Monday, 13 September, 2010

நாங்களும் புனைவு எழுதுவோம்ல....

சுந்த்ர்ராமனுக்கு சுருக்கென்று இருந்தது. சத்தியமூர்த்தியா இப்படி பேசியது. இல்லை. ஏதோ தவறு நடந்திருக்கிறது. சத்தியமூர்த்தி இப்படி பேசக்கூடியவனில்லை.

"இதுக்கே மேலேயும் என்னங்க அவமானம் இருக்கு,..." ஆதங்கத்துடன் மனைவி ஆரம்பித்தாள்...

"ஏ..இருடி..அவனுக்கு என்ன பிரச்சனையோ.."

"என்னங்க அப்படி ஒரு பிரச்சனை..யோசிச்சு பாருங்க. இந்த ஊருக்கு வர்றப்ப, கையில ஒரு நையா பைசா இல்லாமதான வந்தாரு உங்க நண்பர்..
நீங்கதான, மூணுவேளை சோறு போட்டு ஒரு வேலையும் சொல்லிக் கொடுத்தீங்க..ஒரு நன்றி விசுவாசம் வேண்டாம்.."

"ப்ச்..இப்ப என்ன நடந்திச்சு.."

"இதுக்கு மேல என்ன நடக்கணும்..செருப்ப கழட்டி அடிச்ச மாதிரி இல்லை..போன் பண்ணி மகன் கல்யாணத்துக்கு கூப்பிடவேண்டாம். மூஞ்சில அடிச்ச
மாதிரி வரவேணாமுன்னு சொல்றாரு..இது உங்களுக்கு அவமானமா தோணலை.."

"ப்ச்..விஷேஷத்துல பெரிய பெரிய ஆட்களெல்லாம் வருவாங்க.."

"என்ன பெரிய ஆளுங்க..நீங்க வளர்த்து விடலைன்னா எப்படிங்க அவருக்கு இந்த பெரிய ஆளுங்க கிடைக்கும்.."

"ஒருவேளை..நான் போனா..அங்க எனக்கு ஏதாவது அவமானம் நடந்துருமோன்னு கூப்பிடலையோ என்னமோ.."

"ஆஹா..என்ன ஒரு சப்பைக்கட்டு..ஞாபகப்படுத்தி பாருங்க..ஒவ்வொரு பிஸினஸ் தொடங்குறதுக்கு முன்னாடி, உங்களை கூப்பிட்டு வேலை வாங்குவாரே..
அடேங்கப்பா..பிஸினஸுக்காக என்ன அலை அலைஞ்சீங்க..தெரு, தெருவா நடந்து போயி அவர் அறிமுகப்படுத்த போற ப்ராடக்ட் பத்தி கூச்சமே இல்லாம
விளக்குனீங்களே..கொஞ்சம் கூட நன்றி விசுவாசம் இல்லீங்க..?? இதுக்கெல்லாம், நீங்க வேணும்.ஆனா பையன் கல்யாணத்துக்கு மட்டும் வரவேணாமுன்னு
சொல்றப்ப, உங்களுக்கு கோபம் வரலை.."

"ம்..எப்ப பார்த்தாலும் என் நண்பனை குத்தம் சொல்லுவியா.."

"சரி..திருமணத்துக்கு கூப்பிட்டிருக்காரே, கிள்ளி வளவன், ராஜாமணி..இவுங்க எல்லாம் யாருங்க.."

"ம்...அது வந்து..."

"இந்த கிள்ளிவளவன் உங்க நண்பரை என்ன பேச்சு பேசுனாரு..உங்க நண்பரைப் பத்தி பேசுனாருன்னு தெரு தெருவா, அவுங்க ஆளுககிட்ட சண்டைக்கு போயி
அடி வாங்கி வந்தீங்களே..இன்னும் அந்த ரத்த காயம் கூட அப்படியே இருக்குங்க.."

"நீ சும்மா இருக்க மாட்ட.."

"இந்த ராஜாமணி..உங்க நண்பர் பிசினஸ் பண்ற எந்த ஒரு பொருளும் ஏரியாவுக்குள்ள வரக்கூடாதுன்னு என்ன ஆர்ப்பார்ட்டம் பண்ணினாரு..அவரை எதிர்த்துகிட்டு
என்னமா அடிவாங்கினீங்க..சே..ரெண்டு நாளு ஹாஸ்பிடல்ல..நானும் கூடவே இருந்தேங்க..ரெண்டுநாள் ஒரு பொட்டு தூங்கல தெரியுமா..கடவுளே, என் புருசனைக்
காப்பத்துன்னு நான் கெஞ்சாத சாமி இல்லை.."

"ஏ..என்ன நீ பெரிய இவளாட்டம்..என் நண்பன்.."

"ஆமா..இப்படியே பேசுங்க..அவரு உங்களை நல்லா வேணுங்கறப்ப மட்டும் நல்லா யூஸ் பண்ணிட்டு, வேண்டாங்குறப்ப துக்கி போடுவாரு....நீங்களும் தன்மானமே
இல்லாம "நண்பன் வாழ்கன்னு கோஷம் போடுங்க...ஏங்க நாம இப்படி இருக்கணும்..நம்மளுக்கு குடும்பம் குட்டி இருக்குங்க..முதுகெலும்பு இருக்குங்க..
நம்ம எல்லாம் படிச்சவங்க..த்ப்புன்னு தெரிஞ்சுக்கிட்டே திரும்ப திரும்ப நண்பனுக்கு அடிமையா இருக்கீங்களே..தப்புன்னு புத்திக்கு உறைக்கலை..நாம எல்லாம்
சோத்துல உப்பு போட்டு தான..."

இதற்குமேல் சுந்தர்ராமனால் பொறுக்க முடியவில்லை. எழுந்து ஒரே அறை..பொறி கலங்கி போனாள்..திருமணம் ஆனதிலிருந்து இதுவரை கைநீட்டி அடித்ததில்லை..
அவள் கண்களில் பொலபொலவென்று கண்ணீர் வழிந்தோடியது...

"உன்னை...என் நண்பனைப் பத்தியா தப்பா பேசுற..கொல்றேண்டி..உன்னை.." வெறிபிடித்தாள் போல் கத்தினார்..செல்போன் மணி அழைக்கவே எழுந்து உள்ளே சென்றார்..
திரும்பி வரும்போது சுந்தர்ராமன் முகத்தில் புன்னகை..

"அடியே..இவளே..பாருடி என் நண்பனை..இப்பதான் கால் பண்ணினான்..எங்களுக்குதான் தனியா பார்ட்டி வைக்கிறானாம்..நண்பண்டி..." பெருமிதம் தெரிந்தது..

"ஓ...ஓ..யாருக்காம்..."

"அது..அது வந்து..ஆபிஸில வேலை பார்க்குற எல்லாத்துக்கும்.."

"ப்ச்....போய் நல்லா சோறு சாப்பிட்டு அடிமையாவே இருங்க....இப்ப நீங்க இருங்க..உங்களை பார்த்து நம்ம மகன் இருப்பான்..அவனைப் பார்த்து நம்ம பேரன் இருப்பான்..இப்படியே
அடிமையாவே இருப்போம்..ஏன்னா வெள்ளைக்காரங்கிட்ட அடிமையா இருந்தவங்கதானே நாம.."

"உன்னையெல்லாம் சாகடிச்சாதாண்டி புத்தி வரும்..." சுந்தர்ராமன் எழுந்து கை ஓங்கவே செல்போனில் எஸ்.எம்.எஸ் ஒலி கேட்டது...எடுத்து பார்த்தார்...

"சுந்தர்..சத்தியமூர்த்திடா...பங்கசன்ல நடந்த பார்ட்டியிலே வீடு கொஞ்சம் அசுத்தமாயிடுச்சு..கொஞ்சம் காஸ்ட்லி திங்க்ஸ் இருக்கு..வேலைகாரனுங்கள நம்ப முடியலை..
சுத்தம் பண்ணனும்..வர்றியா..."

5 comments:

ஜோதிஜி said...

டச்சிங் ராசா

சிங்கக்குட்டி said...

இதில் நட்பு எங்கே இருக்கிறது!, எதுவும் உள்குத்து இருக்கா ?

taaru said...

இத புனைவா மட்டும் பாத்தா....!! அண்ணே அடிச்சு தூக்கிட்டே போ.... இந்தா!! பிடி, ரெண்டு கை குலுக்கல்...
எனகென்னவோ யாருக்கோ msg pass பண்ற மாதிரியே ஒரு பீலிங்கு... !! அப்டியா அண்ணே?

Anonymous said...

Raja va blog vitte adichu verattungada

அவிய்ங்க ராசா said...

நன்றி ஜோதிஜீ..
சிங்கக்குட்டி, இன்னுமா புரியலை..
தாரு..கல்யாணத்துக்கு வரவேணாமுன்னு சொல்றாரு..இன்னுமா புரியலை..
அனானி பயமா இருக்கு..

Post a Comment