Thursday, 23 September, 2010

மிக்சர் ஜூஸ்

இந்த வார நன்றிகள்

மனமார்ந்த நன்றிகள், அனானி நண்பர்களுக்கு. இரண்டு பதிவுதான், எந்திரனைப் பற்றி எழுதியிருந்தேன். அதற்குள் எந்திரன் ரசிகர்களின் அன்பு பாராட்டு மழைதான். கமெண்டுகளை படிக்கும்போது கண்ணீர் வந்தது. எம்மேல இம்புட்டு பாசாமாண்ணே…(நம்பி கமெண்டு பக்கம் போயிடாதீங்க..கெட்ட கெட்ட வார்த்தையா திட்டிருக்காயிங்க..). ஆனாலும் பரவாயில்லைண்ணே..ரசிகர்களின் தரம் முன்னேறியுள்ளது என்று சொல்வேன். முன்பெல்லாம் காதுல இருந்து ரத்தம் வர அளவுக்கு திட்டுவாயிங்க, இப்பெல்லாம் டீசண்டா திட்டுறாயிங்க(உதாரணாமா, “**** மூடிட்டு போடா” , த்தூ இதெல்லாம் ஒரு பொழைப்பா..”, “போடா நாயே..”) ஒருத்தரெல்லாம் இன்னும் ஒரு படி மேலே போய், ஒரு பதிவையே கமெண்டா போட்டுருக்காரு..அனைத்து அனானிகளின் அன்பிற்கும் நன்றிகள்(இதுக்கும் திட்டுவாயிங்க பாருங்க..)

இந்த வார படம்

“ஹோஸ்ட் டவுண்” என்று ஒரு ஆங்கில படம் பார்த்தேன். கதவு டப்டப், வெள்ளை உடை அணிந்து அமெச்சூர்தனமான ஆவி படங்களையே பார்த்து பழகிப் போன எனக்கு வித்தியாசமான ஒரு அனுபவம். கதை இதுதான். யாரோடும் ஒட்டாமல் தனியாகவே வாழ்ந்து வரும் ஒரு உம்மணாமூஞ்சிக்கு நடக்கும் ஒரு விபத்தால் எதிர்பாராத திருப்பம். மனம் சாந்தியடையாமல் திரியும் ஆவிகள் அவர் கண்களுக்கு மட்டும் தெரிய ஆரம்பிக்கின்றன. அவைகளும் இவரோடு பேச ஆரம்பிக்கின்றன. பின்ன என்ன, அமர்க்களம்தான். ஒரு பத்து பதினைந்து ஆவிகள் அவரை துரத்து துரத்தென்று துரத்த, இவர் படும் பாடு இருக்கிறதே..நகைச்சுவையான அவஸ்தைதான். டி.வி.டி கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள்..

இந்த வார விவாதம்

கடந்த வாரங்களில் நண்பர்களோடு ஒரு கருத்து விவாதம் நடந்தது. சுவையாகவும் இருந்தது. விவாதம் இதுதான், எந்த அன்பு உண்மையானது, நண்பர்களின் அன்பா, கூடப்பிறந்தவர்களின்(பெரியப்பா வகை சொந்தங்கள் அல்ல) அன்பா..விவாதம் ஆரோக்கியமாக இருந்தது. இது போன்ற விவாதங்களை நிகழ்த்தும்போது, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிறிது கேலி பண்ணினாலும், அடுத்தவர்களின் உணர்வுகள் புண்பட வாய்ப்பு உள்ளது. நண்பர்கள், அவர்களின் வாழ்க்கையில் நடந்த நிறைய அனுபவங்களை சொன்னார்கள். என்னுடைய அனுபவங்களை சொன்னேன். முடிவாக ஒரு கணக்கெடுப்பு நடத்தினோம். ஜெயித்தது நண்பர்கள் அன்பே. என்னது நான் யாருக்கு ஓட்டு போட்டேனா..உங்களுக்கு தெரிந்திருக்குமே..உங்களை ஓட்டு போடச்சொன்னால் யாருக்கு??

இந்த வார கொடுமை

“கை அரிக்குதுன்னு பாம்பு புத்துக்குள்ள கைய விட்டானாம்” என்று எங்கள் ஊர் பக்கம் ஒரு பழமொழி சொல்லுவார்கள். நேரம் போகவில்லையென்று காமெடி டிவி பக்கம் சென்றேன். தாமு, சார்லி, வையாபுரி என்று ஒரு காமெடி போட்டார்கள். கழுத்தை தொட்டு பார்த்தால் ஒரே ரத்தம். எவ்வளவு பேர் சான்ஸ் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு ஒரு சான்ஸ் கொடுத்திருந்தால் பின்னி எடுப்பார்கள். உதாரணமாக கலைஞர் டிவியில் நடக்கும் நாளைய இயக்குநரில் சென்ராயன் என்பவர் நடித்திருப்பார். இந்த நகைச்சுவை நடிகர்களெல்லாம் அவரிடம் பாடம் படிக்கவேண்டும்.

இந்த வார சிந்தனை

எவ்வளவோ விஷயங்களை பற்றி நினைத்து பார்த்திருக்கிறோம். யாராவது இறப்பை பற்றி நினைத்திருக்கிறொமா..இறப்பு எப்படி இருக்கும். கட்டிலை சுற்று நான்கு ஐந்து பேர்.

“ப்ச்..டாக்டர் என்ன சொல்லியிருக்காரு…”

“இரண்டு நாள்தான் தாங்குமாம்..”

“அய்யயோ..அப்ப லாஸ் ஆப் பே தானா”

“சிக்கிரம் ஆனா நல்லா இருக்குமோ..”

“ம்ம்..எப்படி வாழ்ந்த மனுசன்..”

“ஏ..மகன் வர்றாரு வழிவிடுங்கப்பா…”

“அப்பா..”

“ம்…”

“அப்பா..”

“ம்…”

“இந்த நேரத்துல கேக்ககூடாதுதான்…உயில் எழுதிட்டீங்களாப்பா..”

7 comments:

நாஞ்சில் பிரதாப் said...

//ஒருத்தரெல்லாம் இன்னும் ஒரு படி மேலே போய், ஒரு பதிவையே கமெண்டா போட்டுருக்காரு//

ஹஹஹ உங்களுக்குமா...அவரோட கடமையுணர்ச்சியைக்கெண்டு மெய்சிலிர்க்குது...:) முடில..
===
"ஹோஸ்ட் டவுண்" மொக்கைன்னு சிலபேரு சொன்னாங்களே... எதைநம்புறது...:(

MaduraiMalli said...

Nanbaenda..

இவன் சிவன் said...

அய்யயோ ராசான்னே ..நா ஒரு எந்திரன் ப்ளாக் எழுதி வச்சிருக்கேன்... இவ்ளோ மோசமாவா திட்டுவாய்ங்க...

அவிய்ங்க ராசா said...

//////////////////////
நாஞ்சில் பிரதாப் said...
//ஒருத்தரெல்லாம் இன்னும் ஒரு படி மேலே போய், ஒரு பதிவையே கமெண்டா போட்டுருக்காரு//

ஹஹஹ உங்களுக்குமா...அவரோட கடமையுணர்ச்சியைக்கெண்டு மெய்சிலிர்க்குது...:) முடில..
===
"ஹோஸ்ட் டவுண்" மொக்கைன்னு சிலபேரு சொன்னாங்களே... எதைநம்புறது...:(
22 September 2010 11:34 PM
//////////////////////////
நன்றி பிரதாப். கொஞ்சம் ஸ்லோ மூவி., அதனால்தான் இருக்கும்..

அவிய்ங்க ராசா said...

///////////////////////
MaduraiMalli said...
Nanbaenda..
23 September 2010 6:41 AM
/////////////////////
நன்றி மதுரைமல்லி..

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
இவன் சிவன் said...
அய்யயோ ராசான்னே ..நா ஒரு எந்திரன் ப்ளாக் எழுதி வச்சிருக்கேன்... இவ்ளோ மோசமாவா திட்டுவாய்ங்க...
23 September 2010 2:34 PM
///////////////////////////
மாட்டினீங்களா...)))

ஜெய்லானி said...

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_24.html

Post a Comment