Wednesday, 15 September, 2010

எனக்கு பிடிக்காத இயக்குநர்கள்

பொதுவாக எனக்கு பிடித்த இயக்குநர்கள் என்று பதிவு எழுதுவார்கள். ஒரு மாற்றத்துக்காக, எனக்கு பிடிக்காத இயக்குநர்கள். சில இயக்குநர்கள் படத்திற்கு போனால், வெளியே எப்படி தப்பித்து வரவேண்டும் என்று முயற்சி செய்வோம். ஆனால், தயாரிப்பாளருக்கும், தியேட்டர்காரர்களுக்கும் உள்ள ஒப்பந்தத்தால், கதவு பூட்டு போட்டு பூட்டிவிடுவார்கள். நாம் கெஞ்சுவோம், கதறுவோம். மனசாட்சி இல்லாதவர்கள், கதவைத்திறந்து
விடமாட்டார்கள். அப்படி வதைபட்டு, மனம் புழுங்கியதன் விளைவே இந்தப் பதிவு. சத்தியமாக சொல்கிறேன், இந்த இயக்குநர்களின் இயக்கத்தில் எனக்கு பிடித்த ஹாலிவுட் நடிகர் டென்சல் வாஷிங்கடன் நடித்தால் கூட போக மாட்டேன். ஏன் உனக்கு இந்திய நடிகர்கள் யாரும் பிடிக்காதா
என்று கேட்கலாம். சாரி..எனக்கு சாம் ஆண்டர்சன் தவிர எந்த இந்திய நடிகரும் பிடிக்காது,,

1. விக்ரமன்

"தம்பி.,,எப்போதும் தெருவிலே சுத்திக்கிட்டு இருக்குமே, நம்ம தெருநாய் செத்துருச்சு...." என்று ஹீரோ ஆஸ்கார் ரேஞ்சுக்கு செண்டிமெண்டாக எஸ்.ஏ ராஜ்குமார் போடுவார் பாருங்கள் ஒரு அருவா..சாரி..மியூசிக்.."லா..லா..லா..லா.." அப்படியே செத்து போகலாம் போல தோன்றும்.
இவர் படத்தில் ஹீரோ, உலகமாக நல்லவர். வில்லனே பரிதாபப்பட்டு "தம்பி..கொஞ்சம் கண்ணை மூடிக்கிறீங்களா..உங்களை கொலை பண்ணனும்" என்ற ரேஞ்சுக்கு கேட்பார் என்றால் பார்த்து கொள்ளுங்கள். இவர் இயக்கத்தில் மாதவன் நடித்த ஏதோ ஒரு படத்தைப் பார்த்து
இரண்டு நாட்களாக காய்ச்சல் வந்து கிடந்தேன். பின்பு இவர் இயக்கத்தில் விஜய்காந்த் நடித்த "மரியாதை" படத்திற்கு என் அமெரிக்க கிளையண்டை கூட்டி சென்று பழிவாங்கியதை ஒரு பதிவாக எழுதியுள்ளேன். இவருடைய படத்தின் மொக்கை ஜோக்குகளைக் கேட்டு
விழுந்து விழுந்து அழுதிருக்கிறேன். ஆனாலும், இவரிடம் எனக்கு பிடித்த ஒன்று ஆபாசமில்லாமல் படம் எடுப்பது.

2. விஜய டி.ராஜேந்தர்

"வாடா என் பஜ்ஜி..வாழைக்காய் பஜ்ஜி.." என்று இவர் ஹைடெசிபலில் கத்தினால் போதும், உடம்பில் உள்ள அனைத்து நோய்களும் குணமாகிவிடும் என்பது ஒரு ஐதீகம். சிரித்து சிரித்துதான். இவருடைய தமிழ்செம்மொழி பாடலான "டாய் டாய், டிங்கிரிடோய்,
டாய் டாய் டிங்கிரிடோய்..கத்திரிக்கோலு" என்ற பாடலின் அர்த்தம் கேட்டு புல்லரித்து போனேன். இன்னும் இளைஞர்களுக்கு சிரிப்பு மருந்தாக திகழ்கிறார். வீராச்சாமியில் "தங்கச்சி" என்று ஒரு லுக் விடுவார் பாருங்கள். டாம் க்ரூஸ் போன் பண்ணி கேட்டதாக ஒரு கிசுகிசு இருக்கிறது. அடுத்த படத்திற்கு தமிழகமே வெயிட்டிங்க், மொத்தமாக லீவ் எடுப்பதற்கு. இவரிடம் எனக்கு பிடித்தது
தன்னம்பிக்கை.

3. பேரரசு

நல்லாதான் போய்கிட்டு இருந்தது. ஆனால் ஒரு படத்தில் வந்து பஞ்ச் டயலாக் பேசுவார் பாருங்கள்,,தியேட்டர் புல்லா ஒரே கிளாப்ஸ்தான்,அப்பதான் அடுத்த டயலாக்கு கேக்காதுன்னுதான். பஞ்ச் டயலாக் பேசியே பலபேரை பஞ்சராக்கியவர். ஓவர் மசாலா உடம்புக்கு ஆகாது என்று அடிக்கடி நிரூபிப்பவர். அடுத்த தானே இசையமைத்து, ஹீரோவாக நடிக்கப்போகிறார் என்பது தமிழகத்திற்கான புயல் எச்சரிக்கை அறிவிப்பு. இவரிடம் பிடித்தது இன்னும் ஹீரொவாக நடிக்காமல் தமிழகத்தை காப்பாற்றுவது

4 .எஸ் ஏ சந்திரசேகர்

"எங்கப்பா சொன்னா கேட்கமாட்டாரு, எப்ப பார்த்தாலும் படம் பண்ணிகிட்டு நஷ்டப்பட்டு இருப்பாரு" என்று விஜய் சீரியசாக சொன்னாலும் அதை ஜோக்காக நினைத்ததன் விளைவே இவருடைய படங்கள். கிட்டத்தட்ட ரேப்சீன் களை மறந்த தமிழ் பட உலகத்தில், ரேப் சீன் களை
வைத்து இன்னும் வெறியேத்துபவர். அமெச்சூர்தனமாக இவருடைய படங்கள் பார்த்து பலமுறை தியேட்டர் கதவைத் தட்டியிருக்கிறேன், உள்ளிருந்து வெளியே ஓடுவதற்கு. இவரிடம் பிடித்தது சலிக்காமல் பல படங்களை எடுத்து, தியேட்டர் கேண்டினுக்கு கல்லா கட்டுவது..

இப்படி பல எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் பேரரசு பட சண்டைக்கு இணையான பல காட்சிகள் பதிவுலகத்தில் அரங்கேறுவதால், அதையெல்லாம் படிக்கேவேண்டியிருக்கிறது. அதனால் இப்போதைக்கு மீ த அப்பீட்டு...

6 comments:

Balaji saravana said...

இந்த லிஸ்ட்ல இன்னும் கொஞ்சம்..
*சக்தி சிதம்பரம்
*வெங்கடேஷ்

raji said...

superu!

julie said...

Superb

philosophy prabhakaran said...

அரிவாள் இயக்குனர் ஹரியா விட்டுடீங்களே தல...

Anonymous said...

SJ suryavai maranthuttingala anna?

அவிய்ங்க ராசா said...

நன்றி பாலாஜி,,லிஸ்ட் ரொம்ப பெரிசு
நன்ரி ராஜி, ஜூலி,
பிரபா..ஹரி எவ்வளவோ தேவலை..
எஸ்,ஜே சூர்யா ஓகேங்க..

Post a Comment