்த ஒரு விஷயம்..//

:(
11 September 2010 11:35 AM
//////////////////////
நன்றி செந்தில்

அவிய்ங்க ராசா said...

///////////////////////
julie said...
முரளி.,.மரணம் எல்லாருக்கும், எப்போதும் வரும் என்று சமாதானம் சொன்னாலும், சற்று மனசை ஆட்டிப்பார்க்கும். இன்னும் சொல்லப்போனால், சிலரது மரணம், மனதை ஒரு
உலுக்கி உலுக்கி விடும்----- 100% correct sir . ரஜினி பொண்ணு கல்யாணத்துல போட்டோல பார்த்தேன்
நல்லாதான் இருந்தார். மனசு கஷ்டமா இருக்கு

நான் கூட இந்த பாடல்களை தான் இரவுப் பொழுதில் கேட்பேன் அல்லது vacation போறப்ப என் husband car டிரைவ் பண்ணுவாரு . நான் ஜாலியா இந்த பாடல்களை கேட்பேன் . ரெண்டு பக்கமும் வயல்வெளிகள் .. இளையராஜா பாடல்கள் ( 80's and 90's ) கேட்பதே ஒரு தனி சுகம்தான்.

நீங்க சொல்றமாதிரி இளையராஜா வை இப்ப வலை போட்டு தான் தேடனும்

பஞ்சமுகி படம் பார்த்துடீங்களா -- பார்த்தால் விமர்சனம் எழுதவும்
11 September 2010 4:10 PM
//////////////////////
நன்றி ஜூலி..பஞ்சமுகி???அப்படி ஒரு படம் வந்திருக்கிறதா என்ன??

MaduraiMalli said...

நன்றி ஜூலி..பஞ்சமுகி???அப்படி ஒரு படம் வந்திருக்கிறதா என்ன

// Sir ithu anushka nadithu vaeli vanthu irukkum padam... ange latest release sindhu samavaeli thaana?

துளசி கோபால் said...

அதென்ன ஜீஸ்?

ஜூஸ் ன்னு மாத்துங்க.

பதிவை இன்னும் படிக்கலை. அப்புறம் வரேன்

சிங்கக்குட்டி said...

நடிகர் முரளியின் குரல் பிடிக்காதவர் யாருமே இருக்க முடியாது :-( மிகுத்த வருத்தம் மற்றும் தமிழ் சினிமாவுக்கு இழப்பு

taaru said...

முரளி - ஒரு innocent மனிதர்.... பயங்கர அதிர்ச்சி....
இப்போ மிஸ்.சுவர்ணலதா..!!!! என்னவோ நடக்குது...???

Post a Comment