Monday, 27 September, 2010

எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு…

பொதுவாக எனக்கு கோபம் வருவதில்லை. வந்தால் கூட அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள் தான். முற்றிலும் மறந்துவிடுவேன். ஆனால் என்னவென்று தெரியவில்லை, நேற்று, எழுந்ததிலிருந்து ஒரே கோபம்தான்.

முதல் கோபம், படுக்கையிலிருந்து ஆரம்பித்தது. நான் தூக்கத்திற்கு அடிமையான ஆள். இரவு என்னிடம் இறைவன் தோன்றி ஏதாவது வரம் வேண்டுமா என்று கேட்டால் கூட “சாரி லார்ட், காலையில் வரமுடியுமா..நான் தூங்கவேண்டும்” என்று சொல்வேன். சனி, ஞாயிறுதான் நன்றாக தூங்கமுடிகிறது. முடிந்த அளவுக்கு காலை 10 மணிவரை தூங்குவேன். அது போல எனக்கு பிடிக்காதது தூக்கத்தில் எழுப்புவது. இப்படிதான் நேற்று தூங்கி கொண்டு இருந்தபோது “மழை வருதே..” என்ற பசங்க பாட்டு கேட்டது. நான் வைத்திருக்கும் ரிங்க் டோன் அது. கட் பண்ணி விட்டு தூங்கினேன். திரும்பவும் கால், கட் பண்ண, கால், கட் பண்ண, இப்படி 12 தடவை. எனக்கு வெறி ஏறிவிட்டது. மவனே யாரா இருந்தாலும் பரவாயில்லை, இன்னைக்கு விடுறது இல்லை, என்று போனை எடுத்தால் “சயமுயகஞயமுயஜங்க்” என்று ஒரு பெண் பேசினாள். “ஆத்தா தாயே என்ன பேசுற” என்று ஆங்கிலத்தில் கேட்க “மே ஐ ஸ்பீக்கிங்க் டு வூ ஜாங்க்” என்றாள். ராங்க் கால். எனக்கு வந்த கடுப்பில் ஆங்கிலத்தில் நான் இதுவரை பேசாத கெட்ட வார்த்தைகளை பேச, அவள் “ராங்க் கால் வந்தா ராங்க் நம்பர்ன்னு சொல்லு. அதென்ன ராங்கா பேசுறது..” என்று வடிவேல் பாணியில் திட்டியிருப்பாள் என்று நினைக்கிறேன்.

அப்புறம் எங்கே தூங்குவது என்று காலைகடனை முடிக்கலாமென்றால் இருக்கிற ஆத்திரத்தில் மூத்திரம் கூட வரவில்லை, பல்விளக்க பேஸ்டை எடுக்க பேஸ்ட் இல்லை. கடுப்பில் அதை தூக்கி எறிந்தேன். ஆத்திரம்.. சரி குளிக்கலாம் என்று ஷவரை திறக்க, தேவர் மகன் படத்தில் சொல்வது போல் வெறும் காத்துதான் வந்தது. இன்னும் கொஞ்சம் அழுத்தி திறக்கிறேன். கைபிடி கையோடு வந்தது. வந்த கோபத்தில் அதை தூக்கி எறிய கண்ணாடியின் மேல் பட்டு கண்ணாடி டமார்..

இப்போது சொல்லுங்கள். ஒரு மனிதன் கோபப்படுவதில் நியாயம் இருக்கிறதல்லவா..சரி, பக்கத்தில் உள்ள கடைக்கு சென்று பேஸ்டாவது வாங்கிவரலாம் என்று காருக்கு செல்கிறேன். டிரைவர் சீட்டில் ஒரு பூனை ஹாயாக தூங்கிறது. நேற்று அவசரத்தில் கார் கண்ணாடி மூட மறந்துவிட்டேன். நான் காலை கடனை முடிக்கும்முன்பே, அது என் சீட்டில் முடிந்திருந்தது. வந்த கடுப்பில் அதை திட்டுவதற்கு வாயை திறக்கிறேன். பல் நாற்றம் தாங்க முடியாமல் அதுவே ஓடிவிட்டது. ஒருவழியாக பேஸ்ட் வாங்கிவந்து பல்விளக்கி, காலை கடனை முடித்து குளித்து இன்டெநெட்டை திறக்கிறேன். பி.பி ஏறியது. எனக்கு எப்போதும் பிடிக்காத ஒரு எழுத்தாளர் வழக்கம்போல் அவர் பாணியில் எழுதியிருக்க என்னால் படிக்க முடியவில்லை. எனக்கு கோபம் ஏறவே லேப்டாப்பை மூடிவிட்டேன். இதற்கு மேல் என்னால் இந்தநாளை தள்ளமுடியாது என்று உணர்ந்தேன்.

ஏன் எனக்கு இதுபோல நடக்கிறது. என்னை காலையில் இருந்து கோபமூட்டுவது எது. என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை. சிறிய காரணத்திற்காக என் மனைவி மேல் எறிந்து விழுந்தேன். நண்பனிடம் கோபம் காட்டினேன், எனக்கே என்னை பிடிக்காமல் போய்விட்டது. நான் ஏன் இப்படி ஆனேன். என்னை மாற்றியது எது. இப்படியே இருந்தால் மிருகமாகிவிடுவேனோ..பயம் என்னை ஆட்கொள்ள, இதற்கு முடிவுதேட முயற்சித்தேன்.

என் மனம் எப்போதும் அலைபாயும் போது, என் நண்பரிடம்தான் செல்வேன். ஏன் நண்பன் என்று சொல்லாமல் நண்பர் என்றேன் என்றால் அவருக்கு வயது 50. மனதளவில் இன்னும் இளைஞர். என்னுடைய பிரச்சனைகளுக்கு முடிவு சொல்பவர்., அவருடைய முகத்தில் கோபத்தை பார்ப்பது என்பதே அரிது. அவருடைய முகத்தைப் பார்த்தாலே பாதி கோபம் போய்விடும். முதலில் என்னை பார்த்தவுடன் பாசத்துடன் அணைப்பார். அதிலேயே மீதி கோபம் போய்விடும். என்னைப் பார்த்ததுமே அடையாளம் கண்டுகொண்டார்

“என்ன ராசா..ரொம்ப கோபம இருக்கீங்க போலிருக்கு..”

காலையிலிருந்து நடந்ததை எல்லாம் சொன்னேன்.

“இப்ப சொல்லுங்க நண்பர்..நான் கோபப்படுறதுல நியாயம் இருக்குள்ள..”

சிரித்தார்..

“ராசா..உன்னோட கோபத்திற்கு யார் காரணம்னு நீ நினைக்கிற..”

“ம்..அது..விதி..”

“இல்லை. முழுக்க முழுக்க நீயே..”

“சார்..நான் எப்படி..நான் என்ன செய்தேன்..”

“சரி..முதலில் இருந்து வருவோம்..இன்று யார்மேல் முதல் கோபம்..”

“அந்த சீனாக்காரி மேலதான் சார்..மனுசன் சனி ஞாயிறுதான் தூங்குறான்..அப்பவும் போன் பண்ணி டிஸ்டர்ப் பண்ணி.,.”

“இப்ப சொல்லு ராசா..சீனாக்காரிக்கும் உனக்கும் முன்பகை இருக்கா..அவ உன்னை எதுக்கு அந்த நேரத்தில் டிஸ்டர்ப் பண்ணனும்..”

“அது..தெரியாம..”

“நீயே சொல்லிட்ட..தெரியாம..அவளுக்கு பாவம் என்ன எமர்ஜென்சியோ..எவ்வளவு அவசரம் இருந்தால் 12 முறை கால் பண்ணி இருப்பா..அவகிட்ட “சாரி, ராங்க் நம்பர்ன்னு ஒரு வார்த்தை சொன்னா உன்னோட கவுரவத்திற்கு ஏதாவது இழுக்கு வந்துடுமா..”

“…”

“அடுத்த கோபம்..??”

“அந்த பேஸ்ட் மேல..”

“அது உயிரில்லாத பொருள். நேற்று நீ பல்விளக்கும்போதே உனக்கு தெரியவில்லையா..தீரப்போகிறது என்று. அதை வாங்கி வைப்பதுதானே, நீ செய்யவேண்டியது..அதற்கு அது என்ன பண்ணும்…”

“…”

“சரி..அடுத்த கோபம்..”

“ஷவர் கைபிடி..”

“சரி..எத்தனை முறை திறக்க முயற்சித்தாய்..”
”ஒரு பத்து முறை..”

“ஏன்..”

“வந்த ஆத்திரத்துல..”

“ஹா..ஹா..உன்னோட ஆத்திரத்திற்கு அது என்ன பண்ணும். நீ அதன்மேல் உன் ஆத்திரத்தை காட்ட முயற்சித்தாய்..அது தாங்கவில்லை. தப்பு, உன்மேலா..அதன்மேலா..”

எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது..

“சரி..அந்த பூனை..”

“ராசா..வெளியில் உள்ள குளிருக்கு அது என்ன பண்ணும். ஒதுங்க இடம் தேடியிருக்கும். பாவம் அதற்கு என்ன தெரியும், காரில் தூங்ககூடாதென்று. ஒரு பூனைக்கு கூட இடம் கொடுக்காத அளவுக்கா உன் மனது சுருங்கிவிட்டது..”

“ம்ம்ம்ம்..”

“கடைசியான கோபம்..”

“அந்த எழுத்தாளர்..எப்போதுமே இப்படிதான் எழுதுறாரு..என்ன ஒரு ஆட்டிடியூட்..எப்படி அவர் எழுதாலம்..ஒரு மனசாட்சி இல்லை..அவர சும்மா விடக்கூடாது..”

“சரி..அவர் ஒரு படைப்பாளி என்பதை ஒத்துக்கொள்கிறாயா,..”

“ஆமாம்..”

“படைப்பாளனுக்கு படைப்பு சுதந்திரம் இல்லையா…அவருடைய படைப்பில் தலையிட நீ யார்..யார் அந்த சுதந்திரம் கொடுத்தார்.,.”

“அதுக்காக அவர் எப்படி எழுதலாம்..”

“ஓ..எப்படி எழுதவேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்..”

“எனக்கு பிடிக்கும்படி..”

“ஓ..அதாவது உனக்கு அடிமை போல..கரெக்ட்..யோசித்து பார்..சுதந்திர உலகத்தில் இருக்கிறாய். எல்லாருக்கும் அவர் படைப்ப எழுத உரிமை இருக்கிறது. இப்படிதான் எழுதவேண்டும் என்று சொல்ல நீ, யார்..யார் அந்த உரிமையை கொடுத்தது. அவரை மாற்ற நீ ஏன் முயற்சிக்கிறாய். உனக்கு பிடிக்கவில்லையென்றால் அவரை ஏன் மீண்டும், மீண்டும் படிக்கிறாய்…பிடிக்கவில்லையென்றால் அவரை புறக்கணித்து விடு. அவர் எழுதுவது தப்பென்றால் ஒருவர் பின் ஒருவராக எல்லாரும் அவரை புறக்கணிப்பர்..அவரே அதை உணர்வார்…இப்போது சொல், குற்றம் யார்மேல்..உன்மேலா..அவர்மேலா..”

“---------------“

“ம்..இப்போது சொல்..இன்று முழுவதும் உன்னுடைய கோபத்திற்கு யார் காரணம்…”

தெளிவாக சொன்னேன்..

“நாந்தான்..”

என்மனம் லேசாகி போனது. அதே தெளிந்த மனதோடு வீட்டிற்கு சென்றேன். சிலவேளைகள் செய்த பிறகு என்னுடைய ப்ளாக்கை திறந்தேன். திறந்தவுடன், அந்த கமெண்ட் தெரிந்தது..

“டே..ராசா..சொறி பிடிச்ச நாயே..என்ன திமிரு இருந்தா, எந்தலைவனை பத்தி தப்பா எழுதுவ…”

இந்தமுறை எனக்கு கோபம் வரவில்லை..

15 comments:

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நல்லாருக்கு உங்க கோபம்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நாந்தான் முதல் போணியா..

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கடைசி பஞ்ச் சூப்பர்..ரஜினி ரசிகர்கள் என்று நினைக்கிறேன்..ஆனால் ரஜினி ரசிகர்கள் இண்டெர்னெட்டில் கோபப்படுவதில்லை என நினைக்கிறேன்..

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஓ..அதாவது உனக்கு அடிமை போல..கரெக்ட்..யோசித்து பார்..சுதந்திர உலகத்தில் இருக்கிறாய். எல்லாருக்கும் அவர் படைப்ப எழுத உரிமை இருக்கிறது. இப்படிதான் எழுதவேண்டும் என்று சொல்ல நீ, யார்..யார் அந்த உரிமையை கொடுத்தது. அவரை மாற்ற நீ ஏன் முயற்சிக்கிறாய்.//
ஓ..அருமையான வார்த்தைகள்..அதிகமா மனக்காயப்பட்டது போல தெரியுது...இதெல்லாம் அரசியல்ல சகஜம்பா

taaru said...

கூல் டோவ்ன் கூல் டவ்ன்.....கூல் டோவ்ன் கூல் டவ்ன்.....


//எனக்கு எப்போதும் பிடிக்காத ஒரு எழுத்தாளர் வழக்கம்போல் அவர் பாணியில் எழுதியிருக்க என்னால் படிக்க முடியவில்லை.//
அது அவீங்க ராசா ப்ளாக் தானே?? :):):)

//அந்த எழுத்தாளர்..எப்போதுமே இப்படிதான் எழுதுறாரு..என்ன ஒரு ஆட்டிடியூட்///
ஹா ஹா ஹா. ஹா...
ராசா:பாருப்பா அந்த பயலுக்கு decent தெரியல...
டாரு: side ல ப்ளட்.
ராசா: ஒய் பிளட்...? சேம் பிளட்..... :):):):)

//“ம்..இப்போது சொல்..இன்று முழுவதும் உன்னுடைய கோபத்திற்கு யார் காரணம்…”//
உன் நண்பர் ஞானி அண்ணே?? [அய்யே.. அவரு இல்லப்பா.. இந்த தீர்க்க தரிசினு சொல்ல்வங்கள்ள அது...]

எஸ்.கே said...

சாதாரண சம்பவம் என்றுதான் நினைத்தேன் படித்த பிறகு யோசித்தால் எவ்வளவு பெரிய வாழ்க்கை உண்மைகளை சொல்லியிருக்கிறீகள்! மிக்க நன்றி!

அவிய்ங்க ராசா said...

//////////////////////////////
ஆர்.கே.சதீஷ்குமார் said...
நல்லாருக்கு உங்க கோபம்
26 September 2010 10:31 PM
////////////////////////////
நன்றி...

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
ஆர்.கே.சதீஷ்குமார் said...
கடைசி பஞ்ச் சூப்பர்..ரஜினி ரசிகர்கள் என்று நினைக்கிறேன்..ஆனால் ரஜினி ரசிகர்கள் இண்டெர்னெட்டில் கோபப்படுவதில்லை என நினைக்கிறேன்..
26 September 2010 10:33 PM
////////////////////////
:))))))))))))))

அவிய்ங்க ராசா said...

////////////////////////ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஓ..அதாவது உனக்கு அடிமை போல..கரெக்ட்..யோசித்து பார்..சுதந்திர உலகத்தில் இருக்கிறாய். எல்லாருக்கும் அவர் படைப்ப எழுத உரிமை இருக்கிறது. இப்படிதான் எழுதவேண்டும் என்று சொல்ல நீ, யார்..யார் அந்த உரிமையை கொடுத்தது. அவரை மாற்ற நீ ஏன் முயற்சிக்கிறாய்.//
ஓ..அருமையான வார்த்தைகள்..அதிகமா மனக்காயப்பட்டது போல தெரியுது...இதெல்லாம் அரசியல்ல சகஜம்பா
26 September 2010 10:34 PM
//////////////////////////////
நன்றி...

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////
taaru said...
கூல் டோவ்ன் கூல் டவ்ன்.....கூல் டோவ்ன் கூல் டவ்ன்.....


//எனக்கு எப்போதும் பிடிக்காத ஒரு எழுத்தாளர் வழக்கம்போல் அவர் பாணியில் எழுதியிருக்க என்னால் படிக்க முடியவில்லை.//
அது அவீங்க ராசா ப்ளாக் தானே?? :):):)

//அந்த எழுத்தாளர்..எப்போதுமே இப்படிதான் எழுதுறாரு..என்ன ஒரு ஆட்டிடியூட்///
ஹா ஹா ஹா. ஹா...
ராசா:பாருப்பா அந்த பயலுக்கு decent தெரியல...
டாரு: side ல ப்ளட்.
ராசா: ஒய் பிளட்...? சேம் பிளட்..... :):):):)

//“ம்..இப்போது சொல்..இன்று முழுவதும் உன்னுடைய கோபத்திற்கு யார் காரணம்…”//
உன் நண்பர் ஞானி அண்ணே?? [அய்யே.. அவரு இல்லப்பா.. இந்த தீர்க்க தரிசினு சொல்ல்வங்கள்ள அது...]
26 September 2010 10:50 PM
//////////////////////////////
தாரு,,உங்கள் பாட்டுக்கு இந்த பாண்டிய நாடே அடிமை என்பது போல், உங்கள் கமண்டுக்கு நான் அடிமை..)))))

அவிய்ங்க ராசா said...

/////////////////////
எஸ்.கே said...
சாதாரண சம்பவம் என்றுதான் நினைத்தேன் படித்த பிறகு யோசித்தால் எவ்வளவு பெரிய வாழ்க்கை உண்மைகளை சொல்லியிருக்கிறீகள்! மிக்க நன்றி!
27 September 2010 1:53 AM
///////////////////
நன்றி..எஸ்.கே..

இவன் சிவன் said...

என்னனே 'அவிங்கள' காணோம். இது நல்ல பதிவுனே....

உங்க பதிவைவிட பெருசா கமெண்ட் போடுறாய்ங்கண்ணே.... அப்புறம் எங்கள வேற சோம்பு தூக்கினு பாராட்டுவாய்ங்க... ஏது போறபோக்குல உங்கள மிகபிரபல பதிவர் ஆக்கிருவாய்ங்க போல!!!

அவிய்ங்க ராசா said...

////////////////////////////
mber 2010 4:19 AM
இவன் சிவன் said...
என்னனே 'அவிங்கள' காணோம். இது நல்ல பதிவுனே....

உங்க பதிவைவிட பெருசா கமெண்ட் போடுறாய்ங்கண்ணே.... அப்புறம் எங்கள வேற சோம்பு தூக்கினு பாராட்டுவாய்ங்க... ஏது போறபோக்குல உங்கள மிகபிரபல பதிவர் ஆக்கிருவாய்ங்க போல!!!
27 September 2010 12:10 PM
/////////////////////////////
ஆஹா...அண்ணே..நான் அப்ப பிரபலபதிவர் இல்லையா..))))

வருகைக்கு நன்றிண்ணே..கமெண்ட் மாடரேட் செய்துள்ளேன்.

Viji said...

அண்ணா

நல்லா எழுதறீங்க.யாரு மேல இம்புட்டு கோவம்?என்ன நீங்க பாட்டுக்கும் கமெண்ட்ஸ் moderate paniteenga ? என்னமோ போங்க?

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
அண்ணா

நல்லா எழுதறீங்க.யாரு மேல இம்புட்டு கோவம்?என்ன நீங்க பாட்டுக்கும் கமெண்ட்ஸ் moderate paniteenga ? என்னமோ போங்க?
28 September 2010 5:07 PM
//////////////////////////
வருகைக்கு நன்றி விஜி. யார் மேலும் கோபம் இல்லை. இரண்டு வருடமாக எழுதுகிறேன். சில நண்பர்கள், மிகவும் மோசமாக "போடா, வாடா, நாயே, ரோஷம் இருக்கா, மானம் இருக்கா" என்று எழுதுகின்றனர். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா..நான் அமைதியாக இருப்பதையே பலவீனமாக எடுக்க கூடாது அல்லவா..அதனால் தான் மாடர்ஷேன். சென்னையில் சைபர் அலுவலகத்தில் இருக்கும் நண்பர் ஒருவரிடம் கமெண்ட் ஐ.பி அட்ரஸ் டிராக் செய்ய சொல்லி உள்ளேன்.பார்க்கலாம்...

Post a Comment