Friday 10 September, 2010

சிந்து சமவெளி பட விமர்சனம்

படங்களில் இரண்டு வகை உண்டு. மனைவி, குழந்தைகளோடு பாப்கார்ன் கொறித்து கொண்டோ அல்லது கடலைமுட்டாய் சாப்பிட்டு கொண்டோ "விஜய் சூப்பரா நடிக்குறாருல்ல.." என்று பொய் சொல்லிக்கொண்டு பார்ப்பது. இன்னொரு வகை படம், தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு யாரும் பாக்குறாயிங்களா, என்று திருட்டுப்பார்வைப் பார்த்து கொண்டே இருட்டுக்குள் அமர்ந்து கொண்டாலும் "சார்..சீன் எப்ப போடுவாயிங்க.." என்று பக்கத்து சீட்டுக்காரர் கேட்க, "தெரியலையேப்பா.." என்று நாயகன் கமல் பாணியில் சொல்லிக் கொண்டே பார்ப்பது. இரண்டாவது வகை படங்களை பார்ப்பவர்கள் பொதுவாக கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் எதிர்பார்த்து போவதில்லை. அதுவும் இடைவேளைக்கு அப்புறம் செல்பவர்களே அதிகம்.
சிலநேரம் அண்ணனோ, ஆசிரியரோ பக்கத்து சீட்டில் அமர, திடிரென்று பார்த்து கொள்ள, அதிர்ச்சியாக "நீயா..நீயா..கண்ணா..நீயும், நானுமா.." என்று சிவாஜி டயலாக் பேசிக்கொண்டு அலறி அடித்து ஓடிய சம்பவங்கள் பல வர்லாற்றில் இடம் பெற்றிருக்கின்றன. இவையெல்லாம் உனக்கு எப்படி தெரியும் , அனுபவமா என்று நீங்கள் கேட்டால் "உங்களில் ஒரு குற்றமும் செய்யாதவன், என்மேல் முதல் கல்லை எறியட்டும்.." என்று பைபிள்
டயலாக் பேசுவேன்..

சிந்து சமவெளி, மேலே சொல்லப்பட்ட இரண்டாம் வகையறா படங்களை சேர்ந்தது. சென்னையில் எங்கு ரிலீஸ் பண்ணியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
அனேகமாக "பரங்கிமலை ஜோதி" யாக இருக்க கூடும். ஏற்கனவே "துரோகம் நடந்தது என்ன.." என்ற படம் பார்த்துவிட்டு வெறி பிடித்த ரசிகர்கள் ரீபீட் ஆடியன்ஸாக மாறி, இந்த படத்திற்கும் சென்று நூறு நாட்கள் ஓடும் வாய்ப்பு உண்டு..

சரி, படத்தின் சதைக்கு..அய்யோ..கதைக்கு வருவோம். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற அப்பா, தன் எஞ்சிய காலத்தை வீட்டிலேயே கழிக்கலாம் என்று வீட்டிற்கு வருகிறார். ஒரு இரவுவேளையில் பாம்பு கடித்து மனைவி இறந்துவிட தனிமரமாகிறார். சரி, பையனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி சந்தோசப்படலாம் என்ற எண்ணத்தில் அவனது காதலியையே கல்யாணம் செய்து வைக்கிறார். மகன் ஆசிரியர் பயிற்சிக்காக வேறு ஊருக்கு செல்லும்போது,
தன் அப்பாவை நம்பி, மனைவியை விட்டு செல்ல, மாமனாருக்கும், மருமகளுக்கும் நடக்கும் கூத்தே படத்தின் ஹைலைட். மாமனராவது பரவாயில்லை,மருமகள் ஒரு படி மேலே. விட்டால் புருசனை கொன்று விட்டு "ரோசாப்பூ...சின்ன ரோசாப்பூ.." என்று மாமனாருடன் டூயட் பாடாத குறைதான். சீன் பட ரசிகர்கள் புல்லரிக்கும் வாய்ப்பு நிறைய உண்டு..கடைசியில் ஆனந்த விகடனில் தன் புருஷன் எழுதிய கதையை பார்த்து மனம் உடைந்து, ரயில் விழுந்து தற்கொலை
செய்து கொள்கிறார், மனைவி..கூடவே ரசிகர்களும்..கடைசியில் உண்மை தெரிந்து, மகனே, அப்பனை போட்டு தள்ள "ப்ச்..சீன் கொஞ்சம் கம்மிதாம்பா.." என்று
முணுமுணுத்து கொண்டே வெளிவருகிறார்கள் ரசிகர்கள்...

பொதுவாக நம் கலாசாரத்தின் மதிப்பே, உறவுகளுக்குள் இருக்கும் ஒழுங்குதான். அந்த ஒழுங்கின் அழகை படம்பிடிக்காமல், எங்கேயோ ஒரு இடத்தில் நடக்கும் தவறுகளை படமாக எடுத்து "இது எல்லா இடத்திலும் நடக்கும் கதைதான்.." என்று சப்பை கட்டு கட்டுகிறார் இயக்குநர் சாமி. படம் முழுவதும் வக்கிரத்தை தூவி விட்டு கடைசியில் "எல்லாரும் ஒழுங்கா இருக்கணும்பா..": என்று போதிப்பது விவேக் படத்தில் வரும் "மக்கா..தெரியாம குத்திட்டேண்டா." என்று சொல்வது போல இருக்கிறது. இதற்கு அவர் டைரக்டாக ஒரு சீன் படமே எடுத்து இருக்கலாம். நான் ஏற்கனவே சொல்லியது போல் சீன் படத்தில், கதை, திரைக்கதை, வசனம், இசை எதுவும் முக்கியம்
இல்லை என்பதால் அதைப் பற்றி விமர்சனம் செய்ய விரும்பவில்லை. அப்புறம் ஏண்டா விமர்சனம் எழுதுகிறாய் என்று கேட்டால்.."இந்தப் படம், எல்லோரும் பார்க்க வேண்டிய படம்" என்று டைரக்டர் சொல்லி பொதுமக்களின் பார்வைக்கு வைப்பதால் வரும் கோபத்தில்தான். இந்த படம் படைக்கப்படவேண்டியது பொதுமக்களுக்காக அல்ல.

என்னது படம்பற்றிய கடைசி பஞ்ச்லைனா..???

பீடா ஒன்றை வாயில் போட்டு மென்று கொள்ளவும்..நன்றாக எச்சில் ஊறவிடவும்..இப்போது உதட்டை ரெடியாக குவிக்கவும்...ரெடியா...

"த்த்த்...த்த்த்...த்த்த்....தூதூதூதூதூதூதூ...."

14 comments:

dogra said...

அருமையான கட்டுரை. நகைச்சுவை மூலம் ஒரு முக்கியமான விஷ்யத்தைச் சொல்லியுள்ளீர்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

hehee

Unknown said...

பொதுவாக நம் கலாசாரத்தின் மதிப்பே, உறவுகளுக்குள் இருக்கும் ஒழுங்குதான்.
Panbaadu-nu solluvangaley aptina enna??adhu idhula varaadha???panbaadukum kalaacharadhukum enna vithiyasam???????

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

சூப்பரப்பு... கடைசிப் பஞ்ச்

கார்த்திகேயன் said...

மற்றொருவரின் படைப்பை பார்த்து (literally) காறி துப்புவது தரக்குறைவான காரியம். உதாரணமாக, உங்களது இந்த பதிவு எனக்கு பிடிக்கவில்லையென்றால் நான் அதை காரணத்தோடு இங்கு பதிவு செய்யலாம். அதை விடுத்து பின்னாட்டத்தில் 'த்தூ' என்று எழுதி வைத்தால் உங்களுக்கு வலிக்குமல்லவா?

MaduraiMalli said...

Sir, you should have read this film review before watching this movie.. appo innathukku sir padam paathu review podringa? pudikalanae vaera nalla padam paathu review yaeludhunga..

Ippadikku,
Samy P.R.O

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

"பரங்கிமலை ஜோதி" அது எப்போவோ மாறிடுச்சுன்னு கேள்விப்பட்டேன்!!!

அவிய்ங்க ராசா said...

//////////////////////
sinthanai said...
அருமையான கட்டுரை. நகைச்சுவை மூலம் ஒரு முக்கியமான விஷ்யத்தைச் சொல்லியுள்ளீர்.
9 September 2010 10:29 PM
//////////////////////
நன்றி சிந்தனை..

அவிய்ங்க ராசா said...

//////////////////////
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
hehee
9 September 2010 10:32 PM
///////////////////////////
நன்றி ரமேஷ்...

அவிய்ங்க ராசா said...

////////////////////
pillaival said...
பொதுவாக நம் கலாசாரத்தின் மதிப்பே, உறவுகளுக்குள் இருக்கும் ஒழுங்குதான்.
Panbaadu-nu solluvangaley aptina enna??adhu idhula varaadha???panbaadukum kalaacharadhukum enna vithiyasam???????
///////////////////////
நன்று..தனியாக இதற்கு ஒரு பதிவு எழுதுகிறேன்..

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...
சூப்பரப்பு... கடைசிப் பஞ்ச்
10 September 2010 12:50 AM
///////////////////////////
நன்றி செந்தில்

அவிய்ங்க ராசா said...

/////////////////////
கார்த்திகேயன் said...
மற்றொருவரின் படைப்பை பார்த்து (literally) காறி துப்புவது தரக்குறைவான காரியம். உதாரணமாக, உங்களது இந்த பதிவு எனக்கு பிடிக்கவில்லையென்றால் நான் அதை காரணத்தோடு இங்கு பதிவு செய்யலாம். அதை விடுத்து பின்னாட்டத்தில் 'த்தூ' என்று எழுதி வைத்தால் உங்களுக்கு வலிக்குமல்லவா?
10 September 2010 9:18 AM
/////////////////////////
கார்த்திகேயன். வக்கிரத்தை தூண்டும் ஒன்றை படைப்பு என்று ஏற்று கொள்ள முடியவில்லை. என்னுடைய பதிவு வக்கிரத்தை தூண்டினால், துப்ப உங்களுக்கு உரிமை உண்டு,

Anonymous said...

Hi,

I saw this MOVIE...basically it is a LOVE story..BUT the problem is that the society HAS CONDITIONED OUR MINDS as to who must love who....RIDICULIOUS..you seem to have missed the point that the Father-in-law DOES NOT pre-meditate this affair...the screenplay repeatedly shows that..anyway..it is a neat screenplay and there is NOT even a single CLEVAGE shot that is shown in aLL U certified movies...Please try to broaden your consciousness so that you can even recognize what is being imposed on you! .Thanks!

Sam

ராஜ நடராஜன் said...

//பொதுவாக நம் கலாசாரத்தின் மதிப்பே, உறவுகளுக்குள் இருக்கும் ஒழுங்குதான்.//

நல்ல வரிகள்!யோசிச்சுப் பாருங்க!அம்மா!அப்பா!அண்ணன்,தங்கை,நண்பன் இன்னும் பல உறவுகளாக ஒவ்வொன்றும் அதன் இயல்பிலேயே வார்த்தை பரிவர்த்தனைகள் ஆகின்றன.

Exceptions cannot be portrayed as this is the way we, society is!

Post a Comment