எத்தனை நாளு தள்ளி போயிருக்குமா..??
இனிமேல்தான் ரொம்ப ஜாக்கிரைதையா இருக்கணும்...
ரொம்ப உறைப்பு, உப்பு சேர்க்ககூடாதும்மா..
ஒருகழிச்சே படுமா..மல்லாக்க படுக்காத..
நிறைய பழம் சாப்பிடு...
மாசாமாசம் மெடிக்கல் செக்கப் போயிடு..
குங்குமப்பூ பாலுல கலந்துக்க..புள்ள சிவப்பா பொறக்கும்..
வயிறு எப்படி இருக்கு..புள்ள உதைக்கிறானா..
பப்பாளி பழம் பக்கம் தலைவைச்சும் படுக்காத...
ரெண்டு மாசம் அப்படிதான் வாந்தி இருக்கும்..
ஆண்குழந்தை பொறந்தா நல்லாதான் இருக்கும்..
வாக்கிங்க் போறியா...
மாப்பிள்ளை மேல ஒரு கண்ணு வைச்சுக்கோ...
சுகரு எப்படி இருக்கு..பாவக்காய் சாப்பிடு..
டெய்லி பால் சாப்பிடு...
கனமான பொருளை எதுவும் தூக்காதே..
அனைத்தும் பிடித்திருக்கிறது...
அம்மா என்ற ஒரு வார்த்தையைக் கேட்பதற்கு...
கங்கிராஜூலேஷன் மச்சான்..கலக்கிட்ட..
வாழ்த்துக்கள் மாப்பி...
எங்கடா டிரீட்...
என்ன டெலிவரிக்கு ஊருக்கு அனுப்புறயா...
டெய்லி ஒரு ஆப் வாங்குறோம்..அசத்துறோம்..
என்னடா..பிகர் சூப்பருல.....
அப்புறம் என்னடா..ஒரே கிளப்புதான்....
பத்து மாசம் நல்லா எஞ்சாய் பண்ணிக்கடா...
நண்பன் பில்லுல ரெண்டு முட்டை புரோட்டா பார்சல்..
அப்பாவாகப் போறயில்ல..செலவழிடா...
சீன் பட சீ.டி ரெண்டு வாங்குவோமா..
மவனே..இதுதான் டிரீட்டாடா..
அனைத்தும் பிடித்திருக்கிறது..
கையில் உள்ள மணிபர்ஸ் காலியாகும் வரை...
ஒன்னுக்கு கீழ ஒன்னு..
கவிதை..
நாராயணா..இவிங்க கொசுத்தொல்லை தாங்க முடியலைய்யா...
12 comments:
அருமை அருமை
வாழ்த்துகள் :)
படம் சூப்பர்... profile picture சூப்பரோ சூப்பர்...
ஒன்றின் கீழ் ஒன்று... மன்னிக்கணும்... கவிதை நல்லா கீது...
முதலாவது மிக அருமை... செம ஃப்ளோ..
ரெண்டாவது :)))
முதலாவது அழகு ரெண்டாவது யதார்த்தமோ????
profile pic nice.....
congrats!!!!
Congrats Brother!
Enna vishesham anna?Etharkum oru Congrats!!!
////////////////////
நேசமுடன் ஹாசிம் said...
அருமை அருமை
6 September 2010 9:14 PM
////////////////////////
நன்றி ஹாசிம்..
நன்றி செந்தில்,
நன்றி தாரு
நன்றி பிரியா,
நன்றி சக்தி,
நன்றி சங்கர்
நன்றி விஜி
நன்றி சாந்தினி..
Congrats Sir
Post a Comment